13 ஜூலை 2010

இலங்கை தமிழருக்கு ஆதரவான எழுச்சியினை எந்த சட்டம் போட்டும் அடக்க முடியாது.


இலங்கைத் தமிழர் ஆதரவாளர்களை மிரட்டும் வகையில் புதியச் சட்டம் கொண்டுவரப் படுவதாக தமிழக அரசு மிரட்டுவதாகவும், அப்படி ஒரு அடக்குமுறைச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டாலும் இலங்கைத் தமிழருக்கான ஆதரவு எழுச்சி ஓயாது என்றும் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் குற்றம் சாட்டி நேற்று (12ந் தேதி)அறிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“வெளிநாட்டுப் பிரச்சினையை மையமாக வைத்து, மத்திய- மாநில அரசுகளுக்கு எதிராகவும், தேச ஒற்றுமைக்கு எதிராகவும் பேசுபவர்களைத் தண்டிக்க புதிய சட்டம் கொண்டு வர அரசு தயங்காது என்று அமைச்சர் துரைமுருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாலஸ்தீன விடுதலைப் போராட்டம் , வியட்நாம் விடுதலைப் போராட்டம் போன்றவற்றுக்கு ஆதரவாக இந்தியாவில் காங்கிரஸ், திமுக உட்பட பல்வேறு கட்சிகள் போராடி உள்ளன.கடந்தக் காலத்தில் தடா, பொடா போன்ற கொடியச் சட்டங்களுக்கு எதிராக மக்கள் கொதித்தெழுந்து போராடியதையும், அதனால், அந்தச் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டத்தையும் அமைச்சர் துரைமுருகனுக்கு நினைவு படுத்துகிறேன்.எத்தனை அடக்குமுறைச் சட்டங்களைக் கொண்டு வந்தாலும் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகத் திரண்டெழுந்து வரும் எழுச்சியினை அடக்க முடியாது” என்று பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக