
கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்
போட்டியிடவுள்ளதாக, தெரியவருகிறது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன்
இணைந்து போட்டியிடுவதற்கு தீர்மானித்திருந்த போதிலும் தாம் கோரிய
12வேட்பாளர்களுக்கான இடம் வழங்கப்படாததால் தனித்து போட்டியிடுவதற்கான முடிவை
தற்போது எடுத்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஷ் வட்டாரங்கள்
தெரிவித்துள்ளன.
இதனால் அக்கட்சியின் மர சின்னத்தில் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை
ஆகிய மூன்று மாவட்டங்களிலும் வேட்பாளர்களை நிறுத்துவதற்கான ஏற்பாடுகளில் அக்கட்சி
ஈடுபட்டுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஷ் கட்சி தலைமையகமான தாருஸ்ஸலாமில்
தற்போது வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக