11 ஜனவரி 2012

கெகலிய ரம்புக்கலவின் மகளையும் சீண்டியதாம் சவேந்திர சில்வா என்ற சிங்கம்!

நியுயோர்க்கில் உள்ள ஐ.நாவுக்கான சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியின் செயலகத்தில் பணியிலுள்ள சிறிலங்காவினது அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் மகள் சந்துலவிடம் ஐ.நாவுக்கான சிறிலங்காவின பிரதிநிதியும் போர்க் குற்றவாளியுமான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தகாதமுறையில் நடந்து கொள்ள முயன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
செயலகத்தில் தன்னை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்ற சவீந்திர சில்வா தவறாக நடந்து கொள்ள முயன்றதாகவும் தான் சுதாகரித்துக்கொண்டு போராடி அவரது பிடியில் இருந்து தப்பி ஓடியதாகவும் அமைச்சர் ரம்புக்வெலவின் மகள் தூதரக உயரதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார். இதனை கேள்வியுற்று ஆத்திரமடைந்த அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, உடனடியாக இதுபற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்தராஜபஷவிடம் கோரியதனையடுத்து அவர் மீது உடனடி நடவடிக்கை எடுப்பதாக மஹிந்தராஜபஷ உறுதியளித்துள்ளதுடன், இந்த விவகாரத்தை இதற்கு மேலும் பெரிதுபடுத்தாமல் அமைதியாக இருக்குமாறும் அறிவுரை கூறியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக