மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் தற்போதைய நிர்வாகமானது, முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் இறுதிகால ஆட்சிக்கு இணையானது என மௌபிம மக்கள் கட்சியின் தலைவர் ஹேமகுமார நாணயக்கார தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம், அரசாங்கத்திற்கு வலியை ஏற்படுத்துவோர், சரியானதை செய்வோர் என அனைத்து தரப்பினர் மீதும் அரச பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளது.
இதனால் வட பகுதியில் உள்ள இளைஞர்கள் முதல், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் வரையான அனைவரும் அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
அரசாங்கத்தின் வேட்டை நாய்கள் மேற்கொண்டு வரும் இந்த நடவடிக்கை காரணமாக மன்னனின் கழுத்தில் இருந்த ஈயை விரட்டுவதற்காக, குரங்கு வாளை பயன்படுத்தியதை போன்று ஜனாதிபதிக்கு வேட்டை நாய்களின் தலையை துண்டிக்க வேண்டிய நிலைமை ஏற்படும்.
தற்போது நாட்டில் அமுல்படுத்தப்பட்டு வரும் பயங்கரவாத நிலைமையானது முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவின் இறுதிகால ஆட்சியின் போது முன்னெடுக்கப்பட்ட நிலமைக்கு ஈடானது எனவும் ஹேமகுமார நாணயக்கார கூறியுள்ளார்.
தற்போதைய அரசாங்கம், அரசாங்கத்திற்கு வலியை ஏற்படுத்துவோர், சரியானதை செய்வோர் என அனைத்து தரப்பினர் மீதும் அரச பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளது.
இதனால் வட பகுதியில் உள்ள இளைஞர்கள் முதல், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் வரையான அனைவரும் அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
அரசாங்கத்தின் வேட்டை நாய்கள் மேற்கொண்டு வரும் இந்த நடவடிக்கை காரணமாக மன்னனின் கழுத்தில் இருந்த ஈயை விரட்டுவதற்காக, குரங்கு வாளை பயன்படுத்தியதை போன்று ஜனாதிபதிக்கு வேட்டை நாய்களின் தலையை துண்டிக்க வேண்டிய நிலைமை ஏற்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக