உலக சமூகம் கைகட்டி வாய்பொத்தி மௌனிகளாக பார்த்துக் கொண்டிருக்க மிகப் பெரும் மனிதப் படுகொலையை இலங்கைத் தீவிலுள்ள சிங்கள பௌத்த பேரினவாத அரசு எமது இனத்தின் மீது அரங்கேற்றியுள்ளது.
மனித குலம் வெட்கித் தலைகுனியும் விதத்திலான இனப்படுகொலை 21 ம் நூற்றாண்டில் எமது மண்ணிலேயே அரங்கேறியுள்ளது. நீதிக்கான எமது போராட்டம் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. கடந்த ஒன்றரை தசாப்தகாலமாக தமிழர் தயாகத்தில் இயங்கிவந்த தமிழீழ நடைமுறை அரசகட்டமைப்புக்கள் அழிக்கப்பட்டு மக்களின் வாழ்வும் வளமும் சீரழிக்கப்பட்டுள்ளது.
வாழ்விடங்களில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டு, அடிப்படை மனித உரிமைகள், ஐனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டு மக்கள் அகதி முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களது குரல்வளைகள் நசுக்கப்பட்டுள்ளன. வன்னிப் பெருநிலப்பரப்பில் வாழந்த மக்களில் 3 லட்சம் வரையிலான மக்கள் தடுப்பு முகாமில் வெயிலுக்கு நிற்க கூட நிழலின்றி, மழைக்கு ஒதுங்க கூட இடமின்றி கம்பி வேலிகளுக்குள் மனஅழுத்தங்களுடன் சொல்ல முடியாத துன்பச்சுமையுடன் காலத்தை கழித்துக்கொண்டிருந்தனர்.
இன்று இன்னனும் 1 லட்சத்திற்கு அதிகமானோர் முகாம்களில் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். சில குடும்பத்தினர் நடுக்காடுகளில் அனாதரவாக எந்த பொருளாதார வசதிகளும் இல்லாமல் விடப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் உறவுகளோ தினமும் தமது உறவினைத்தேடி அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருக்கின்றனர். தமது தாய் மண்ணுக்காக போராடிய போராளிகள் கைதிகளாக வதை முகாம்களில் வதைக்கப்படுகின்றார்கள். கொலை செய்யப்பட்டு கொண்டிருக்கிறார்கள். இந் நிலையில் தமிழ் மக்களின் அவலங்களைப் போக்கவும் உரிமைகளை மீட்டெடுக்கவும் தொடர்ந்து ஒன்றிணைந்து போராட வேண்டிய பாரிய பொறுப்பும், கடமையும் புலம் பெயர்ந்து வாழும் இலட்சக்கணக்கான எங்கள் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
எமது போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய தலையாய கடமையில் நாம் உள்ளோம். இந்த வரலாற்றுக் கடமையை செய்வதற்கு நாம் எல்லோரும் ஒன்றிணைந்து சர்வதேச சமூகம் ஏற்றுக் கொள்ளும் வகையியில் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய தேவையின் அடிப்படையில் பிரான்சில் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுக்கான ஒரு அரசியல் கட்டமைப்பு ஒன்றினை உருவாக்க வேண்டிய அவசியமான காலகட்டத்தில் நாம் பிரான்சு தமிழழ மக்கள் பேரவையை மே 18ம் திகதிற்கு பின் உருவாக்கி ஒரு வருடத்தில் பல வேலை திட்டங்களை செயல்ப டுத்தியிருக்கிறோம். இன்று தமிழீழ போராட்டத்தை தம் கைகளில் எடுத்திருக்கும் புலம்பெயர்ந்து வாழும் மக்களிடையே பிரிவினைவாதத்தை வளர்த்து எமது உரிமை போராட்டத்தை அழிக்க எத்தனிக்கிறது.
உலக சரித்திரத்திலேயே யூத மக்களும் எமது இனத்தினைப்போன்று அதற்கு மேலான கொடுமை நிறைந்த சூழ்நிலையிலேயே இருந்திருந்தார்கள். புலம் பெயர் நாடுகளில் அவர்களிடம் தாம் தமது நாட்டுக்கு செல்ல வேண்டும் என்று கனவு இருந்தது. ஒற்றுமையான மிகப்பெரிய கட்டமைப்பு இருந்ததால் அவர்களின் போராட்டம் வலுவடைந்து அவரவர் வாழ்ந்த நாடுகளின் அதி உச்ச உறவுகள் மூலம் தமது நாட்டை வென்றடைந்தனர். இன்று அந்த கனவை நனவாக்கினார்கள். அதே போலவே நாமும் இந்த யூத இனத்தவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல எம்மாலும் எல்லாவற்றையும் சாதிக்க முடியும்.
உலகப் போராட்டங்களில் இனங்களை இணைக்கும் கருவியாக சமயம், கலாசசாரம், மொழி, இனங்களின் பாதுகாப்பு இருந்தது, இருந்து கொண்டேயிருக்கிறது. யுத மக்களை யுடாயிஸம் சமயம்,மொழி இனப்பாதுகாப்பு ஒன்றினைத்தது, அராபிய மக்களை இஸ்லாமிய சமயம் ஒன்றினைத்தது ஆர்மேனிய மக்களை அவர்கள் தாய்மண் பாதுகாப்பும் இனப்பாதுகாப்பும் மேல் ஓங்கியிருந்ததினால் மாபெரும் இன அழிப்பின் பின்னும் தம் உரிமை போராட்டத்தை புலத்தில் இருந்தும் தளத்திலிருந்தும் வென்றார்கள். எம்மை போல் அன்றும் அவர்களின் தளமும் இரண்டகர்ளின் செயல்களாள் ஆடிப்போய்யிருந்தது, ஆனால் தளத்தில் இருந்த மக்களின் வலிமையும் விடா முயற்சியும் தான் தளத்திற்கு நம்பிக்கையும்,தைரியரும் கொடுத்து விடுதலை பாதைக்கு இட்டுச்சென்றது.
இன்று நாம், எம்மை போராட்டத்தை எது இணைக்கிறது?
நாம் சமயத்தை சார்ந்த இனமில்லை. அந்நியப்பிடியிலிருந்து இனவிடுதலைக்காய் எல்லாளன் காலத்து முன்பிருந்தே போராடி வரும் இனம், தமிழுக்காய், அதன் வளர்சிக்காய் காலம் தொட்டு உழைத்த இனம், இன்று தமிழை உலகெங்கும் பரவவிட்டிருக்கும் இனம். அந்த மொழி விடுதலைக்காய் இந்நுயிர் தியாகங்களை செய்த இனம். சிங்களம் சமயத்தால் மொழியின் பின்னால் ஒன்றிணைந்து எம்மை அழித்தது.
எம்மை இனப்பது நாம் உலகமயப்படுத்திய தமிழின் விடுதலை,தமிழ் மக்களின் விடுதலை.
தமிழால் தமிழுக்காய் ஓன்றிணைவாம்.மற்றவர்களால் முடியும் என்றால்,எங்களால் ஏன் முடியாது?
எமது தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில் நாம் தொடர்ந்து உறுதியுடன் இலக்கு நோக்கி பயணிப்போம்.
நாளை நாம் எல்லோரும் தமிழழத்தில் சந்திப்போம்
அதை அடைய ஒன்றிணைவோம் ஒன்றுகூடுவோம்.
"தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்"
தொடர்புகளுக்கு:
பிரான்ஸ் தமிழீழ மக்கள் பேரவை.mte.france@gmail.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக