ஒரு நாட்டின் அரசாங்க அமைச்சர் அந்நாட்டிலுள்ள ஐக்கியநாடுகள் பணியாளர்களை பணயம் வைக்குமாறு பகிரங்கமாக மக்களை தூண்டும் போது ஐக்கியநாடுகள் என்ன செய்கிறது? அந்த நாடு சூடானாக இருந்தால் ஐக்கியநாடுகள் உடனடியாக கண்டித்திருக்கும். ஆனால் இலங்கையை பொறுத்த வரை செயலாளர் நாயகம் பான் கீமூன் வித்தியாசமான அணுகுமுறையை கடைப்பிடிக்கிறார் என்று இன்னர் சிற்றி பிறெஸ் குற்றம்சாட்டியுள்ளது. இவையெல்லாம் முன்னர் தென் கொரியரான பான் கீமூன் அந்த நாட்டின் வெளிநாட்டமைச்சராக இருந்த போது மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அவருக்கமிடையே இருந்த தொடர்புகளை அடிப்படையாக கொண்டு நிகழ்கின்றன என்று மூனின் நிருவாக வட்டாரங்கள் கூறுகின்றன.தற்போது, ரஷ்யாவும் சீனாவும் கடைப்பிடிக்கும் ராஜபக்ஷ ஆதரவுக் கொள்கையும் பான் கீமூனின் மௌனத்திற்கு வழிவகுத்துள்ளது. சீனா அல்லது ரஷ்யா பான் கீமூன் இரண்டாவது தடவை செயலாளர் நாயகம் பதவிக்கு போட்டியிடுவதை வாக்குத் தடுப்பு உரிமையை பயன்படுத்தி தடுத்துவிட முடியும். மேலும், இலங்கை அமைச்சர் விமல் வீரவன்ஸ ஐக்கியநாடுகள் அலுவலர்களை பணயம் வைக்குமாறு விடுத்த கோரிக்கை பற்றி இன்னர் சிற்றி பிறெஸ் செய்தியாளர் கேட்டபோது, மூனின் பேச்சாளர்கள் கூறியவுரையில் பதிலளிக்கவில்லை. அமைச்சர் வீரவன்ஸ கூறியதை ஊடகங்கள் தவறாக பிரசுரித்திருக்கலாம் அல்லது அரசாங்க தோரணையில் அன்றி அமைச்சர் அவரது தனிப்பட்ட கருத்தை தெரிவித்திருக்கலாம் என்று செயலாளர் நாயகத்தின் பேச்சாளர்கள் தெரிவித்தார்கள்.தற்போது கருத்துக்கள் சம்பந்தகப்பட்ட மொழிபெயர்ப்பு தொடர்பாகவும் திருகுதாளங்கள் வெளியிடப்படுகின்றன. அதாவது, அமைச்சர் வீரவன்ஸவின் கோரிக்கை வன்முறையற்றது, சாத்வீகமானது என்று காந்தியம் பேசப்படுகிறது என்றும் இன்னர் சிற்றி பிறெஸ் தெரிவித்துள்ளது.2009ஆம் ஆண்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஐக்கியநாடுகள் அலுவலர்கள் அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டார்கள். அவர்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. மேலும் பல ஐக்கியநாடுகள் அலுவலர்கள் வவுனியாவிலுள்ள கட்டாய தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டார்கள். இந்த செய்திகள் பகிரங்கமாக வெளியாகும் வரை ஐக்கியநாடுகள் அலுவலகம் அதுபற்றி எதையும் வெளியிடவில்லை. ஆனால் சூடான் ஐக்கியநாடுகள் அலுவலர்களை பிடித்திருந்தால் ஐக்கியநாடுகள் அதிகாரிகளும் மூனும் உரத்து எதிர்ப்புக் குரல் எழுப்பியிருப்பார்கள். எனவே இலங்கை தொடர்காக ஐக்கயநாடுகள் ஸ்தாபனம் இரட்டை நிமைலப்பாட்டை கடைப்பிடித்து வருகிறது என்று இன்னர் சிற்றிபிறெஸ் தெரிவிக்கிறது.இவற்றைத் தவிர, நேரடியாக மூனின் அலுவலகத்தை சாராத, ஐக்கியநாடுகள் செயலகத்தின் ஒரு அரசியல் பிரிவு நடத்திய இரகிசிய கூட்டம் ஒன்றில் இலங்கையில் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பாக மூன் 3 நிபுணர்கள் குழுவை நியமித்தமைக்கு தாம் எதிரானவர்கள் என்று தெரிவித்துள்ளனர். ஐக்கயநாடுகள் ஸ்தாபனத்தின் உந்து சக்தியை இத்தகைய குழு குறைத்துவிடும் என்று இந்த அரசியல் பிரிவினர் தெரிவித்தனர். எதற்கான உந்து சக்தியை குறைத்தவிடும் என்று இன்னர் சிற்றி பிறெஸ் வினவுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக