இலங்கை போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்க ஐ.நா. அமைத்துள்ள குழுவிற்கு ரஷ்யாவை ஆதரவளிக்கக்கோரி சென்னையில் அந்நாட்டு தூதரக அதிகாரியிடம் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மனுவொன்றைக் கையளித் துள்ளார்.இலங்கையில் போர்க்குற்றம் குறித்து விசா ரிக்க ஐ.நா. அமைத்துள்ள குழுவிற்கு சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித் துள்ளன. இந்நிலையில், ஐ.நா. குழுவிற்கு ரஷ்யா ஆதரவளிக்க வேண்டுமெனக் கோரி சீமான் தலைமையில் 5 பேர் கொண்ட குழு வினர், ஏராளமான ஆதரவாளர்களுடன் சென் னையில் உள்ள ரஷ்ய தூதரகத்தை நோக்கி நேற்று ஊர்வலமாகச் சென்றனர். பின்னர், ரஷ்ய தூதரக அதிகாரியிடம் இதுதொடர்பான மனு ஒன்றை அவர்கள் கையளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், ஐ.நா. குழு விசாரணை நடத்த இலங்கை அரசு ஒத் துழைப்பு அளிக்கவில்லை என்றால், விசா ரணை நடத்தப்படாமலேயே இலங்கை அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
11 ஜூலை 2010
ஐ.நா.நிபுணர் குழுவுக்கு ஆதரவளிக்க ரஷ்யாவிடம் சீமான் வேண்டுகோள்!

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக