07 ஜூலை 2011

சர்வதேச சமூகத்தை ஒன்றிணைக்கும் தமிழர் பேரவை.

பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் அலிஸ்டர் பேர்ட் உட்பட பலர் உலக தமிழர் பேரவையினால் செவ்வாய்க்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர் என உலக தமிழர் பேரவை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
இலங்கையில் சமரசம் மற்றும் நீண்ட கால அமைதியை, இறுதி கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற யுத்த குற்றங்கள் தொடர்பாக நம்பகமான மற்றும் சுயாதீன விசாரணை மூலம் அடைய முடியும் என இக்கூட்டத்தில் உரையாற்றிய பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் அலிஸ்டர் பேர்ட் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் காணப்பட்ட மனித உரிமை தொடர்பான சந்தேக நிலைபாட்டினை கருத்திற் கொண்டே ஜீ.எஸ்.பீ பிளஸ் மீளப்பெறலுக்கு ஆதரவளித்ததாக முன்னாள் லிபரல் ஜனநாயக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் எட்வேர்ட் டவே தெரிவித்துள்ளார்.
ஐ.நா அறிக்கையை ஆதாரமாகக் கொண்டு இலங்கையில் இடம்பெற்ற இரு தரப்பு யுத்தங்கள் குறித்தும் சர்வதேச சமுகம் தீர்மானம் எடுக்கவேண்டும் என முன்னாள் வெளிவிவகார செயலாளர் டேவிட் மில்லிபான் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கைக்கு எதிராக சட்டரீதியாக உரிய நடவடிக்கை எடுக்க சர்வதேச சமூகத்தை உலகத் தமிழர் பேரவை ஒன்றினைக்கும் என வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக