02 ஜூலை 2010

யாழ்,அரச அதிபர் கே.கணேஷ் இமெல்டா சுகுமாரை மிரட்டினாராம்.



யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கே. கணேஸ், முல்லைத்தீவு அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமாரை பயமுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுமார் இரண்டு தடவைகளாக பதவி நீடிப்பை பெற்றிருந்த கே கணேஸ், கடந்த முதலாம் திகதியுடன் தமது பதவியில் இருந்து ஓய்வுபெற வேண்டியிருந்தது.
இதனை முன்னிட்டு யாழ்ப்பாண செயலக பணியாளர்களும் அவருக்கு பிரியாவிடையை வழங்கினர்.
இந்தநிலையில், அவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் உதவியுடன் மீண்டும் ஒருமுறை தமது பதவியை நீடித்துக்கொள்ள முயற்சிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு கட்டமாக அவர், தமக்கு பின்னர் யாழ்ப்பாண அரசாங்க அதிபராக செயற்படவுள்ள முல்லைத்தீவு அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமாருக்கு தொலைபேசி மூலம் அச்சுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
யாழ்ப்பாணத்திற்கு நீர் வருவாயோ? வந்தால் என்ன நடக்கும் என தெரியுமோ? என கே கணேஸ், இமெல்டா சுகுமாருக்கு அச்சுறுத்தியுள்ளார்.
இந்த விடயத்தை முல்லைத்தீவு அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார், முக்கியமாக இடம் ஒன்றிடம் முறைப்பாடாக தெரிவித்துள்ளார்.
எனினும் அது தற்போது ஊடகங்களுக்கு கசிந்துள்ளது.
இதேவேளை கே கணேஸ் இன்று மீண்டும் யாழ்ப்பாண அரசாங்க அதிபர் ஆசனத்தில் அமர்ந்து கடமைகளை மேற்கொண்ட போதும் இமெல்டா சுகுமாரின் யாழ்ப்பாண அரசாங்க அதிபர் நிலைக்கான பதவி கடிதம் இன்னும் மாற்றப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக