
இவர் தன்னுடைய கணவர் அந்தோனி முத்துராசா மற்றும் பிள்ளைகள் உறவினர்கள் சகிதம் நேற்று மன்னார் நகருக்கு வருகை தந்து மன்னார் மாவட்ட ஆயர் வண இராயப்பு ஜோசப், மன்னார் மாவட்ட எம்.பி. நிநோதாரலிங்கம் ஆகியோரைச் சந்தித்து தமது மகனைப் பாதுகாப்பதற்கு உதவமாறு உருக்கமாகக் கோரியுள்ளார்.
முத்துராஜா டில்ரூக்ஷன் 2006 ஆம் ஆண்டு தொழல்வாய்ப்பப் பெற்று கட்டார் சென்றுள்ளார். அங்கிருந்து அவர் தமது குடும்பத்துடன் அடிக்கடி தொடர்புகொண்டுள்ளார். பின்னர் 2007 ஆம் ஆண்டு நவம்பரில் நாடு திரும்பிய இவர் மன்னார் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார். அப்போது குடும்பத்தினருடன் தொடர்புகொண்ட அவர், மன்னார் பகுதியில் போர் இடம்பெற்று குடும்பத்தினர் இடம்பெயர்ந்த பின்னர் தொடர்பற்றிருந்துள்ளார்.
இந்தநிலையில் கடந்தவாரம் இவர் ராகம வைத்தியசாலையில் கோமா நிலையில் இருப்பதை அறிந்த பெற்றோர் அங்கு சென்று அவரைப் பார்த்துள்ளனர். தமது மகன் இரு கால்களும் சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் கோமா நிலையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்த தாயார், தமது மகனைக் காப்பாற்ற உதவமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக