08 ஜூலை 2010

இந்தியா மெளனம் சாதிப்பது ஏன்?வைக்கோ கேள்வி.


ஐக்கிய நாடுகள் சபைக்கு எதிராக அமைச்சர் விமல் வீரவன்ஸ மேற்கொண்டு வருகின்ற போராட்டத்திற்கு எதிராக இந்தியா மௌனம் காத்து வருகின்றமையை இட்டு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொது செயலாளர் வை. கோபாலசாமி அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு எதிராக பல நாடுகள் தமது எதிர்ப்பை அல்லது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள போதும், இந்தியா தொடர்ந்தும் மொளனம் காத்துள்ளமை வருந்தத்தக்கது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு அலுவலகத்துக்கு ஏற்பட்டுள்ள நிலை, விரைவில் இந்தியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகத்துக்கும் ஏற்படலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக சென்னையில் உள்ள உதவி உயர்ஸ்தானிகரகத்துக்கு இந்த நிலை ஏற்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த 1980ம் ஆண்டு முதல் உலக நாடுகளில் ஏற்படுகின்ற பாரிய மனித உரிமை மீறல் சம்பவங்களுக்கு இந்தியா எதிர்ப்பு காட்டி வந்துள்ளது. எனினும் இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள் எதிரான நடவடிக்கைகளுக்கு இந்தியா ஆதரவு வழங்கி வந்துள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையினால், சூடான் மற்றும் சேர்பியா போன்ற நாடுகளுக்கு எதிராக நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுகளுக்கு எதிராக யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் இலங்கைக்கு எதிராக இவ்வாறான ஒரு குழு நியமிக்கப்பட்டமை தொடர்பில் எதிர்ப்பு காட்டுகின்றமை ஏன்? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக