இலங்கையில் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனின் கொடும்பாவி எரிக்கப்பட்டிருக்கும் நிலையில், அது தொடர்பாக அவர் என்ன செய்யப்போகிறார் என்று இன்னர்சிற்றி பிரஸ் அவரிடம் கேட்டது. பான் கீ மூன் புன்முறுவல் பூத்தார். அவரின் இணைப்பேச்சாளர் குறுக்கிட்டு "செயலாளர் நாயகம் பொருத்தமான தருணத்தில் பேசுவார் என்று கூறினார்.
இலங்கையில் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனின் கொடும்பாவி எரிக்கப்பட்டிருக்கும் நிலையில், அது தொடர்பாக அவர் கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை. அதேசமயம், அரசாங்கத்துடன் பேச வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை கூறியுள்ளார்.
ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனின் கொடும்பாவி இலங்கையில் எரிக்கப்பட்ட தினத்திற்கு மறுநாள் ஐ.நா. பாதுகாப்புச் சபைக்கு பான் கீ மூன் சென்று கொண்டிருந்த வழியில் ஊடகவியலாளருக்கு வாழ்த்துக் கூறுவதற்கு தரித்து நின்றார்.
கொழும்பில் ஐ.நா. பணியாளர் பணயக் கைதியாக வைக்கப்பட்டமை மற்றும் ஐ.நா. அலுவலகம் மூடப்பட்டமை தொடர்பாக அவர் என்ன செய்யப்போகிறார் என்று இன்னர்சிற்றி பிரஸ் அவரிடம் கேட்டது. பான் கீ மூன் புன்முறுவல் பூத்தார். அவரின் இணைப்பேச்சாளர் குறுக்கிட்டு "செயலாளர் நாயகம் பொருத்தமான தருணத்தில் பேசுவார்" என்று கூறினார்.
இவ்வாறு நியூயோர்க்கைத் தளமாகக் கொண்ட இன்னர்சிற்றி பிரஸ் நேற்று முன்தினம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இன்னர்சிற்றி பிரஸின் நிருபர் ரஸல்லீ மத்தியூ மேலும் குறிப்பிட்டிருப்பதாவது;
ஐ.நா. ஊழியர்கள் பணயக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்தனர். தீவிரமான நடவடிக்கையெடுக்கப் போவதாக பணயம் வைப்பதற்கு தலைமை தாங்கிய அமைச்சர் இப்போது அச்சுறுத்தல் விடுத்து வருகிறார். பான் கீ மூன் பேசுவதற்கு இது பொருத்தமான நேரமாக இல்லையா?
சில நிமிடங்கள் கழித்து இதே கேள்வியை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளையிடம் இன்னர்சிற்றி பிரஸ் கேட்டது. ஆர்ப்பாட்டங்கள் தொடர்பாக ஐ.நா. என்ன செய்ய வேண்டும்? என்று அவரிடம் கேட்கப்பட்டது.
ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோரிடம் பேச்சுவார்த்தை நடத்துமாறு அரசாங்கத்தை அவர்கள் கேட்க வேண்டும் என்று நவநீதம்பிள்ளை பதிலளித்தார்.
இதேவேளை,சர்வதேசச் சட்டங்கள் மீறப்பட்டால் அல்லது அது தொடர்பான குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட நாடு தனது சொந்த விசாரணையை முதலில் மேற்கொண்டு கண்டுபிடிப்புகளைத் தெரியப்படுத்துவதற்கு இடமளிக்கப்படுவது தெளிவான முறையில் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச விதிமுறையாகும் என்ற அறிக்கை தொடர்பாக அணிசேரா அமையத்தின் அங்கீகாரத்தை நாடியிருப்பதாக இலங்கை தெரிவித்துள்ளது.
காஸாவுக்கான மனிதாபிமான பொருட்களுடன் சென்ற கப்பல்கள் மீதான தாக்குதல் தொடர்பாக சர்வதேச மட்ட விசாரணைக்கு அணிசேரா அமையத்தின் அநேகமான உறுப்பினர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இதற்கு முரண்பாடாக இந்த அறிக்கை காணப்படுவதாக இன்னர்சிற்றி பிரஸ் குறிப்பிட்டுள்ளது.
ஆசியான் மற்றும் அணிசேரா அமையத்தின் பிரதான உறுப்பு நாடொன்றின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியிடம் இன்னர் சிற்றி பிரஸ் இது தொடர்பாகக் கேட்டது.
அணிசேரா அமைய நகல்வரைபு குறித்து நிராகரிக்கும் வகையில் தலையை ஆட்டினார். இலங்கை இந்த மாதிரியாகச் செய்திருக்கக்கூடாது என்று அவர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக