12 ஜூலை 2010

தர்சிகா படுகொலை எதிரொலி.குடும்ப நல தாதிகள் கருப்பு பட்டி போராட்டம்.



வேலணையில் பணியாற்றிய குடும்பநல உத்தியோகத்தர் தர்ஜிகாவை படுகொலை செய்த சிங்கள வைத்தியர் மீது சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என யாழ் மாவட்டத்தில் உள்ள குடும்பநல உத்தியோகத்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி யாழ் மாவட்டத்தில் உள்ள குடும்பநல உத்தியோகத்தர்கள் கறுப்புப் பட்டி அணிந்தவாறு கடமைக்கு சென்றுள்ளனர்.
தாம் சிங்கள வைத்தியர்களால் பெரும் துன்புறத்தப்படுவதாகவும் எனவே யாழ்ப்பாணத்திலிருந்து அவர்களை இடமாற்றம் செய்துவிட்டு அதற்கு பதிலாக தமிழ் வைத்தியர்களை நியமிக்குமாறும் யாழ் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் யாழ். மாவட்ட குடும்பநல உத்தியோகத்தர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஆனால் யாழ் மாவட்டத்தில் தமிழ் வைத்தியர்கள் பணியாற்ற முன்வராத காரணத்தினாலேயே சிங்கள வைத்தியர்களை நியமிக்க வேண்டி ஏற்படுவதாக யாழ். மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்திருக்கிறது.
இதேவேளை குடும்பநல உத்தியோகத்தர் தர்ஜிகாவை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் வைத்தியர் பிரியந்த செனிவரத்னா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இப்பெண்ணின் மரணம் குறித்த மரணவிசாரணை தீர்ப்பு இன்று மாலை வழங்கப்படும் என ஊர்காவற்துறை நீதிபதி தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக