இலங்கை அதிபர் ராஜபட்சே அண்மையில் டெல்லிக்கு வந்தபோது இந்திய அரசின் சார்பில் அளிக்கப்பட்ட சிவப்புக் கம்பள வரவேற்பு மன்னிக்க முடியாத குற்றம் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.
தமிழக அரசின் தமிழின விரோதப் போக்கைக் கண்டித்து மக்கள் உரிமை கூட்டமைப்பு சார்பில் விழுப்புரத்தில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் பேசிய அவர்,
ஜூன் 8 ம் தேதி ராஜபட்சே டெல்லிக்கு வருகை தந்தபோது அங்கு அவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இது மன்னிக்க முடியாத துரோகச் செயல்.
பாஜக ஆட்சியில் பிரதமராக இருந்த வாஜ்பாய், இலங்கைப் பிரச்னை தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டினார். அதில் இலங்கைக்கு ராணுவத் தளவாடங்கள் விற்கக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதை மறந்து காங்கிரஸ் அரசு ராணுவ உதவிகளை செய்து, தமிழ் மக்களை அழிக்க போர் நடத்தியது என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக