31 டிசம்பர் 2012

அடேல் பாலசிங்கம் யுத்தக் குற்றவாளி என்கிறது சிறீலங்கா!

வன்னி 
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் தத்துவாசிரியர் அமரர் அன்ரன் பாலசிங்கத்தின் பாரியார் அடல் பாலசிங்கம் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக இலங்கை அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
அடல் பாலசிங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர் எனவும், பெண் புலிகளுக்கான தலைமைப் பொறுப்பாளராக கடமையாற்றியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
10 வயது சிறுமிகளுக்கு பயிற்சிகளை வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சிறுவர் போராளிகளின் கழுத்தில் அடல் பாலசிங்கம் சயனைட் வில்லைகளை மாட்டி விட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சிக்கினால் சயனைட் வில்லைகளை அருந்தி உயிரை மாய்த்துக்கொள்ளுமாறு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
மேல் நாட்டு பெண் மற்றும் தாதி ஒருவர் இவ்வாறு கொடூரமான செயற்பாடுகளுக்கு ஆதரவளிப்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆயிரக் கணக்கான இளம் சிறுமிகள் உயிரிழக்கக் காரணமாக யுத்தப் பயிற்சிகளை வழங்கிய அடல் பாலசிங்கம் பிரித்தானியாவின் சர்ரே பிரதேசத்தில் வாழ்ந்து வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மனிதாபிமானத்திற்கு எதிரான யுத்தக் குற்றச் செயலில் ஈடுபட்ட பெண் ஒருவர் மிகவும் சுதந்திரமாக வாழ்ந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.
அடல் பாலசிங்கத்திற்கு எதிராக பிரித்தானியா எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளை தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவித்துள்ள பிரித்தானியாவில், புலிகளின் சர்வதேச தலைமைச் செயலகம் அமைந்துள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.
தடை செய்யப்பட்ட இயக்கமொன்றின் உறுப்பினர்கள் எவ்வாறு பகிரங்க ஆர்ப்பாட்டம் நடத்த முடியும், அரசியல் தலைவர்களுக்கு எதிராக எவ்வாறு போராட்டம் நடத்த முடியும் என பாதுகாப்பு அமைச்சு கேள்வி எழுப்பியுள்ளது.
பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் நிதி திரட்டுவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
2002ம் ஆண்டு தாய்லாந்தில் நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போத அடல் பாலசிங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளை பிரதிநிதித்துவம் செய்திருந்தார் என பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

பாஜக எம்எல்ஏவுக்கு குட்டைப் பாவாடை பரிசு!

பள்ளிக்கு செல்லும் பெண்குழந்தைகள் ஸ்கர்ட் எனப்படும் குட்டைபாவாடை அணியக்கூடாது என்ற பாஜக சட்டமன்ற உறுப்பினரின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
சமீபகாலமாக அதிகரித்துவரும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை கட்டுபடுத்துவது குறித்து பலர் கருத்து தெரிவித்துவரும் நிலையில், அவற்றில் பல கருத்துகள் சர்ச்சைக்குள்ளாகி வருகின்றன. இதில் புதிதாக சேர்ந்திருப்பது ஜெய்பூரிலுள்ள அல்வார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பல்வாரி லால் சிங்ஹாலின் கருத்து.
தலைமை செயலாளருக்கு பல்வாரி எழுதிய கடிதத்தில், பள்ளி செல்லும் மாணவியருக்கு குட்டை பாவாடைகளுக்கு பதிலாக சல்வார் கமீஸ் அல்லது பாண்ட் சட்டை ஆகிய உடைகளை சீருடைகளாக வழங்கவேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தார்.
குட்டை பாவாடை அணிந்த மாணவிகள் சாலையில் செல்லும்போது பல விதமான கிண்டல் கேலிக்கு ஆளாகிறார்கள் எனவும், இந்த சீருடை மாற்றம் அவர்களை கடும் குளிரில் இருந்தும் பாதுகாக்கும் எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.
இக்கருத்துகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பெண்கள் அமைப்பினர், பல்வாரி லால் சிங்காலின் இல்லத்தை முற்றுகையிட்டு அவருக்கெதிராக முழக்கங்களை எழுப்பினர்.
போராட்டத்தின் முடிவில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தமைக்காக போராட்டகாரர்கள் பல்வாரிக்கு ஒரு குட்டை பாவாடையை பரிசாக அளித்தது குறிப்பிடதக்கது.

அரசாங்கத்தின் நிலைப்பாட்டை புரிந்து கொள்ள முடியவில்லை!

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை புரிந்து கொள்ள முடியவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அதிகாரப் பகிர்வு மற்றும் 13ம் திருத்தச் சட்டம் தொடர்பில் அரசாங்கம் முன்னுக்கு பின் முரணான கருத்துக்களை வெளியிட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத் தெரிவுக்குழு முறைமை தொடர்பில் உடன்பாடு கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சுயாதீனமாக பேச்சுவார்த்தை நடாத்த முடியாத நிலையில் பாராளுமன்றத் தெரிவுக்குழு தொடர்பில் எவ்வாறு நம்பிக்கைக் கொள்வது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு எவ்வாறு அதிகாரங்களை பகிர்வது என்பது தொடர்பான யோசனைத் திட்டத்தை தமது கட்சி ஏற்கனவே அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளதாக சுரேஸ் பிரேமசந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

30 டிசம்பர் 2012

ஈழத் தமிழரைப் பாதுகாக்க களத்தில் இறங்குவோம்: மலேசிய மாநாட்டில் அழைப்பு

இலங்கையில் தமிழர்களுக்கு இனியும் அவலம் ஏற்படக்கூடாது. எதிர்காலத் தமிழ்ச் சந்ததியினரைப் பாதுகாக்க முழு மூச்சுடன் நாம் களத்தில் இறங்க வேண்டும் என மலேசிய எதிர்க்கட்சித் தலைவர் இன்பவர் இப்ராஹிம் தெரிவித்திருக்கின்றார். மலேசியாவில் நடைபெறும் உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மலேசியாவில், பெட்டாலிங் தோட்ட மாளிகையில் நடைபெறும் இரண்டாவது உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் சிறப்பு அதிதியாகக் கலந்துகொண்டு அன்வர் இப்ராஹிம் உரையாற்றினார். இலங்கைத் தமிழர்களின் இன்னல் தீர உலகத் தமிழர்கள் ஒன்றுபட வேண்டும் என இந்த மாநாட்டில் அழைப்பு விடுக்கப்பட்டது.
"இலங்கையில் இலட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் பலியானமை வன்முறையான ஆட்சியை வெளிப்படுத்துகின்றது" எனக் குறிப்பிட்ட அன்னவர் இப்ராஹிம், "பொஸ்னியா மற்றும் பலஸ்தீன மக்களின் துயரங்களைக் காட்டிலும், இலங்கைத் தமிழர்களின் துயரம் கொடியது" எனச்சுட்டிக்காட்டினார்.
சொந்த மக்களையே அழித்தொழிப்பது எந்த நாட்டிரலும் இருக்கக்கூடாது. இனியும் இப்படி ஒரு அவலம் தமிழர்களுக்கு ஏற்படக்கூடாது. எமது எதிர்கால தமிழினச் சந்ததியினரைப் பாதுகாக்க இன்றே நாம் முழுமூச்சாகக் களமிறங்க வேண்டும் எனவும் இப்ராஹிம் அழைப்பு விடுத்தார்.

அரசாங்கத்தை எமது வழிக்கு கொண்டுவர வேண்டும் - ஹக்கீம்

இந்த அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாற்றாந்தாய் மனப்பாங்குடன் நடத்தப்பட்டாலும் தற்போதைய சூழ்நிலையில் அரசாங்கத்தில் இருந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெளியேற மாட்டாது. ஆனால் எமது எட்டு எம்.பி.க்களும் ஒற்றுமையுடன் செயற்பட்டால் இந்த அரசாங்கத்தை வழிக்குக் கொண்டு வரலாம் என்று அக்கட்சியின் தலைவரான நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
இப்போது கிழக்கு முதலமைச்சர் எமது கட்சியைப் புறக்கணித்து நடக்கிறார். ஆனால் இன்னும் இரு வருடங்களில் அந்த முதலமைச்சர் பதவி முஸ்லிம் காங்கிரசுக்கு சொந்தமாகி விடும் என்றும் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் 24வது பேராளர் மாநாடு, தெஹிவளை ஜயசிங்க மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை (29) நடைபெற்ற போது அதன் இரண்டாவது அமர்வின் இறுதியில் பிரதான உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சர் ஹக்கீமின் உரையின் பெரும் பகுதி பேராளர்கள் சிலர் தெரிவித்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்பதாக அமைந்திருந்தது.
அங்கு உரையாற்றும் போது அவர் மேலும் கூறியதாவது;
"கட்சி எதிர்நோக்குகின்ற சவால்களுக்கு மத்தியில் புதிய ஆண்டின் ஆரம்பத்திலேயே ஓர் அக்கினிப் பரீட்சை நடைபெற போகின்றது, அந்த அக்கினிப் பரீட்சைக்கு எப்படி முகம் கொடுப்பது என்பது குறித்து உயர்பீடம் தீர்மானிக்கும்.
இன்று பல பிரேரணைகளை நாம் நிறைவேற்றி இருக்கிறோம், அந்த பிரேரணைக்கமைய பாராளுமன்றத்தில் உறுப்பினர்களாகிய நாம் எட்டுப் பேரும் அந்த அக்கினிப் பரீட்சையை எதிர் கொள்ள இருக்கிறோம். என்ன சட்டமூலமாக இருந்தாலும் கட்சியின் கொள்கை,கோட்பாட்டுக்கமைய அவற்றை எதிர்கொள்வதற்கு தயார் நிலையில் இருகிறோம். ஏற்கனவே மாகாண சபையில் அந்த அனுபவம் ஏற்பட்டது.
இதனை கட்சியின் போராளிகள் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். எனவே புதிய அதியுயர் பீடத்துக்கு இருக்கின்ற முதலாவது பணி அக்கினிப் பரீட்சையை எதிர் கொள்வதற்கான ஒரு தீர்மானத்தை மேற்கொள்வதாகும். அந்த தீர்மானத்தை பொறுத்தவரை பாராளுமன்றத்தில் ஒற்றுமையாக எமது உறுப்பினர்கள் செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை உறுதியானது.
முஸ்லிம் காங்கிரசை தாம் விரும்பிய திக்கில் இழுத்துக் கொண்டு போகலாம் என சில பத்திரிகைகள் நினைக்கின்றன. அவர்களது தேவைகளுக்கமைவாக எமது கட்சி செல்ல முடியாது. நாம் பிரயோக அரசியலைச் செய்கிறோம். ஆனால் கட்சியின் அடிப்படையை தாரைவார்க்க முடியாத ஒரு முக்கியமான சவாலை நாம் முதலில் எதிர் நோக்கியிருக்கிறோம், எனவேதான் இந்த பேராளர் மாநாடும், இதில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களும் மிகவும் முக்கியம் வாய்ந்தவையாக இருக்கின்றன.
அரசாங்கத்தோடு நாம் சில முக்கிய விடயங்களை கதைத்திருக்கிறோம், அரச மேல் மட்ட அமைச்சர்கள் சில உத்தரவாதங்களை தந்திருக்கிறார்கள். அவ்வாறான உத்தரவாதத்தை தந்த அமைச்சர் ஒருவரே அடுத்த சில நாட்களில் எங்கள் வாக்குகளை பாராளுமன்றத்தில் எதிர்பார்த்து இருக்கிறார், நாங்கள் ஒன்றாக இருந்து ஒற்றுமையாக செயல்படுவது எமது கோரிக்கைகளை வென்றெடுப்பதற்க்கு முக்கியமானது.
நாங்கள் தனித்துவமான அரசியல் செய்கின்ற இயக்கத்தினர் என்ற காரணத்தினால் பழிவாங்கப்படுகிறோம். நாங்கள் இரண்டறக் கலந்து சங்கமமாகாத கட்சியின்ர் என்ற காரணத்தினால் ஓரக்கண்ணால் பார்க்கப்படுகிறோம்.
எங்களது போராளிகள் நாளும் பொழுதும் இதற்க்குப் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள், பட்டதாரிகள் நியமனம் போன்றவற்றில் நாம் புறக்கணிக்கப்படுகின்றோம்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் நம்பிக்கைக்குரியவர் என்ற கருத்து எங்கள் மத்தியில் இருந்தாலும் கூட, இங்கு சிலர் கூறியவற்றை கேட்கும் பொழுது அவரைப் பற்றி மனப்பதிவில் தாக்கம் ஏற்படுகிறது, எங்களுக்கு குறிப்பாக எங்களது கிழக்கு மாகாண அமைச்சர்களுக்கு அவர் நண்பராக இருக்கிறார் என்பது வேறு விசயம். ஆனால் என்னவாக இருந்தாலும் இரண்டு வருடங்களுக்கு மட்டும்தான் அமைச்சராக இருக்க முடியும். இதனை நான் மிகவும் உறுதியாகவும் அறுதியாகவும் கூறுகின்றேன்.
நாங்கள் அரசாங்கத்தை விட்டு விட்டு போக மாட்டோம், அதற்கான ஆணையை மக்கள் எங்களுக்குத் தரவில்லை ஆனால் எங்களது சுய கெளரவத்தையும் கட்சியின் தனித்துவத்தையும் இழப்பதற்கு நாங்கள் தயாராக இல்லை.
அடுத்த மாதம் பிரதம நீதியரசருக்கு நிறைவேற்றப்படுகின்ற நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மற்றும் சட்ட திட்டங்களுக்கு கட்சி ஆதரிப்பதா இல்லையா என்று அடுத்த உயர் பீட கூட்டத்தின் போது 8 பாராளுமன்ற உறுப்பினர்களும் எவ்வாறு செயற்படுவது எனத் தீர்மானம் எடுக்கப்படும்.
கிழக்கின் முதலமைச்சர் பதவிக்கு இன்னும் 2 வருடங்கள் பொறுத்திருங்கள். அந்த முதலமைச்சரால் குச்சவெலி பிரதேசத்தின் முஸ்லீம் காங்கிரஸ் ஆதரவாளர்களை ஒன்றும் செய்ய முடியாது. முதலமைச்சர் ஆசனத்தில் அவரை அமர்த்தும்போது அவர் முஸ்லீம் காங்கரிஸ் காரர்களை பழிவாங்கும் நடவடிக்கைக்காக அமர்த்தவில்லை. அவர் எம்மோடு சேர்ந்து செயலாற்றுவார் என்றுதான் என்ணியிருந்தோம். ஆனால் அவர் எமக்கு மாறு செய்கிறார். ஆகவே இன்னும் இரு வருடங்கள் நாம் பொறுமையுடன் இருப்போம்" என்று குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் கட்சியின் தவிசாளர் பஷீர் சேகுதாவுத் எம்.பி. செயலாளர்நாயகம் எம்.ரி.ஹசன் அலி எம்.பி. பொருளாளர் எம்.எஸ்.எம்.அஸ்லம் எம்.பி. மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களும், மாகாண அமைச்சர்களும், மாகாண சபை உறுப்பினர்களும் உள்ளூராட்சி மன்ற தலைவர்களும், உறுப்பினர்களும், உயர்பீட உறுப்பினர்களும், பேராளர்களும், கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

29 டிசம்பர் 2012

மாணவி மரணம் எதிரொலி டில்லியில் பதற்றம்!

பாலியல் கொடுமைக்குள்ளான மாணவி சிங்கப்பூரில் மரணமடைந்ததைத் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெறுவதைத் தடுக்க 10 மெட்ரோ ரயில் நிலையங்களும் இந்தியா கேட் செல்லும் சாலையும் மூடப்பட்டுள்ளன. டெல்லியில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால் கடந்த 10 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்த அந்த மாணவி உயிரிழந்தார். இதனால் டெல்லியில் போராட்டம் தீவிரமடையக் கூடும் என்று கருதி சில பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. மேலும் ராஜபாதை, இந்தியா கேட் செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டுள்ளன. இந்தியா கேட்டை சுற்றிய 10 மெட்ரோ ரயில் நிலையங்களும் மூடப்பட்டிருக்கின்றன. பாதுகாப்புக்காக துணை ராணுவப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். டெல்லி ஜந்தர் மந்திர் மற்றும் ராம்லீலா மைதானத்தில் அமைதிவழியிலான போராட்டங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதனிடையே மாணவியின் மரணத்துக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இரங்கல் தெரிவித்திருக்கிறார். அவர் தமது இரங்கல் செய்தியில், தமது வாழ்வைக் காப்பாற்ற இறுதிவரை துணிச்சலுடன் போராடிய அந்த மாணவியை இழந்துவாடும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அந்த மாணவி இந்திய இளைஞர்களின் துணிச்சலின் அடையாளமாக திகழ்வார். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.இந் நிலையில் மரணமடைந்த மாணவிக்கு டெல்லியில் பொதுமக்கள் அமைதியான முறையில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஜந்தர் மந்தர் பகுதியில் கூடியுள்ள மக்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தியும், அமைதியாக அமர்ந்தும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். வன்கொடுமைக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தினர். இதில் ஏராளமான பள்ளிச் சிறுமிகளும் கலந்து கொண்டனர்.

தியாகராஜா மகேஸ்வரனின் சகோதரனுக்கு நல்லூரில் வைத்து அசிட் வீச்சு!

2008-ம் ஆண்டு புத்தாண்டு தினத்தன்று கொழும்பில் கோயிலுக்குள் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட மகேஸ்வரன் எம்.பியின் சகோதரர் துவாரகேஸ்வரன் தனக்குள்ள அச்சுறுத்தல் குறித்து முறைப்பாடுகள் ஏற்கனவே செய்திருக்கிறார். முன்னாள் யாழ். மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரனின் சகோதரராகிய தியாகராஜா துவாரகேஸ்வரன் மீது சனிக்கிழமை காலை யாழ்ப்பாணம் நல்லூர் கோவிலடியில் வைத்து அசிட் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது.
இவர், கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.
தனது மகனின் பிறந்தநாளையொட்டி, நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் வழிபாடுகளைச் செய்துவிட்டு தனது வாகனத்தில் ஓட்டுனர் இருக்கையில் ஏற முற்பட்டபோது, மோட்டார் சைக்கிளில் வந்தவர்களினால் தன்மீது அசிட் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும், வீசப்பட்ட அசிட் தனது கழுத்து மற்றும் முதுகுபுறத்தில் பட்டு தனக்கு எரிச்சலை ஏற்படுத்தியதாகவும் அவர் தெரிவித்திருக்கின்றார்.
தாக்குதல் நடத்தியவர்களை தெளிவாக அடையாளம் கண்டிருப்பதாகவும், தாக்குதல் நடத்தியவர்கள் பயணம் செய்த மோட்டார் சைக்கிள் இலக்கத்தையும் கண்டறிந்துள்ளதாகவும் அவர் கூறியிருக்கின்றார். பாதுகாப்புச் செயலரிடம் ஏற்கனவே முறைப்பாடு தனிப்பட்ட ஒரு பிரச்சினை காரணமாகவே தம்மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக அவர் கூறுகின்றார். தமக்கு இராணுவத்தினரிடமிருந்து அச்சுறுத்தல்கள் இருப்பது தொடர்பில் இராணுவத் தளபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு கடிதம் மூலமாக செய்துள்ள முறைப்பாட்டையடுத்து, விசாரணைகள் நடைபெற்றுவரும் வேளையிலேயே தம்மை அச்சுறுத்தி பணிய வைப்பதற்காக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக துவாரகேஸ்வரன் தெரிவித்திருக்கின்றார்.
தான் இராணுவத்திற்கும் பொலிசாருக்கும் எதிரானவர் அல்ல என்றும், எனினும் இராணுவத்தில் இருப்பவர்கள் இராணுவத்திற்குக் கெட்டபெயர் ஏற்படுத்தும் வகையில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டிருப்பதாக இராணுவ தளபதிக்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் தான் சுட்டிக்காட்டியிருப்பதாகவும் அவர் கூறியிருக்கின்றார். அசிட் தாக்குதலுக்கு உள்ளாகிய துவாரகேஸ்வரன் தற்போது யாழ். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். அவரை யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் இன்ஸ்பெக்டர் நேரடியாகச் சென்று பார்வையிட்டிருப்பதுடன் அவருடைய வாக்குமூலத்தை பதிவு செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அசிட் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் துவாரகேஸ்வரனின் சகோதரனும் யாழ் மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான தியாகராஜா மகேஸ்வரன் கடந்த 2008 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி கொழும்பு கொட்டாஞ்சேனை பொன்னம்பலவானேஸ்வரர் ஆலயத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சூட்டுச் சம்பவத்தில் அவரது மெய்ப் பாதுகாவலர் ஒருவரும் உயிரிழந்ததுடன், 6 பேர் படுகாயமடைந்திருந்தார்கள்.
யாழ்ப்பாணத்தில் அக்காலப் பகுதியில் இடம்பெற்றுவந்த பல்வேறு அச்சுறுத்தல் நடவடிக்கைகள் குறித்தும் அரசாங்கத்தின் மனித உரிமை மீறல் நடவடிக்கைகள் குறித்தும் அவர் நாடாளுமன்றத்திலும் வெளியிலும் குரல் எழுப்பி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

28 டிசம்பர் 2012

அரசும் எதிரணியும் பகிரங்க தொலைக்காட்சி விவாதம்!

விமல் வீரவன்ச 
ஆளும் தரப்பினருக்கும் எதிரணியினருக்கும் இடையில் புதுவருடத்தில் பகிரங்க விவாதம் ஒன்று நடைபெறவிருப்பதாக தெரிவிக்கப்படுக்கின்றது.
தனியார் தொலைக்காட்சி சேவை ஒன்றிலேயே இந்த விவாதம் நடத்தப்படவிருப்பதாகவும் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றப்பிரேரணை தொடர்பிலேயே இந்த விவாதம் நடத்தப்படவிருக்கின்றது.
நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம் வகித்த அமைச்சர் விமல் வீரவங்ச மற்றும் ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல ஆகியோருக்கு இடையிலேயே இந்த விவாதம் நடைபெறவிருக்கின்றது.
பகிரங்க விவாதம் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பரப்பு செய்யப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

மன்னார் ஆயரை விசாரணைக்குட்படுத்திய சிங்கள புலனாய்வாளர்கள்!

மன்னார் ஆயர் 
மன்னார் ஆயர் வணக்கத்திற்குரிய பிதா. இராயப்பு ஜோசப் ஆண்டகை சிறீலங்கா குற்றப்புலனாய்வு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சிறீலங்கன் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் சட்டவிரோதமாக செல்லும் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்படுதல் தொடர்பில் ஆயரினால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் தொடர்பிலேயே அவரிடமிருந்து பல கோணங்களில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலியாவிலிருந்து அகதிகள் நாடுகடத்தப்படுதல் தொடர்பில் அவரினால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் தொடர்பிலேயே அவரிடமிருந்து வாக்குமூலங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.நாடு கடத்தப்படும் தமிழர்கள் இலங்கையில் பல நெருக்கடிகளுக்கு ஆளாவதாக ஆயர் அவுஸ்திரேலிய அரசுக்கு கடிதம் அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

27 டிசம்பர் 2012

பிரணாப்பின் மகன் பெண்களை இழிவுபடுத்தி பேசியதால் பெரும் சர்ச்சை!

அபிஜித் முகர்ஜி 
டெல்லியில் பாலியல் பலாத்காரத்திற்காக போராடி வரும் பெண்கள் குறித்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி அவதூறான கருத்துக்களைத் தெரிவித்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். கொல்க்ததாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அபிஜித், பெண் போராட்டக்காரர்கள் டிஸ்கோ கிளப்புகளுக்குப் போய் ஆடுகிறார்கள், அழகாகவும் இருக்கிறார்கள் என்று பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், டெல்லியில் தற்போது நடந்து வருவதை எகிப்தில் நடந்த போராட்டங்களுடனோ அல்லது உலகின் வேறு பகுதிகளில் நடந்த போராட்டங்களுடனோ நிச்சயம் ஒப்பிட முடியாது. அது புரட்சி, இது வெறும் போராட்டம். மெழுகுவர்த்தி ஏந்தியபடி போராடட்ம் நடத்துவது, டிஸ்கோ கிளப்புகளுக்குப் போவது - இதையெல்லாம் நாம் மாணவர் பருவத்திலேயே செய்துள்ளோம். ஒவ்வொரு மாணவரும் இதில் ஈடுபட்டிருப்பார்கள். அதையெல்லாம் இப்போது செய்து கொண்டிருக்கிறார்கள். இப்போது டெல்லியில் பல அழகான இளம் பெண்கள் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். டிவிகளுக்குப் பேட்டி தருகிறார்கள். கூடவே குழந்தைகளையும் கூட்டி வருகிறார்கள். இவர்கள் மாணவியரா அல்லது வயதான பெண்களா என்று எனக்கு சந்தேகமாக உள்ளது என்றார் அவர். பிரணாப் முகர்ஜியின் மகன் இவ்வாறு பேசியுள்ளது  சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பல பெண்கள் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

தமிழ்மக்களுக்கு சரியான தீர்வில்லையேல் மீண்டும் விடுதலைப்புலிகள் - பிரான்ஸிஸ் ஹரிசன் எச்சரிக்கை!

இறுதி யுத்தத்தில் 1 லட்சத்து 06 ஆயிரம் பேரை காணவில்லை - பீபீசி ஊடகவியலாளர் அதிர்ச்சி தகவல்சிறிலங்கா அரசு தமிழ் மக்கள் தொடர்பில் சரியான தீர்வை முன்வைக்கத் தவறினால், மீண்டும் ஒருமுறை விடுதலைப் புலிகளின் அல்லது அவர்களைப் பின்பற்றுபவர்களின் ஆட்சேர்ப்பு முகவராக மாறும் நிலை ஏற்படும். இவ்வாறு எச்சரித்துள்ளார் பி.பி.சி. முன்னாள் செய்தியாளர் பிரான்ஸிஸ் ஹரிசன்.
“தி ஏசியன் ஏஜ்” ஊடகத்துக்கு வழங்கியுள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
துப்பாக்கிகள் மௌனமாகி விட்ட போதிலும், அச்சம், அவமானம், பெளதீக ரீதியான பாதுகாப்பின்மை, சட்ட ஆட்சியின் குறைபாடு, இராணுவ மயமாக்கல், வடக்கில் சிங்கள மாயமாக்கல், சிறுபான்மையினருக்கு அதிகாரங்கள் பகிரப்படாத நிலை போன்ற காரியங்களே அங்கு காணப்படுகிறன.
விடுதலைப் புலிகள் குறைந்தபட்சம் சிறிலங்கா இராணுவ பலத்துக்கு ஈடு செய்யும் நிலையிலேனும் இருந்தார்கள் என்று தமிழர்கள் பலர் சொல்கின்றனர். இப்போது எல்லா அதிகாரங்களும் ஒரே பக்கத்தில் உள்ளது.
விடுதலைப் புலிகள் இல்லாத நிலையிலும் கூட, சிறிலங்கா அரசு தமிழர்களுக்கு அவர்களின் உரிமைகளைக் கொடுக்க தயாராக இல்லை.
இந்த நிலைமையை கவனமாக கையாளத் தவறினால், மீண்டும் ஒருமுறை விடுதலைப் புலிகளின் அல்லது அவர்களைப் பின் பற்றுபவர்களின் ஆட்சேர்ப்பு முகவராக அரசே மாறும் நிலை ஏற்படும்.
மக்களின் நினைவு கூரும் உரிமை அல்லது தமது கலாசாரத்தை பாதுகாக்கும் உரிமை, மற்றும் அவர்களின் அரசியல் உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்படுமானால், அது ஏற்கனவே வலுவாக உள்ள உணர்வுகளை அதிகரிக்கச் செய்யும்.
விரைவிலேயே அது "பழிவாங்கும் நெருப்பாக எரியும்" என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

ஈரான் - தமிழ் அகதிகள் இடையே மோதல்!

பபுவா நியுகினியின் மனுஸ் தீவில் கிறிஸ்மஸ் தினத்தன்று ஏற்பட்ட கைகலப்பில் 7 பேர் படுகாயமடைந்துள்ளதாக அவுஸ்திரேலிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
மனுஸ் தீவு அகதிகள் முகாமில் உள்ள தமிழர்களுக்கும் ஈரான் அகதிகளுக்கும் இடையில் இம்மோதல் இடம்பெற்றுள்ளதாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் கிறிஸ் பொவன் உறுதி செய்துள்ளார்.
இணைய அறையில் இந்த மோதல் ஏற்பட்டதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள ஈரான் அகதிகள் விடுத்த அழைப்பை தமிழ் அகதிகள் மறுக்கவே இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.
அகதி முகாமில் சேவையில் இருந்த G4S என்ற நிறுவனத்தின் ஊழியர் ஒருவரும் மோதலில் காயமடைந்துள்ளார்.
மோதல் குறித்து மனுஸ் தீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மனுஸ் தீவில் 30 சிறுவர்கள், பெண்கள் உட்பட இலங்கை, ஈரான், ஆப்கான், ஈராக், பாகிஸ்தான் அகதிகள் 130 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

26 டிசம்பர் 2012

முஸ்லீம்களும் ஆயுதம் ஏந்த வேண்டுமா?முஸ்லீம் தமிழ் தேசிய முன்னணி கேள்வி

முஸ்லிம்கள் தமது உரிமைகளைப் பாதுகாக்க ஆயுதம் ஏந்தவேண்டும் என்பதையா அரசு எதிர்பார்க்கின்றது -பொதுபல சேனா' என்ற சிங்கள அமைப்பினூடாகவும், ஏனைய சிங்கள இனவாதிகளினூடாகவும் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அராஜக நடவடிக்கைகளை அரசு ஏன் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கின்றது.
முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறைகளையும், அராஜகங்களையும் அரசு தொடர்ச்சியாகக் கட்டவிழ்த்துவிடுவதனூடாக முஸ்லிம்கள் தமது உரிமைகளைப் பாதுகாக்க ஆயுதம் ஏந்தவேண்டும் என்பதையா அரசு எதிர்பார்க்கின்றது எனக் கேள்வி எழுப்பியுள்ள முஸ்லிம் தமிழ்த் தேசிய முன்னணி, முஸ்லிம்களை அந்த நிலைக்கு ஆளாக்கவேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
'பொதுபல சேனா' என்ற சிங்கள அமைப்பினூடாகவும், ஏனைய சிங்கள இனவாதிகளினூடாகவும் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அராஜக நடவடிக்கைகளை அரசு ஏன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றது.
சிறிய பிரச்சினை எனக் கூறி அரசு இவற்றைத் தட்டிக்கழித்தால் அதன் எதிர்விளைவுகள் ஆபத்தானதாக அமையும் என முஸ்லிம் தமிழ்த் தேசிய முன்னணியின் தலைவரும், கொழும்பு மாநகர முன்னாள் பிரதி மேயருமான அஸாத் ஸாலி அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறைகள் அண்மைக்காலமாக நாட்டில் அதிகரித்துவருகின்றன. இதற்கு ஆதாரமாகக் கடந்த ஞாயிற்றுக்கிழமை எம்பிலிப்பிட்டியவில் சிங்களக் குழுவினரால் முஸ்லிம் வர்த்தகர்கள் இருவர் தாக்கப்பட்ட சம்பவமும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
எம்பிலிப்பிட்டிய சந்தையில் இரண்டு முஸ்லிம் கடைகள் இருக்கின்றன. இந்த இரு கடைகளிலுள்ள வர்த்தகர்கள் சிங்களக் குழுவினரால் தாக்கப்பட்டுள்ளனர். ஏன் சிங்களக் குழுவினரால் அவர்கள் தாக்கப்பட்டனர்? எதற்காகத் தாக்கப்பட்டனர்?
'பொதுபல சேனா' என்ற சிங்கள அமைப்பும், ஏனைள சிங்கள இனவாதிகளும் முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறைகளைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், இவர்களுக்கு எதிராக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எம்பிலிப்பிட்டியவில் முஸ்லிம் வர்த்தகர்கள் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்குமா எனத் தெரியவில்லை.
தம்புள்ளை பள்ளிவாசல் தாக்குதலுக்கு முன்னின்று செயற்பட்ட பிக்குகளுக்கு எதிராக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்கள் கைதுசெய்யப்படுவதற்கான தகுந்த ஆதாரங்கள் இருக்கின்றன. ஆனால், அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறைகள் இடம்பெறுகின்ற சந்தர்ப்பங்களில் ஆளுந்தரப்பிலுள்ள முஸ்லிம் அமைச்சர்களும், எம்.பிமார்களும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் சென்று முறையிடுகின்றனர். அவரிடம் முறையிட்டு என்ன பயன்?
முஸ்லிம் பள்ளிவாசல் உடைப்பு, முஸ்லிம் வர்த்தகர்கள் தாக்கப்படுதல், முஸ்லிம்களின் ஹலால் உணவுகள் தடைசெய்யப்படவேண்டும் என சிங்கள இனவாதிகள் மேற்கொள்ளும் அராஜக செயல்கள் அனைத்தும் சிறிய செயல்கள் என்று பாதுகாப்புச் செயலாளர் கூறுகின்றார்.
எமது சமயத்துடனும், மக்களது வாழ்வுடனும் விளையாடுவது சிறிய செயலா? இதுபோன்ற சிறிய செயல்களின் எதிர்விளைவுகள் நாட்டுக்கு ஆபத்தானதாக அமையும். எனவே, முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறைகள் நாட்டில் இனிமேலும் தொடரக்கூடாது.
அதற்கு அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். அடக்குமுறைகளை மேற்கொள்பவர்களுக்கு எதிராகத் தண்டனை வழங்கப்படவேண்டும்.
முஸ்லிம்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்படும் அடக்குமுறைகளை அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதனூடாக முஸ்லிம்களும் தமது உரிமைகளைப் பாதுகாக்க ஆயுதம் ஏந்தவேண்டுமென்றா அது எதிர்பார்க்கிறது? வேண்டாம். எம்மை ஒருபோதும் அந்த நிலைக்குத் தள்ளிவிடவேண்டாம் என அஸாத் ஸாலி குறிப்பிட்டுள்ளார்.

கிரிக்கெட் வாய்ப்பு மஹிந்த ராஜபக்ஷவின் அழுக்கான உருவத்தை கழுவிக்கொள்ளவே உதவும்!

கிரிக்கெட் வாய்ப்பு மஹிந்த ராஜபக்ஷவின் அழுக்கான உருவத்தை கழுவிக்கொள்ளவே உதவும்!இலங்கை கிரிக்கெட் அணி அவுஸ்திரேலிய அணியுடன் மேல்போனில் பங்கேற்கும் இரண்டாவது கிரிக்கெட் ரெஸ்ட் போட்டியின் போது இலங்கை தமிழர்கள் மைதானத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உலக விளையாட்டு அரங்கில் இருந்து இலங்கையை அகற்ற வேண்டும்.சிம்பாவே விடயத்தில் நடந்துக்கொண்டதை போன்று இலங்கை விடயத்திலும் அவுஸ்திரேலியா தமது எதிர்ப்பை வெளியிடவேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கோரினர்.
கிரிக்கெட் விளையாட்டின் மூலம் இலங்கைக்கு வாய்ப்புகள் வழங்கப்படுவதனால்,இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,தமது அழுக்கான உருவத்தை கழுவிக்கொள்ளவே உதவும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
2007 ஆம் ஆண்டில், சிம்பாவேக்கு கிரிக்கட் சுற்றுலாவை புறக்கணித்த அவுஸ்திரேலியாவின் அப்போதைய பிரதமர் ஜோன் ஹவாட், அவுஸ்திரேலிய அணி, சிம்பாவே செல்லுமானால், அது ஜனாதிபதி ரொபட் முகாபேயின் சர்வதிகாரத்துக்கு ஒட்சிசன் வழங்கும் செயலாக அமைந்துவிடும் என்று குறிப்பிட்டிருந்ததாக ஆர்ப்பாட்டத்தின் ஏற்பாட்டாளர் ட்ராவோர் கிரான்ட் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் இலங்கையில் இராணுவ அடக்குமுறை ஆட்சி இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. ஐக்கிய நாடுகளின் அறிக்கையும் இதனை உறுதிசெய்து சுயாதீன விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளது.
இலங்கையின் கிரிக்கெட் அணியை புறக்கணிப்பதில் எவ்வித தவறும் இல்லை. அத்துடன் வேறு நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை கிரிக்கெட் அணி, அரசியலுடன் மிகவும் நெருங்கிய தொடர்பை கொண்டிருக்கிறது என்று கிரான்ட் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் போர்குற்றங்கள் தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ சுயாதீன விசாரணைகளுக்கு இணங்கும் வரை இலங்கையுடன் விளையாட்டு தொடர்புகளை அவுஸ்திரேலிய பேணக்கூடாது என்றும் கிரான்ட் தெரிவித்துள்ளார்.
ட்ராவோர் கிரான்ட்,முன்னாள் கிரிக்கெட் வீரரும் த ஏஜ் செய்தித்தாளின் எழுத்தாளரும் ஆவார்.

25 டிசம்பர் 2012

தமிழர்களின் அவலநிலை ஐநாவில் முன்னிலைப்படுத்தப்படும்!

இனப்பிரச்சினை தீர்வு விவகாரத்தில் அரசாங்கமானது சர்வதேசத்தை ஏமாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளது. இத்தகைய போக்கு தொடருமானால் சர்வதேச ரீதியில் இலங்கை அந்நியப்படுத்தப்படும் சூழல் ஏற்படுவது நிச்சயமாகும்.
தமிழர்களின் அவலநிலை குறித்து மார்ச் மாதம் ஐநா மனித உரிமைகள் பேரவை அமர்வில் முன்னிலைப்படுத்தப்படும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
இனப்பிரச்சினை தீர்வுக்கு பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு வருமாறு அரசாங்கம் அழைப்பு விடுத்து வருகின்றது. ஆனால் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க விடயத்தில் பாராளுமன்ற தெரிவுக்குழு செயற்பட்ட விதம் குறித்து தற்போது சகலருமே அறிந்துள்ளனர்.
பிரதம நீதியரசருக்கே தெரிவுக்குழுவில் அநீதி இழைக்கப்படுகின்றதென்றால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவுக்குழுவில் பங்கேற்றால் என்ன நடக்கும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தெரிவுக்குழுவில் தமிழ் மக்கள் நியாயத்தை ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் தமிழ் மக்களின் பிரச்சினைகளும் முடிவுக்கு வந்து விட்டதாகவே கருதுகின்றது. சர்வதேசத்துக்கு காட்டுவதற்காக இனப்பிரச்சினை தொடர்பில் பேசுவதாக அரசாங்கம் கூறி வருகின்றது.
வடமாகாணத்தில் ஒன்றரை லட்சம் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர். ஆனால் அங்கு 15,100 இராணுவத்தினரே நிலைகொண்டுள்ளதாக இராணுவ கட்டளைத் தளபதி கூறுகின்றார். இராணுவப் பிரசன்னம் வடக்கில் அதிகரித்துள்ளதுடன் திட்டமிட்ட குடியேற்றங்களும், காணி அபகரிப்பு நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன.
எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐநா மனிதஉரிமைகள் பேரவை கூட்டத்தில் ஏற்படவுள்ள நெருக்கடியை சமாளிக்கும் விதமாகவே அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமைந்துள்ளன. இனப்பிரச்சினை விவகாரமாகட்டும் நாட்டின் நீதித்துறையுடன் ஏற்பட்டுள்ள முரண்பாடு ஆகட்டும் அரசாங்கத்துக்கு சாதகமான வகையில் செயற்பாடுகள் அமைய வேண்டும் என்பதையே நாட்டின் தலைமை விரும்புகின்றது.
அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சிப்பவர்கள் மற்றும் அதற்கெதிராக போராடுபவர்களை அரசாங்கம் ஏற்றுக்கொள்வதாக இல்லை. அத்தகைய செயற்பாடுகளை ஜீரணிக்க முடியாத நிலையில் அரசாங்கம் உள்ளது. பிரதம நீதியரசர் விவகாரத்தை எடுத்துக்கொண்டால் திவிநெகும சட்டமூலம் தொடர்பில் அவர் வழங்கிய நீதியான தீர்ப்பே அவருக்கெதிராக குற்றவியல் பிரேரணையினை கொண்டு வருவதற்கு வழி சமைத்திருந்தது. பிரதம நீதியரசர் சட்டத்துக்கு அமையவே செயற்பட்டார்.
பிரதம நீதியரசரை விசாரணைக்குட்படுத்திய தெரிவுக்குழு செயற்பட்ட விதத்தை இன்று அனைவருமே அறிவார்கள். பிரதம நீதியரசருக்கே இத்தகைய அநீதி இழைக்கப்படும் போது இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து பேசுவதற்கு கூட்டமைப்பு பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு சென்றால் எத்தகைய நிலை ஏற்படும் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள முடியும்.
இனப்பிரச்சினைத் தீர்வுக்கு அரைகுறையாகவும் அற்பசொற்ப அதிகாரங்களுடனும் காணப்படும் 13வது திருத்தச் சட்டத்தையும் இல்லாதொழிக்க முயலும் அரசாங்கத்தை எவ்வாறு நம்ப முடியும். சர்வதேசத்தை அரசாங்கம் ஏமாற்றுவதற்காகவே அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது.
இனப்பிரச்சினை தீர்வு விவகாரத்தில் அரசாங்கமானது சர்வதேசத்தை ஏமாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளது. இத்தகைய போக்கு தொடருமானால் சர்வதேச ரீதியில் இலங்கை அந்நியப்படுத்தப்படும் சூழல் ஏற்படுவது நிச்சயமாகும்.
எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜெனிவா மனிதஉரிமைகள் பேரவை மாநாட்டிலும் அடுத்த வருடம் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டிலும் இலங்கை அரசாங்கம் நெருக்கடிகளை சந்திக்கும் நிலை ஏற்படும்.
ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கத்தின் உண்மை முகம் குறித்து நாம் பல வழிகளிலும் எடுத்துக் கூறுவதற்கு முயல்வோம் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கைகள் கூட இன்னமும் முழுமையாக அமுல்படுத்தப்படவில்லை. இத்தகைய நிலை தொடர்ந்தால் அரசாங்கம் தனிமைப்படுத்தப்படும் என்பது மட்டும் உண்மையாகும்.

மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 7ம் ஆண்டு நினைவுநாள்!

மட்டக்களப்பில் தேவாலயத்தில் தனது பாரியாருடன் நத்தார் வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தவேளை  தேசத்துரோகிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 07வது ஆண்டு நிறைவு தினம் இன்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்படுகிறது.
இன்று செவ்வாய்க்கிழமை 03 மணியளவில் நல்லையா வீதியில் இருக்கும் தமிழரசுக்கட்சி அலுவலகத்தில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.
மட்டக்களப்பு தொகுதி தமிழரசுக்கட்சியின் கிளையினால் இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு தொகுதி கிளைத்தலைவர் பரமானந்தம் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், தமிழரசுக்கட்சி முக்கியஸ்தர்கள், உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

24 டிசம்பர் 2012

வேட்டை நாய்களின் தலையை துண்டிக்கும் நிலை மகிந்தவிற்கு ஏற்படும்!

மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் தற்போதைய நிர்வாகமானது, முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் இறுதிகால ஆட்சிக்கு இணையானது என மௌபிம மக்கள் கட்சியின் தலைவர் ஹேமகுமார நாணயக்கார தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம், அரசாங்கத்திற்கு வலியை ஏற்படுத்துவோர், சரியானதை செய்வோர் என அனைத்து தரப்பினர் மீதும்  அரச பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளது.
இதனால் வட பகுதியில் உள்ள இளைஞர்கள் முதல், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் வரையான அனைவரும் அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
அரசாங்கத்தின் வேட்டை நாய்கள் மேற்கொண்டு வரும் இந்த நடவடிக்கை காரணமாக மன்னனின் கழுத்தில் இருந்த ஈயை விரட்டுவதற்காக, குரங்கு வாளை பயன்படுத்தியதை போன்று ஜனாதிபதிக்கு வேட்டை நாய்களின் தலையை துண்டிக்க வேண்டிய நிலைமை ஏற்படும்.
தற்போது நாட்டில் அமுல்படுத்தப்பட்டு வரும் பயங்கரவாத நிலைமையானது முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவின் இறுதிகால ஆட்சியின் போது முன்னெடுக்கப்பட்ட நிலமைக்கு ஈடானது எனவும் ஹேமகுமார நாணயக்கார கூறியுள்ளார்.

காணாமல்போன உறவினர்கள் தொடர்பில் முறையிடக்கூடாது-படையினர் எச்சரிக்கை

இலங்கையின் கிழக்கே, திருகோணமலை மாவட்டத்தில் தம்பலகாமம் கிராமத்தில் மக்கள் பாதுகாப்புத் தரப்பினரால் எச்சரிக்கப்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.
அந்தப் பிரதேசங்களில் கடந்த காலங்களில் கடத்தப்பட்டு காணாமல்போனவர்களின் உறவினர்கள் ஐநா உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளிடமோ அல்லது வேறு வெளிநாட்டு நிறுவனங்களிடமோ முறைப்பாடு செய்யக்கூடாது என்றும் இராணுவத்தினர் எச்சரித்துவிட்டுச் சென்றுள்ளதாக அப்பகுதி மக்கள் தமக்கு முறைப்பாடு செய்துள்ளதாக வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் போரினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக குரல்கொடுக்கின்ற அமைப்பொன்றின் தலைவி தெரிவித்தார்.
தம்பலகாமத்துக்கு இரண்டு தினங்களுக்கு முன்னர் இராணுவ வாகனமொன்றில் சென்ற நபர்கள், விடுதலைப் புலிகளோடு தொடர்புடைய எவராவது அங்கு வசிக்கிறார்களா என்று தேடிச்சென்றதாகவும் போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பின் தலைவி கூறினார்.
மக்கள் தமது காணாமல்போன உறவினர்கள் தொடர்பில் வெளிநாட்டு அமைப்புகளிடம் முறையிடக்கூடாது என்றும் படையினர் எச்சரித்துச் சென்றதாகவும் வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான தலைவி தெரிவித்தார். ´கப்பம் வாங்கியவர்கள் சுதந்திரமாகத் திரிகிறார்கள்´
தமது கணவன்மாரும் பிள்ளைகளும் கடத்தப்பட்டபோது அவர்களை விடுவிப்பதற்காக தம்மிடம் கப்பம் பறித்த ஆயுதக் குழுக்களைச் சேர்ந்த பலரும் எந்தவிதமான பிரச்சனைகளுமின்றி தமது பிரதேசங்களில் நடமாடிவருவதாகவும் அவர் தெரிவித்தார்.
கடத்தப்பட்டு காணாமல்போனவர்களின் குடும்பங்கள் பொருளாதார ரீதியில் மிகவும் சிரமப்படுவதாகவும் அந்தக் குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்க அரசாங்க அதிகாரிகள் முன்வரவேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் கூறுகின்றன.
2008 முதல் 2009-ம் ஆண்டுக் காலப்பகுதியில் போர் உச்சத்தில் இருந்தபோது, ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்டு காணமல்போனவர்களின் நூற்றுக்கும் அதிகமான குடும்பங்கள் தமது அமைப்பில் அங்கம் வகிப்பதாக போரினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான அமைப்பின் தலைவி பிபிசி தமிழோசையிடம் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, தம்பலகாமம் பகுதியில் மக்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சம்பவம் பற்றி இலங்கை படைத்தரப்பின் கருத்துக்கள் கிடைக்கப்பெறவில்லை.

தினந்தோறும் மும்மூன்று மாணவர்களாக விசாரணை!

நாளாந்தம் சுமார் மூன்று யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் வீதம் வவுனியாவுக்கு அழைக்கப்பட்டு விசாரணை:யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால்  தொடர்ந்தும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக மாணவிகள் மீதான விசாரணைகள் அதிகரித்துள்ளன. இவ்வாறு நாளாந்தம் சுமார் மூன்று மாணவிகள் வீதம் வவுனியாவுக்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
மாணவர்கள் விசாரணைக்கு அழைக்கப்படும் விடயம், அவர்களது வீடுகளுக்குத் தெரியப்படுத்தப்பட்டே இடம்பெறுவதால் இதுவரை எத்தனை மாணவர்கள் இவ்வாறு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை அறியமுடியவில்லை என யாழ். பல்கலைக்கழக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தைச் சேர்ந்தவர்கள் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து பல்கலைக்கழக மாணவர்களும், மாணவிகளும் நாளாந்தம் விசாரணைக்காக வவுனியாவுக்கு அழைக்கப்படுகின்றனர். அங்கு மணித்தியாலக் கணக்கில் அவர்கள் விசாரணைக்குட்படுத்தப்படுகின்றனர்.
நாளாந்தம் சுமார் மூன்று மாணவிகள் வீதம் வவுனியாவுக்கு அழைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்படுகின்றனர்.

23 டிசம்பர் 2012

சிங்கள ஆக்கிரமிப்புப் படை முற்றாக வெளியேற்றப்படுவதே ஒரே வழி! - பிரதமர் வி.உருத்திரகுமாரன்

தமிழர் தாயகத்தில் சிங்களப் படையினர் நிலைகொண்டிருக்கும் வரை தமிழ் மக்களுக்கு ஜனநாயகவெளியோ பாதுகாப்புணர்வோ கிடைக்கப்போவதில்லை. சிங்களப் படையினர் தமிழர் தாயகப் பகுதியில் இருந்து முற்றாக வெளியேறல் அவசியமானதென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். சிங்களப் படைகள் வெளியேறும் வரை இடைக்கால ஏற்பாடாக அனைத்துலகப் பாதுகாப்புப் பொறிமுறையொன்று உருவாக்கப்பட்டு தமிழ் மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவேண்டும். இதற்கான அனைத்துலக மட்ட ஆதரவைத் திரட்டும் முயற்சிகளை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்ச்சியாக முன்னெடுக்கும் எனத் தெரிவித்துள்ளார். யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலைக்காக வட தமிழீழத்தின் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்த உண்ணாநிலைப் போராட்டத்திற்கு வலுவூட்டவும் தாயக மக்களுக்கு புலம்பெயர் மக்களின் தோழமையினை வெளிப்படுத்தவும் லண்டனில் பிரித்தானியப் பிரதமர் பணிமனையின் முன்னால் ஒரு நாள் அடையாள உண்ணாநிலைப் போராட்டமொன்றினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மேற்கொண்டிருந்தது.
காலை 8மணி முதல் இரவு 8 மணி வரை இடம்பெற்றிருந்த கவனயீர்ப்பு போராட்டத்தின் கோரிக்கையடங்கிய மனுவொன்றும் பிரத்தானிய பிரதமர் அலுவலகத்திடம் கையளிக்கப்பட்டிருந்தது. இக்கவனயீர்ப்பு அடையாள உண்ணாநிலைப் போராட்டத்தினை மையப்படுத்தி பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் அறிக்கையொன்றினை வெளியிட்டிருந்தார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் சிறிலங்கா படையினரானல் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பதைக் கண்டித்து அவர்களை விடுதலை செய்யக் கோரியும் சிங்கள ஆக்கிரமிப்புப் படையினரைத் தமிழர் தாயகப் பகுதிகளில் இருந்து முற்றாக வெளியேறக் கோரியும் தமிழ் மக்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாடுகள் குறித்து அமைந்த அறிக்கையின் முழுவிபரம்:
தமிழர் தாயகப்பகுதிகளில் சிங்களப்படையினர் நிலை கொண்டிருக்கும்வரை தமிழ் மக்களின் பாதுகாப்புக்கு எதுவித உத்தரவாதமுமில்லை என்பதனை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் கைது விவகாரம் மீண்டுமொருமுறை தெட்டத்தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. முள்ளிவாய்க்காலில் சிங்களம் தமிழ் மக்கள் மீது நடாத்திய இனஅழிப்புக்கு உலக அரங்கில் நாம் நீதி கோரி வரும் இக்காலகட்டத்தில் சிங்களத்தின் தமிழர் தேசம்மீதான இனஅழிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்த வண்ணமுள்ளன. பல்கலைக்கழக மாணவர்கைதும் விடுவிக்கப்பட்ட போராளிகளின் மீள்கைது நடவடிக்கைகளும் ஈழத் தமிழர் தேசத்தின் மீதான இராணுவ ஒடுக்குமுறையினை சிங்களம் தீவிரப்படுத்துவதை வெளிப்படுத்தி வருகின்றன. முள்ளிவாய்க்காலில் சிங்களம் நிகழ்த்திய இன அழிப்புக்கும் தற்போதய காலகட்டத்து சிங்களத்தின் இனஅழிப்புத் திட்டத்துக்கும் இடையே அணுகுமுறை வேறுபாடு இருக்கிறது. ஆனால் இலங்கைத்தீவில் ஈழத் தமிழர் தேசத்தை இல்லாதொழித்தல் என்பதுதான் இந்த இனஅழிப்புத் திட்டத்தின் ஒரே நோக்கமாக இருந்து வருகிறது.
முள்ளிவாய்க்காலில் போரைச் சாக்காக வைத்து பெரும் எண்ணிக்கையிலான தமிழ் மக்களைக் கொன்று தள்ளிய சிங்களம் இப் படுகொலைகளின் ஊடாக தமிழ் மக்கள் தம்மை ஒரு தேசமாக அடையாளப்படுத்தும் வேட்கையினை இல்லாதொழிக்க முயன்றது. தமக்கென ஒரு தனியரசினை அமைத்துக் கொள்ளும் பெருவிருப்பினை ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் இருந்து அகற்றிவிட முனைந்தது. தமிழர் அடையாள அரசியலை தமிழர் மத்தியில் இல்லாதொழித்து சிங்கள பெரும் சமூக அரசியலுக்குள் தமிழர் அரசியலைக் கரைக்க முனைந்தது. இருந்த போதும் ஈழத் தமிழ் மக்களின் அரசியல் விழிப்புணர்வை சிங்களத்தால் ஆட்டம் காணச் செய்யமுடியவில்லை. தற்போது தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து நின்றவாறு சிங்களம் மேற்கொள்ளும் இனஅழிப்புத் திட்டத்தில் இரண்டு முக்கிய அம்சங்கள் உண்டு. ஒன்று, ஈழத் தமிழர் தேசத்தின் தேசத் தகைமையினை அவர்களிடமிருந்து உரித்தெடுத்து அவர்களை உதிரித் தமிழர்கள் ஆக்குவது.
இரண்டாவது இவ்வாறு உதிரிகளாக்கப்பட்ட தமிழர்களைச் சிங்கள மேலாதிக்கத்தை ஏற்றுக் கொள்ள வைத்து இனக் கபளீகரம் செய்வது. இவை ஈழத் தமிழர் தேசத்தை இலங்கைத்தீவில் இல்லாது அழிக்கும் நோக்கத்தை தன்னகத்தே கொண்டு வடிவமைக்கப்பட்ட இனஅழிப்புத் திட்டங்களாகும். இந்த இனஅழிப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தமிழர் தாயகத்தின் ஜனநாயகவெளியினை முற்றாக இல்லாதொழித்தல் சிங்களத்துக்கு அவசியமாக இருக்கிறது. இந்த அவசியத்தின் பாற்பட்டுத்தான் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதலும் கைதுகளும் இடம்பெறுகின்றது என்றே நாம் கருதுகிறோம். ஒரு சமூகத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் ஜனநாயகத்துக்காகவும் உரிமைகளுக்காகவும் துணிச்சலாக முன்னின்று போராடி வருகின்றமையினை நாம் உலகளாவிய ரீதியில் காண்கிறோம். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் சமூகத்துக்கும் இந்த வரலாறு இருக்கிறது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வௌ;வேறு காலகட்டங்களில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவ சமூகம் தமிழீழ மக்களின் உரிமைக் குரலைப் பிரதிபலித்து நின்று போராடி வந்திருக்கிறது.
ஈழத் தமிழர் தேசத்தின் போராட்டக் குரலின் தார்மீகக் குறியீடாக வெளிப்பட்ட 'பொங்குதமிழ்' எழுச்சியும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் சமூகத்திடமிருந்து இராணுவ ஆக்கிரமிப்புக்கு மத்தியில் இருந்துதான் எழுந்தது. தற்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் சமூகத்தின் மீதான சிங்களத்தின் தாக்குதல் தமிழர் தாயகத்தில் ஜனநாயகவெளியினை முற்றாக இல்லாதொழித்து, தமது இனஅழிப்புத் திட்டத்துக்கு எழக்கூடிய எதிர்ப்பை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்ற முனைப்பை கொண்டதாகத் தெரிகிறது. இதனால் தாயகத்திலும் புலத்திலும் உள்ள தமிழர் அமைப்புக்கள் சிங்களத்தின் இத்தகைய ஜனநாயக மறுப்பு நடவடிக்கைகைளுக்கு எதிராகத் தீவிரமாகப் போராட வேண்டியது அத்தியாவசியமாகும்.
இப் போராட்டம் அடிப்படையில் ஜனநாயகக் கோரிக்கையின் பாற்பட்டதால் சிங்கள மக்கள் உட்பட இவ் ஜனநாயக வழியிலான போராட்டங்களுக்கு ஆதரவளிக்கக்கூடிய உலக சிவில் சமூகத்தின் ஆதரவினையும் பெற்று நாம் போராட்டங்களை முன்னெடுத்தல் அவசியமானதாகும். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் சமூகத்தின் மீதான சிங்களத்தின் தாக்குதலைக் கண்டித்து புலத்தில் தமிழ் மக்களால் நடாத்தப்படும் போராட்டங்கள் தாங்கள் தனித்து விடப்படவில்லை என்ற எண்ணத்தையும் புலத்தின் தோழமை உணர்வையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் சமூகத்துக்கும் தாயக மக்களுக்கும் வழங்கும். புலத்தில் இத்தகைய போராட்டங்களை முன்னின்று முன்னெடுக்கும் தமிழ் இளையோர் அமைப்பினை இத் தருணத்தில் பாராட்டுவதுடன் இப் போராட்டங்களுக்கு தனது முழுமையான ஆதரவினையும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவிக்கின்றது.
இப் போராட்டங்களை மேலுமொரு மட்டத்தில் விரிவுபடுத்தும் முகமாக சமூக ஊடகங்களின் ஊடாக இப் போராட்டங்களை முன்னெடுக்கும் பல்வேறு வழிமுறைகளையும் நாடு கடந்த தமிழீழ அரசாங்க இளையோர் அணி மேற்கொண்டு வருகிறது. இதனை தமிழ் இளையோர் அமைப்புடன் இணைந்தவாறு மேற்கொள்வதற்கான முயற்சிகளையும் இளையோர் அணி மேற்கோண்டு வருகிறது. தமிழர் தாயகத்தில் சிங்களப் படையினர் நிலைகொண்டிருக்கும்வரை தமிழ் மக்களுக்கு ஜனநாயகவெளியோ பாதுகாப்புணர்வோ கிடைக்கப் போவதில்லை. ஓநாய்களிடமிருந்து ஆடுகளுக்குப் பாதுகாப்பு கிடைக்கப் போவதில்லை. ஓநாய்கள் சூழ நிற்கும் போது ஆடுகள் எவ்வாறு பாதுகாப்பை உணரமுடியும்? இதனால் சிங்களப்படையினர் தமிழர் தாயகப்பகுதியில் இருந்து முற்றாக வெளியேறல் அவசியமானது. சிங்களப்படைகள் வெளியேறும் வரை இடைக்கால ஏற்பாடாக அனைத்துலகப் பாதுகாப்புப் பொறிமுறையொன்று உருவாக்கப்பட்டு தமிழ் மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவேண்டும். இதற்கான அனைத்துலகமட்ட ஆதரவைத் திரட்டும் முயற்சிகளை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்ச்சியாக முன்னெடுக்கும்.
இவ்வாறு பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

22 டிசம்பர் 2012

புலிகளை உருவாக்கியது சிங்களவர்களும், பிரேமதாஸ போன்ற அரசியல்வாதிகளுமே: ஹத்துருசிங்கவுக்கு யாழ். பேராசிரியர் பதிலடி!

தமிழர்களும், பல்கலைக்கழக மாணவர்களுமே வளர்த்து விட்டதாக படைத்தரப்பும் அரசும் கூறினாலும், சிங்களவர்களும், பிரேமதாஸ போன்ற அரசியல்வாதிகளும் சேர்ந்தே விடுதலைப் புலிகளை வளர்த்து விட்டனர். இவ்வாறு கணிதவியல் பேராசிரியர் எஸ்.சிறி சற்குணராஜா, யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி ஹத்துருசிங்கவுக்கு நேரில் எடுத்துரைத்தார். பல்கலைக்கழக மாணவர்கள் நால்வர் கைதானதைத் தொடர்ந்து முடங்கியுள்ள கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து ஆராய யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர், துறைத் தலைவர்கள், கைது செய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோர் ஆகியோரை யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி ஹத்துருசிங்க பலாலி படைத் தளத்தில் சந்தித்தார். அங்கு உரையாற்றிய மஹிந்த ஹத்துருசிங்க, முப்பது வருட கால அழிவுக்கு புலிகளும் அவர்களை உருவாக்கி வளர்த்துவிட்ட தமிழர்களும் பல்கலைக்கழக சமூகமுமே காரணம் என்று அடிக்கடி கூறிக்கொண்டிருந்தார். இதன் போது குறுக்கிட்டு தெளிவுபடுத்துகையிலேயே பேராசிரியர் சிறி சற்குணராஜா மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
தமிழர்களின் அடிப்படைப் பிரச்சினைகள் அலட்சியப்படுத்தப்பட்டதன் விளைவாகவே புலிகள் தோன்றினர். இன்று மீண்டும் புலிகளை உருவாக்க முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது என்றால் அந்த அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருப்பதே அதற்குக் காரணம். நீங்கள் கூறுவது போன்று இத்தகைய அழிவுகளுக்கு தனியே புலிகளின் உருவாக்கம் மட்டுமே காரணம் அல்ல. தமிழர்களின் அடிப்படை மூலப் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் தொடர்ந்தும் அலட்சியப்படுத்தப்பட்டதாலேயே புலிகள் உருவானார்கள். 1981 ஆம் ஆண்டு நீங்கள் படையில் இணைந்தபோது அப்போது இராணுவத்தின் எண்ணிக்கை வெறும் 12ஆயிரம் மட்டுமே என்று கூறினீர்கள். அந்தக் காலத்தில் புலிகளின் எண்ணிக்கைகூட 20 பேர் வரையில் மட்டுமே. அவ்வாறு சொற்ப எண்ணிக்கையாக இருந்த புலிகளை பெருக வைத்தமைக்கு காரணம் தமிழர்களும் பல்கலைக்கழக மாணவர்களும் மட்டுமல்ல, தொடர்ந்தும் அலட்சியப்படுத்தப்பட்ட மூலப் பிரச்சினையும், சிங்கள அரசியல்வாதிகளுமே காரணம்.
இந்திய இராணுவம் விடுதலைப் புலிகளை அழித்துவிடும் நிலையில் இருந்தபோது ஆயுதங்களை வழங்கி புலிகளின் அழிவைத் தடுத்தவர் அப்போதைய இலங்கை ஜனாதிபதி பிரேமதாஸ தான். இந்த நிலையில் தமிழ் மக்களும் பல்கலைக்கழக மாணவர்களுமே புலிகளை வளர்த்தார்கள் என்று சொல்வது என்ன நியாயம்? படையினரால் கைது செய்யப்பட்ட விஞ்ஞானபீட மாணவனை நான் தனிப்பட்ட முறையிலும் என்னுடைய மாணவன் என்ற ரீதியிலும் நன்கறிவேன். குறித்த மாணவன் பயங்கரவாத செயல்களுடன் தொடர்புடையவன் என்று நீங்கள் கூறுவதை ஒரு போதும் நான் ஏற்கமாட்டேன். ஏனெனில் அவன் அப்படிப்பட்ட மாணவன் அல்லன் என்பது எனக்கு தெரியும். நீங்கள் (அரசும் இராணுவமும்) மூலப் பிரச்சினையைத் தீர்க்காமல் விளைவுக்கு மாத்திரம் அதனைக் காரணம் சொல்லி தீர்வு தேட நினைக்கிறீர்கள். ஆனால் மூலப் பிரச்சினையை தீர்க்காவிட்டால் அதனால் உண்டாகின்ற விளைவுகள் தொடரவே செய்யும் என்று பேராசிரியர் எஸ்.சிறி சற்குணராஜா இடித்துரைத்துள்ளார்.

21 டிசம்பர் 2012

மகிந்தவிற்கும் சம்பந்தனுக்குமிடையே இரகசிய ஒப்பந்தம் உள்ளதா?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்களுக்கும் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கும் இடையிலான உடன்பாடு என்ன என்பதை சம்பந்தன் அவர்கள் உடனடியாக அம்பலப்படுத்த வேண்டுமென்று யாழ். மற்றும் திருமலை மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்த இரகசிய ஒப்பந்தத்தை தமிழ் மக்கள் அலட்சியமாக விட்டுவிடக்கூடாது. அவ்வாறு விட்டால் அது தமிழ் மக்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கிவிடும். எனவே, இந்த ஒப்பந்தம் என்ன என்பதை சம்பந்தன் வெளிப்படுத்த வேண்டுமென்று ஈழத்திலும் புலத்திலும் உள்ள ஏனைய மக்கள் அனைவரும் சம்பந்தன் அவர்களை வலியுறுத்த வேண்டுமென்றும் மேற்படி மக்கள் வேண்டுகோள் விடுத்திருக்கின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசனின் பிறந்த நாள் தினத்தன்று அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்த சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, இரா. சம்பந்தனின் காலத்திலேயே தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காண முயற்சியெடுப்பதாக கூறியிருந்தார். இக் கூற்றானது தமிழ் மக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே சம்பந்தன் அவர்கள் அடிக்கடி இரகசியமான முறையில் ஜனாதிபதியைச் சந்தித்து வருகின்ற நிலையில் ஜனாதிபதியின் மேற்படி கூற்று தங்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தமிழ் மக்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பந்தன் அவர்கள் கடந்த தடவை நாடாளுமன்றில் ஆற்றிய உரையில் புலிகளை மிகக் கடுமையாக விமர்சித்திருந்தார். புலிகள் பயங்கரவாதிகள் என்றும் அவர்கள் ஜனநாயக விரோத செயல்களில் ஈடுபட்டமையாலேயே அழிந்தார்கள் என்றும் சம்பந்தனின் கடுமையான விமர்சமனமானது தமிழ் மக்களைக் கொதிப்படைய வைத்துள்ள நிலையிலேயே ஜனாதிபதி சம்பந்தனின் காலத்தில் இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டுமென்று விருப்பத்தை வெளியிட்டமை இருவருக்கும் இடையே உள்ள இரகசிய ஒப்பந்தத்தை படம் பிடித்துக் காட்டுவதாக தமிழ் மக்கள் கருத்து வெளியிட்டுள்னர்.
இந்த நிலையில் சம்பந்தன் அவர்கள் கடந்த தடவை நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை தொடார்பாக தமிழீழத்திலுள்ள தேசியப் பற்றாளர் ஒருவர் தனது ஆதங்கத்தை மிக வெளிப்படையாகவே கொட்டியுள்ளார். சம்பந்தன் அவர்களுக்கு எதிராக எழுந்த அந்த ஆதங்கத்தை நீங்களும் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.
முள்ளிவாய்கால் பேரவலத்தின் பின்னர், அழுத கண்ணீர் கன்னத்தில் காய்ந்திருந்தபோது, முகா ம் வாழ்வில் தமிழன் முகமிழந்திருந்தபோது, சொந்தங்களை சிறைகளில் விட்டுவிட்டு தமிழர் ஏங் கிக்கொண்டிருந்தபோது, உலகமே இனி தமிழருக்கு எதிர்காலம் இல்லை என முற்றுப்புள்ளியிட்டி ருந்த ஒரு சந்தர்ப்பத்தில், அத்தனை அழிவுகளையும், இழிவுகளையும் தாண்டி தமிழ் மக்கள் தமது அரசியல் எதிர்காலத்தை நீட்டிக்கும் வல்லமையினை யாருக்கு கொடுத்தார்களோ, அவர்கள் இன்று அந்த நம்பிக்கையை ஏளனம் செய்வதுபோன்றும், மக்களுடைய நம்பிக்கைகளை உதாசீனம் செய்வது போன்றும் எண்ணத்தோன்றுகின்றது.
அண்மையில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் தலைவருமா ன இரா.சம்மந்தன் அவர்கள் பாராளுமன்றில் ஆற்றியிருந்த ஒரு உரை நாம் மேலே கூறிய கருத் துக்களுக்கு வலுச்சேர்ப்பதாக அமைந்திருக்கின்றது. வடக்கு கிழக்கில் இருந்து இராணுவத்தை முற்றாக வெளியேற்ற வேண்டியதில்லை, படைக்குறைப்பை மேற்கொண்டு, படைகளை அவர்கது முகாம்களுக்குள் முடக்கினால்போதும்; என்றும் குறிப்பிட்டதுடன், விடுதலைப்புலிகளை ஒரு பயங்கரவாத அமைப்பென்றும், குறிப்பிட்டிருந் தார்.
கடுமையான விமர்சனங்களை உருவாக்கி விட்டிருக்கும் இக்கூற்றுக்களின் நீள அகலம் தாற்பரியம் என்பவற்றையும், இக்கூற்றுக்களினால் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் அதிர்வலைகள் பற்றியும் இன்றுவi ரயில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தன்னும் மக்களுக்கு பதிலளிக்க வில்லை. வெளியே தம்மையொரு கடும்தேசியவாதிகளாக காட்டிக்கொள்ளும் இவர்கள் உள்ளே ஒளித்து வைத்திருக்கும் தங்கள் மாயத்தோற்றங்களை மக்களுக்கு காண்பிப்பதே கிடையாது.
இந்நிலையில் இரா.சம்மந்தன் இந்த கருத்து நிலைப்பாட்டை என்ன அடிப்படையில் நின்று கொண் டு பேசியிருக்கின்றார் என்பதை நாம் இங்கு பேசுவது சாலப்பொருத்தமானதாக இருக்கும்.தனது அரசியல் வாழ்க்கையே தமிழ் மக்களை ஏமாற்றித்தான் தொடங்கியது என்பது அவரே பல தடவை ஒப்புக் கொண்ட விடயம். தமிழ் மக்கள் ஒருபோதும் தனித் தமிழீழத்தை கோரியதில்லை என பல தடவைகள் கூறும் சம்பந்தன் முதன்முதலில் 1977ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தமிழர் விடுதலைக்கூட்டணி இதே தமிழ் மக்களிடம் தனித்தமிழீழத்திற்கான ஆணையை கோரியதும், அதற்கு தமிழ் மக்கள் வழங்கிய ஆதரவு என்பதும் அரசியல் கத்துக்குட்டிகள் கூட மறுக்கமுடியாத உண்மை.
தன்னை புலிகள் சுடப்படவேண்டியவர்கள் பட்டியலில் வைத்திருந்ததாக கூறிப்பிடும் சம்மந்தர் அது எதற்காக என்பதை மறந்திருக்கின்றார். 1977ம் ஆண்டு தமிழீழத்திற்கான ஆதரவை கோரி மக்களிடம் ஆதரவினை பெற்றுவிட்டு, ஜனநாக வழியிலான போராட்டங்கள் தோற்றுப்போனபோது அந்த தமிழீழ சிந்தனையை இளைஞர்கள் கையிலெடுத்தனர். அதற்கு துரோகமிழைக்கும் வகையில் செயற்பட்டமையாலேயே சம்பந்தன் சுடப்படுவோர் பட்டியலில் இணைக்கப்பட்டார் என்பது தமிழ் மக்கள் அனைவருக்கும் தெரிந்த உண்மை. இதனை சம்பந்தன் அவர்கள் மறைக்கவோ மறுக்கவோ வேண்டாம்.
தமிழீழ விடுதலைப் புலிகள் பல தியாகங்களை ஏற்று, உலகமே வியந்து பார்க்குமளவில் பல யுத்தங்களை செய்து வெற்றியீட்டிய காலப்பகுதியில் இதே சம்மந்தர் எங்கிருந்தார், என்ன செய்தார்? எப்படியிருந்தார் என்பதை நாம் கூறவேண்டிய அவசியம் கிடையாது.
இதன் பின்னர் புலிகள் ஆனையிறவை வீழ்த்தி, கட்டுநாயக்கா விமான நிலையத்தினை தாக்கி போரியல் வரலாற்றில் பல திருப்பங்களை ஏற்படுத்தியதன் பின்னரே இவர் புலிகளின் பாதங்களில் சரணடைந்து கொண்டிருந்தார். இப்போது புலிகள் தன்னை சுடப்படுவோர் பட்டியலில் வைத்திருந் ததாக கூறும் இதே சம்மந்தர் அன்று ஏன் புலிகளிடம் சென்றார்.
தனக்கு தலைமைப் பதவி கிடைக்குமென்பதற்காகவா?? புலிகள் அழிக்கப்படுவதற்கு இந்தியாவினதும், இலங்கை அரசாங்கத்தினதும் ஆசீர்வாதத்துடன், அரியாசனம் ஏறியிருக்கும் இவர் தமிழினத்தை மெல்லச் சிதைத்து வருகின்றார். ஜெனிவாவில் தெரிந்த ஒளிக்கீற்று தமிழினம் ஆவலகாக எதிர்பார்த்திருக்க அதை காலால் எட்டி உதைத்தவர், பின்னர் சிங்கக்கொடி அசைத்து மகிழ்ந்தவர். இறுதியில் மாகாண சபைக்குள் மண்டியிட்டு தமிழனத்தின் அரசிலையே முடக்கினார். இத்துடன் முடியவில்லை. தற்போது போராட்டத்தை பயங்கரவாதம் என்று குறிப்பிடுகின்றார். போராடியது யார்? எங்கள் ஒவ்வொருவரினதும் அக்கா, அண்ணா, தங்கை, தம்பி, அப்பா, அம்மா, மச்சாள், மச்சாள் தானே!
அப்போ போராடிய நாமனைவரும் பயங்கரவாதிகள். சம்மந்தரையும் அவருக்கு ஆலவட்டம் வீசும் சிலரையும் தவிர, சரி,பிழைகளுக்கு அப்பால் பச்சை ஆக்கிரமிப்புக்களிலிருந்தும் சிங்களவரின் கொடிய ஒடுக்குமுறையிலிருந்தும் எம்மைப்பாதுகாத்தது இந்த விடுதலைப்போராட்டமே என்பதை தமிழ் மக்களே ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள்.
இது யாவரும் அறிந்த உன்மை. இவரது கருத்தின் படி யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கூட பயங்கரவாதிகளா? இந்தப் பயங்கரவாதிகளுக்காக ஏன் இவரது தலைமயிலான கூட்டமைப்பு போராட்டம் நடத்துகின்றது? மக்களை ஏமாற்றி வாக்குப்பறிக்கவா?
இவர் இராணுவம் வெளியேற கூடாது என்பதற்கு ஒரு நியாயமான காரணம் உண்டு அதாவது இராணுவம் இல்லாவிட்டால் தன்னையும் தனது போலிக்கூட்டத்தையும் மக்கள் துரத்தி விடுவார்கள் என்பதாலாகும். சம்மந்தர் தலைமையிலான கூட்டமைப்பு துரோகங்களைச் செய்யும்போது அதை எப்போதும் நியாப்படுத்தும் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். இவர்கள் தம்மையொரு தேசியவாதிகளாக காட்டிக்கொண்டு, கூட்டமைப்பின் துரோகங்களை மூடிமறைக்கும் ஓர் முகத்திரையாக இருக்கிறார்கள். இதுபோன்ற சம்பவங்கள் இனியும் நடைபெறாமலிருக்க வேண்டுமாயின் சம்பந்தன் போன்ற ஆணவம் பிடித்தவர்களை மக்கள் விரைவில் தூக்கியெறிய வேண்டும்.

தாயகத்திலிருந்து வீரமணி

யாழில் தொடரும் அராஜகம்; கூட்டமைப்பின் உண்ணாவிரத போராட்டத்தை கலைக்கும் முயற்சி தோல்வி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உண்ணாவிரத போராட்டத்தை முன்னிட்டு தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள மேடை இனம் தெரியாத நபர்களினால் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
யாழ். நகரில் அமைந்துள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் இன்றைய தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உண்ணாவிரத போராட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்காக நேற்றைய தினம் தற்காலிக பந்தல் ஒன்றினை அமைந்தது.
எனினும் நேற்றிரவு இனந்தெரியாத நபர்களினால் அவ் தற்காலிகமாக அமைக்கப்பட்ட மேடை சேதப்படுத்தப்பட்டுள்ளது
பந்தலின் மேல் போடப்பட்டிருந்த தகரங்களை கழற்றி கழிவு கால்வாய்களில் வீசியெறிந்துள்ளனர்.
அத்துடன் அந்த இடத்தில் கழிவு தண்ணீரை ஊற்றி நாசப்படுத்தியும் உள்ளனர். அவ்விடத்திற்கு இன்று காலை வருகை தந்த தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிகள் இவற்றை எல்லாம் பொருட்படுத்தாது நிலத்தில் தரைப்பாள் விரித்து தமது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

20 டிசம்பர் 2012

குஜராத் தமிழர்கள் பேராதரவு! 86,373 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார் மோடி!

 Narendra Modi Wins From Maninagar குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் தமிழர்கள் அதிகம் வாழும் மணிநகர் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் நரேந்திர மோடி 86,373வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றுள்ளார். குஜராத் மாநிலத்தின் மணிநகர் தொகுதியில் பாஜக வேட்பாளராக முதல்வர் நரேந்திர மோடி போட்டியிட்டார். அவரை எதிர்த்து கேசுபாய் பட்டேலின் குஜராத் பரிவர்த்தன் கட்சி வேட்பாளரை நிறுத்தியது. காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட் மனைவி ஸ்வேதா பட் இறக்கப்பட்டார். தாம் மோடிக்கு எதிராக களம் இறக்கப்பட்டிருப்பதால் தம்மை பிற கட்சிகளும் ஆதரிக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார். இதை ஏற்று ஸ்வேதாவுக்கு ஆதரவாக கேசுபாய் கட்சி தமது வேட்பாளரை விலக்கிக் கொண்டது. இந்த மணிநகர் தொகுதியில் கணிசமான எண்ணிக்கையில் தமிழர்களும் வாழ்ந்து வருகின்றனர். தமிழ்நாட்டு தொலைக்காட்சி ஊடகங்கள் பலவும் கடந்த சில நாட்களாக இந்தத் தொகுதியில் முகாமிட்டிருக்கின்றன. தமிழக பாஜக தலைவர்கள் குழுவும் இந்த மணி நகர் தொகுதியில் இறங்கி பிரச்சாரம் செய்தது. இந்த நிலையில் இன்று காலை வாக்குகள் எண்ணப்பட்டது முதலே நரேந்திர மோடி வெற்றி முகத்தில்தான் இருந்தார். தொடக்கத்தில் சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் என்று கூறப்பட்டாலும் 86,373 வாக்குகள் வித்தியாசத்தி வென்றிருக்கிறார் மோடி. நரேந்திர மோடிக்கு கிடைத்த வாக்குகள் - 1,20,470 , காங்கிரஸ் வேட்பாளர் ஸ்வேதா பட்- 34,097! மணிநகரில் மோடியின் வெற்றி குறித்து கருத்து தெரிவித்த குஜராத் வாழ் தமிழர்கள், இந்த தொகுதியில் நாங்கள் பாதுகாப்பாக பணிகளை செய்யவதற்கு மோடியின் அரசு உதவியாக இருக்கிறது. அவர் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. இங்கு வசிக்கும் தமிழர்களில் 90 விழுக்காட்டினர் மோடியைத்தான் ஆதரிக்கிறார்கள் என்றனர்.

நிலம் உள்ளிறங்கி 60 அடி பள்ளம் திடீரென தோற்றம்!

திடீரென நிலம் உள்ளிறங்கி 60 அடிக்கும் மேலான பள்ளம் தோன்றியது. பெரிய மரங்கள் அதில் புதையுண்டன. மாத்தளை துங்கொலவத்தையிலுள்ள தொரகும்புர பகுதியிலேயே இந்த நில வெடிப்பு இடம் பெற்றுள்ளது.
சுமார் 25 அடி விட்டமும் 60 அடி க்கும் மேலான ஆழமும் உடைய குழி அங்கு தோன்றியுள்ளது. சம்பவ இடத்துக்கு விரைந்த புவிச்சரிதவியல் திணைக்களத்தினர், ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மரங்கள் நிறைந்த காட்டுப் பகுதியிலேயே வெடிப்பு இடம்பெற்றதால் உயிராபத்துக்கள் எதுவும் இடம்பெறவில்லை. பலா, கித்துள் போன்ற உயரமான மரங்கள் புதையுண்டுள்ளன.
2005 ஆம் ஆண்டிலும் இதுபோன்ற வெடிப்புக்கள் இடம்பெற்றதாகவும், நிலத்தடியில் உள்ள சுண்ணக்கற்களின் கசிவே முன்னர் நடந்த வெடிப்புக்குக் காரணமெனக் கண்டறியப்பட்டதாகவும், தற்போதும் இதே நிகழ்வே இடம்பெற்றிருக்கலாமெனவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

விஜேதாஸ ராஜபக்சவின் இல்லத்தின் மீது துப்பாக்கி சூடு!மகிந்த ராஜபக்ஷ நேரில் சென்று ஆறுதல்.

இன்று (20) அதிகாலை துப்பாக்கிச்சூடு நடாத்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாஸ ராஜபக்ஷவின் வீட்டு வளாகத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் விஜேதாஸ ராஜபக்ஷவின் நாவல பகுதியில் உள்ள வீட்டுக்கு முன்னால் இன்று அதிகாலை மூன்று மணியளவில் துப்பாக்கிச்சூடு நடாத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதன்படி இன்று விஜேதாஸ ராஜபக்ஷவின் வீட்டுக்குச் சென்ற மகிந்த ராஜபக்ஷ  அவரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

19 டிசம்பர் 2012

ஐந்து கோள்களில் மனிதன் உயிர் வாழலாமாம்!

News Serviceபூமியைப் போன்று 5 புதிய கோள்கள் இருப்பதாகவும், அவற்றில் மனிதன் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை இருப்பதாகவும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
அவுஸ்திரேலியா, சிலி, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் கடந்த 14 ஆண்டுகளாக சூரியனைப் போன்ற டாவ் செட்டி என்ற நட்சத்திரம் மற்றும் அதன் அருகில் உள்ள கோள்கள் பற்றி ஆய்வு செய்தனர்.
இதில் 5 கோள்கள் டாவ் செட்டி நட்சத்திரத்தை சுற்றி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கோள்களில் மிகச்சிறிய கோளானது, பூமியைவிட கிட்டத்தட்ட 2 மடங்கு பெரியதாகும். இந்த கோள்கள் ஒன்றுடன் ஒன்று ஈர்ப்பு விசையால் இணைக்கப்பட்டுள்ளன.
இவை மனிதன் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலைகளை வழங்கும். அந்த கோள்கள் மிக தொலைவில் இருக்கின்றன. ஒளியின் வேகத்தில் சென்றால் 12 ஆண்டுகளில் இந்த கோள்களை அடைய முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

மன்மோகன் சிங்கிற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய 11வயது சிறுமி!

"தகவல் அறியும் உரிமை சட்டத்தை பெரும்பாலானோர் தவறாக பயன்படுத்துவதாக குற்றம் சாட்டிய பிரதமர் மன்மோகன்சிங் அதற்கான ஆதாரங்களை தர வேண்டும்; இல்லையேல் மன்னிப்பு கேட்கவேண்டும்.இல்லாவிட்டால் சட்ட ரீதியான நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என 11 வயது பள்ளி மாணவி பிரதமருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்."காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மருத்துவ சிகிச்சைக்காக செலவழிக்கப்பட்ட தொகை எவ்வளவு?' என, தகவல் உரிமை சட்ட ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்கு காங்கிரஸ் மற்றும் மத்திய அரசு வட்டாரங்களில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தனிப்பட்ட மனிதர்களின் மருத்துவ செலவு பற்றி தகவல் கேட்பதா என காங்கிரஸ் தலைவர்கள் எதிர்த்தனர். இதற்கிடையில் அக்டோபர் 12ம் தேதி டில்லியில் நடந்த தகவல் உரிமை சட்ட மாநாட்டில் பேசிய பிரதமர், மன்மோகன் சிங், "தகவல் பெறும் உரிமை சட்டத்தை தவறாக பயன்படுத்தும் சிலர் தேவையே இல்லாத தகவல்களையும் தனிப்பட்ட தகவல்களையும் ஒன்றுக்குமே உதவாத தகவல்களையும் கேட்கின்றனர். ஆம்னி பஸ் அளவிற்கு அவர்கள் கேட்கும் தகவல்களை திரட்ட வேண்டியுள்ளது'" என கருத்துத் தெரிவித்திருந்தார். இதற்கு உத்தரபிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த தகவல் உரிமை சட்ட ஆர்வலர் 11 வயது ஊர்வசி சர்மா என்ற பள்ளி மாணவி பிரதமர், மன்மோகன் சிங்கிற்கு தன் வழக்கறிஞர் மூலம் திங்கட்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அந்த நோட்டீசில் சிறுமி ஊர்வசி, அரசியல் அமைப்பு சட்டத்தின் மீது நம்பிக்கை கொண்ட நான் நீங்கள் தெரிவித்த கருத்துகளால் மிகுந்த மன வருத்தம் அடைந்தேன். இந்த நோட்டீஸ் மூலம் தெரிவிப்பது என்னவென்றால் எதன் அடிப்படையில் நீங்கள் அவ்வாறு கூறினீர்கள்? அதற்கான ஆதாரங்கள் உங்களிடம் உள்ளதா என்பதை தெரிவிக்க வேண்டும்.இல்லையேல், இன்னும் 60 நாட்களுக்குள் அவ்வாறு பேசியதற்காக வெளிப்படையாக மன்னிப்பு கேட்க வேண்டும். அதைச் செய்ய தவறினால் உங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த சிறுமி அனுப்பியுள்ள நோட்டீசில் தெரிவித்துள்ளார்.

அதிக சேதம் மட்டக்களப்பிற்கு, அதிக மரணம் மாத்தளைக்கு!

அதிக சேதம் மட்டக்களப்பிற்கு, அதிக மரணம் மாத்தளைக்குநாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டம் அதிக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதோடு மாத்தளை மாவட்டத்தில் அதிக மரணங்கள் பதிவாகியுள்ளன.
காலநிலை சீர்கேட்டால் ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் மாவட்ட அடிப்படையில் பின்வருமாறு,

மட்டக்களப்பு மாவட்டம்:-
மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 34,753 குடும்பங்களைச் சேர்ந்த 1,35,646 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பிரதேசத்தில் இரு மரணங்கள் நிகழ்ந்துள்ளன. ஒருவர் காணாமற்போயுள்ளார். சுழல் காற்று காரணமாக 115 வீடுகள் முழுமையாகவும் 607 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளன. நிர்க்கதியான 556 குடும்பங்களைச் சேர்ந்த 2169 பேர் 7 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மாத்தளை மாவட்டம்:-
சீரற்ற காலநிலையால் மாத்தளை மாவட்டத்தில் 952 குடும்பங்களைச் சேர்ந்த 2,930 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாத்தளையில் அதிகூடிய 8 மரணங்கள் பதிவாகியுள்ளதோடு 13 பேர் காயமடைந்த நிலையில் 10 பேர் காணாமல் போயுள்ளனர். 32 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ள அதேவேளை 82 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன. 628 குடும்பங்களைச் சேர்ந்த 1,583 பேர் 15 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கண்டி மாவட்டம்:-
கண்டி மாவட்டத்தில் இதுவரை 101 குடும்பங்களைச் சேர்ந்த 402 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இருவர் மரணித்துள்ளதோடு இருவர் காயமடைந்துள்ளனர். 5 வீடுகள் முழுமையாகவும் 44 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளன. இடம்பெயர்ந்த 35 குடும்பங்களைச் சேர்ந்த 160 பேர் 3 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நுவரெலியா மாவட்டம்:-
இம்மாவட்டத்தில் சீரற்ற காலநிலையால் 138 குடும்பங்களைச் சேர்ந்த 561 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 33 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன. இடம்பெயர்ந்த 19 குடும்பங்களைச் சேர்ந்த 123 பேர் 3 தற்காலிக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பொலன்னறுவை மாவட்டம்:-
இம்மாவட்டத்தில் 2,271 குடும்பங்களைச் சேர்ந்த 5,967 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். 18 பேர் காயமடைந்துள்ளனர். 30 வீடுகள் முழுமையாகவும் 147 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளன. 2,135 குடும்பங்களைச் சேர்ந்த 5,582 பேர் 17 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பதுளை மாவட்டம்:-
இங்கு 62 குடும்பங்களைச் சேர்ந்த 233 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூவர் உயிரிழந்துள்ளனர். 5 வீடுகள் முழுமையாகவும் 4 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட 15 குடும்பங்களைச் சேர்ந்த 49 பேர் ஒரு தற்காலிக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஹம்பாந்தோட்டை மாவட்டம்:-
இங்கு 3,283 குடும்பங்களைச் சேர்ந்த 13,211 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இருவர் காணாமற் போயுள்ளனர்.

மொனராகலை மாவட்டம்:- இம் மாவட்டத்தில் 86 குடும்பங்களைச் சேர்ந்த 306 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 58 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட 06 குடும்பங்களைச் சேர்ந்த 30 பேர் ஒரு தற்காலிக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

குருணாகல் மாவட்டம்:- 3,558 குடும்பங்களைச் சேர்ந்த 12,991 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புத்தளம் மாவட்டம்:- 706 குடும்பங்களைச் சேர்ந்த 3,286 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

18 டிசம்பர் 2012

மகிந்தவுக்கு யாழ்ப்பாணத்தில் கழிவு ஒயில்- தலைதெறிக்க ஓடித்திரியும் இராணுவம்

சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராசபக்சவின் உருவப்படங்கள் தாங்கிய பதாகைகளுக்கு யாழ்ப்பாணத்தில் கழிவு ஒயில் ஊற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் மகிந்த ராசபக்சவின் பெரிய அளவிலான பதாகைகள் தொங்கவிடப்பட்டள்ளன.
இவற்றில் பிரதான வீதியை அண்டிய பகுதியில் உள்ள பதாகைகளுக்கே கழிவு எண்ணெய் வீசப்பட்டுள்ளது.
கழிவு ஒயிலை யார் ஊற்றினார்கள் என விசாரித்து இராணுவ புலனாய்வு பிரிவினர் தலைதெறிக்க ஓடித்திருகின்றனர். இதனை அடுத்து அந்த பகுதிகளில் பெருமளவிலான இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

மரம் முறிந்து விழுந்ததில் ஒருவர் பலி!

குடிசை மீது மரம் முறிந்து விழுந்ததில் ஒருவர் பலிதிருக்கோவில் வட்டமடு வயல் பிரதேசத்தில் வீசிய சுழல் காற்றினால் வேளாண்மைக்கு காவலுக்காக நின்றவரின் குடிசை மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் விவசாயி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று (17) மாலை இடம்பெற்றுள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த வயல் பிரதேசத்தில் காட்டு விலங்குகளிடம் இருந்து வேளாண்மையை காப்பாற்றுவதற்காக விவசாயிகள் சிலர் காவலிருந்தனர்.
இதன்போது நேற்று (17) மாலை 3.00 மணியளவில் கடும் மழையுடன் வீசிய சுழல் காற்று வீசியது.
இந்நிலையில் மரத்துக்கு கீழ் அமைக்கப்பட்டிருந்த குடிசைக்குள் 4 விவசாயிகள் தஞ்சமடைந்துள்ளனர்.
திடீரென மரம் முறிந்து குடிசை மீது வீழ்ந்ததில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை உயிரிழந்துள்ளார்.
கண்ணகிபுரம் 2ம் பிரிவைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான சுப்பையா மகேஸ்வரன் என்ற விவசாயியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

17 டிசம்பர் 2012

சம்பந்தனின் காலத்துக்குள்ளேயே தீர்வு காண விரும்புவதாக மகிந்த மனோவிடம் தெரிவித்தாராம்!

தெற்கில் ஜேவிபியினர் நடத்திய போராட்டத்திற்கும் விடுதலை புலிகள் நடத்திய போராட்டத்திற்கும் இடையில் வேறுபாடுகள் உள்ளன. ஜேவிபி நாட்டை பிரிக்க போராட்டம் நடத்தவில்லை. புலிகள் நாட்டை பிரிக்க போராட்டம் நடத்தினார்கள். அத்துடன் ஜேவிபி இன்று தடை செய்யப்பட்ட அமைப்பு அல்ல. யுத்தம் முடிந்து சில ஆண்டுகளே ஆன நிலையில் புலிகள் இன்று தடை செய்யப்பட்ட அமைப்பு. புலிகளை நினைவு கூறுவதை நாம் அனுமதிக்க முடியாது. எனவே விடுதலை புலிகள் நடத்திய போராட்டத்திற்கும், ஜேவிபியினர் நடத்திய போராட்டத்திற்கும் இடையில் இருக்கும் வேறுபாட்டை பல்கலைக்கழக மாணவர்களுக்கு எடுத்து கூறுங்கள் என, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசனிடம் தெரிவித்துள்ளார்.
மாண்டுபோனவர்கள நினைவுகூர்ந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் யாழ் பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்யுங்கள். கடந்த காலங்களுக்கு நாட்டை மீண்டும் இந்த சம்பவங்கள் அழைத்து செல்வதை அனுமதிக்காதீர்கள். நாட்டின் முதன் குடிமகன் என்ற அடிப்படையில் யாழ் பல்கலைக்கழக மாணவர் விவகாரத்தில் நேரடி தலையீடு செய்யுங்கள் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் தெரிவித்ததிற்கு பதிலளித்தபோதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.
ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசனின் பிறந்த நாளையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக மனோ கணேசனுக்கு இன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி இருந்த வேளையிலேயே இந்த உரையாடல் நடைபெற்றுள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த மனோ கணேசன் கூறியதாவது,
வேலைப்பளுவின் இடையில் இந்த மாணவர் விவகாரம் தொடர்பாக தனக்கு முழு விபரம் இன்னமும் கிடைக்கவில்லை. இதுபற்றி எவரும் முழுமையாக விபரம் தெரிவிக்கவும் இல்லை. உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க தற்சமயம் நாட்டில் இல்லை. அவர்தான் இந்த விவகாரம் தொடர்பான அமைச்சர். இன்னும் சில தினங்களில் அவர் நாடு திரும்புவார். அவர் வந்தவுடன் உடனடியாக இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கிறேன் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
எனினும் மாணவர் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த விவகாரம் தற்சமயம் பல்கலைக்கழக விவகாரமாக இல்லாமல் பாதுகாப்பு அமைச்சு விவகாரமாக மாறியுள்ளதாக நான் சுட்டிகாட்டினேன். அதை ஏற்றுகொண்ட ஜனாதிபதி, எனினும் இதை பல்கலைக்கழகங்களுக்கு பொறுப்பான அமைச்சரின் மூலமே தான் அணுக விரும்புவதாக சொன்னார்.
இந்த சம்பவங்கள் இனப்பிரச்சனையை வைத்து அரசியல் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளன என ஜனாதிபதி கூறினார். அத்தகைய நோக்கம் எனக்கு கிடையாது என்பதாலேயே இதை நான் நேரடியாக உங்களிடம் கூறுகிறேன் என நான் தெரிவித்தேன். தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின் காலத்துக்குள்ளேயே தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வை தனது ஆட்சி காலத்தில் காணுவதை தான் பெரிதும் விரும்புவதாகவும் தெரிவித்தார்.

தமிழர் போராட்டத்தின் ஆதரவாளர் பிரைன் செனிவிரட்னவை சிங்கப்பூர் நாடு கடத்தியுள்ளது.

News Serviceதமிழீழ போராட்டத்தின் தீவிர ஆதரவாளரும், அவுஸ்திரேலியாவின் மனித உரிமைகள் நடவடிக்கையாளருமான இலங்கையில் பிறந்த கலாநிதி பிரைன் செனவிரட்னவை சிங்கப்பூர் அரசாங்கம் நாடு கடத்தியது. 81 வயதான பிரைன் செனவிரட்ன, மலேசியாவுக்கு செல்லும் வழியில் கடந்த வெள்ளிக்கிழமை சிங்கப்பூருக்கு சென்றிருந்தார். அங்கு மலேசியாவில் இலங்கையர்களின் அரசியல் அடைக்கலம் குறித்து இரண்டு சந்திப்புகளை நடத்தவிருந்தார். இந்த நிலையில் சிங்கப்பூரின் விமானநிலையத்தில் இறங்கிய அவர் மலேசிய நகரான ஜொஹொர் பஹ்ருக்கு தரைவழியாக செல்வதற்கு திட்டமிட்டிருந்தார். எனினும் சிங்கப்பூரின் அதிகாரிகள், அவரை விமான நிலையத்தில் சுமார் 4 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை நடத்தினர்.
பின்னர், அவரை, அவுஸ்திரேலிய பிரிஸ்பேனுக்கு விமானம் மூலம் திருப்பியனுப்பினர். இதன்போது செனவிரட்னவிடம் குறிப்பு ஒன்றை கையளித்த சிங்கப்பூர் அதிகாரிகள், சிங்கப்பூரில் பிரவேசிப்பதற்கு அனுமதியில்லை என்று குறிப்பிட்டனர். எனினும் காரணங்கள் எதனையும் தெரிவிக்கவில்லை. இதனையடுத்து தமக்கு நேர்ந்த நிலைக்குறித்து பிரைன் செனவிரட்ன, அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் மற்றும் குடிவரவு அமைச்சர் கெவின் ருட் ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார். பிரைன் செனவிரட்ன 1976 ம் ஆண்டு அவுஸ்திரேலிய பிரஜாவுரிமையை பெற்றுக்கொண்டவர்.

16 டிசம்பர் 2012

சாளம்பைக்குளத்திலிருந்து தமிழர்களை வெளியேறுமாறு முஸ்லீம்கள் பெயரில் சுவரொட்டி!

வவுனியா சாளம்பைக்குளம் பகுதியில் வாழும் தமிழர்களை வெளியேறும் படி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. இந்த சுவரொட்டிகள் அப்பகுதி கிராம சேவகரான வை.நாயர் என்பவரின் றப்பர் முத்திரையுடன் இஸ்லாமிய கலாசார தலைவர் ஹசன் என்பவரின் பெயரில் வெளியிடப்பட்டுள்ளது.
அந்தச் சுவரொட்டிகளில் சாம்பைக் குளத்தில் வாழும் அனைத்து தமிழ் மக்களும் இம்மாதம் 16 ஆம் திகதிக்கு முன் வெளியேற வேண்டுமென கிராம சேவையாளர் ஊடாக கேட்டுக்கொள்ளப்படுவதாகவும் அப்படி வெளியேறாத பட்சத்தில் வன்முறையாக வெளியேற்றப்படுவீர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
சாளம்பைக்குளத்தில் உள்ள காணிகள் அனைத்தும் முஸ்லீம்களுக்கு சொந்தமானது என்றும் அந்தச் சுவரொட்டிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை இவ்விடயம் குறித்து நாளை வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ள அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் ஆராயப்படுமென வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
சாளம்பைக்குளம் என்பது ஒரு தமிழ் கிராமமாகும். அங்கு பிற்பட்டகாலத்தில் முஸ்லீம்கள் குடியேறியிருந்தார்கள். திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் போல திட்டமிட்ட முஸ்லீம் குடியேற்றம் அங்கு இடம்பெற்றது. அரசியல் செல்வாக்கின் மூலம் தற்போது பலம் பெற்றிருக்கும் முஸ்லீம்கள் தற்போது அங்குள்ள பூர்வீககுடிகளான தமிழ் மக்களை வெளியேறுமாறு அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லீம்களை வெளியேற்றிவிட்டார்கள் என கூக்குரல் இடுவோர் இந்த விடயத்தில் வாய் திறப்பார்களா?

யாழில் சிங்களத்தால் மேலும் தமிழர்கள் கைது செய்யப்படலாம்!

யாழ்ப்பாணத்தில் மேலும் சிலர் கைது செய்யப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் குறித்த கைதுகள் மேற்கொள்ளப்பட உள்ளன. ஏற்கனவே புலிகளுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் யாழ்ப்பாணத்தில் 37 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் கைதுகள் தொடர்பில் யாழ்ப்பாண மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்ய்பபட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் தெரிவித்துள்ளார்.
எந்த அடிப்படையில் இந்த கைதுகள் மேற்கொள்ளப்பட்டன என்பது பற்றி தெளிவுபடுத்தப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
புனர்வாழ்வு அளிக்கப்படாத முன்னாள் போராளிகள் என்ற அடிப்படையில் இந்த கைதுகள் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகளுடன் கடந்த காலங்களில் தொடர்புகளைப் பேணியவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறைப் பேச்சாளர் பிரசாந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.
புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

15 டிசம்பர் 2012

மாணவர்களின் பெற்றோரையும் சந்திக்கவேண்டி இருக்கிறது:கோத்தாவின் மிரட்டல்

மாணவர்கள் மீது காடைகள் அராஜகம் 
வெலிகந்தை புனர்வாழ்வு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நால்வரும் விசாரணைகளுடனான புனர் வாழ்வுக் காலம் நிறைவடைந்த பின்னரே விடுவிக்கப்படுவர் என கோத்தபாய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். இதேவேளை யாழ். பல்கலைக்கழகத்தில் இவ்வாறான நடவடிக்கைகளில் மாணவர்கள் ஈடுபடுவதற்கு நிர்வாகம் அனுமதுயளிக்கக் கூடாது எனத் தெரிவித்துள்ள கோத்தபாய  தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர்களின் பெற்றோர்களையும் சந்திக்க வேண்டி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நான்கு மாணவர்களின் விடுதலை தொடர்பில் நேற்று வெள்ளிக்கிழமை சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் அலுவலகத்தில் கோத்தபாயவுக்கும், யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் செல்வி.வசந்தி அரசரட்ணம் தலைமையிலான பேராசிரியர்கள் குழுவுக்கும் இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போதே கோத்தா  மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேற்படி சந்திப்பில் கலந்து கொண்ட பேராசிரியர் குழுவினர், தமது மாணவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதால் அவர்களது கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், எனவே அவர்களை விடுவிப்பதற்கு ஆவண  செய்யுமாறும் கோத்தபாயவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
எனினும் கைது செய்யப்பட்ட மாணவர்களிடமிருந்து பல்வேறு தகவல்கள் கிடைக்கப்பெற்றிருப்பதால் மேலதிக விசாரணைகள் இடம்பெற இருப்பதாகவும், அத்துடன் புனர்வாழ்வு அளிக்கப்பட்டதன் பின்னரே அவர்கள் விடுதலை செய்யப்படுவர் என்றும் கோத்தா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளர்.
அத்துடன் மாணவர்கள் இனியும் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு நிர்வாகம் அனுமதிக்கக் கூடாது. அவ்வாறு இடம்பெற்றால் நிர்வாகத்தின் ஆதரவுடனேயே இத்தகைய செயல்கள் இடபெறுவதாகக் கருதப்படும். மேலும் புனர்வாழ்வு அளிக்கப்பட்டதன் பின்னர் விடுதலை செய்யப்படும் மாணவர்கள் நிர்வாகத்தின் பொறுப்பிலேயே விடப்படுவார்கள் இதன் பின்னரும் ஏற்கத்தகாத செயல்கள் இடம்பெறின் பல்கலைக்கழக நிர்வாகம் பொறுப்புக் கூற வேண்டி ஏற்படும் எனவும் பேராசிரியர் குழுவுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது.
யாழ். பல்கலைக்கழக கலைப் பீடத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்களும், முகாமைத்துவ பீடத்தைச்ச் சேர்ந்த ஒரு மாணவரும், விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த ஒருவருமாக நான்கு மாணவர்களே வெலிகந்தை புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

சட்டத்தரணிகள் ஒன்று கூடி மூன்று முக்கிய யோசனைகளை நிறைவேற்றினர்.

இன்று (15) இடம்பெற்ற இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் கூட்டத்தில் முக்கிய மூன்று யோசனைகள் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டதை அடுத்து புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்தே மூன்று யோசனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
கொழும்பு மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இலங்கை சட்டத்தரணிகள் சங்க கூட்டம் இன்று காலை இடம்பெற்றது.
இன்று முன்வைக்கப்பட்ட மூன்று யோசனைகளுக்கு ஆதரவு மற்றும் எதிர் கருத்துக்கள் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டு இறுதியில் யோசனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
01.பிரதம நீதியரசர் குறித்த பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை சுயாதீன குழுவால் ஆராயப்படும் என கடந்த 11ம் திகதி ஜனாதிபதி அறிவித்துள்ளார். அதன்படி குற்றப்பிரேரணைனை மீள்பரிசீலனை செய்யுமாறு ஜனாதிபதிக்கு வலியுறுத்தல்.
02.மீள்பரிசீலனை செய்யப்பட்ட பின் தொடர் விசாரணைகள் இடம்பெறுமாயின் அந்த விசாரணைகளை நியாயமான முறையில் நடத்த சட்ட ஒழுங்குகளை மேற்கொள்ள ஜனாதிபதி மற்றும் சபாநாயகரை வலியுறுத்தல்.
03.அப்படியல்லாமல் பிரதம நீதியரசர் பதவி விலக்கப்பட்டு புதிய பிரதம நீதியரசர் தெரிவு செய்யப்பட்டால் அவரை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஏற்காது.
மேற்கூறிய மூன்று யோசனைகள் இன்றைய கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினரும் ததேகூ பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்  தெரிவித்ததாக அததெரண  செய்தி வெளியிட்டுள்ளது.

14 டிசம்பர் 2012

அடடா..!இவரையுமா?

டக்ளஸ்&பசில் 
உளநலப்பாதிப்பு காரணமாக பாதிக்கப்பட்ட யுவதிகளை பார்வையிட சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவையும் படையினர் திருப்பி அனுப்பிய பரிதாபம் நேற்று நடந்துள்ளது.படையில் இணைத்துக்கொள்ளப்பட்ட குறித்த யுவதிகள் உள நலப்பாதிப்பிற்குள்ளாகிய நிலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டமை கடந்த சில தினங்களாக பெரும் வாதப்பிரதிவாதங்களை தோற்றுவித்திருந்தது.
முன்னதாக அவர்களை பார்வையிடச்சென்ற கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் திருப்பி அனுப்பப்பட்டிருந்தார்.வன்னி படை கட்டளைத்தலைமையக பணிப்பினை மேற்கோள் காட்டியே தம்மை உள்நுழைய வைத்தியர்கள் அனுமதி மறுத்ததாக சிறீதரன் தெரிவித்தார்.இந்நிலையினில் இரண்டாவது தடைவையாக நேற்றும் எஞ்சிய இரு யுவதிகளையும் பார்வையிட அவர் முற்பட்ட போது ஏமாற்றத்துடன் திரும்ப வேண்டியிருந்தது.
இந்நிலையில் யாழ்ப்பாணத்திலிருந்து வருகை தந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் பார்வையிடுவதற்கான அனுமதி மறுக்கப்பட்டமை தொடர்பான தகவல்கள் அம்பலத்திற்கு வந்துள்ளது.பாதுகாப்பு அமைச்சக உத்தரவின் பிரகாரம் அவர் திருப்பி அனுப்பபட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனிடையே வைத்தியசாலையில் தொடர்ந்தும் இரு யுவதிகளே சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் ஏனையவர்களை ஆற்றுப்படுத்த திருக்கோணேச்சரம் கோவிலுக்கு படைத்தரப்பு சுற்றுலா அழைத்து சென்றுள்ளது.

நாஞ்சில் சம்பத்துக்கு புதிய கார் வழங்கினார் தமிழக முதல்வர்!

மதிமுகவில் இருந்து அதிமுகவில் இணைந்த நாஞ்சில் சம்பத்துக்கு, அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா, இன்னோவா கார் ஒன்றை வழங்கியுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா இன்று அதிமுக அலுவலகத்தில், அதிகமுவின் கொள்கை பரப்பு துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள நாஞ்சில் சம்பத்துக்கு கழகப் பணியாற்றுவதற்கு ஏதுவாக, புதிய இன்னோவா கார் ஒன்று வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
மதிமுகவில் நீண்ட காலம் இணைந்திருந்த நாஞ்சில் சம்பத், வைகோவுடன் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக மதிமுகவில் இருந்து விலகி சில நாட்களுக்கு முன்பு அதிமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவு நாள்!

தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் 04.03.1938ம் ஆண்டு யாழ்பாணத்தில் குழந்தைவேலு மார்கண்டு தம்பதியினருக்கு பிறந்தார். ஆரம்பகாலத்தில் வீரகேசரியின் பத்திரிகையாளராக பணியாற்றிய அன்ரன் பாலசிங்கம் அவர்கள், பின்னர் கொழும்பில் உள்ள பிரித்தானிய தூதரகத்தில் மொழி பெயர்ப்பாளராகவும் பணியாற்றினார். பிரித்தானிய தூதரகத்தில் 10 ஆண்டுகள் பணியாற்றியதால் இங்கிலாந்து குடியுரிமையும் பெற்றார்.
1970ம் ஆண்டு தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் எழுதிய கெரில்லாப் போர் முறை குறித்த நூலை வாசித்த தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே. பிரபாகரன் அவர்கள் தேசத்தின் குரல் அவர்களை தொடர்பு கொண்டதன் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கும் இடையே தொடர்புகள் எற்ப்பட்டுள்ளன.
இந்தியாவில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளுக்கு அரசியல் வகுப்புகளை நடாத்தினார். 1985ம் ஆண்டு திம்பு பேச்சுவார்த்தைக் குழுவுக்கு ஆலோசகராக செயலாற்றியதால் தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தராகவும்; பேச்சுவார்த்தையாளராகவும் அரசியல் ஆலோசகராகவும் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் நெருங்கிய நண்பராகவும் திகழ்ந்தார்.
2002ம் ஆண்டு தமிழீழத்தில் நடைபெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஊடகவியளாளர்கள் சந்திப்பின் பொழுது தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுடன் இணைந்து தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடர்பான தெளிவான விளக்கங்களை அளித்தார்.
சித்திரை மாதம் 2002ம் ஆண்டு நோர்வே அரசின் மேற்பார்வையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் போர்நிறுத்த ஒப்பந்தம் கைச்சார்த்திடப்பட்டது. அதன் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்தைக் குழுவின் பொறுப்பாளராக செயற்;பட்டார். தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களை தமிழீழ மக்களின் இராயதந்திரியென சர்வதேச நாடுகள் அங்கிகரித்தன.
2000ம் ஆண்டு உடல் நலம் பாதிக்கப்பட்ட வேளையிலும் ஆயுதம் ஏந்தாத போராளியாக இங்கிலாந்து நாட்டில் இருந்து உறுதியுடன் தமிழீழ விடுதலைக்காக உழைத்தார். அவருக்கு எற்ப்பட்ட நோயால் இரண்டு சிறுநீரகங்களும் பழுதடைந்து சிறுநீரக மாற்று சிகிச்சை செய்யப்பட்டது. அதனால் அவருக்கு கொடுக்கப்பட்ட சக்திவாய்ந்த மருந்துகளின் பக்க விளைவாக உடல் எங்கும் புற்று நோய் பரவியது. புற்று நோயால் துடிதுடித்த வேளையிலும் தமிழீழ அரசியலை எவ்வாறு முன்னெடுக்க வேண்டுமென குறிப்புகளில் எழுதி வைத்தார். மேலும் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் உடல் நலம் பற்றியும் தமிழீழ மக்கள் பற்றியும் கேட்டறிந்த வண்ணம் இருந்தார். கொடிய புற்று நோயால் 14.12.2006 அன்று இங்கிலாந்து தேசத்தில் வீரமரணம் அடைந்தார்.
தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு செய்த பணி என்றும் மறக்க முடியாதது. அவருடைய இழப்பை தமிழீழ தேசத்தால் என்றும் ஈடுசெய்ய முடியாது.
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களைப் பற்றி இவ்வாறு கூறுகின்றார்: �எமது இயக்கத்தின் வளர்ச்சியிலும் அதன் இன்றைய விரிவாக்கத்திலும் பாலாண்ணைக்கு ஒரு நிரந்தரமான இடம் இருக்கின்றது. ஒரு மூத்த அரசியல் போராளியாக மதியுரைஞராக ஒரு தத்துவாசிரியராக எல்லாவற்றுக்கும் மேலாக எனது உற்ற நண்பனாக இருந்து எனக்கு ஊக்கமும் உத்வேகமும் அளித்தார். ஆலோசனையும் ஆறுதலும் தந்தவர்.
எனது உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டு, எனது பளுக்களையும் பங்கிட்டுக்கொண்டவர். எமது விடுதலை இயக்கம் தோற்றம்பெற்ற ஆரம்பகாலம் முதல் என்னோடு இருந்து, எல்லாச் சோதனைகளையும், வேதனைகளையும், சவால்களையும், சங்கடங்களையும் தாங்கிக்கொண்டவர். எமது அரசியல், இராயதந்திர முன்னெடுப்புக்களுக்கு மூலாதாரமாக முன்னால் நின்று செயற்பட்டவர். ஈழத்தமிழினம் பெருமைகொள்ளும் வகையில் அரசியல் உலகிலும் அளப்பெரும் சாதனைகள் புரிந்து, எமது தேச சுதந்திரப் போராட்டத்தை உலக அரங்கில் முன் நிறுத்திய பாலாண்ணையின் மாபெரும் போராட்டபணிக்கு மதிப்பளித்து தேசத்தின் குரல் என்ற மாபெரும் கௌரவப் பட்டத்தை அவருக்கு வழங்குவதில் நான் பெருமையடைகின்றேன்.
எமது அன்பான தமிழீழ உறவுகளே, தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் போன்ற ஆயிரம் ஆயிரம் மாவீரர்களுடைய தமிழீழக் கனவை வென்றெடுப்போம் என இன்றைய நாளில் நாம் அனைவரும் உறுதிகொள்வோம்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!

தமிழ் இளையோர் அமைப்பு யேர்மனி
ஊடகப்பிரிவு

13 டிசம்பர் 2012

அதிமுகவை விமர்சிக்க எந்த கட்சிக்கும் தகுதி இல்லை: நாஞ்சில் சம்பத்

மக்கள் நலனுக்காக பாடுபடும் அதிமுகவை விமர்சிக்க தமிழகத்தில் உள்ள எந்த கட்சிக்கும் தகுதி இல்லை என்று அக்கட்சியின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்தார். மேலும் ஜெயலலிதாவின் அருமை, பெருமையை மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் பிரச்சாரம் செய்யப் போவதாக அவர் மேலும் தெரிவித்தார். மதிமுகவில் இருந்து விலகி அண்மையில் அதிமுகவில் சேர்ந்து அக்கட்சியின் கொள்கை பரப்பு துணைச் செயலாளரான நாஞ்சில் சம்பத் கலந்து கொண்ட முதல் கட்சி பொதுக்கூட்டம் சென்னை மைலாப்பூர் மாங்கொல்லையில் நேற்று இரவு நடந்தது. அந்த கூட்டத்தில் சம்பத் பேசியதாவது, அதிமுகவுக்கு நான் புதிதாக வந்திருக்கலாம். ஆனால் அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும், தமிழக மக்களு்ககு நல்லது நடக்க வேண்டும் என்று 5 ஆண்டுகளாக மாநிலம் முழுவதும் சுற்றியவன் நான். தற்போது முதல்வர் ஜெயலலிதா ஆட்சியின் மாட்சி, அவரது ஆளுமைத் திறன் பற்றி மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் செய்யவிருக்கிறேன். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்று சரித்திரம் படைக்க எட்டுத் திக்கிலும் சூராவளிப் பிரச்சாரம் செய்வேன். தமிழகத்தின் உரிமைக்காகவும், தமிழக மக்களின் தேவைக்காகவும் தொடர்ந்து போராடும் முதல்வர் ஜெயலலிதா டெல்லியில் இருந்து உபரி மின்சாரத்தைப் பெற உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். பாகிஸ்தானுக்கு மட்டும் 5,000 மெகாவாட் மின்சாரம் அளி்க்கும் மத்திய அரசு டெல்லியில் இருந்து உபரி மின்சாரத்தை தமிழகத்திற்கு கொடுக்க மின் பாதை இல்லை என்கிறது. அதற்கு தமிழகத்திற்கு மின்சாரம் தர மனமில்லை. மேலும் காவிரியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடகம் மறுத்ததையடுத்து முதல்வர் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வழக்கு போட்டு போராடிக் கொண்டிருக்கிறார். டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு தங்கு தடையின்றி மின்சார வழங்க முதல்வர் தாயன்புடன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கிறார். 20 கோடி விவசாயிகள் மற்றும் 5 கோடி வணிகர் பாதிக்கப்படுவார்கள் என்பதால் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை எதிர்த்து முதல்வர் ஜெயலலிதா குரல் கொடுத்து வருகிறார். ஜெயலிலதாவின் அருமை, பெருமைகளை மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் எனது பிரச்சாரம் இருக்கும். இவ்வாறு மக்கள் நலனுக்காக பணியாற்றும் அதிமுகவை விமர்சிக்க தமிழகத்தில் உள்ள எந்த கட்சிக்கும் தகுதி இல்லை என்றார்.