யாழ். நெல்லியடியில் புலிக் கொடி விவகாரம் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைதுசெய்வதற்கு அவர்கள் பயணித்த மோட்டர் சைக்கிள் இலக்கங்களை தெரியப்படுத்தினால் உடனே கைது செய்வதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்' என யாழ். பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் (டி.ஐ.ஜி) எரிக் பெரேரா தெரிவித்தார்.
யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தர்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
நெல்லியடி பஸ் நிலையத்தில் மோட்டர் சைக்கிளில் புலிக்கொடியுடன் சென்றவர்கள் தொடர்பாக இதுவரையும் எவரும் முறையிடவில்லை. ஊடகங்கள் வாயிலாகவே இந்த விடயத்தை அறிந்து கொண்டேன்.
அந்தப் பகுதியில் கடமையில் ஈடுபட்ட பொலிஸாரிடம் இவ்விடையம் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மோட்டர் சைக்கிளில் புலிக்கொடியுடன் பறந்தவர்கள் யார் என்பது இதுவரை இனங்காணப்படவில்லை. அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் இலக்கத்தை தந்து உதவினால் பொலிஸார் துரிதமாக விசாரணைகளை மேற்கொண்டு அவர்களை கைது செய்யமுடியும்' என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக