06 ஜூலை 2010

தமிழ் அகதிகளுக்கு பயண அனுமதிப்பத்திரம் வழங்கப் போவதில்லை.-சிறிலங்கா.


இனி இலங்கை அகதிகளுக்கு பாஸ்போட் வழங்கப் போவது இல்லை என ஸ்ரீலங்கா தூதரகம் அறிவித்துள்ளது. பிரித்தானியாவில் அகதிகள் அந்தஸ்து கோரியுள்ள எவருக்கும் தாம் இனி பாஸ்போட்டை வழங்கப்போவது இல்லை என இலங்கை அரசு திடீரென அறிவித்துள்ளது பெரும் சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளது. இது தொடர்பாக நாம் இலங்கை தூதரகத்தைத் தொடர்புகொண்டபோது அவர்களும் இதை உறுதிசெய்துள்ளனர். பிரித்தானியாவில் உள்ள இலங்கை அகதிகள் தமது அகதி விண்ணப்பத்தை முதலில் ரத்துச்செய்த பின்னரே இலங்கை கடவுச்சீட்டைப் பெறமுடியும், அல்லது தற்காலிக பிரயாண கடவுச்சீட்டைப் பெறமுடியும் என இலங்கை தூதுவராலயம் தெரிவித்துள்ளது. அப்படியாயின் பிரித்தானியாவில் அகதி அந்தஸ்து பெற்றவர்களுக்கு அரசு விசாவை வழங்கும்போது இலங்கை அரசு பாஸ்போட் வழங்க மறுக்கும் நிலையில், அவர்கள் எவ்வாறு பயணிப்பது என்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது. மொத்தத்தில் பிரித்தானியாவில் உள்ள தமிழ் அகதிகளையே இலங்கை அரசு குறிவைத்து இவ்வாறு செயல்படுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். பாஸ்போட் வேண்டும் என்றால் அகதி விண்ணப்பத்தை ரத்துச் செய்துவிட்டு இலங்கை செல்லலாம் என இலங்கை தூதரக அதிகாரிகள் தெனாவெட்டாகப் பதிலளிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக