ஐ.நா. பொதுச்சபையின் 67ஆவது கூட்டத்தொடரில், இலங்கைக்கு எதிரான மனித உரிமைகள் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் தீவிரமாக இடம் பெறுவதாக இராஜதந்திர வட்டாரங்களை மேற் கோள்காட்டித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரிட்டனின் ஆதரவுடனேயே இந்தத் தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளதாகவும் அந்தத் தகவல்கள் கூறுகின்றன.
ஐ.நா. பொதுச் சபையின் 67ஆவது கூட்டத் தொடர் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகி எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 19ஆம் திகதி முடிவடைகிறது.
இந்தக் கூட்டத் தொடரிலேயே இலங்கையின் மனித உரிமை விவகாரம் பற்றிய தீர்மானம் ஒன்றைக் கொண்டுவரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பொதுச் சபைக் கூட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெறும் மனித உரிமைகள் கூட்டத்தின் மூன்றாவது அமர்விலேயே இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்ற முயற்சிகள் நடப்பதாகத் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாகப் பிரிட்டன் அரசின் பிரதிநிதிகளைக் கொண்ட குழுவொன்று நியூயோர்க்கில் ஐ.நாவின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கைக்கு எதிரான இந்தத் தீர்மானம் எதிர்வரும் ஒக்ரோபர் 10 ஆம் திகதி கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, ஐ.நாவில் இந்தத் தீர்மானத்தை எதிர்கொள்வதற்கான தயார்படுத்தல்களில் இலங்கை அரச அதிகாரிகள் பலரும் மும்முரமாக ஈடுபட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக