யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நால்வர் கைது செய்யப்பட்டு 24 மணிநேரம் ஆனபோதும் அவர்கள் இதுவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை என முன்னிலை சோஷலிசக் கட்சி தெரிவித்துள்ளது.
அக்கட்சியினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு 24 மணித்துயாலத்திற்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட வேண்டும் என்பது சட்டம் எனவும், ஆனால் இம் மாணவர்கள் இதுவரை நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படவில்லை என அக்கட்சி குற்றஞ் சுமத்தியுள்ளது.
கடந்த 26ஆம் திகதி பல்கலைக்கழகத்தில் விளக்கு ஏற்றியமையின் காரணமாக மாணவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் அரம்பிக்கப்பட்டிருந்தன.
போராட்டத்தில் உயிரிழந்த வீரர்களிற்கு மரியாதை செலுத்தி வணங்கும் உரிமை பல்கலைக்கழக மாணவர்களிற்கு உண்டு.
சமூகத்தில் பல்வேறுபட்ட மக்கள் வாழ்கின்றனர். அவர்களிற்கான உரிமைகள் அவர்களிற்கு வழங்கப்படவேண்டும். எனவே இங்கு மாணவர்களது உரிமை புறக்கணிக்கப்பட்டுள்ளது.
இத்தகையொதொரு காலப்பகுதியில்தான் 30 வருடங்களிற்கு முன்னதாக இலங்கையில் போராட்டம் வெடித்தது எனவும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக