திருக்கோவில் வட்டமடு வயல் பிரதேசத்தில் வீசிய சுழல் காற்றினால் வேளாண்மைக்கு காவலுக்காக நின்றவரின் குடிசை மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் விவசாயி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று (17) மாலை இடம்பெற்றுள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த வயல் பிரதேசத்தில் காட்டு விலங்குகளிடம் இருந்து வேளாண்மையை காப்பாற்றுவதற்காக விவசாயிகள் சிலர் காவலிருந்தனர்.
இதன்போது நேற்று (17) மாலை 3.00 மணியளவில் கடும் மழையுடன் வீசிய சுழல் காற்று வீசியது.
இந்நிலையில் மரத்துக்கு கீழ் அமைக்கப்பட்டிருந்த குடிசைக்குள் 4 விவசாயிகள் தஞ்சமடைந்துள்ளனர்.
திடீரென மரம் முறிந்து குடிசை மீது வீழ்ந்ததில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை உயிரிழந்துள்ளார்.
கண்ணகிபுரம் 2ம் பிரிவைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான சுப்பையா மகேஸ்வரன் என்ற விவசாயியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக