30 ஜூன் 2010

ஐ.நா.நிபுணர் குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்க தயார்.-உருத்திரகுமாரன்.


ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான் கீ மூனினால், அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவிற்கு தாம் ஒத்துழைப்பு வழங்க தயார் என தமிழீழ விடுதலைப்புலிகள் அறிவித்துள்ளனர்.
இந்தநிலையில் குறித்த நிபுணர் குழு, சாட்சியமளிக்க வருபவர்களை பாதுகாக்கவேண்டும் என தமிழீழ விடுதலைப்புலிகள் வலியுறுத்தியுள்ளனர்.

அமெரிக்காவை தளமாகக்கொண்டவரும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினருமான விஸ்வநாதன் உருத்திரகுமாரன் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

நிபுணர் குழுவின் விசாரணைகள் தெளிவான முறையில் நடத்தப்படவேண்டும் என்பதுடன், சர்வதேச மட்டத்தின் தரத்திற்கேற்ப அது மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

இந்தநிலையில், தாம் ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழுவிற்கு முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாக உருத்திரகுமாரன் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு, சுதந்திரமாக விசாரணைகளை மேற்கொள்ளும்போது, வன்னியில் கடந்த வருடம் இடம்பெற்ற மனிதப்படுகொலைகள் குறித்த உண்மைகளை கண்டறிய முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை நிபுணர் குழு தமது விசாரணைகளை நான்கு மாதங்களுக்குள் வரையறுக்காமல், அதன் வரையறையை நீடித்து சர்வதேச சட்டங்களுக்கு அமைய விசாரணைகளை நடத்தவேண்டும் என்றும் ருத்திரகுமாரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

திருவாளர் கந்தையா பசுபதி அவர்களின் முதலாமாண்டு நினைவலைகள்.

துயர் சுமந்து தவிக்கின்றோம்!


புளியங்கூடல் மேற்கு ஊர்காவற்றுறையை சேர்ந்த திருவாளர் கந்தையா பசுபதி அவர்களின் முதலாமாண்டு நினைவலைகள்.

எங்களுக்காய் வரவு:15.03.1926

கலங்கவைத்து விரைவு 30.06.2010.

தந்தையே எமக்கு உயிர் தந்த தெய்வமே! நாளும் பொழுதும் உங்கள் நினைவுகள் சுமந்து கலங்குகிறோம் நாமிங்கு! என்னானது ஏதானது?எமைப்பிரிய எப்படியானது?பாசக்கூட்டில் வாழ்ந்த எம் கூட்டை உடைத்து தந்தை பறவை ஏன் தான் பறந்தது? பிள்ளைகள் இங்கு துடிப்பது தெரியுமோ?மனைவியே இங்கு கதறுதல் கேட்குமோ?மருமக்கள் இங்கு தவிப்பது புரியுமோ?பேரர்கள் இங்கு கலங்குதல் விளங்குமோ? யாருக்கும் தீங்கு எண்ணிடா உள்ளம்,ஊருக்கு உதவி செய்வதில் வள்ளல். பணமே வேண்டாமல் கைவைத்தியம் செய்வதில் சமர்த்தர், உறவுகளை விடவும் நட்புக்கள் அதிகம் கொண்ட பண்பாளர், இனி எங்கே காண்போம் தந்தையே உங்களை? இன்னொரு பிறப்பு எமக்கு இருந்தால் உங்களின் பிள்ளைகளாய் பிறக்கவே வேண்டுகிறோம்!என்றுமே நீங்கா துயர் சுமந்து நிற்கிறோம் தந்தையே உங்கள் நினைவலைகளால்.
தகவல்:மனைவி,பிள்ளைகள் மருமக்கள்,பேரப்பிள்ளைகள்.

29 ஜூன் 2010

மீள் குடியேற்ற நடவடிக்கைகள் கவலை அளிப்பதாக பிரித்தானிய தூதர் தெரிவிப்பு.-த.தே.கூட்டமைப்பு.



வன்னியில் குடியமர்த்தப்பட்ட மக்கள் பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
யாழ்ப்பாணத்திற்கு நேற்று விஜயம் மேற்கொண்டிருந்த பிரித்தானிய துணை உயர்ஸ்தானிகர் மார்க் கூடிங்கைச் சந்தித்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர், இது தொடர்பில் அவரிடம் முறையிட்டுள்ளனர்.
சந்திப்பில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா சுரேஸ் பிரேமசந்திரன் மற்றும் அப்பாத்துரை விநாயகமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.
இதேவேளை குடியமர்த்தப்பட்ட பெண்கள், இராணுவத்தினரால் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்படுவதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இந்த நிலையில், அதற்கெதிரான அழுத்தம் கொடுக்க பிரித்தானியா முன்வர வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர்..
இதற்கிடையில் மீள் குடியேற்ற நடவடிக்கைகளால் பல குறைபாடுகள் காணப்படுவதாக, பிரித்தானிய உயர்ஸ்தானிகர் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரிடம் கவலை வெளியிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சிறிலங்கா அரசின் நல்லெண்ண முயற்சிகள் கபட நோக்கம் கொண்டவை.-தமிழீழ விடுதலை புலிகள்.




சிறிலங்கா அரசின் நல்லெண்ண முயற்சிகள் கபட நோக்கம் கொண்டவை என்று தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமைச்செயலகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
தலைமைச் செயலகம்

தமிழீழ விடுதலைப் புலிகள்தமிழீழம்.29.06.2010
சிறிலங்கா அரசின் நல்லெண்ண முயற்சிகள் கபட நோக்கம் கொண்டவை.
அன்பான தமிழ் பேசும் மக்களே!
சிறிலங்கா அரசு முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் சர்வதேசத்தின் நெருக்கடிகளை எதிர்கொண்டுவருகின்ற அதே வேளை எம் உரிமைக்கான போராட்டத்தினை நசுக்க தொடர்ந்தும் திடசங்கற்பம் பூண்டுள்ளது.
எம் மக்களின் உரிமைக்கான போராட்டம் என்பது சர்வதேச ரீதியாக பல வழிகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. எமது இயக்கத்தினை அழிப்பதன் மூலம் தமிழர்களின் போராட்டத்தின் இலட்சியத்தை அழித்துவிடலாம் என்ற சிங்கள அரசின் நோக்கம் எடுபடவில்லை.
இத்தகைய சூழலில் சிறிலங்கா அரசு பல்வேறு நரித்தனம் கொண்ட தந்திரத் திட்டங்களை வகுத்து நகர்த்தி வருகின்றதை எம்மக்கள் நன்கு அறிவர்.
சர்வதேச ரீதியாக எழுந்துள்ள அழுத்தங்களைத் தணிப்பது சர்வதேச உதவிகளை தமிழர்களின் பேரால் பெற்று சிங்களக் குடியேற்றங்களைப் பெருக்குவது இன நல்லிணக்கம் என்ற பேரிலும் அபிவிருத்தி என்ற பேரிலும் எம் உரிமைக்கான போராட்டத்தினை அடியோடு இல்லாமல் செய்வது ஆகிய நீண்டகால திட்டங்களை சிறிலங்கா அரசு நடைமுறைப்படுத்தி வருகின்றது.
இத்தகைய சிங்களப் பேரினவாதத்தின் சூழ்ச்சி நடவடிக்கைகளுக்குப் புலம்பெயர் தமிழர்கள் பெரும் தடையாக இருப்பதனை சிறிலங்கா அரசாங்கம் நன்கு கணித்துள்ளது. முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் இருந்த விரக்தி குழப்பங்கள்இ கருத்து முரண்பாடுகளைக் களைந்து ஆரோக்கியமான முறையில் ஒன்றிணைந்து செயற்படத் தொடங்கிய புலம்பெயர் தமிழரின் செயற்பாடுகள் சிறிலங்கா அரசாங்கத்துக்குப் பெரும் தலையிடியாக அமைந்து வருகின்றன. இதன்காரணத்தால் புலம்பெயர் தமிழர் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்தி அவர்களின் ஒற்றுமையைக் குலைக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது சிறிலங்கா அரசாங்கம். அதன் ஒருபகுதியாக சிறையிலுள்ள போராளிகள் சிலரைப் பகடைக்காய்களாகப் பயன்படுத்தி சில திட்டங்களைச் செயற்படுத்தி புலம்பெயர் மக்களின் ஒருதொகுதியைத் தம் வசப்படுத்தி வளங்களை உள்வாங்க முனைகிறது. இதன்மூலம் குழப்பங்களை ஏற்படுத்தி எமது ஒற்றுமையைச் சிதைத்து தமிழரின் உரிமைக்கான போராட்டத்தினையும் புலம்பெயர் தேசங்களில் நசுக்க எண்ணியுள்ளது. இதன் வெளிப்பாடாகவே சிறிலங்கா அரசாங்கத்தால் சில நகர்வுகள் அண்மையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
போராளிகளை விடுவிப்பதற்கும் தாயக மக்களின் துயரங்களைப் போக்குவதற்கும் எமது இயக்கமும் புலம்பெயர் மக்களும் விட்டுக் கொடுப்புக்களுக்குத் தயாராக இருக்கின்றார்கள் என்ற நல்ல நோக்கினை சிறிலங்கா அரசாங்கம் கபடத்தனமாகப் பயன்படுத்த முனைகிறது. அதற்காக தமிழ்மக்களின் எதிர்பார்ப்பைப் பயன்படுத்தி தம்வசப்படுத்தும் உளவியற்போரை சிறிலங்கா அரசு கையாளத் தொடங்கியுள்ளது.
தமிழ்மக்களுக்கு நன்மை செய்யப் போவதாகக் கூறும் சிங்கள அரசாங்கம் செய்தவை,செய்துகொண்டிருப்பவை என்ன?
யுத்தத்தின்போது ஈவிரக்கமற்ற முறையில் எமது மக்களைக் கொன்றுகுவித்தது. சரணடைந்தவர்களைக் கொடூரமாகக் கொலைசெய்தது. ஊடகங்களைச் சுயாதீனமாகச் செயற்படவிடாமல் தடுத்தது. சரணடைந்தவர்கள் குறித்த முழுமையான விபரங்களை இன்றுவரை வெளிப்படுத்தாமலுள்ளது. நாளாந்தம் பாலியல் வல்லுறவு சித்திரவதை கொலை என்று தடுப்புக்காவலிலுள்ளவர்களைப் பலியாக்கிக் கொண்டிருக்கிறது. தொண்டு நிறுவனங்களைச் சுதந்திரமாகச் செயற்பட விடாது தடுப்பது மட்டுமன்றி போர்க்குற்றவியல் விசாரணை தொடர்பான பன்னாட்டு முயற்சிகளை முற்றாக உதறித்தள்ளிக் கொண்டிருக்கிறது இந்தச் சிறிலங்கா அரசாங்கம்
இதே அரசாங்கம் தடுப்புக் காவலிலுள்ள போராளிகள் சிலரை விடுவிப்பது மக்களின் புனர்வாழ்வு அபிவிருத்தி என்ற திட்டங்களைக் கபட நோக்குடன் பயன்படுத்தி எமது மக்களை வசியப்படுத்த முயல்கிறது. தடுப்புக்காவலிலுள்ளவர்களை விடுவிப்பது என்பது முற்றுமுழுதாக சிறிலங்கா அரசின் கையிலுள்ள விடயம்; அதற்கு எந்தத் தடையுமே இல்லை. அது குறித்துப் பேசுவதானாற்கூட தாயகத்தில் இதே கோரிக்கைகளை முன்வைத்த தமிழ் அரசியற்கட்சிகளுடன் பேசாமல் புலம்பெயர் தேசத்திலிருந்து தனிநபர்கள் சிலரை அழைத்துப்
பேசவேண்டிய தேவையில்லை. இதுவொரு தமிழ்மக்களின் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் முயற்சியாகவும் தம்மீதான அழுத்தங்களைத் தணிக்க சிறிலங்கா அரசு ஆடும் ஒரு நாடகமாகவுமே பார்க்கப்பட வேண்டும்.
தமிழ்மக்கள் மேல் அக்கறையும் அவர்களின் துயரங்களைப் போக்க வேண்டுமென்ற விருப்பும் உண்மையாகவே சிறிலங்கா அரசாங்கத்துக்கு இருக்குமானால்
*சிறிலங்கா அரசாங்கம் அவசரகால சட்டத்தினையும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தினையும் நீக்கவேண்டும்.ழூ தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகள் அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்க வேண்டும்.
*ஐயத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பொதுமக்களையும் மனிதாபிமானப் பணியாளர்களையும் விடுவிக்க வேண்டும்.
*இன்னமும் மீளக் குடியமர்த்தப்படாமல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் மக்களனைவரையும் அவரவரின் சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்த வேண்டும்.
*பன்னாட்டுத் தொண்டு நிறுவனங்களையும் உள்ளூர்த் தொண்டு நிறுவனங்களையும் தமிழர் தாயகத்தில் சுதந்திரமாக அபிவிருத்திப் பணிபுரிய அனுமதிக்க வேண்டும்.
இவ் அனைத்துச் செயற்பாடுகளும் வெளிப்படையாக இடம்பெறவேண்டும். அத்தோடு தாயகத்திலுள்ள தமிழர் பிரதிநிதிகளுடன் இணைந்து இவற்றைச் செய்யவேண்டும். புலம்பெயர் தமிழர்களுடன் இணைந்து செய்யப்பட வேண்டிய பணிகளுக்கென அணுகப்பட வேண்டியவர்கள் அதற்கெனவுள்ள மக்கள் கட்டமைப்புக்களேயன்றி தனிநபர்களல்லர். இவ்வாறான செயற்பாடுகளை வெளிப்படைத்தன்மையுடன் செய்யும்போது உலகத்தமிழர்களும் அதற்கு முன்நின்று உழைப்பார்கள்.
ஆனால் சிறிலங்கா அரசாங்கமோ மிகமிக இரகசியமாக சிறையில் கைதிகளாகவுள்ள எமது இயக்கத்தைச் சேர்ந்த சிலருடனும் வெளிநாட்டில் இருந்து அண்மையிற் சென்ற தனிநபர்கள் சிலருடனும் சேர்ந்து திரை மறைவில் சில செயற்பாடுகளை முன்னெடுப்பது உள்நோக்கம் கொண்டவை. ஆகவே இந்தக் கபடநோக்கம் கொண்ட சிறிலங்கா அரசின் முயற்சிகள் தொடர்பில் புலம்பெயர் மக்கள் மிக விழிப்புடனும் கூட்டுப்பொறுப்புணர்வுடனும் செயற்படுமாறு கேட்டுக்கொள்கின்றோம். அத்தோடு மக்கள் பிரிதிநிதிகளைப் புறந்தள்ளி தனிநபர்களைக் கொண்டு காரியமாற்றும் சிறிலங்கா அரசின் இந்தக் கபட முயற்சியினை பன்னாட்டு அமைப்புக்கள் மற்றும் அரசுப் பிரதிநிதிகள் சரியாக விளங்கிக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இதேவேளை சிறிலங்கா அரசின் இந்தச் சூழ்ச்சிக்குப் பலியாகிஇ நல்லெண்ண அடிப்படையில் சிறிலங்கா அரசின் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிக் கொண்டிருக்கும் வழங்க முன்வந்திருக்கும் புலம்பெயர்ந்த தனிநபர்கள் சிறிலங்கா அரசின் கபடத்தனத்தை விளங்கிக் கொண்டு விழிப்புணர்வோடு செயற்பட்டு அரசின் சதிக்குப் பலியாகாமல் இருக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
சிலருக்குப் பொதுமன்னிப்பளித்து அவர்களைக் கொண்டு சில நடவடிக்கைகளை மேற்கொண்டும் அபிவிருத்தியென்ற பெயரில் சலுகைகளை வழங்கியும் அரசியல் இலாபம் தேடமுனையும் சிறிலங்கா அரசாங்கத்தின் வஞ்சகச் சூழ்ச்சியைத் தமிழ்மக்கள் இனங்கண்டு கொள்ள வேண்டும். அத்தோடு சலுகைகளுக்காக எமது இனத்தின் அரசியல் அபிலாசைகளை விலைபேசும் சக்திகளைத் தமிழ்மக்கள் புறக்கணிக்க வேண்டும்.
எமது போராட்டத்தின் நியாயத்தன்மையை உரத்துச் சொல்லவும் எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை வெளிப்படுத்தி அதற்கான நீதியை உலகமட்டத்தில் பெற்றுக்கொடுக்கவும் பணியாற்றும் வலுவுடனிருக்கும் எமது புலம்பெயர்ந்த தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையாக அணிதிரண்டு செயற்படுவதன் மூலம் எமது விடுதலையை வென்றெடுக்கப் பாடுபட வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
நன்றி.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
இராமு சுபன் இணைப்பாளர்

தலைமை செயலகம்

தமிழீழ விடுதலைப் புலிகள்.

28 ஜூன் 2010

இலங்கை அரசு பயன்படுத்தும் கே.பி என்ற துருப்பு சீட்டு.


இலங்கை அரசால் கைதுசெய்யப்பட்டு, இலங்கை அழைத்துவரப்பட்டார் கே.பி என்றும், அவர் சிறையில் வாடுவதாகவும், அவரை இலங்கை அரசு சித்திரவதை செய்வதாகவும் கூறப்பட்டு வந்த நிலையில், கே.பி அவருடன் தொலைபேசியில் பேசியிருந்தார், கே.பி இவருடன் பேசினார் என அரசல் புரசலாக பல செய்திகள் அவ்வப்போது வெளியாகி இருந்தது. ஆனால் தற்போது 9 பேர் அடங்கிய தமிழர்கள் குழு ஒன்று அவரைச் சென்று சர்வசாதாரணமாக பார்த்துவிட்டு திரும்பியுள்ளது. அதைத் தொடர்ந்து கே.பி நடத்திய பத்திரிகையாளர் மாநாடும் அதன் விபரங்களையும் லக்பிம வார ஏடு பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது:சிறீலங்காவுக்கு அழைத்துவரப்பட்ட குமரன் பத்மநாதன் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்படுவதாக சிறீலங்கா அரசு தெரிவித்திருந்தது. ஆனால் அதன் பின்னர் அவர் எங்கு உள்ளார் என்பதை தென்னிலங்கை மக்கள் கூட அறியவில்லை. ஆனால் திடீரென கே.பி புலம்பெயர் தமிழ் சமூகத்தை சேர்ந்த சிலருடன் வடக்கு – கிழக்குக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கிருந்து திரும்பிய கே.பி குழுவினர் கொழும்பில் உள்ள ஒரு ஆடம்பர விடுதியில் ஊடகவியலாளர்களைச் சந்தித்துள்ளனர்.பாதுகாப்பு வாகனங்கள் புடைசூழ வெள்ளை நிற காரில் வந்து இறங்கினார் பத்மநாதன். அவரின் பையை பாதுகாப்பு படையினரே சுமந்து வந்தனர். அவருக்கு தேவையான சிகரட்டையும் அவர்களே ஓடிச் சென்று வாங்கி வந்தனர் எனவும், கே.பியின் குழுவில் அங்கம் வகித்த 9 உறுப்பினர்களில் அவரது உறவினர்கள் சிலரும் இருந்ததாகவும் லக்பிம தெரிவித்துள்ளது. அது மேலும் குறிப்பிடுகையில்..புலம் பெயர் தமிழர்கள் தற்போது இரண்டாகப் பிளவுற்றிருப்பதாக குறிப்பிடுகிறது. அதாவது கே.பியின் அபிமானிகள் என்று ஒரு பிரிவும், ஈழ விடுதலை ஆதரவாளர்கள் என ஒரு பிரிவாக, புலம்பெயர் தமிழர்கள் இரண்டாகப் பிரிவுற்றுள்ளனராம். இதில் பிரித்தானியாவில் உள்ள பலர் கே.பியோடு தொடர்ந்தும் தொலைபேசியில் உரையாடிவருகின்றனர். குறிப்பாக நாடு கடந்த தமிழீழ அரசில் அங்கத்துவம் வகிக்கும் சிலரும் இதில் அடங்குவர்.கே.பியை துருப்புச் சீட்டாக வைத்து இலங்கை அரசு தற்போது ஒரு புதிய அரசியல் யுத்தக் களத்தை திறந்துள்ளதே இப்போது தோன்றியுள்ள நிலையாகும். இதனை புலம்பெயர் தமிழ் சமூகம் எவ்வாறு சமாளிக்கப்போகிறது என்பதே பெரும் பாடாக உள்ளது. எங்கு குத்தினால் தமிழர்களுக்கு வலிக்கும் என்று தெரிந்து வைத்துள்ள இலங்கை அரசு, அதனை தற்போது பாவிக்கிறது. புரியவில்லையா? அதுதான் ""போராளிகளின் புனர்வாழ்வு"" ! இதனைப் பயன்படுத்தி துருப்புச் சீட்டாக கே.பியைக் களமிறக்கி இருக்கிறது இலங்கை அரசு. போராளிகளை வெளியே விட அவர்களுக்கு ஏதாவது கற்கை(கல்வி) கொடுக்கப்படவேண்டும் என இலங்கை அரசு வலியுறுத்துகிறதாம். அதனால் பெரும் நிதியை புலம்பெயர் நாடுகளில் திரட்டி அதனை இலங்கையில் பாவிக்க சில தமிழ் பிரமுகர்கள் நேரடியாகவே பிரயத்தனம் மேற்கொள்ள இருக்கின்றனர்.இது இவ்வாறு இருக்க, நாம் ஏற்கனவே எதிர் பார்த்தது போல கே.பிக்கு அரசாங்கம் ஒரு பொது மன்னிப்பை வழங்குவதாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்தோடு அவர் அரசுக்கு விடுதலைப் புலிகளின் பெரும் பணத்தை வழங்கினார், மற்றும் கப்பல்களை இலங்கை அரசுக்கு வழங்கினார் என்று செய்திகளை சிங்கள மக்களிடம் திட்டமிட்டு இலங்கை அரசு பரப்பி வருகிறது. எனவே பிற்காலத்தில் அவருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டாலும் சிங்கள மக்களிடம் இருந்து பெரும் எதிர்ப்பு கிளம்பாது. அத்தோடு விடுதலைப் புலிகளின் தலைவர் கே.பி என்ற வாசகங்களையே இலங்கை அரசு தொடர்ந்தும் வெளிப்படுத்தி வருகிறது, இந்நிலையில் சர்வதேச சமூகத்திற்கு விடுதலைப் புலிகள் தம்மோடு இணைந்தே செயல்பட்டு வருவதாக இலங்கை அரசு தன்னை இனம் காட்டும் அபாயமும் உள்ளது.அத்தோடு கே.பியின் வரவால், கருணா, ஆனந்த சங்கரி, சித்தார்த்தன், டக்ளஸ், மற்றும் அரசுடன் சேர்ந்து இயங்கும் ஒட்டுக் குழுக்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாக உள்ளது. இதனால் இவர்கள் ஒரு பொது உடன்பாட்டிற்குள் வர சமீபத்தில் ஒன்றுகூடியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கே.பி குழுவோடு சென்றிருந்த 9 பேரும், அரசாங்கத்தின் முக்கியமான அமைச்சர் ஒருவரை சந்திக்க ஏற்பாடாகி இருந்ததாம், அந்தவேளை அங்கு வந்த அந்த குறிப்பிட்ட அமைச்சரை, தமிழ் பிரதிநிதிகளில் ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துக் கூற முற்பட்டவேளை, அவர் அதனைத் தவிர்த்து கையால் வணக்கம் மட்டும் சொன்னாராம், அத்தோடு இங்கு அரசியல் பேச வேண்டாம், நீங்கள் எதுவும் கேட்கும் நிலையில் இல்லை, அதனால் புனர்வாழ்வு பற்றி மட்டும் பேசினால் போதும் என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டாராம்.சரணடைந்த பல விடுதலைப் புலிகளின் தலைவர்களை சுட்டுக்கொன்றுள்ள இலங்கை அரசின் இராணுவம் போர்குற்றங்களையும், இனப்படுகொலைகளையும் புரிந்துள்ளது என்பதை எவராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. எனவே புனர்வாழ்வு மற்றும் மீள் குடியேற்றம் என்ற போர்வையில் இலங்கை அரசு புலம்பெயர் தமிழர்களுக்கு இடையே ஊடுருவி போர்குற்ற முன்னெடுப்புக்களைத் தடைசெய்யக்கூடும் அல்லது முன்னெடுக்கப்படும் விடயங்களை அறிந்து அவற்றை செயலிழக்கச் செய்ய முடியும். எனவே அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்குவோர் இது குறித்து மிகுந்த கவனம் கொள்வது நல்லது.இலங்கை அரசின் நோக்கம் அதன் செயல்பாடுகள் குறித்து அறிந்து, தெளிவுபெறுதல், நல்லது. ஒரு சிலரின் சுயலாபம், மற்றும் அரசியல் நலனுக்காக எமது இனத்தின் மானத்தை அடகு வைக்கவேண்டாம். சூழ் நிலைக் கைதியாக இருக்கும் கே.பி குறித்தும் மிக அவதானமாகச் செயல்படுவதே நல்லது.

ஜெனரல் சரத் பொன்சேகாவை தனியான இராணுவ வாகனத்தில் அழைத்து வருமாறு நீதிமன்றம் உத்தரவு.


ஜெனரல் சரத் பொன்சேகாவைத் தனியான இராணுவ வாகனம் ஒன்றில் நீதிமன்றுக்கு அழைத்து வருமாறும் இன்று போல் சிறைச்சாலை வாகனத்தில் அழைத்து வர வேண்டாமென்றும் கொழும்பு கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே நீதிமன்றம் சரத்துக்குப் பாதுகாப்பு அளிக்குமாறு உத்தரவிட்ட பின்னரும் அவர் சிறைச்சாலை வாகனத்தில் அழைத்து வரப்படுவதாகவும் தனிப்பட்ட வாகனத்தில் அவர் அழைத்து வரப்படுவதில்லை என்றும் சட்டத்தரணி இன்று நீதிபதியிடம் தெரிவித்திருந்தார். இதனையடுத்தே மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. .

அத்துடன் சரத்தின் உடல்நலன் கருதி, அவரது குடும்பத்தினரே உணவு கொண்டுவந்து தர அனுமதிக்குமாறும் சிறைச்சாலை உணவை வழங்க வேண்டாமென்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. .

ஐகோப் ஆயுத கொள்வனவு மோசடி விவகாரத்தின் மூன்றாவது சந்தேக நபரான ஜெனரல் பொன்சேகாவை, எதிர்வரும் 12ஆம் திகதிவரை இராணுவ விளக்கமறியலில் வைக்குமாறும் கோட்டை நீதிவான் இன்று உத்தரவிட்டுள்ளார். மேலும், சிறை அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் அவரை வைக்குமாறும் கோட்டை நீதிவான் லங்கா ஜெயரட்ன தெரிவித்துள்ளார். .

ஐகோப் ஆயுத கொள்வனவு மோசடி வழக்கு தொடர்பான விசாரணை உயர் நீதிமன்றத்தில் இடம்பெறுமென கோட்டை நீதவான் நீதிமன்றில் தலைமைச் சட்ட அதிகாரி முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

27 ஜூன் 2010

பொதியொன்றில் கொலைசெய்யப்பட்ட நிலையில் இளைஞரின் சடலம்.


முந்தல் பொலிஸ் பிரிவில் தொடுவாவ பள்ளிவாசல் பாடு கடற் பிரதேசத்தில் வீசப்பட்ட பொதியொன்றை கண்ட மீனவர்கள் அதனை கரைசேர்த்து பார்த்த போது கொலை செய்யப்பட்ட நிலையில் இளைஞரின் சடலமொன்றை கண்டனர். முந்தல் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து இருவர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களில் ஒருவர் இரகசிய பொலிஸார் என தெரியவந்துள்ளது. இச் சம்பவம் இன்று மாலை 3.00 மணியளவில் இடம் பெற்றுள்ளது. இவ்வாறு மீட்கப்பட்ட சடலமானது இந்திய நாட்டை சேர்ந்த 24 வயது நிரம்பியவரது என ஆரம்ப விசாரணையிலிருந்து தெரியவருவதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர். விசாரணை தொடர்வதாகவும் அவர்கள் மேலும் கூறினர்.

விமானங்களை கொள்வனவு செய்ய புலிகள் திட்டமாம் என்கிறது திவயின.



தமிழீழ விடுதலைப் புலிகளின் ஐரோப்பிய வலையமைப்பு விமானங்களை கொள்வனவு செய்யத் திட்டமிட்டுள்ளதாக சிங்கள ஊடகமான திவயின செய்தி வெளியிட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் நிதியைக் கொண்டு இரண்டு ஏ-380 எயார் பஸ் ரக விமானங்களை கொள்வனவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஈழ விமான சேவை என்ற பெயரில் இந்த விமானங்களை சேவையில் ஈடுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
அமெரிக்காவில் புலிகளுக்கு ஆதரவான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் ருத்ரகுமாரன் என்பவரினால் இந்த யோசனைத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அரசுக்குச் சார்பான சிங்கள பத்திரிகையான திவயின வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

26 ஜூன் 2010

கன்னாதிட்டியில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்பு!


யாழ்.நகரில் கன்னாதிட்டிப்பகுதியில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் நேற்று மாலை கண்டெடுக்கப்பட்டு யாழ்போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

யாழ்வீதி யாழ்ப்பாணத்தை சேர்ந்த எஸ்.தவச்செல்வம் (வயது – 45) என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார். இவரது சடலத்தில் அடிகாயங்கள் காணப்படுகிறது என யாழ் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

புலிகள் சரணடைவது குறித்து அரசுக்கு தெரியப்படுத்தினேன்.-எரிக் சொல்கெய்ம்.


இலங்கையில் நடைபெற்ற போரின் இறுதிக் கட்டத்தில் மே மாதம் 17ஆம் திகதி விடுதலைப் புலிகளின் நடேசன், புலித்தேவன் போன்ற தலைவர்கள், தாம் சரணடைய ஏற்பாடு செய்துதரும்படி என்னிடம் கேட்டார்கள். அதற்கு நான் "உங்களுடைய முடிவு, காலம் பிந்தியது. இருந்தாலும் நீங்கள் வெள்ளைக் கொடியுடன் சென்று படையினரிடம் சரண் அடையுங்கள்'' என்று கூறினேன். அதற்கு முன்னதாக புலிகள் சரணடைவது குறித்து இலங்கை அரசுக்கும் தெரியப்படுத்தி இருந்தேன். அவர்கள் சரண் அடைவதற்கான ஒழுங்குகள் குறித்து இலங்கை அரசுக்கு ஏற்கனவே தெரியப்படுத்தப்பட்டிருந்தது என்பதனை என்னால் உறுதியாகக் கூறமுடியும். இவ்வாறு தெரிவித்தார் நோர்வேயின் அபிவிருத்தி அமைச்சரும், விடுதலைப் புலிகள் இலங்கை அரசு சமாதானப் பேச்சுக்கான அனுசரணையாளருமான எரிக்சொல்ஹெய்ம். இலங்கையிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் ஊடகவியலாளர்களிடம் அவர் இத்தகவலை நேற்று வெளியிட்டார். மேலும், "இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவும் புலிகளின் தலைவர் பிரபாகரனும் கேட்டுக்கொண்டமைக்கு இணங்க இலங்கை விவகாரத்தில் மத்தியஸ்தம் வகிப்பதற்கு நாங்கள் முன்வந்திருந்தோம். கடைசிவரை யுத்தத்தைத் தவிர்த்து இரு தரப்புகளுக்கும் இடையில் அமைதியை ஏற்படுத்த நாங்கள் முயற்சி எடுத்தோம். ஆனால் இரு தரப்பினரும் பல தடவைகள் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இறுதியில் போர் ஏற்பட்டுவிட்டது.'' என்றும் சொல்லி வருத்தப்பட்டார் சொல்ஹெய்ம்.போர் தொடர்பில், 2009 ஆம் ஆண்டின் தொடக்கம் முதல் கே.பி என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் பல தடவைகள் என்னுடன் தொடர்புகொண்டு போரை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டார். நாங்களும் அதற்காகப் பல வழிகளில் முயன்றுகொண்டிருந்தோம். மேலும் சரணடைவது தொடர்பில், எங்களுடன் மாத்திரமல்ல, செஞ்சிலுவைச் சர்வதேசக்குழு, ஐ.நா. போன்ற பல தரப்புகளுடனும் அவர்கள் தொடர்புகொண்டு பேசிய பிறகே சரணடைந்தார்கள் என்பது எனக்குத் தெரியும். அவர்கள் சரணடைவதற்கான ஒழுங்குகள் பற்றி ஏற்கனவே இலங்கை அரசுக்குத் தெரியப்படுத்தப்பட்டிருந்தது என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும். ஆனால் அரசு சார்பான எவருடன் பேசினேன் என்பதை நான் கூற விரும்பவில்லை. ஆனால் புலித்தலைவர்கள் தொடர்பு கொண்டு சில மணித்தியாலங்களின் பின்னர் நடேசன், புலித்தேவன் உள்ளிட்ட பலர் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்று நான் அறிந்துகொண்டேன் என்று தெரிவித்துள்ளார் சொல்ஹெய்ம்.யுத்தத்தின் இறுதிப்பகுதியில் பல போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டன என்ற குற்றச்சாட்டு குறித்து சுயாதீன விசாரணை ஒன்று தேவை. அதைத்தான் ஐ. நா. செயலரும் வலியுறுத்துகிறார். எமது நிலைப்பாடும் அதுதான். சர்வதேச சுயாதீன விசாரணைகள் மூலம் மேலும் பல உண்மைகள் வெளிவரலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐ.நா.விசாரணைக் குழுவுக்கு மலேசியத் தமிழர்கள் வரவேற்பு.


இலங்கை போரின் இறுதிக் கட்டத்தில் இலங்கை அரசு மேற்கொண்ட மனித உரிமை மீறல்களும் அப்பாவித் தமிழர்கள் ஈவு இறக்கமின்றி கொன்று குவிக்கப்பட்டதும். சரணடைய வந்த விடுதலைப்புலிகளைக் கொன்று குவித்ததும் உலமறிந்த உண்மை சிங்கள அரசு போர் குற்றங்களே நடக்கவில்லையென மறுத்தபோதும். ஜ.நா அமைப்பு இலங்கை அரசு போர் தொடர்பான குற்றங்களை புரிந்த மனித உரிமைகளை மீறியதற்க்கான ஆதாரங்களைத் திரட்ட கடந்த வராம் 3 பேர் கொண்ட குழுவை அமைத்தது .இலங்கை வன்னியில் போர் நடந்து ஓரு வருடத்துக்கு மேலான போதிலும், தடயங்களையும் ஆதரங்களையும் திரட்ட அமைக்கப்பட்ட இந்த மூவர் கொண்ட குழு வரவேற்புக்குறியது. ஜ.நா வின் இந்த முயற்சி உலகத் தமிழர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியாகும் என மலேசியத் தமிழர்கள் தெரிவித்தாக மலேசிய உலகவிவகார மாமன்றத்தின் தலைவர் ஈஸ்வரலிங்கம் தெரிவித்தார்.இக் குழு யாருடைய வற்புறுத்தலுக்கும் அச்சுறுத்தலுக்கும். இடம் கொடுக்காமல் சுகந்திரமாக செயல்ப்பட்டு ஆதாரங்களைத் திரட்டி அறிக்கை சமர்ப்பித்து உலகச் சமுகத்திற்கு உண்மைகளை அறிவிக்க வேண்டும் என ஜ.நாவின் பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் ஈஸ்வரலிங்கம் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

25 ஜூன் 2010

கே.பியின் சிபார்சின் பெயரில் முன்னாள் போராளிகள் சிலர் விடுதலையாகின்றனர்.


வவுனியா மாவட்டத்தின் பம்பைமடு புனர்வாழ்வு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் புலி உறுப்பினர்களில் 25 பேரை அரசு நாளை விடுதலை செய்கின்றது. இவர்களில் குறிப்பிடத்தக்க தொகையினர் புலிகளின் முக்கிய பிரமுகர்களில் ஒருவராக இருந்த குமரன் பத்மநாதனின் சிபாரிசின் பேரில் விடுவிக்கப்படுகின்றார்கள். குமரன் பத்மநாதன் எதிர்வரும் வட மாகாண சபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.அவர் கடந்த 10ஆம் திகதி இப்புனர்வாழ்வு முகாமுக்கு சென்றிருக்கிறார். அவருடைய அரசியல் நடவடிக்கைகளுக்கு உறுதுணயாக அமையக் கூடிய சிலரின் உதவியை அங்கு கோரி இருக்கின்றார். அவர்களும் குமரன் பத்மநாதனுடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள். குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கலை பண்பாட்டுக்கழக பொறுப்பாளராக ஒரு காலத்தில் இருந்த போஸ் அவரது சகாக்கள் சகிதம் குமரன் பத்மநாதனின் அரசியல் நடவடிக்கைகளில் பங்கேற்க முன்வந்துள்ளார்.இந்நிலையில் அரசு 50 வயதுக்கு மேற்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் 25 பேரை நாளை விடுவிக்கின்றது. 50 வயதுக்கு மேற்பட்டவர் என்கிற வகையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் அரசியல் துறைப் பொறுப்பாளர் மூர்த்தியும் விடுதலை ஆகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் விடுதலைக்கான பூர்வாங்க ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகி விட்டன.

ஐ.நா.வல்லுநர் குழுவுக்கு எரிக் சொல்கெய்ம் ஆதரவு.


இலங்கையின் இறுதிக்கட்டப் போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்விதி மீறல்கள் குறித்து ஐ.நா செயலாளர் நாயகம் பான் கி மூனுக்கு ஆலோசனை வழங்கக்கூடிய மூவர் கொண்ட வல்லுநர் குழு அமைக்கப்பட்டதற்கு நோர்வே அரசு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது. இலங்கையிலிருந்து நோர்வேக்கு விஜயம் செய்துள்ள ஊடகவியலாளர்கள் குழுவிடம் பேசிய சர்வதேச அபிவிருத்திக்கான நோர்வே அமைச்சர் எரிக் சொல்ஹெய்மே தமது ஆதரவை இன்று வெளிப்படுத்தியுள்ளார். மேலும் இந்த வல்லுநர் குழுவுக்கு சர்வதேச அளவிலும் பரந்த ஆதரவு உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.எரிக் சொல்ஹெய்மின் முயற்சியினாலேயே 2002 ஆம் ஆண்டில் தற்காலிக போர் நிறுத்தம் வந்தமை குறிப்பிடத்தக்கது. இறுதிக் கட்டப் போரையும் நிறுத்த வேண்டுமென இவர் ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுத்திருந்தார். ஆனால் குறித்த வல்லுநர் குழுவுக்கு ரஷ்ய அரசு தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் மக்களே!போர்குற்ற ஆதாரங்களை விரைவாக அனுப்பிடுங்கள்.



தமிழ் மக்களுக்கும், நாளிதழ்களுக்கும் ஒரு வேண்டுகோள்! இலங்கையில் போரின் போது நடைபெற்ற குற்ற செயல்களின் உண்மை நிலையை ஆராயும் நிபுணர் குழு ஒன்றை ஐக்கிய நாடுகள் சபை நிறுவியுள்ளது. இக்குழுவுக்கு மின்னஞ்சல் வாயிலாக போர்க்குற்ற புகைப்படங்களையும், காணொளிகளையும், ஆவணங்களையும் அனுப்பி வையுங்கள்.
இந்தோனேஷியாவின் முன்னாள் சட்ட மா அதிபர் மர்சுகி தருஸ்மன் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள இக்குழுவில் அமெரிக்க வழக்கறிஞர் ஸ்டீவன் ரட்ணர், தென்னாபிக்காவின் உண்மை நல்லிணக்கம் தொடர்பான ஆணைக்குழுவில் பணியாற்றியவரும் அந்த நாட்டை சேர்ந்தவருமான யஸ்மின் சூகா ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
http://www.un.org/news/ossg/hilites.htm
எனவே ஒவ்வொரு தமிழர்களும் அக்குழுவினர்களுக்கு மின்னஞ்சல் வாயிலாக போர்க்குற்ற புகைப்படங்களையும், காணொளிகளையும், ஆவணங்களையும் அனுப்பி வைப்போம்.
ஒவ்வொரு இணையத்திலும் இச்செய்தியினை வெளியிடுமாறு பணிவுடன் கேட்டுகொள்கிறேன்.
மேலும் நண்பர்களுக்கும், தமிழ் உறவுகளுக்கும் இந்த மின்னஞ்சல்-களை தெரியபடுத்தவும்.
Marzuki Darusman Former Indonesian attorney general Director of Governance and Legal Reform Association of Southeast Asian Nations (ASEAN)
A long serving veteran in the political arena and former Indonesian Attorney General, Mr. Darusman has in-depth knowledge and practical experience in Indonesia’s legal and regulatory sytems. His determined work to build up the credibility of the National Human Rights Commission in the early days of its establishment earned him a well- deserved reputation as a human rights advocate. He is currently one of the Chairpersons of the GOLKAR Party.
Marzuki Darusman
Strategic Asia Indonesia Plaza Bumidaya 28th floor, Jl. Imam Bonjol No. 61, Jakarta 10310 Tel. +62 21 3151797 begin_of_the_skype_highlighting +62 21 3151797 end_of_the_skype_highlighting Fax. +62 21 3155712
contact.us@strategic-asia.com info@aseanhrmech.org http://strategic-asia.com/marzuki-darusman.html =======
Steven Ratner An international law of war expert, A US international law expert Professor, International Institute, University of Michigan
Steven R. Ratner, the Bruno Simma Collegiate Professor of Law, came to the University of Michigan Law School in 2004 from the University of Texas School of Law. His teaching and research focuses on public international law and on a range of challenges facing governments and international institutions since the Cold War, including ethnic conflict, border disputes, counter-terrorism strategies, corporate and state duties regarding foreign investment, and accountability for human rights violations. Professor Ratner has written and lectured extensively on the law of war, and is also interested in the intersection of international law and moral philosophy and other theoretical issues. In 1998-99, he was appointed by the UN Secretary- General to a three-person group of experts to consider options for bringing the Khmer Rouge to justice, and he has since advised governments, NGOs, and international organizations on a range of international law issues. In 2008-09, he served in the legal division of the International Committee of the Red Cross in Geneva. A member of the board of editors of the American Journal of International Law from 1998-2008, he began his legal career as an attorney-adviser in the Office of the Legal Adviser of the U.S. State Department. Professor Ratner holds a J.D. from Yale, an M.A. (diplôme) from the Institut Universitaire de Hautes Etudes Internationales (Geneva), and an A.B. from Princeton. He established and directs the Law School’s externship program in Geneva.
Bruno Simma Collegiate Professor of Law 433 Hutchins Hall Tel :734.647.4985 begin_of_the_skype_highlighting 734.647.4985 end_of_the_skype_highlighting Fax : 734.763.9375 E-mail: sratner@umich.edu
http://web.law.umich.edu/_FacultyBioPage/facultybiopagenew.asp?ID=300
====================================
Ms. Yasmin Louise SookaSouth African Human Rights LawyerExecutive Director - Foundation for Human RightsFormer Deputy Chairman, The Truth and Reconciliation Commission (TRC)
Yasmin Louise Sooka is the executive director of the Foundation forHuman Rights. Before joining the foundation, she served as acommissioner on the South African Truth and Reconciliation Commissionas the deputy chairperson to the Human Rights Violations Committee. In2004 she was appointed by the United Nations high commissioner forhuman rights to serve as international commissioner on the SierraLeone Truth and Reconciliation Commission.
She is considered an expert on both transitional justice and gender.She regularly consults internationally to governments, internationalagencies, commissions and civil society organisations on transitionaljustice and peace building. Sooka also serves as an executive memberto the Niwano Peace Foundation and is a trustee of the Centre forConflict Resolution and the Black Sash Trust. She currently chairs thesteering committee for South Africa’s Action Plan to address racism,racial intolerance, xenophobia and other related intolerance.
Ms. Yasmin Louise SookaDirector, Foundation for Human Rights, JohannesburgPrivate Bag X14Arcadia 0007South Africa+27 12 440 1691 begin_of_the_skype_highlighting +27 12 440 1691 end_of_the_skype_highlighting+27 12 440 1692 begin_of_the_skype_highlighting +27 12 440 1692 end_of_the_skype_highlighting
YSooka@fhr.org.za
info@fhr.org.zamailto:webmaster@justice.gov.za

24 ஜூன் 2010

வெலிகந்த தடுப்பு முகாமில் போராளி ஒருவர் படையினரால் கொல்லப்பட்டுள்ளார்!


மட்டக்களப்பு பகுதியில் உள்ள வெலிக்கந்தை புனர்வாழ்வு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்கப் போராளிகளுக்கும் அங்குள்ள படையினருக்கும் இடையே இடம் பெற்ற வாக்கு வாதம் கைகலப்பாக மாறியது இதை அடுத்து முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்கப் போராளி ஒருவரை படையினர் பலமாகத் தாக்கியதில் அவர் இறந்து விட்டர் என்று தெரிய வருகிறது.

இதே வேளை வெலிக்கந்தை தடுப்பு முகாம் மற்றும் வவுனியா தடுப்பு முகாமிலுள்ள முன்னாள் போராளிகள் அவர்களது உறவினர்களுடன் தொலைபேசியில் உரையாடுவதற்கு இன்று முதல் இறுக்கமான தடை படைத்தரப்பால் அமுல் படுத்தப்பட்டுள்ளது. வவுனியா ஓமந்தை தடுப்பு முகாமில் உறவினர்களுடன் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டார் என்பதற்காக முன்னாள் போராளி ஒருவரை படையினர் மரத்துடன் கட்டி வைத்துள்ளனர் என மேலும் தகவல்கள் கசிந்துள்ளன.

கொழும்பு புறக்கோட்டையில் கிரனைட் வெடிப்பு.


கொழும்பு, புறக்கோட்டை போதிராஜ மாவத்தையில் இன்று அதிகாலை இடம்பெற்ற கிரனைட் தாக்குதலில் ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாகப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

23 ஜூன் 2010

ஐ.நா.வின் நிபுணர் குழு வெறும் கண்துடைப்பு நாடகம்!



இலங்கையின் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளமை குறித்து கண்டனம் தெரிவிக்கும் தரப்புகளுக்கு பதில் வழங்கும் பொருட்டே, ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழு உருவாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பான் கீ மூன் தமக்கு இலங்கையின் மனித உரிமைகள் நிலவரங்கள் குறித்த ஆலோசனை வழங்கும் நிபுணர் குழுவை நேற்று அறிவித்தார்.
இந்த நிலையில் ஐக்கிய நாடுகளின் உத்தியோகபூர்வ அங்கீகாரம் பெற்ற செய்தி ஊடகமான இன்னர் சிட்டி பிரஸ், ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர் மார்டின் நெசிர்கியை இது தொடர்பில் வினவியது.
தொடர்ந்து விளக்கமளித்த அவர்,
இந்த சபை இலங்கைக்கு பயணிக்கும் எண்ணத்தையோ யாரையேனும் விசாரணை நடத்தும் எண்ணத்திலோ உருவாக்கப்படவில்லை என தெரிவித்தார்.
இதன் போது இந்த குழு சரத் பொன்சேகாவை யுத்த குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பில் விசாரிக்கவோ, அல்லது தொடர்பு கொள்ளவோ செய்யுமா என கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு அவ்வாறான நோக்கம் எதுவும் இந்த குழுவுக்கு இல்லை என தெரிவித்த பேச்சாளர்,
இலங்கையின் மனித உரிமை நிலவரங்கள் குறித்து கண்டனம் வெளியிடுகின்ற தரப்பினருக்கு பதிலளிக்கும் பொருட்டே இந்த குழு உருவாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளதாக இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது.
அத்துடன் இந்த குழு, முக்கியமாக இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, பாலித்த கோஹன, விஜய் நம்பியார் போன்ற அதிகாரிகளுக்கு விளக்கம் சொல்வதற்காக அமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளதாக இன்னர் சிற்றி பிரஸ் குறிப்பிட்டுள்ளது.

22 ஜூன் 2010

முள்ளிவாய்க்கால் நினைவாக மாணவர் தற்கொலையாம்!ஆனாலும் மாணவர் மத்தியில் சந்தேகம்.


சென்னை கவின் கல்லூரி வளாகத்தில் உள்ள மரம் ஒன்றில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதால் பதற்றம் ஏற்பட்டது. சென்னை எழும்பூர், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அரசுக்கலை மற்றும் நுண்கலை கல்லூரி உள்ளது. இதற்கு கவின் கல்லூரி என்றும் பெயர். இந்த கல்லூரி வளாகத்தில் உள்ள மரம் ஒன்றில் இன்று காலை மாணவர் ஒருவர் தூக்கில் கொண்டிருந்தார். போலீசார் விரைந்து வந்து பிரேதத்தைக் கைப்பற்றினர். அப்போது தூக்கிட்டுக் கொண்ட மாணவர் எழுதிய 10 பக்க கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர். அதில் அவர் எழுதியிருப்பதாவது: உலக இனத்தில் தமிழ் இனம் தலை சிறந்த இனமாகும். உழைப்பதற்காக வாழ்ந்த உயர் தமிழன் அடிமைப்பட்டு கிடப்பதா ? பாலைவனத்தை சோலைவனமாக மாற்றும் மந்திரவாதிகள் தமிழர்கள். முள்ளிவாய்க்கால் சம்பவத்தை உலகம் மறந்தாலும் நாம் மறக்க கூடாது. வீடு தோறும் மரம் வளர்ப்போம். இல்லையென்றால் குடிநீர் விற்பனையாவது போல, காற்றும் வியாபாரமாகி விடும். மரம் எழுப்பும் கொள்கைக்காக என்னையே சமர்ப்பிக்கிறேன். எனக்காக கண்ணீர் சிந்தாதீர்கள். வாழ்த்தி வழியனுப்புங்கள். தயவு செய்து எனது உடல் உறுப்புகளை தானம் கொடுத்துவிடுங்கள். பிறந்த பூமியில் என்னை தவழ விடுங்கள். அசையாத புகைப்படமாக இருப்பதைவிட அசைந்தாடும் மரமாக நான் எழுவேன். நிகழ்காலமே எதிர்காலத்திற்கு நீ நிழல் கொடு. தமிழே உனக்கு தெரியாமல் உன்னை நான் நேசிக்கிறேன் என்று எழுதியுள்ளார் சசிக்குமார். சசிக்குமாரின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறிவரும் கவின்கல்லூரி மாணவர்கள், ‘சசிக்குமார், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் போது, கண்காட்சியில் வைப்பதற்காக 1330 திருக்குறள்களை சுடுமண் சிற்பம் ஒன்றில் உருவாக்க ஒராண்டாகப் பாடுபட்டு வந்து, அதை முடித்துவிட்டார். ஆனால், அதற்கான அனுமதியை கல்லூரி நிர்வாகம் அளிக்காததால் அவர் மனமுடைந்து தற்கொலை செய்திருக்கலாம்’ என்கிறார்கள்.

துயர் நீங்கா ஓராண்டு!


துயர் நீங்கா ஓராண்டு! புளியங்கூடல் மேற்கு ஊர்காவற்றுறையை சேர்ந்த திருவாளர் கந்தையா பசுபதி அவர்களின் முதலாமாண்டு நினைவலைகள். எங்களுக்காய் வரவு:15.03.1926 கலங்கவைத்து விரைவு 30.06.2010. தந்தையே எமக்கு உயிர் தந்த தெய்வமே! நாளும் பொழுதும் உங்கள் நினைவுகள் சுமந்து கலங்குகிறோம் நாமிங்கு! என்னானது ஏதானது?எமைப்பிரிய எப்படியானது?பாசக்கூட்டில் வாழ்ந்த எம் கூட்டை உடைத்து தந்தை பறவை ஏன் தான் பறந்தது? பிள்ளைகள் இங்கு துடிப்பது தெரியுமோ?மனைவியே இங்கு கதறுதல் கேட்குமோ?மருமக்கள் இங்கு தவிப்பது புரியுமோ?பேரர்கள் இங்கு கலங்குதல் விளங்குமோ? யாருக்கும் தீங்கு எண்ணிடா உள்ளம்,ஊருக்கு உதவி செய்வதில் வள்ளல். பணமே வேண்டாமல் கைவைத்தியம் செய்வதில் சமர்த்தர், உறவுகளை விடவும் நட்புக்கள் அதிகம் கொண்ட பண்பாளர், இனி எங்கே காண்போம் தந்தையே உங்களை? இன்னொரு பிறப்பு எமக்கு இருந்தால் உங்களின் பிள்ளைகளாய் பிறக்கவே வேண்டுகிறோம்!என்றுமே நீங்கா துயர் சுமந்து நிற்கிறோம் தந்தையே உங்கள் நினைவலைகளால்.
தகவல்:மனைவி,பிள்ளைகள் மருமக்கள்,பேரப்பிள்ளைகள்


தொடர்புக்கு:ரவி 0201.8462661

புலிகளின் உறுப்பினர்கள் கோத்தபாயவை சந்தித்ததாக றொகான் குணரட்ன தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களான 9 தலைவர்களடங்கிய குழுவினர் இலங்கைக்கு 5 நாள் பயணத்தை மேற்கொண்டு அரச, இராணுவ உயர்மட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக சிங்கப்பூர், நான்யாங் பல்கலைக்கழக அரசியல் வன்முறை, பயங்கரவாத கற்கைகளுக்கான சர்வதேச நிலையத்தின் தலைவர் பேராசிரியர் ரொகான் குணரட்ன கூறியுள்ளார்.
அரச, இராணுவ உயர் அதிகாரிகளுடன் குறிப்பாக பாதுகாப்பு, செயலாளர் கோதாபய ராஜபக்ஷவுடன் அவர்கள் பேச்சு நடத்தியதாக ரொகான் குணரட்ன "நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்" பத்திரிகைக்கு ஞாயிற்றுக்கிழமை கூறியுள்ளார்.
“நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு தலைமை தாங்கும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட விஸ்வநாதன் உருத்திரகுமாரனை தவிர முக்கியமான சகல தலைவர்களும் இலங்கைக்கு வந்ததாக அவர் கூறியுள்ளார்.
புலிகளின் தூதுக்குழு சந்திப்பை நடத்திய போது தானும் கொழும்பில் இருந்ததாக பேராசிரியர் ரொகான் குணரட்ண தெரிவித்திருக்கிறார்.
புலிகளின் தூதுக்குழுவினர் வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணப் பகுதிகளுக்கு சென்றதாகவும் அங்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள புனர்வாழ்வு முயற்சிகளை பார்த்ததாகவும் அங்கு உள்ளூர் தளபதிகள் மற்றும் மாவட்ட அதிகாரிகள் நிலைமைகளை எடுத்துக் கூறியதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொழும்புக்கு திரும்பி வந்த தூதுக்குழுவினர் மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் சில குறைபாடுகள் இருப்பதாக அரசாங்கத்துக்கு கூறியதாகவும் அவை தொடர்பாக கவனத்திற் கொள்வதாக அரசாங்கம் உறுதியளித்திருப்பதாகவும் ரொகான் குணரட்ன மேலும் தெரிவித்திருக்கிறார்.
“வட,கிழக்கு அபிவிருத்தி திட்டம்’ என்று அழைக்கப்படும் சர்வதேச அரசசார்பற்ற தொண்டர் நிறுவனத்தை அமைப்பதற்கு இந்த விஜயத்தின் மூலம் இணக்கம் காணப்பட்டுள்ளது.
வட,கிழக்கின் அபிவிருத்தித் திட்டங்களுக்காக புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்திடமிருந்து நிதியை இந்த அமைப்பு பெற்றுக் கொள்ளும் என்று தெரிவிக்கப்படுகிறது.
புலிகளின் தலைவர்களுடனான இந்தப் பேச்சுவார்த்தைக்கு தடுப்புக்காவலிலிருக்கும் புலிகளின் ஆயுதக் கொள்வனவாளர் கே.பி.அல்லது குமரன் பத்மநாதன் உதவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

21 ஜூன் 2010

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாட்டை வரவேற்றிருக்கும் கே.பி.


சிறீலஙகா அரசுக்கு ஆதரவளித்து அமைதியைக் கட்டியெழுப்ப தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வந்திருப்பதாகவும், இதனை தான் வரவேற்பதாகவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினரான கே.பி அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.
கொழும்பின் ஆங்கில வார ஏடான சண்டே ஒப்சேவருக்கு செவ்வி வழங்கியிருந்த பத்மநாதன், தானும், கனடா, சுவிற்சர்லாந்து, யேர்மனி, பிரான்ஸ், பிரித்தானியா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளின் விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் என்ற பெயரில் இயங்கி வரும் 9 பேருடன் இணைந்து அரசுக்கு ஆதரவாக மீள் கட்டுமானப் பணிகளில் ஈடுபட இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.
இந்த செவ்வியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பற்றிக் கூறிய அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமைதியை நிலைநாட்டுவதற்கு சிறீலங்கா அரசுடன் இணைந்து செயலாற்ற எடுத்திருக்கும் முடிவை தான் வரவேற்பதாகக் கூறியிருக்கின்றார்.
தமிழ் மக்களின் வாக்குகளின் மூலம் நாடாளுமன்றத்திற்கு தெரிவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசுடன் இணைந்து செயலாற்றுவது பற்றியோ, எந்த அடிப்படையில் என்ன விதமாகப் பணியாற்றுகின்றோம் என்பது பற்றியோ, தம்மை தெரிவு செய்த மக்களிற்கு இதுவரை வெளிப்படையாக எதனையும் தெரிவிக்கவில்லை.
பத்மநாதன் கூறியது போன்று அரசுடன் இணைந்து பணியாற்றினால் அது பற்றி மக்களிற்குத் தெளிவுபடுத்தும் கடமையும், கட்டாயமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு இருக்கின்றது. இல்லையெனில் பத்மநாதனின் கருத்தை மறுத்து அறிக்கை வெளியிட வேண்டிய கடப்பாடும் உண்டு.
ஆனால், கடந்த வெள்ளிக்கிழமை கிளிநொச்சியில் நடைபெற்ற யப்பானின் விவசாய உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் யசூசி அகாசி, பசில் ராஜபக்ச, ஈ.பி.டி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் ஆகியோருடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனும் கலந்து கொண்டிருந்த போதிலும், தமிழ் ஊடகங்கள் இதனை இருட்டடிப்புச் செய்திருந்ததை பதிவு சுட்டிக்காட்ட விரும்புகின்றது.
ஆக மொத்தத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது சமகால நடவடிக்கை, எதிர்கால செயற்பாடுகள் பற்றி மக்களிற்கு தெளிவாகத் தெரிவிக்க வேண்டிய கடப்பாடு இருப்பதுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள அச்சம் காரணமாகவே கடந்த பொதுத் தேர்தலில் தமிழர் தாயகத்தில் 70 வீதமான மக்கள் வாக்களிக்கவில்லை என்பது நினைவு கூரத்தக்கதாகும்.

குழந்தைகளை ஒப்படைக்க மறுத்து வளர்ப்பு பெற்றோர் கதறல்!

கடத்திச் செல்லப்பட்டு மீட்கப்பட்ட குழந்தைகளை ஒப்படைக்க மறுத்த வளர்ப்பு பெற்றோர், கண்ணீர் விட்டனர். குழந்தைகளை தங்களுக்கே கொடுத்து விடும்படி உண்மையான பெற்றோரின் காலைப்பிடித்து அவர்கள் கதறி அழுதது உள்ளத்தை நெகிழவைப்பதாக இருந்தது. தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள கிருஷ்ணகிரி குழந்தை கடத்தல் விவகாரத்தில் நாளுக்கு நாள் புதுப்புது தகவல்கள் வெளியாகி வருகிறது. வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து 2 ஆண் குழந்தைகளை கிருஷ்ணகிரியை சேர்ந்த தனலட்சுமியும், அவரது கள்ளக்காதலனான ராமலிங்கமும் சேர்ந்து தூக்கி வந்துள்ளனர். அவர்களில் 3 வயது குழந்தை பாலாஜி, குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்ட தனது தாயாருடன் ஆஸ்பத்திரியில் இருந்தபோது கடத்தப்பட்டான். மற்றொரு குழந்தை, நிசார் என்பவரின் மனைவிக்கு பிரசவம் நடந்து 4 நாளில் கடத்தப்பட்டது. 2 குழந்தைகளையும் அவர்கள் சென்னைக்கு கொண்டு சென்று கிரிஜா மூலம் கைக்குழந்தையை பெங்களூரை சேர்ந்த குளுதியராஜ்-மேகலா தம்பதியினருக்கு ரூ.55 ஆயிரத்திற்கு விற்றனர். 3 வயது பாலாஜியை கிருஷ்ணகிரி பாப்பாரப்பட்டியை சேர்ந்த செல்வி என்பவரிடம் ரூ.3 ஆயிரத்திற்கும் விற்றுள்ளனர். இவர்கள் மூலம் இந்த குழந்தை, கிருஷ்ணகிரியை சேர்ந்த பெரியசாமி-கமலம் தம்பதியினருக்கு கிடைத்தது. பேராம்பட்டு காலனியை சேர்ந்த செல்வத்தின் 3 வயது ஆண் குழந்தையான பாலாஜி கடந்த 11/2 வருடங்களாக குழந்தை இல்லாத பெரியசாமி-கமலம் தம்பதியினர் வளர்த்து வருகின்றனர். நிசாரின் ஆண் குழந்தையை பெங்களூரை சேர்ந்த குளுதியராஜ் வளர்த்து வருகிறார். போலீஸ் காவலின் போது தனலட்சுமி கொடுத்த தகவலின் பேரில் போலீசார் 2 குழந்தைகளையும் மீட்க சென்றனர். போலீசார் சென்றதும் அதிர்ச்சியடைந்த வளர்ப்பு பெற்றோர் குழந்தையை கட்டிப் பிடித்து அழ தொடங்கினார்கள். போலீசார் ஒருவாறாக சமாதானம் செய்து அவர்களை கிருஷ்ணகிரி மகளிர் போலீஸ் நிலையத்திற்கு நேற்று அழைத்து வந்தனர். உடனே உண்மையான பெற்றோர் பாசத்துடன் சென்று குழந்தையை கட்டி அணைத்து முத்தமிட்டனர். ஆனால் குழந்தைகளுக்கு அவர்களை அடையாளம் தெரியாததால் அலறி சத்தம் போட்டபடி வளர்ப்பு பெற்றோரிடம் ஓடினார்கள். இதைப்பார்த்த உண்மையான பெற்றோருக்கு கடும் அதிர்ச்சி ஏற்பட்டது. மீட்கப்பட்ட குழந்தைகளை கோர்ட்டில் ஒப்படைத்து உண்மையான பெற்றோரிடம் ஒப்படைக்க போலீசார் நடவடிக்கை எடுக்க தொடங்கினார்கள். அப்போது வளர்ப்பு பெற்றோர், குழந்தைகளை மிகவும் பாசமாக வளர்த்து வருவதால் எங்களால் அவர்களை பிரிய முடியாது என குழந்தைகளை கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டனர். இதைப் பார்த்த குழந்தைகளின் உண்மையான பெற்றோர்கள், குழந்தைகளை பிரிந்து 2 ஆண்டாக நாங்கள் படும் கஷ்டத்திற்கு இப்போதுதான் விடிவு ஏற்பட்டுள்ளது. எனவே குழந்தையை எங்களால் விட்டுத் தர முடியாது என அவர்களும் கண்ணீர்மல்க தெரிவித்தனர். உடனே வளர்ப்பு பெற்றோர் குழந்தையை கட்டி அணைத்தும், நிஜபெற்றோரின் காலில் விழுந்தும் கதறி அழத் தொடங்கினார். இந்த உருக்கமான காட்சி, காண்போர் நெஞ்சை நெகிழவைப்பதாக இருந்தது. ஆனால் இந்த பாசப்போராட்டம் பற்றி எதுவும் தெரியாத குழந்தைகள் இருவரும் போலீஸ் நிலையத்தில் ஓடி விளையாடிக் கொண்டிருந்ததுதான் பெரும் சோகம்.

19 ஜூன் 2010

நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர்தல் ஜெர்மனி.



நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜேர்மனியின் Nordrhein-Westfalen மாநிலத்தில் (தேர்தல் தொகுதி 3) 20.06.2010 ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெறுகிறது. வாக்களிப்பு காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இடம் பெறும்.
இத் தேர்தல் தொகுதியில் ஏழு வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இவர்களில் நான்கு பிரதிநிதிகள் மக்களால் தெரிவு செய்யப்படுவார்கள். இத் தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்கள் ஒவ்வொருவரும் ஆகக்கூடியது நான்கு வேட்பாளர்களுக்கு தமது வாக்குகளை அளிக்கலாம். ஒரு வாக்காளர் ஒரு வேட்பாளருக்கு ஒரு வாக்கினை மட்டுமே அளிக்க முடியும். இத் தேர்தலில் Nordrhein-Westfalen மாநிலத்தை வாழ்விடமாகக் கொண்டவர்கள் மட்டுமே வாக்களிக்கலாம். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் விபரங்கள் பின்வருமாறு: 1. Herr Gratian James Alston திரு கிறேசியன் ஜேம்ஸ் அல்ஸ்ரன்
2. Dr. Sandrapala Ganesaratnam Ing.PhD Dr. சந்திரபாலா கணேசரட்னம்
3. Herr Mughunthan Indralingam திரு முகுந்தன் இந்திரலிங்கம்
4. Herr Subramaniam Paramananthan திரு சுப்பிரமணியம் பரமானந்தன்
5. Frau Thaniga Subramaniam B.Sc. செல்வி தணிகா சுப்பிரமணியம்
6. Herr Rasiah Thanabalasundaram திரு இராசய்யா தனபாலசுந்தரம்
7. Herr Nadarajah Thiruchelvam திரு நடராஜா திருச்செல்வம்
வாக்காளருக்கான தகுதி ... நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவைக்கான பிரதிநிதிகளினைத் தெரிவுசெய்யும் தேர்தலில் வாக்களிக்க விரும்பும் ஒருவர் குறிப்பிட்ட தேர்தல் நடைபெறும் நாளன்று தனது வயதின் 17வது ஆண்டினைப் பூர்த்தி செய்திருப்பதோடு ஈழத் தமிழர் பண்பாட்டு வாழ்வோடு பூர்வீகம், திருமணம், தத்தெடுத்தல் ஊடாக இணைந்தவர்களாக இருக்க வேண்டும். இத்தோடு தேர்தல் ஆணையத்தினரைத் திருப்திப்படுத்தக்கூடிய வகையில் தனது ஈழத்தமிழ் அடையாளத்தை நிறுவக்கூடியவரும் இதில் உள்ளடங்குவர். இவ் வகையினரின் தகுதி அவரவர் நிலைக்கேற்பத் தீர்மானிக்கப்படும். வாக்காளர் ஜேர்மனியை வாழ்விடமாகக் கொண்டிருக்க வேண்டும். தான் வாழும் தேர்தல் தொகுதியில் மட்டுமே அவர் வாக்களிக்க முடியும். வாக்குச்சாவடியில் தன்னை அடையாளப்படுத்தக்கூடிய ஆவணங்கள் ... - ஜேர்மன் அடையாள அட்டை (Personal Ausweis) - ஜேர்மன் வதிவிட உரிமை அத்தாட்சியைக் கொண்ட இலங்கைக் கடவுச்சீட்டு - ஜேர்மன் வெளிநாட்டவர் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள வேறு ஆவணங்கள் (deutscher Reisepass மற்றும் deutscher Führerschein ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது) வாக்களிப்பு நிலையங்கள் அமைந்துள்ள இடங்கள்...
1. Ringlebs Str. 12, 59821 Arnsberg
2. IBZ, Teutoburger Str. 106, 33607 Bielefeld
3. Wallbaumweg 108, 44894 Bochum
4. Christian-Lassen-Straße 6, 53117 Bonn
5. Pfarrheim St- Josef, Duesberg Str. (Ecke)+ Josef Str. (Ecke), 46325 Borken
6. CAFE – BISTRO, Königswall 18, 44137 Dortmund
7. Flachmarkt 15, 47051 Duisberg (Mülheim, Oberhausen)
8. Roncalli Haus, Bius str-40, 52349 Düren
9. Talstr. 65 , 40217 Düsseldorf
10. Haus Ennepetal, Gasstr 10, 58256 Ennepetal
11. Friedrich Elbert Str. 88, 50374 Erftstadt
12. Omm Str.32, 45143 Essen
13. SERVICE-PUNKT.EU, Hindenburgstr. 17, Citypassage gegenüber Saturn, 51643 Gummersbach
14. Horsthauserstr 171, 44628 Herne
15. Freizeit Zentrum 85 Süd, Kölner Str. 190, 47805 Krefeld (Meerbusch)
16. Danziger str 1, 57223 Kreuztal (Siegen, Olpe)
17. Pauluskirche, Römer str 61, 45772 Marl
18. Stiftplatz 2, 59372 Meschede
19. Josef Schule, Nierenburger Str.31, 49497 Mettingen
20. Luisen Straße 129, 41061 Mönchengladbach
21. Geschäftsstelle Ausländerbeirat, Stadthaus 2 ,Ludgeriplatz 4-6, 48151 Münster (Warendorf) 22. AWO, ADOLF str.76, 41462 Neuss
23. Centro s, Antonio , Ludwigstr. 9, 48429 Rheine
24. Jugendheim, Weinhard-3, 53937 Schleiden
25. Alterschlachthof, Ulrichertor 4, 59494 Soest (Hamm)
26. Blumenstr 41, 42665 Solingen
27. Rektorat str 78, 41748 Viersen
28. St-Cyriakus Pfarrheim, Kirchplatz 6, 47652 Weeze
29. St.Joseph-Gemeinde, Stockumer Str.13, 58453 Witten-Annen
30. Wupperhalle, Hünerfeld Str 63B, 42285 Wuppertal
31. Linden Platz, Inwinkel 2, 52146 Würselen
மேலதிக விபரங்கள் அறிய http://www.tgte-germany.de/

18 ஜூன் 2010

யாழ்,பல்கலைக்கழகத்தில் மாணவிகள் மீது முறைகேடாக நடந்துகொள்ளும் விரிவுரையாளர்களுக்கு எச்சரிக்கை!



யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நால்வருக்கு எதிராக, 'இறுதி எச்சரிக்கை - பல்கலைக்கழக மாணவர் சமூகம்' என்ற பெயரில் துண்டுப்பிரசுரம் ஒன்று ஒட்டப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
பல்கலைக்கழக மாணவிகள் மீது குறிப்பிட்ட சில விரிவுரையாளர்கள் மேற்கொண்டு வரும் பாலியல் துஷ்பிரயோக நடவடிக்கைகளைக் கண்டிக்கும் முகமாகவே இவ் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, பல்கலைக்கழக மாணவிகள் மீது பாலியல் துஷ்பிரயோகங்கள் மேற்கொள்ளப்படுவது தடுக்கப்பட வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் சீனர்களின் பிரசன்னம் இந்தியாவுக்கு ஆபத்து!



இலங்கையின் வட பகுதியில் தொழில்படுகின்ற சீன தொழிலாளர்களின் பிரசன்னமானது இந்தியாவின் பாதுகாப்புக்கு பங்கம் ஏற்படலாம் என அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொது செயலாளர் ஜெயலலிதா சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், இலங்கையின் வட பகுதியில் பணியாற்றுகின்ற சீன தொழிலாளர்கள் சீனாவுக்கான இந்தியா தொடர்பிலான ஒற்றர்களாக செயற்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் வடக்கில் யுத்ததால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில், சீன தொழிலாளர்கள் உட்கட்டுமான பணிகளில் ஈடுபட்டுள்ளமையை அவர் கண்டித்துள்ளார்.
எனவே இது தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். சீனர்கள் இலங்கையில் இந்தியாவுக்கு எதிரான இராஜதந்திர திட்டத்தின் கீழேயே செயற்பட்டு வருகின்றனர்.
அவர்கள் இலங்கையின் வட பகுதியில் தொழிற்பட அனுமதிக்கப்படுகின்றமை, தென்னிந்தியாவுக்கு பாரிய பாதுகாப்பு சிக்கலை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தென்னிந்தியாவுக்கும் வட இலங்கைக்கும் இடையில் 20 கிலோமீற்றர் தூரமே உள்ளது.
எனவே இது தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கம் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

17 ஜூன் 2010

தமிழை வழக்காடு மொழியாக்க அன்றே கோரினேன்.-ராஜேந்தர்.


உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அனுமதிக்கக் கோரி தமிழகமெங்கிலும் போராட்டம் நடந்து வருகிறது. இது குறித்து லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவ்வறிக்கையில், ’’சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாட வலியுறுத்தி வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்துகின்றனர். நீதிமன்ற நடவடிக்கைகள் தமிழில் அமைய சட்டமன்றம் நிறைவேற்றிய தீர்மானம் ஜனாதிபதி ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு கிடப்பிலேயே கிடக்கிறது.
இதை உடனடியாக நிறைவேற்றும் படி அன்றே நான் குரல் கொடுத்தேன். இப்போதுதான் ஆட்சியாளர்களுக்கு ஞானோ தயம் வந்துள்ளது’’என்று தெரிவித்துள்ளார்.

16 ஜூன் 2010

போலியான இரத்தத்தை கண்டு மக்கள் அஞ்சுகிறார்கள்.-மாயா அருள்பிரகாசம்.


இலங்கைத் தமிழ்ப் பெண்ணான மாயா அருள்பிரகாசம், பாப் இசை உலகில் முன்னணிப் பாடகராகத் திகழ்கிறார். இவர் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக பல முறை கூறிய கருத்துக்கள் உலகளாவிய ரீதியில் சர்ச்சைகளை தோற்றுவித்திருந்தது. தற்போது வெளியான அல்பமான 'Born Free' இதேபோல சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.இந்த மாத ஆரம்பத்தில் வெளியான MIA இன் 'Born Free' வீடியோவை சில இணையங்கள் நிராகரித்தமை தெரிந்ததே. அந்த வீடியோவில் வெளிப்படையான வன்முறைகள் இடம்பெற்றுள்ளதாகவும், பாடகி அந்த வீடியோ முழுதும் நெருக்கடி நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்துத் தனது கருத்தை வெளியிட்டுள்ள MIA, அதில் காண்பிக்கப்பட்டது போலியான இரத்தம் மற்றும் ஒரு நடிப்பு. ஆனால் மக்கள் உண்மையான படுகொலை வீடியோக்களைவிட இதற்குக் கோபப்படுகிறார்கள் என தி கார்டியன் பத்திரிக்கைக்குத் தெரிவித்துள்ளார். தமிழ் இளைஞர்களை இராணுவத்தினர் சுட்டுக் கொல்லும் வீடியோவைக் கருத்தில் கொண்டே MIA இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.மேற்படி படுகொலை வீடியோ குறித்து தாம் ஆறு மாதங்களுக்கு முன்னர் ட்விட்டரில் எழுதியும் கூட அதைப் பற்றி ஒருவருமே பேசவில்லை எனத் தெரிவித்துள்ள அவர், எனவேதான் தாமும் ரோமெய்னும் சேர்ந்து ஒரு வீடியோவை உருவாக்கியதாகவும் அவர் மேற்கொண்டு கூறியுள்ளார்.மேலும், இலங்கைப் போர் நிறைவடைந்து சில மாதங்களின் பின்னர், இலங்கைக் கடற்கரையை உலகின் மிகச்சிறந்த உல்லாசப் பயண இடமாக தி நியூ யோர்க் டைம்ஸ் பத்திரிக்கை குறிப்பிட்டிருந்தது. இதற்கு எதிராகவும் MIA குரல்கொடுத்தது தெரிந்ததே. இலங்கைக் கடற்கரையில் 3 லட்சம் மக்கள் குண்டுபோட்டு கொல்லப்பட்டு ஆறு மாதங்களின் பின்னர் அக்கடற்கரையை உலகின் முதற்தர இடமென குறிப்பிட்ட போது... உல்லாசப்பயணத்துறை அரசியலுடன் தொடர்புபடுத்தப்பட வேண்டும்" என அவர் வாதாடுகிறார்.

15 ஜூன் 2010

இலங்கை இரட்டை வேடம் போடுவதாக பிலிப் அல்ஸ்ரன் குற்றச்சாட்டு.


இலங்கை அரசாங்கம் இரட்டை நிலைப்பாட்டைக் கடைப்பிடித்துக் கொண்டிருப்பதாகவும் இது குறித்து சர்வதேச சமூகம் திருப்தி காண முடியாது எனவும் ஐக்கிய நாடுகள் சபையின் சட்டவிரோதப் படுகொலைகளுக்கான விசேட பிரதிநிதி பிலிப் அல்ஸ்டன் தெரிவித்துள்ளார்.தமது நாட்டின் யுத்தக் குற்றங்கள் குறித்து விசாரணைகள் நடத்தப்படக் கூடாது என வலியுறுத்தி வரும் இலங்கை மற்றும் இஸ்ரேலின் யுத்தக் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது என்றும் குறிப்பிட்டார்.இலங்கை ஜனாதிபதி நியமிக்க உத்தேசித்துள்ள விசாரணைக் குழுவின் நம்பகத் தனமை குறித்து சந்தேகம் தெரிவித்த அஸ்ரன் சர்வதேச ரீதியான விசாரணைகளின் மூலமே உண்மைகளைக் கண்டறிய முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

பொது நலவாய நாடுகளின் மாநாட்டிற்கு சரத்தை அனுமதிக்க முடியாது என்கிறது அரசு.


எதிர்வரும் செப்டம்பர் மாதம் கென்யாவில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் சார்பில் கலந்துகொள்ள, ஜெனரல் சரத் பொன்சேகாவை அனுமதிக்க முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்ற அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.நாடாளுமன்றம், இந்த மாநாட்டில் பங்கேற்கும் வகையில் சரத் பொன்சேகாவுக்குப் பரிந்துரை வழங்கியிருந்தது.இதனை ஜனாதிபதியின் சகோதரரும் நாடாளுமன்ற சபாநாயகருமான சாமல் ராஜபக்ஷ அங்கீகரித்திருந்தார்.இந்நிலையில், நாடர்ளுமன்றம் சரத் பொன்சேகாவை அங்கீகரித்திருந்தாலும் நாட்டின் சட்டத்திற்கு அமையவே இந்த விடயத்தில் நடந்து கொள்ள முடியும் என கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.இதனடிப்படையில் தடுப்புக் காவலில் உள்ள சரத் பொன்சேகாவை விடுதலை செய்து, குறித்த மாநாட்டுக்கு அனுப்ப முடியாது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.அரசாங்கத்தின் இந்தத் தீர்மானம், எதிர்வரும் 2013 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டுக்கு பிரச்சினையை ஏற்படுத்தலாம் என நம்பப்படுகிறது.அத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகைக்கும் தடங்கலை ஏற்படுத்தும் என ராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர்.

சல்மான் கானுடன் சிறீலங்கா செல்கிறார் அசின்,தமிழ் திரையுலகம் கடும் கோபம்!


ஈழத்தமிழர்களை ஈவு இறக்கமின்றி கொன்றுகுவித்த இலங்கை மண்ணில் நடைபெற்ற திரைப்பட விழாவில் தமிழுணர்வாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி இந்திய நட்சத்திரங்கள் கலந்துகொள்ளவில்லை.
சல்மான்கான், விவேக் ஓபராய், பிபாஷா பாஷூ போன்ற சில நட்சத்திரங்கள் மட்டும் கலந்துகொண்டனர். இதனால் இலங்கை விழாவில் கலந்துகொண்ட இவர்களின் படங்களுக்கு தமிழகம், கேரளா, கர்நாடகம், ஆந்திரா,புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சல்மான்கான் இலங்கையில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டதோடு அல்லாமல் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பையும் அங்கே நடத்துகிறார்.
இலங்கை அரசுடன் மிக மிக நெருங்கும் அவர் மீது தமிழுணர்வாளர்கள் ஆத்திரத்தில் இருக்கிறார்கள். இந்நிலையில் சல்மான்கானுக்கு ஜோடியாக அப்படத்தில் நடிக்கிறார் அசின். இவர் படப்பிடிப்பிற்காக இலங்கை செல்லவிருக்கிறார்.
விஷயமறிந்த தென்னிந்திய திரைப்படக் கூட்டமைப்பு அசின் மீது கடும் கோபத்தில் உள்ளது. தமிழ்ப் படங்கள் மூலம் உயர்ந்த நடிகை அசின், தென்னிந்திய திரைப்பட கூட்டமைப்பின் முடிவை மீறி இலங்கை செல்வதா என்று கடும் கோபத்தில் உள்ளனர் அமைப்பினர்.
இதனால் நடிகர் விஜய் கலக்கத்தில் இருக்கிறார்.
விஜய்-அசின் நடிப்பில் காவல்காரன் படம் தயாராகிக்கொண்டிருக்கிறது. அசின் இலங்கை செல்வதால் தனது காவல்காரனுக்கு சிக்கல் ஏற்படுமோ என்று கலக்கமுற்ற அவர் அசினை இலங்கைக்கு செல்ல வேண்டாம் என்றும் கேட்டுள்ளாராம்.

14 ஜூன் 2010

எயார்டெல் நிறுவனத்தின் கைத்தொலைபேசி அட்டைகளை திருப்பி அனுப்பும் விழா!


ஈழத்தமிழர்களை கொன்று குவித்த கொலைக்காரன் ராஜபக்சேவுடன் வணிக ஒப்பந்தம் செய்துள்ளதால் ஏர்டெல் நிறுவனத்தை தமிழுணர்வாளர்கள் புறக்கணித்து வருகின்றனர்.
புதுக்கோட்டை ஈழ உணர்வாளர்கள் 500 பேர் ஏர்டெல் சிம்கார்டை திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளனர். மேலும், சிம்கார்டு தருவதற்காக பெறப்பட்ட ஆவனங்களையும் திரும்ப தந்துவிடவேண்டும் என்று வலியுறுத்தவும் முடிவு செய்துள்ளனர்.
ஏர்டெல் சிம்கார்டை திருப்பி அனுப்புவதை ஒரு விழாவாக எடுக்க முடிவெடுத்துள்ளனர். அதன்படி இந்த விழா இவ்வார இறுதியில் நடைபெறுகிறது.
ஈழத்தில் தமிழினத்தைப் படுகொலை செய்த சிறிலங்க அரசுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு அங்கு செல்பேசி சேவையை நடத்திவரும் ஏர்டெல் நிறுவனத்தின் சேவையை தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று கோரும் பிரகடனத்தை தமிழர் தேசிய இயக்கத் தலைவர் திரு. பழ.நெடுமாறன் வெளியிட்டார்.
நாம் தமிழர் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ‘’பிக்கி வர்த்தக அமைப்பின் தலைவராக உள்ளவர் ராஜன் பார்த்தி மிட்டல்.
இவருடைய நிறுவனம்தான் ஏர்டெல். இந்த ஏர்டெல் நிறுவனம் தமிழர்களைக் கொன்று குவித்த சிங்கள இலங்கை அரசுடன் கைகோர்த்து தனது வணிக நலன்களை மேம்படுத்திக்கொண்டு வருகிறது.
ஏர்டெல் நிறுவனத்துடன் இலங்கை அரசு கைகோர்த்து தனது வணிக நலன்களை மேம்படுத்திக்கொண்டு வருகிறது.
2008ஆம் ஆண்டு ஜனவரியில் இலங்கையின் ஒரு பகுதியில் – கொழும்பிலிருந்து புத்தளம் வரை – செல்பேசி சேவையை நடத்த அனுமதி பெற்ற ஏர்டெல், தற்போது 12இலட்சம் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது.
இந்தியாவில் முதன்மையான செல் பேசி நிறுவனங்களில் ஒன்றாக இயங்கிவரும் ஏர்டெல்லிற்கு 13 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். இவர்களில்1.25 கோடி வாடிக்கையாளர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர்.
தமிழனைக் கொல்லும் அரசுடன் உறவு வைத்துக் கொண்டு, தமிழனோடு வணிகமும் செய்யும் மனிதாபிமானமற்ற ஏர்டெல் நிறுவனம், ஈழத் தமிழினத்தை அழித்த இலங்கையின் இனப் படுகொலைப் போரில் அந்நாட்டிற்கு உதவியதாகவும் குற்றச்சாட்டும் உள்ளது.
அந்த உதவிக்கு கைமாறாகத்தான் அங்கு செல்பேசி சேவை நடத்த அனுமதி பெற்றதென்றும் கூறுகின்றனர். டெல்லி வரும் இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் ஏர்டெல் செல்போன் நிறுவனம் வர்த்தக ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட திட்டமிட்டுள்ளதாகத்தெரிகின்றது.
ஆக, ஒரு நிறுவனத்திற்கு இருக்க வேண்டிய மனிதாபிமான பார்வை சற்றும் இல்லாமல், வெறும் இலாப நோக்கை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவது மட்டுமின்றி, தமிழின எதிர்ப்பில் ஆழமாக வேரூன்றிய நிறுவனமாக ஏர்டெல் செயல்பட்டு வருகிறது. எனவே ஏர்டெல் நிறுவனத்தை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்’’ என்று அறிவித்திருந்தார்.
இதையடுத்து தமிழுணர்வாளர்கள் ஏர்டெல் நிறுவனத்தை புறக்கணித்து வருகின்றனர்.

பேரினவாதிகளை எதிர்ப்பதே தவிர அடுத்தவர் உயிரை எடுப்பதல்ல பிரபாகரனின் தம்பிகளின் மரபு!-செந்தமிழன் சீமான்.




விழுப்புரம் அருகே சித்தணியில் மர்ம நபர்கள் சிலர் ரயில் தண்டவாளத்தை வெடிவைத்துத் தகர்த்ததாகவும் விழிப்புணர்வுடன் துரித கதியில் ரயில்வே ஊழியர்கள் செயல்பட்டதால் பெரும் அசம்பாதிவிதம் நடைபெறுவது தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், சம்பவ இடத்தில் ராஜபட்சேவின் வருகைக்கு எதிரான துண்டுப்பிரசுரம் ஒன்று கிடந்ததாகவும் அப்பிரசுரத்தில் பிரபாகரனின் தம்பிகள் என்று எழுதப்பட்டிருந்ததாகவும். ஆகவே பிரபாகரனின் ஆதரவாளர்கள் அல்லது ஈழ விடுதலை ஆதரவாளர்கள் இந்த தண்டவாளத் தகர்ப்பில் ஈடுபட்டிருக்கலாம் என்ற நோக்கில் விசாரணை நடந்து வருவதாகவும் காவல்துறையினர் கூறியதாக நாளிதழ்களில் செய்திகள் வருகின்றன. ஆனால் இந்த தண்டவாளத் தகர்ப்பு தொடர்பாக முன்னுக்குப் பின் முரணாக பல்வேறு தகவல்கள் வெளிவருகின்றன.இதனை தெளிவு படுத்த வேண்டியது அரசின் கடமை.
முதலாவதாக ரயில் தடம் புரள்வதையும், மோதலையும், நூற்றுக் கணக்கான மக்கள் அழிவையும் எதிர்பார்த்து குண்டு வெடிப்பு மேற்கொள்ளப்பட்ட நிலையில் ஒரு சிறிய காகிதத்தில் எழுதப்பட்ட சில வரிகள் தாக்குப் பிடிக்க முடியுமா என்ற கேள்வியெல்லாம் தொக்கு நிற்கிறது. அப்படித்தான் உரிமை கோர வேண்டுமானால், சிறிய காற்றுக்குக் கூடத் தாக்குப்பிடிக்க முடியாத கையால் எழுதப்பட்ட காகிதத் துண்டு தான் அவர்களுக்கு கிடைத்ததா? மின்னியல் யுகத்தில் இவையெல்லாம் சோடிக்கப்பட்ட சிறுபிள்ளத் தனமானவையாகவே தோன்றுகின்றன.இப்படி இருக்கையில் சம்பவ இடத்தில் கிடந்த துண்டுப்பிரசுரத்தின் அடிப்படையில் விசாரணையைக் கொண்டு செல்வதாக போலீசார் கூறும் போது விசாரணை நேர்மையாக நடைபெறுமா? என்கிற அச்சம் எழுகிறது.
அதே போல மாநிலக் காவல்துறைத் தலைவர் லத்திகா சரண் முழுமையான விசாரணை நடைபெறும் முன்பே சம்பவம் நடைபெற்ற ஒரு சில மணீ நேரத்தில் இந்தச் சம்பவத்துக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் தொடர்பு இல்லை என்று அவசர அவசரமாக அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன என்பது தெரியவில்லை. புலனாய்வுத் துறை ஐ.ஜி.யான ஜாபர் சேட், இது விடுதலைப்புலி ஆதரவாளர்களால் நடத்தப்பட்ட செயல்தான் என்று விசாரணைக்கு முன்பே அறிக்கை கொடுத்தது ஏன் என்பதும் புரியவில்லை.
சம்பவம் ஏதிலி இடத்தில் கிடந்ததாக இவர்களால் சொல்லப்படும் துண்டுக்காகிதத்தை வைத்து இவர்களாகவே முடிவைச் சொல்வது எவ்வாறு சரியாகும்? விழுப்புரம் அருகே ரயில் தண்டவாளம் தகர்ப்பு விஷயத்தில் காவல்துறையினர், முழுமையான விசாரணை செய்து, குற்றவாளிகளைப் பற்றிய தகவல்கள் பெறுவதற்கு முன்பே சம்பவம் நடந்த ஒருசில மணி நேரங்களில் அவசரப்பட்டு கருத்துத் தெரிவிக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது என்பது புரியவில்லை.
அதே போல முந்தைய சேலம் வண்டியின் டிரைவர் பயங்கர வெடிச் சத்தம்கேட்டவுடன் நிலைய அதிகாரி ருத்ரபாண்டிக்கு தெரியப்படுத்தியதாகவும் அவர் பேரணிக்கு முந்தைய ரயில் நிலையமான முண்டியம்பாக்கம் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து உஷார்படுத்தினார் என்றும் அதன் பின்பு திருச்சி வண்டியின் டிரைவர் 10 கிலோ மீட்டர் வேகத்தில் ரயிலை இயக்கியதாகவும் கூறப்பட்டுள்ளது.இது நம்ப முடியவில்லை.ஏனென்றால் வெடிச்சத்தம் கேட்டவுடன் ரயிலை நிறுத்துவார்களே தவிர இயக்க மாட்டார்கள்.இது போன்று பல சந்தேகங்கள் எழுகின்றன.
சித்தணி தண்டவாளத் தகர்ப்பில் உண்மை நிலையை அரசு விளக்க வேண்டும். அதை விட்டு விட்டு பேரினவாத இலங்கை அரசிற்கு எதிராக போராடுகிறவர்களை அச்சுறுத்தும் நோக்கோடு முன்கூட்டியே திட்டமிட்டு விசாரணையை முன்னெடுப்பது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் விஷயமாக உள்ளது. போர் நிறுத்தம் கேட்டுப் போராடிய போது தமிழர்கள் தங்களைத் தாங்கள்தான் தீயிட்டுக் கொளுத்திக் கொண்டார்களே தவிர பொது மக்களுக்கு இடைஞ்சல் செய்ததில்லை. தவிறவும் பிரபாகரனின் தம்பிகள் யார் என்பதையும் இங்கே அடக்குமுறைச் சக்திகளுக்குச் சுட்டுக் காட்ட விரும்புகிறேன்.ஈழத் தமிழ் மக்கள் மீதான வன்னி யுத்தத்தை பேரினவாத இலங்கை அரசு கட்டவிழ்த்து விட்ட போது தமிழகத்தில் போர் நிறுத்தம் கேட்டு நாமெல்லாம் போராடினோம். தன்மானத் தமிழனும் வீரத்தியாகியுமான முத்துக்குமார் உள்ளிட்ட 19 வீர வேங்கைகள் தங்களின் இன்னுயிரை ஈந்தனர். பிரபாகரனின் உண்மையான தம்பியான முத்துக்குமார் நமக்கெல்லாம் விட்டுச் சென்ற பாடம் அதுதான். தன்னுயிரைக் கொடுத்து, தன்னை வதைத்து, தன்னை எரித்து பேரினவாதிகளை எதிர்ப்பதுதான் பிரபாகரனின் தம்பிகளின் போராட்ட மரபே தவிற அடுத்தவர் உயிர்களைப் பறிப்பதல்ல. பேரெழுச்சியோடு முத்துக்குமாரின் ஊர்வலத்தில் திரண்டு கண்ணீரோடு முத்துக்குமாரை வழியனுப்பிய தாய்மார்களும் பொதுமக்களும் தங்களுக்காக, தங்களின் இனத்துக்காக தன்னுயிர் ஈந்தவன் முத்துக்குமார் என்பதால் அவனை ஒரு மகனாக நினைத்து தமிழ்தாய் வணங்கி நிற்கிறாள். அப்படி தமிழ் தாய்மார்களின் வணக்கத்திற்குரியார்கள்தான் பிரபாகரனின் தம்பிகள் என்பதை நாம் தன்னலமற்ற தியாகத்தால் உலகுக்கிற்கு உணர்த்தியிருக்கிறோம் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.
இதை எல்லாம் விட மிகச் சிறந்த வரலாற்று முன்னுதாரணமாக எம்மினத் தலைவர் அண்ணன் பிரபாகரனும் சான்றாகி நிற்கிறார். எதிரிக்கும் கூட கருணை காட்டு என்கிற விடுதலைப் போர் மரபுத் தத்துவத்தில் நம்பிக்கையுள்ள ஈழ விடுதலைப் போராளிகளே அதற்குச் சான்று. அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலையத்திற்குள் அப்பாவி தமிழ் மக்களை அழைத்து வந்து லட்சம் லட்சமாக கொன்றொழித்தது பேரினவாத இலங்கை அரசு. தம் கண்ணெதிரே எந்த மக்களின் பாதுகாப்பிற்காக ஆயுதமேந்தினாரோ அந்த மக்களே கொன்றொழிக்கப்பட்ட போது கூட தங்களிடம் இருந்த கனரக ஆயுதங்களாலோ, நவீன விமானங்களாலோ புலிகள் சிங்களர்களான பொது மக்களைத் தாக்கியதில்லை. பேரிவனவாத இலங்கை அரசின் பொருளாதார நலன்களையும், இராணுவக் கட்டமைப்பையும் சிதைப்பதாகத்தான் புலிகளின் தாக்குதல் இருந்தது. ஏழு விமானத் தாக்குதல் நடத்தப்பட்டும் கூட அதில் ஒரு சிங்கள பொதுமகனாவது கொல்லப்பட்டிருப்பனா? என்பதை நான் இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
போரை முன்னெடுத்த இலங்கை அரசிற்கும், போருக்கு துணை போன காங்கிரஸ் அரசிற்கும் எதிராக ஜனநாயக ரீதியாக தமிழ் மக்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்டத் துவங்கியதும் பேரினவாத யுத்தக் குற்றவாளிக்கு டில்லியில் சிகப்புக் கம்பல வரவேற்போடு, விருந்து கொடுத்து கௌரவித்ததையும் நினைத்து தமிழ் மக்கள் மனக்கொந்தளிப்புக்குளாகியுள்ளனர். தமிழகமெங்கிலும் பல்லாயிரம் பேர் ராஜபட்சேவின் வருகையைக் கண்டித்து போராடி கைதாகினர். தமிழ் மக்களின் இந்த மனக்கொதிப்புகளை அடக்கியும் ஈழ மக்களுக்கு ஆதரவான தமிழக மக்களின் எழுச்சியையும் அடக்கி விடும் அற்ப நோக்கத்தோடு இந்த நாடகம் அரங்கேற்றப்படுகிறதா என்று தெரிய வில்லை.
இவ்வாறு சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு இணைந்த சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தீர்வுத் திட்டம் அவசியம்.-விக்கிரமபாகு கருணாரட்ன.



இணைக்கப்பட்ட வடக்கு, கிழக்கில் சுய நிர்ணய உரிமையுடன் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்கி தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்க அரசாங்கம் முன்வருமாயின் அதற்கு ஆதரவளிக்க தயார். என்று இடதுசாரி விடுதலை முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்தார்.
ஆனால் தமிழர்களின் பூர்வீகத்தை உள்நாட்டு அரசாங்கம் இனவாத அரசியல் கட்சிகளும் ஏற்றுக் கொள்ளுமா என்ற சந்தேகம் உருவாகியுள்ளது.
இலங்கை தேசியப் பிரச்சினைக்கான தீர்வில் இந்தியா சுயநலமாக செயற்படக் கூடாது.
அதே போன்று இணைக்கப்படாத வடக்கு கிழக்கிற்கு வழங்கப்படும் தீர்வுகள் பயனற்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையின் தேசியப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தெளிவுபடுத்துகையிலேயே கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன மேற்கண்டவாறு கூறினார்.
இவர் தொடர்ந்தும் கூறுகையில்,
இலங்கை வாழ் தமிழர்களின் பூர்வீகமாக வடக்கு, கிழக்கு பிரதேசங்களை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும். இதனடிப்படையில் இப் பிரதேசங்களுக்கு சுயநிர்ணய உரிமைகளுடன் கூடிய அதிகாரங்களை சட்டபூர்வமாக வழங்கப்படல் வேண்டும்.
வடக்கு, கிழக்கை மீண்டும் இணைக்காது அரசாங்கம் தீர்வுத் திட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்குமாயின் அதற்கு தமிழ் அரசியல் தலைமைத்துவமோ சர்வதேசமோ இடமளிக்க கூடாது.
13ஆவது திருத்தச் சட்டத்தின் அடிப்படையிலான மாகாண சபை முறைமை தற்போதும் நடைறையில் உள்ளது. ஆனால் மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்கள் வழங்கப்பட்டமையினாலேயே அம்முறை பயனற்றுப் போயுள்ளது.
இலங்கையின் தேசியப் பிரச்சினையில் உள்நாட்டு அரசாங்கம் நம்பகத் தன்மையை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

13 ஜூன் 2010

புலம்பெயர் தமிழர்களால் தமிழீழத்தை அமைக்க முடியாதென்கிறார் டக்ளஸ் தேவானந்தா.


புலம்பெயர் தமிழர்களின் ஈழக் கனவினால் இலங்கை தமிழர்களே பாதிப்புக்குள்ளாகின்றனர் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். தமிழீழம் ஒன்றை அமைப்பதற்காக பிரபாகரன் கடுமையாக முயன்று இறுதியில் தோல்வி கண்டார். அவரால் முடியாததை புலம் பெயர் தமிழர்களால் எவ்வாறு செய்ய முடியும் எனவும் புலம்பெயர் தமிழர்களின் இவ்வாறன செயற்பாடுகளால் இலங்கையில் உள்ள தமிழ் மக்களே பாதிக்கப்படுகிறார்கள் என டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.நேற்றைய தினம் ஊடகவியலாளர்களிடம் பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தற்பொழுதோ அல்லது எதிர்காலத்திலோ இலங்கையில் தமிழீழத்தை அமைக்க முடியாது என்ற உண்மையைப் புரிந்து கொண்டு புலம் பெயர் தமிழர்கள் செயற்பட வேண்டும் எனவும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்குவது குறித்து புலம்பெயர் மக்கள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுள்ளார்.

தீர்ப்பு சொல்வதற்கு கோத்தபாய நீதி அரசரோ சட்டத்தினைக்கள அதிகாரியோ அல்ல.-சரத் பொன்சேகா.



கோத்தபாய இடி அமீனைப்போல செயற்படுகின்றார். உலகத்தில் இப்படியான ஓர் முட்டாள்தனமான பாதுகாப்பு செயலரை நான் கண்டதில்லை. இவ்வாறு பிபிசியில் கோத்தபாயவின் கூற்றுக்கு பதில் கருத்து கூறும் போது பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கோத்தபாய நாட்டின் உயர் நீதியரசரோ அல்லது சட்ட திணைக்கள ஆணையாளரோ அல்லர்.
கோத்தபாயவினால் யாருக்கு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறமுடியாது.
அவரது முட்டாளதனமான பேச்சிற்கு நான் நேரத்தை செலவழிப்பதே வீண். சர்வதேச விசாரணைகள் வந்தால் நான் சாட்சியம் அளிப்பேன்.
சில அதிகாரிகளின் கட்டளைகள் தவறானவை.
அவையே படையினருக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் பொன்சேகா மேலும்கூறியுள்ளார்.

மத்திய,மாநில அரசுகள் அவமானப்படுத்தி அனுப்பியதை பார்வதி அம்மா மறந்து விடவில்லை!


தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் தாயார் பார்வதி அம்மாள் சிகிச்சை பெறுவதற்காக கடந்த ஏப்ரல்-16ம் தேதி மலேசியாவில் இருந்து சென்னை வந்தார்.
ஆனால் அவர் விமான நிலையத்தை விட்டு இறங்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பிவிட்டது இந்திய அரசு.இதையடுத்து பார்வதி அம்மாள் சிகிச்சை பெற அனுமதிப்பது குறித்து பரிசீலிக்குமாறு மத்திய அரசுக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதினார்.
முதல்வரின் இந்த கடிதத்திற்கு பதில் தெரிவித்தது டெல்லி. பார்வதி அம்மாள் தமிழகம் வந்து சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்.
ஆனால், அரசு மருத்துவமனையில் மட்டுமே அவர் சிகிச்சைபெற வேண்டும். அவர் கட்சியினர், இயக்கத்தினருடன் தொடர்பு கொள்ளக்கூடாது. உறவினர்கள் வீட்டிற்கும் செல்லக்கூடாது என்று நிபந்தனை விதித்து அனுமதி கொடுத்தது.
இத்தனை நிபந்தனைகளுக்கு மத்தியில் இந்தியா வந்து என்ன செய்வது என்று யோசித்த பார்வதி அம்மாள் இந்த அழைப்பை நிராகரித்துவிட்டார்.
இப்போது சென்னையில் உள்ள மகள் வீட்டில் தங்கி சிகிச்சை பெறலாம் என்று மத்திய அரசு நிபந்தனையை தளர்த்தினாலும் அதை பரிசீலிக்கும் மன நிலையில் பார்வதி அம்மாள் இல்லை என்று அவரது உறவினரும், முன்னாள் எம்.பியுமான சிவாஜிலிஙகம் கூறியுள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக அதைப் பரிசீலிக்கக் கூட பார்வதி அம்மாள் தயாராக இல்லை என்றும் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சிவாஜிலிங்கம், ’’மலேசியாவிலிருந்து படுத்த படுக்கையாக நீண்ட தூரம் பயணித்து, சென்னைக்கு வந்து, அங்கு விமானத்திலிருந்து இறங்கக் கூட அனுமதிக்கப்படாமல் இந்திய அரசு திருப்பி அனுப்பிய அவமானத்தை இன்னும் பார்வதி அம்மாள் மறக்கவில்லை.
எனவே தனது மகள் வீட்டில் தங்கி சிகிச்சை பெறலாம் என்று கூறியுள்ள இந்திய அரசின் தற்போதையை அறிவிப்பை ஏற்கவோ, பரிசீலிக்கவோ அவர் தயாராக இல்லை. அந்த மன நிலை அவரிடம் போய் விட்டது.
நடமாட முடியாத, படுத்த படுக்கையாக உள்ள ஒரு வயதான பெண்ணுக்கு இந்தியாவில் மரியாதை கிடைக்கும், சிகிச்சைக்கு வழி கிடைக்கும் என்ற பார்வதி அம்மாளின் நம்பிக்கை அன்றே தகர்ந்து போய் விட்டது. அவரது மனதை நாடு கடத்தல் சம்பவம் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது, புண்படுத்தி விட்டது.
அவர் முழுமையாக குணமாகவில்லை. ஆனால் நபர்களை அவர் அடையாளம் கண்டு கொள்கிறார். அவருடைய கனடா மகள் தொடர்ந்து தொலைபேசி மூலம் தனது தாயாரின் உடல் நிலை குறித்து கேட்டறிந்து வருகிறார்’’ என்று தெரிவித்துள்ளார்.

12 ஜூன் 2010

தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது.-ஜெயலலிதா.


தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து வருகிறது என்றும், இதற்கு விழுப்புரம் அருகே ரயில் தண்டவாளம் தகர்க்கப்பட்ட சம்பவமே உதாரணமாக உள்ளது என்றும் அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த நான்கு ஆண்டு காலமாக தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீரழிந்து வருகிறது என்றும்; அன்றாடம் கொலை, கொள்ளை ஆகியவை அதிகரித்துக் கொண்டே வருகின்றன என்றும்; தீவிரவாதம், பயங்கரவாதம் ஆகியவை அதிகரித்துக் கொண்டே வருகின்றன என்றும் நான் பொதுக்கூட்டங்களிலும், எனது அறிக்கைகளின் வாயிலாகவும் சுட்டிக்காட்டி வந்திருக்கிறேன்.
இதற்கேற்றாற் போல், இன்று அதிகாலை விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே ரயில் தண்டவாளத்தை மர்ம நபர்கள் குண்டு வைத்து தகர்த்துள்ளனர்.
இந்த பயங்கர குண்டு வெடிப்பால் நான்கு அடி தூரத்திற்கு தண்டவாளம் தகர்க்கப்பட்டு, தண்டவாளத்தின் நடுவே 5 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது. மலைக்கோட்டை ரயில் இந்தப் பகுதி வழியாக வருவதற்கு சில நிமிடங்கள் முன்பு இந்த குண்டு வெடித்ததன் காரணமாக, உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு மிகப் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டிருக்கிறது. இதனால் பெரும் உயிரிழப்பு தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது.
இந்த சதி வேலை காரணமாக, ஆயிரக்கணக்கான பயணிகள் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக பெருத்த அவதிக்கு உள்ளாக்கப்பட்டனர். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீரழிந்து கொண்டிருக்கிறது என்பதற்கும், தீவிரவாதிகளின் புகலிடமாக தமிழகம் மாறி வருகிறது என்பதற்கும் இதைவிட ஒரு சிறந்த எடுத்துக்காட்டு தேவையில்லை.
கடந்த நான்கு ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் காவலர்களின் எண்ணிக்கை குறைந்து தீவிரவாதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
எனது ஆட்சிக் காலத்தில் இங்கிலாந்து நாட்டிலுள்ள ஸ்காட்லாண்டு யார்டுக்கு நிகராக விளங்கிய தமிழகக் காவல்துறை, மற்றவர்கள் பார்த்து கை கொட்டி சிரிக்கும் அளவுக்கு இன்று கேலித் துறையாக செயலிழந்து காணப்படுகிறது.
போலி மருந்து, காலாவதி மருந்து, போலி உணவுப் பொருட்கள், போலி மருத்துவர்கள், கடத்தல், பதுக்கல், தீவிரவாதம், பயங்கரவாதம் இவை தான் தி.மு.க. ஆட்சியின் நான்கு ஆண்டு கால சாதனைகள் என்று ஜெயலலிதா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தமிழீழ தேசிய சின்னம் தபால் முத்திரையாக அமெரிக்காவில் வெளியீடு.



சிறீலங்காவில் நடைபெற்ற போரில் தமிழ் மக்கள் சந்தித்த இழப்புக்கள் துன்பங்களை நினைவுபடுத்தும் நோக்கத்துடன் ஓபாமாவுக்கான தமிழர் அமைப்பு அமெரிக்காவில் தபால் முத்திரையை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
அமெரிக்காவினுள் முதல்தர வகுப்பில் தபால்களை அனுப்பும் 0.44 டொலர் பெறுமதியான முத்திரையை ஓபாமாவுக்கான தமிழர் அமைப்பு வெளியிட்டுள்ளது.
அமெரிக்க குடிமக்கள் தபால் முத்திரைகளை தாமே வடிவமைத்து வெளியிட முடியும் என அமெரிக்க தபால் சேவைகள் பிரிவு அண்மையில் புதிய அறிவிப்பை வெளியிட்டிருந்தது.
அமெரிக்காவின் இந்த அறிவிப்பை சாதகமாக பயன்படுத்தி சிறீலங்காவில் துன்பப்படும் தமிழ் மக்களின் நினைவாக இந்த தபால் முத்திரை வெளியிடப்படுவதாக ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் தமிழ் மக்களின் போராட்டம் தொடர்பில் அமெரிக்க குடிமக்களின் கவனத்தை பெறமுடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

11 ஜூன் 2010

ஈழத்தமிழ் இனத்தை இருளில் நசுக்க திட்டம் போட்டுள்ள கொடியவன் ராஜபக்ஷ.-வைக்கோ ஆவேசம்.



''த‌மி‌ழ் இன‌த்தையே அ‌‌ழி‌க்க மு‌ற்படு‌ம் ‌சி‌ங்கள அரசுட‌ன், ‌இ‌ந்‌திய அரசு செ‌ய்து கொ‌ண்டு இரு‌ப்பது ஒ‌ப்ப‌ந்த‌ங்க‌ள் அ‌ல்ல, த‌மி‌ழ் ஈழ‌த்தை எ‌ரி‌க்க மு‌ற்படு‌ம் ‌தீ‌ப்ப‌ந்த‌ங்க‌ள்'' எ‌ன்று இந்திய மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோ கூ‌றியு‌ள்ளா‌ர்.
இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல்,
''ஈழ‌த்த‌‌மி‌ழ் இன‌த்தை ‌நிர‌ந்தர அடிமை இரு‌ளி‌ல் நசு‌க்க‌‌த் ‌தி‌ட்ட‌மி‌ட்டு உ‌ள்ள கொடியவ‌ன் ராஜப‌‌க்ச, ‌டெ‌ல்ல‌ி‌யி‌ல் குரூர‌ச் ‌சி‌ரி‌ப்புட‌ன், இ‌ந்‌திய‌த் தலைநக‌ர் டெ‌‌ல்‌லி‌யி‌ல் பவ‌னி வரு‌கிறா‌ன். குடியரசு‌த் தலைவ‌ர் மா‌‌ளிகை‌யி‌ல் அவனு‌க்கு‌க் கோலாகல வரவே‌ற்பு, அ‌ணிவகு‌ப்பு ம‌ரியாதை! இ‌ந்‌திய‌ப் ‌பிரதமரு‌ம், குடியரசு‌த் தலைவரு‌ம், இருகர‌ம் கூ‌ப்‌பி வரவே‌ற்று‌ப் பாரா‌ட்டு.
இல‌ட்ச‌‌க்கண‌க்கான த‌மி‌ழ் ம‌க்களை, ஈவு இர‌க்க‌ம் இ‌ன்‌றி கொ‌ன்று குவ‌ி‌த்து கொடியவ‌ன் எ‌க்காள‌மி‌ட்டவாறு பா‌ர்வையை ‌வீசுவது‌ம், ‌தி‌மிராக நட‌ப்பது‌ம், ஜ‌ன்ப‌த் தெரு 10ஆ‌ம் எ‌ண் ‌வீ‌ட்டி‌ல், சோ‌னியா கா‌ந்‌தியுட‌ன், கெ‌ந்த‌லி‌ப்புட‌ன் உரையாடுவது‌ம், ஒரு உ‌ண்மையை ந‌ன்றாக உண‌ர்‌த்து‌கிறது.
விடுதலை‌ப்பு‌லிகளை எ‌தி‌ர்‌க்கு‌ம் யு‌த்த‌ம் எ‌ன்று சொ‌ல்ல‌ி‌க்கொ‌ண்டே இல‌‌ட்ச‌‌க்கண‌க்கான த‌மிழ‌‌ர்களையு‌ம் அ‌ழி‌த்த போரை, இய‌க்‌கியது‌ம், நட‌த்த‌ியது‌ம் இ‌ந்‌திய அரசு தா‌ன் எ‌ன்பதா‌ல், அதை‌க் கொ‌ண்டாடுவத‌ற்காகவே இ‌ந்‌தியா வ‌ந்து உ‌ள்ளா‌ன். ஈழ‌த்த‌மிழ‌ர்களை‌க் கா‌லி‌ல் போ‌ட்டு நசு‌க்கவு‌ம், உ‌ரிமை‌ப் போரா‌ட்ட‌த்தை‌த் தடு‌க்கவு‌ம், ராஜப‌க்ச கே‌ட்டதையெ‌ல்லா‌ம் அ‌ள்‌ளி‌த் த‌ந்து ‌வி‌ட்டது இ‌ந்‌திய அரசு.
ஏழு ஒ‌ப்ப‌ந்த‌ங்க‌ள் கையெழு‌த்தானதா‌ம். ‌சி‌ங்கள அரசுட‌ன், டெ‌ல்‌லி போ‌ட்ட ஒ‌ப்ப‌ந்த‌ங்க‌ள். டெ‌ல்‌லி ராஜக‌ட்ட‌த்த‌ி‌ல் கா‌ந்‌தியா‌ர் க‌ல்லறை‌யி‌ல், 'ஏழு பாவ‌‌ங்க‌ள்' எ‌ன்று எழுத‌ப்ப‌ட்டு இரு‌க்‌கிறது. அ‌த்தகைய பாவ‌ச் செய‌ல்களை, இ‌ந்‌திய அரசு செ‌ய்து உ‌ள்ளது. 'இ‌ந்‌திய - இ‌ல‌ங்கை இராணுவ‌க் கூ‌ட்டு ஒ‌ப்ப‌ந்த‌ம் கையெழு‌த்தாக‌‌ப் போ‌கிறது' எ‌ன்று, 2004 நவ‌ம்ப‌ர் 7இ‌ல், ஏடுக‌ளி‌ல் செ‌ய்‌திக‌ள் வெ‌ளியானபோது, பத‌றி‌த் துடி‌த்த நா‌ன், நவ‌ம்ப‌ர் 10 ஆ‌ம் நா‌ள் அ‌ன்று, 'ஒ‌ப்ப‌ந்த‌ம் போடா‌தீ‌ர்! துரோக‌ம் இழை‌க்கா‌தீ‌ர்' எ‌ன்று ‌பிரதம‌ரிட‌ம் நே‌ரி‌ல் ம‌ன்றாடினே‌ன்.
'ஒ‌ப்ப‌‌ந்த‌ம் செ‌ய்ய மா‌ட்டோ‌ம்' எ‌ன்றா‌ர். ஆனா‌ல், கையெழு‌த்து இடாமலேயே ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ன் சர‌த்துகளை, இ‌ந்‌திய அரசு ‌நிறைவே‌ற்‌றிய ச‌தி‌‌ச்செய‌ல், அத‌ற்கு அடு‌த்த ஆ‌ண்டு வெ‌ளியானது. பலா‌லி ‌விமான தள‌த்தை, இ‌ந்‌‌திய ‌விமான‌ப்படை பழுதுபா‌ர்‌த்து‌க் கொடு‌த்தது, த‌மிழ‌ர்களை கொ‌ன்று கு‌வி‌த்த கு‌ண்டு ‌வீ‌ச்சு‌க்கு, இ‌ந்‌தியாவே வ‌ழி அமை‌த்தது. இ‌ப்போது, ‌மீ‌‌ண்டு‌ம் பலா‌லி ‌விமான தள‌த்தையு‌ம், கா‌ங்கேச‌ன்துறை துறைமுக‌த்தையு‌ம் ந‌வீன‌ப்படு‌த்த இ‌ந்‌தியா ஏ‌ற்பாடு செ‌ய்‌கிறது.
இல‌ங்கை இராணுவ‌த்து‌க்கு‌ம், கா‌வ‌ல்துறை‌க்கு‌ம், அனை‌த்து உத‌விகளு‌ம் செ‌ய்ய இ‌ந்‌தியா ஒ‌ப்பு‌க்கொ‌ண்டு உ‌ள்ளது. ‌சி‌ங்கள இராணுவ‌த்‌தி‌னரு‌க்கு‌ம், காவ‌ல்துறை‌க்கு‌ம், இ‌ந்‌தியா‌வி‌ல் ந‌வீன‌ப் ப‌‌யி‌ற்‌சிக‌ள் ஏ‌ற்பாடு ஆ‌கி‌ன்றன. ஈழ‌த்த‌ி‌ல் நடைபெ‌ற்ற யு‌த்த‌த்த‌ி‌ல், ஜெ‌னீவா நெ‌றிமுறைகளை ம‌ண்‌ணி‌ல் புதை‌த்தது ‌சி‌ங்கள அரசு. போ‌‌ரி‌ல் கொ‌ல்ல‌ப்ப‌ட்ட த‌மி‌ழ் இளைஞ‌ர்க‌ள், இள‌ம்பெ‌‌ண்களை அ‌ம்மணமா‌க்‌கி, அ‌ந்த உட‌ல்களை ‌வீ‌தி‌வீ‌தியாக இழு‌த்து‌ச் செ‌ன்று, அ‌ந்த உ‌யி‌ர் அ‌ற்ற சடல‌ங்களை‌ச் செரு‌ப்பா‌ல் அடி‌த்து‌ம், காலா‌ல் ‌மி‌தி‌த்து‌ம், கோர ந‌ர்‌த்தன‌ம் ஆடின‌ர் ‌சி‌ங்கள‌க் கொடியோ‌ர்.
த‌மி‌ழ் இளைஞ‌ர்க‌ளி‌ன் க‌ண்களையு‌ம், கைகளையு‌ம் க‌ட்டி அ‌ம்மணமா‌க்‌கி, உ‌ச்ச‌‌ந்தலை‌யி‌ல் சு‌ட்டு‌க் கொ‌‌ன்ற கொடுமையு‌ம், மறு‌க்க முடியாது ஆவண‌ப் பட‌ங்களாக வெ‌ளி‌ப்ப‌ட்டு ‌வி‌ட்டது. ஈழ‌த்‌த‌மி‌ழ்‌ப் பெ‌ண்களை ‌மி‌க‌க் கொடூரமாகக் க‌‌ற்ப‌ழி‌த்து‌க் கொ‌ன்று எ‌ரி‌த்த கோர ‌நிக‌ழ்‌ச்‌சிகளை ‌‌நினை‌க்கு‌ம்போதே நெ‌ஞ்சை அடை‌க்‌கிறது.
இ‌த்தகைய ‌சி‌ங்கள இராணுவ‌த்து‌க்கு‌ம், காவ‌ல்துறை‌க்கு‌ம்தா‌ன் இ‌ந்‌தியா‌வி‌ல் ந‌வீன‌ப் ப‌‌யி‌ற்‌சிகளா‌ம்! இல‌ங்கை‌யி‌ல் ‌மி‌ன்சார உ‌ற்ப‌த்‌தி ஆ‌‌யிர‌ம் கோடி ரூபாயு‌ம், ர‌யி‌ல்வே உ‌ள்‌ளிட்ட ம‌ற்ற ‌தி‌ட்ட‌ங்களு‌க்கு 4000 கோடி ரூபாயு‌ம் கொடு‌க்க, இ‌ந்‌தியா ஒ‌ப்பு‌க் கொ‌ண்டு உ‌ள்ளது. ஏ‌ற்கனவே, ராடர்க‌ள் உ‌ள்‌ளி‌‌ட்ட ஆயுத‌ங்களையு‌ம், ஆ‌‌‌யிரம‌் கோடி ரூபாயையு‌ம் இ‌ந்‌தியா கொடு‌த்து இரு‌க்‌கிறது.
த‌மி‌ழ் இன‌த்தை‌ப் பூ‌ண்டோடு அ‌ழி‌க்க‌க் க‌ங்கண‌ம் க‌ட்டி‌க்கொ‌ண்டு செய‌ல்படு‌ம் கொலைகாரனு‌க்கு இ‌ப்பொழுது, மேலு‌ம் 5000 கோடி ரூபாயை‌க் கொடு‌ப்பது, ஈழ‌த்த‌மிழ‌ர்களு‌க்கு ம‌ட்டு‌ம் அ‌ல்ல, த‌மிழக‌த்து‌க்கு‌ம், இ‌ந்‌தியாவு‌க்கு‌மே எ‌தி‌ர்கால‌த்‌தி‌ல் பெரு‌ங்கேடாக முடியு‌ம். இல‌ங்கை‌யி‌ல், ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளி‌ன் ப‌ண்பாடு, கலா‌ச்சார அடையாள‌ங்களே இ‌ல்லாம‌ல் அ‌‌ழி‌த்து ஒ‌‌ழி‌க்கு‌ம் செய‌ல்க‌ள் ‌தீ‌விரமாக நட‌க்‌கி‌ன்றன. எ‌ல்லாள ம‌‌ன்ன‌னி‌ன் நடுக‌ல்லை உடை‌த்து, த‌மிழ‌ர்‌க‌ளி‌ன் ‌நினைவு‌ச் ‌சி‌ன்ன‌ங்‌களை எ‌ல்லா‌ம் அ‌ழி‌த்து, ‌சி‌ங்கள எழு‌த்துக‌ள், ‌சி‌ன்ன‌ங்களை‌ப் பொ‌றி‌த்து வரு‌கிறா‌ன்.
த‌மிழ‌ர் ஆலய‌ங்களு‌க்கு அருகே, பெள‌த்த ‌விகாரைகளை‌க் க‌ட்டு‌கிறா‌ன். இ‌த்தகைய ‌சி‌ங்கள அரசுட‌ன், கலா‌ச்சார ப‌ரிவ‌‌ர்‌த்தனை ஒ‌ப்ப‌ந்த‌ம் எ‌ன்று சொ‌ல்லுவது, தம‌ி‌ழ் இன‌த்தை, த‌மிழ‌ர் நாக‌ரிக‌த்தை‌ப் புதை‌க்கு‌ம் சவ‌க்கு‌‌ழி ‌மீது, க‌‌ளியா‌ட்ட‌ம் நட‌த்தவா? மூ‌ன்று ஆ‌ண்டுகளு‌க்கு மு‌ன்பே, இ‌ந்‌திய- இல‌ங்கை‌க் கட‌ற்படைக‌ளி‌ன் தகவ‌ல் ப‌ரிமா‌ற்ற ஒ‌ப்ப‌ந்த‌ம் போ‌ட்டது‌ம், ந‌ம் கட‌ல் எ‌ல்லை‌யிலேயே க‌ண்ணிவெடிகளை ‌வை‌ப்பத‌ற்கு இல‌ங்கை‌க்கு ஒ‌ப்புத‌ல் அ‌ளி‌த்த‌லு‌ம், இ‌ந்‌திய இறையா‌ண்மை‌க்கு‌க் கேடு ‌விளை‌வி‌க்கு‌ம் செய‌ல் ஆகு‌ம்.
செ‌‌ஞ்‌சீனமு‌ம், பா‌கி‌ஸ்தானு‌ம் இல‌ங்கை‌யி‌ல் கா‌ல் ஊ‌ன்ற ‌வி‌டாம‌ல் தடு‌ப்பத‌ற்கு எ‌ன்று சொ‌ல்ல‌ி‌க்கொ‌ண்டே, இ‌ந்‌தியா இல‌ங்கை‌க்கு ப‌ல்லா‌யிர‌ம் கோடி உத‌வியு‌ம், இராணுவ உத‌விகளு‌ம் செ‌ய்வது ‌மிகவு‌ம் தவறான, மு‌‌ட்டா‌ள்தனமான நடவடி‌க்கை ஆகு‌ம். இ‌ந்‌தியா‌விட‌ம் இரு‌ந்து எ‌ல்லாவ‌ற்றையு‌ம் பெ‌ற்று‌க்கொ‌ண்டே, எ‌தி‌ர்கால‌த்‌தி‌ல், ‌சீனமு‌ம், பா‌கி‌‌ஸ்தானு‌ம், இல‌ங்கை‌யி‌ல் பல‌த்த அடி‌த்தள‌ம் அமை‌க்க, ஏ‌ற்பாடு செ‌ய்ய‌ப் போவது ராஜப‌க்சதா‌ன்.
இ‌ந்‌‌தியா‌வி‌ன் பாதுகா‌ப்பு‌க்கு‌ம், பெரு‌ம் ஆப‌த்து, ‌சி‌ங்கள‌வர் பகு‌தி‌யி‌ல் இரு‌ந்துதா‌ன் வரு‌ம். அ‌ப்படி ஒரு ‌விப‌‌ரீத‌ம் நேரு‌ம்போது, நேரடி‌ப் பா‌தி‌ப்பு‌க்கு இல‌க்காக‌ப் போவது த‌மி‌ழ்நாடுதா‌ன். கூட‌ங்குள‌ம் அணு‌மி‌ன் ‌நிலைய‌ம், க‌ல்பா‌க்க‌ம் அணு‌மி‌ன் ‌நிலைய‌ம், ‌விஜயநாராயண‌ம் க‌ட‌ற்படை‌த் தள‌ம், ‌திரு‌ச்‌சி து‌ப்பா‌க்‌கி‌த் தொ‌ழி‌‌ற்கூட‌ம், ஆவடி இராணுவ டா‌ங்‌கிக‌ள் வடிவமை‌ப்பு‌க் கூடு‌ம், இவையெ‌ல்லா‌ம் எ‌தி‌ரிக‌ளி‌ன் இல‌க்கா‌கி ‌வி‌ட்டா‌ல், அ‌ழிவு, த‌மிழனு‌க்கு‌ம், த‌மி‌ழ்நா‌‌ட்டு‌க்கு‌ம் அ‌ல்லவா?
இல‌ங்கை‌த் ‌தீ‌வி‌‌ல் த‌மி‌ழ் ஈழ‌ம் அமைவது, ஈழ‌த்த‌மிழ‌ர்க‌‌ள் வலு‌ப்பெறுவது‌ம் ம‌ட்டு‌ம்தா‌ன் தா‌ய்‌த் த‌மிழ‌க‌த்து‌க்கு ம‌ட்டும‌் அ‌ல்ல, இ‌ந்‌தியாவு‌க்கே பாதுகா‌ப்பு அரணாக அமையு‌ம். ஆனா‌ல் சோ‌னியா கா‌ந்‌தி‌யி‌ன் கை‌ப்ப‌ிடி‌யி‌ல் ஆ‌டு‌கிற இ‌ந்‌திய அரசு, இதையெ‌ல்லா‌ம் ‌சி‌ந்‌தி‌க்காம‌ல், தம‌ி‌ழ் இன‌த்தை அ‌ழி‌க்க, துரோக‌த்து‌க்கு மே‌ல் துரோக‌த்தை‌த் தொட‌ர்‌ந்து கொ‌ண்டே இரு‌க்‌கிறது.
மா‌வீர‌ர் ‌பிரபாகர‌னி‌ன் தா‌ய் பா‌ர்வ‌தி அ‌ம்மையார் த‌மிழக ம‌ண்‌ணி‌ல் கா‌ல் எடு‌த்து வை‌க்க‌க்கூட அனும‌தி‌க்காத இ‌ந்‌திய அரசு, த‌மி‌ழ்நா‌ட்டி‌ல் 1986 நவ‌ம்ப‌ர் 1இ‌ல் ஒரு த‌லி‌த் இளைஞ‌‌ன் ‌திருநாவு‌க்கரசை‌ச் சு‌ட்டு‌க்கொ‌ன்ற கொலை‌க் கு‌ற்றவா‌ளி ட‌க்ள‌ஸ் தேவான‌ந்தாவு‌க்கு, வரவே‌ற்பு கொடு‌ப்பது‌ம், அவனோடு ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங் கைகுலு‌க்குவது‌ம், த‌மிழ‌ர்க‌ளி‌ன் த‌ன்மான‌த்து‌க்கு இ‌ந்‌திய அரசு ‌விடு‌‌க்‌கி‌ன்ற சவா‌ல் ஆகு‌ம்.
கொலை செ‌ய்தது ம‌ட்டு‌ம் அ‌ல்ல, இர‌ண்டு ஆ‌ண்டுகளு‌க்கு‌ப் ‌பிறகு, து‌ப்பா‌க்‌கி முனை‌யி‌ல் ப‌த்து வயது‌ச் ‌சிறுவனை‌க் க‌ட‌த்த‌ி‌ச் செ‌ன்று, ப‌த்து இல‌‌ட்ச‌ம் பணய‌த் தொகை கே‌ட்ட ‌கி‌ரி‌மின‌ல் கு‌ற்றவா‌ளிதா‌ன் ட‌க்ள‌ஸ் தேவான‌ந்தா. த‌மிழக‌த்த‌ி‌ன் ஒரு தொ‌ழி‌ல் அ‌திபரை, து‌ப்பா‌க்‌கி முனை‌யி‌ல் ‌மிர‌ட்டிய ட‌க்ள‌ஸ் தேவா‌ன‌ந்தா‌விட‌ம் இரு‌ந்து, ஏ கே 47 ரக‌த் து‌ப்பா‌க்‌கிகளு‌ம் கை‌ப்ப‌ற்ற‌ப்ப‌ட்டன. தேச பாதுகா‌ப்பு‌ச் ச‌ட்ட‌த்த‌ி‌ல் அடைப‌ட்டு‌க் ‌கிட‌ந்த ட‌க்ளசை, கா‌ங்‌கிர‌ஸ் அரசுதா‌ன் ‌விடு‌வி‌த்து, இல‌ங்கை‌க்கு அனு‌ப்‌பி வை‌த்தது.
2006 ஜூ‌ன் இர‌ண்டா‌ம் வார‌த்‌தி‌ல் டெ‌‌ல்‌லி‌க்கு வ‌ந்த ட‌க்ள‌ஸ் தேவான‌ந்தாவு‌க்கு, வெ‌ளி‌விவகார அம‌ை‌ச்சரை‌‌ச் ச‌ந்‌தி‌த்தது‌ம், டெ‌ல்‌லி‌யி‌ல் ப‌த்‌‌தி‌ரிகையாள‌ர்களு‌க்கு‌ப் பே‌ட்டி கொடு‌த்தது கு‌றி‌த்து, ஜூ‌ன் 19ஆ‌ம் தே‌தி, நா‌‌ன் ‌பிரதம‌ரை‌ச் ச‌ந்‌தி‌த்து, ஒரு கொலை‌க் கு‌ற்றவா‌ளியான ட‌க்ள‌ஸ் தேவான‌ந்தாவை, ம‌த்‌திய அர‌சி‌ன் வெ‌ளி‌விவகார‌த்துறை அமை‌ச்சரே வரவே‌ற்றதை எ‌தி‌‌ர்‌த்து புகா‌ர் செ‌ய்ததோடு, இத‌ற்கு ஏ‌ற்பாடு செ‌ய்த இ‌ந்‌தியா‌வி‌ன் பாதுகா‌ப்பு ஆலோசக‌ர் எ‌ம்.கே.நாராயண‌‌ன் ‌மீது‌ம், ‌விசாரணை நட‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்று கோ‌ரினே‌ன்.
ஆவன செ‌ய்‌கிறே‌ன் எ‌ன்ற பிரதம‌ர், இ‌ந்‌திய அர‌சி‌ன் நயவ‌ஞ்சக‌ம் வெ‌ளி‌ச்ச‌‌த்து‌க்கு வ‌ந்தது. இ‌ந்‌நிலை‌யி‌ல், த‌மி‌ழ் இன‌த்தையே அ‌‌ழி‌க்க மு‌ற்படு‌ம் ‌சி‌ங்கள அரசுட‌ன், ‌இ‌ந்‌திய அரசு செ‌ய்து கொ‌ண்டு இரு‌ப்பது ஒ‌ப்ப‌ந்த‌ங்க‌ள் அ‌ல்ல, த‌மி‌ழ் ஈழ‌த்தை எ‌ரி‌க்க மு‌ற்படு‌ம் ‌தீ‌ப்ப‌ந்த‌ங்க‌ள். ஆனா‌ல் ஒ‌ன்று, ம‌த்‌திய அரசு‌க்கு எ‌‌ச்ச‌ரி‌க்கை. இ‌ந்த‌‌த் துரோக‌ம் தொடருமானா‌ல், இ‌னி மு‌த்து‌க்குமா‌ர்க‌ள், த‌ங்களை நெரு‌ப்‌பி‌ல் எ‌ரி‌க்க மா‌ட்டா‌ர்க‌ள். துரோ‌க‌த்‌தி‌ன் கர‌ங்களை எ‌ரி‌க்க எ‌தி‌ர்கால‌த்த‌ி‌ல், ‌தீ‌ப்ப‌ந்த‌‌ம் ஏ‌ந்துவா‌ர்க‌ள் என எ‌ச்ச‌ரி‌‌க்‌கிறே‌ன்'' எ‌ன்று வைகோ கூ‌றியு‌ள்ளா‌ர்.

நித்தியானந்தா நிபந்தனை ஜாமீனில் வெளியே வருகிறார்.


ஏப்ரல் -23ல் சிறையில் அடைக்கப்பட்ட நித்யானந்தாவுக்கு 50 நாட்களுக்கு பிறகு ஜாமீன் கிடைத்துள்ளது.
நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தா நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் வெளியானது.
இதைத்தொடர்ந்து தலைமறைவுவாழ்க்கை நடத்தி வந்த நித்யானந்தாவை கர்நாடக போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இப்போது அவர் ராம்நகர் சிறையில் இருக்கிறார்.
ராம்நகர் கோர்ட் ஜாமீ்ன் நிராகரித்ததை அடுத்து நித்தியானந்தா கர்நாடகா ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தார்.
இன்று விசாரணைக்கு பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டது.
தீர்ப்பில் நித்யானந்தாவுக்கு நிபந்தனை ஜாமீன் விதித்து உத்தரவிட்டார் நீதிபதி.நித்யானந்தா-ரஞ்சிதா வீடியோ உண்மையென நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். மக்கள் மனதை புண்படுத்திய நித்யானந்தாவின் செயல் கண்டிக்கத்தக்கது என்று கூறிய நீதிபதி, பிடதி ஆசிரமத்தை விட்டு வெளியே செல்லக்கூடாது, பாஸ்ப்போர்ட்டை ஒப்படைக்கவேண்டும், ஆன்மீக சொற்பொழிவாற்றக்கூடாது, 15 நாட்களுக்கு ஒரு முறை பிடதி போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திட வேண்டும், தனிநபர் ஜாமீனுக்காக 1 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனைகள் விதித்தார்.
நிபந்தனை ஜாமீன் கிடைத்துவிட்டதால் நாளை அல்லது திங்கட்கிழமை நித்யானந்தா விடுதலையாவார்.