15 ஜூலை 2010

ஐ.நா.அமைதிப்படையில் சிறிலங்கா காவல்துறையை இணைக்க மறுப்பு.


ஹெய்ட்டியில் நிலை கொண்டுள்ள ஐ.நா இன் அமைதிப் படையில் சேவையாற்றுவதற்காக செல்லவிருந்த இலங்கைப் காவல்துறைக்கு ஐ.நா மறுத்துள்ளது. விமல் வீரவன்சவின் உண்ணாவிரதப் போராட்டத்தை அடுத்தே இலங்கைப் காவல்துறையின் சேவை தமக்கு தேவையில்லை என ஐ.நா மறுத்துள்ளது. ஹெய்ட்டிக்குச் செல்வதற்கான காவல்துறையின் விவரங்கள் அடங்கிய ஆவணங்கள் கடந்த 9 ஆம் திகதியன்று கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகத்திடம் கையளிக்கப்பட்டன.
அதில் வீசாவுக்கான விண்ணப்பங்கள் அடங்கியிருந்தன.

இருந்தபோதிலும், பிற நிறுவனங்களின் அமைதியையும் மரியாதையையும் பாதுகாக்கின்ற நாடுகளில் இருந்து மட்டுமே ஐ.நா அமைதிகாக்கும் படைக்கான வீரர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று அமைதி காக்கும் படையின் விவரங்களைக் கையாளும் அதிகாரி இலங்கைப் காவல்துறைக்குத் தெரிவித்துள்ளார். எனவே இலங்கைப் காவல்துறை சேர்த்துக் கொள்வதா இல்லையா என்பதைத் தாம் தற்போது மீளாய்வு செய்யவேண்டியுள்ளது என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக