03 ஜூலை 2011

இலங்கையின் கொலைக்களத்தை இந்திய ஊடகங்களும் வெளியிட தயாராகின்றன.

2009- ல் வடக்குப் பகுதி தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட போரின் போது பாரிய போர்க்குற்றங்களைப் புரிந்ததாக இலங்கை இராணுவத்தின் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இக்குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையிலான காணொளி ஆதாரங்கள் வெளியாகி வந்து கொண்டிருக்கும் நிலையில் சனல் 4 இலங்கையின் கொலைக்களம் என்ற ஆவணப்படத்தை ஒளிபரப்பியது. உலகெங்கிலும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்திய இந்த ஆவணப்படம் தற்போது இந்திய ஆங்கில ஊடகமான ஹெட்லைன்ஸ் டுடே விலும் இம்மாதம் 7,8,9 தேதிகளில் ஒளிபரப்பப் போவதாக அறிவித்துள்ளது அத்தொலைக்காட்சி.
டில்லியில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் நெருக்கடிகளையும் மீறி தொலைக்காட்சியில் இந்த ஆவணப்படம் ஒளிபரப்பாகுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்னும் நிலையில், இந்த ஆவணப்படம் ஒளிபரப்பாகும் நிலையில் ஏனைய ஆங்கிலத் தொலைக்காட்சிகளுக்கும் இலங்கையில் தமிழர் படுகொலை தொடர்பான செய்திகளை ஒளிபரப்பியாக வேண்டிய நெருக்கடி ஒன்று உருவாகும் என்று தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக