05 ஜூலை 2011

புலம்புகிறது சிங்கள நாளிதழான திவயின.

செனல் 4 தொலைக்காட்சி ஒளிப்பரப்பிய இலங்கைக்கு எதிரான போர் குற்ற காட்சிகள் அடங்கிய 5 இறுவட்டுக்களை அடுத்து வரும் தினங்களில் ஐரோப்பா முழுவதும் விநியோகிக்க சுவிஸர்லாந்தில் உள்ள புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர் தமிழர்கள் திட்டமிட்டுள்ளதாக திவயின தெரிவித்துள்ளது.
இது சம்பந்தமான பேச்சுவார்த்தை ஒன்று சுவிஸர்லாந்தின் பேர்ண் நகரில் உள்ள வீடடொன்றில் 4 தினங்களுக்கு முன்னர் நடைபெற்றதாகவும் அதில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான தமிழ் செயற்பாட்டாளர்கள் கலந்துக்கொண்டதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அந்த பத்திரிகை கூறியுள்ளது.
இலங்கையில் அமைதி ஏற்பட்டுள்ள நிலையில், சுவிஸர்லாந்தில் உள்ள இலங்கை தமிழர்கள் பலர் நாடு திரும்புவது குறித்து கவனம் செலுத்தி வருகின்றனர். இதனை தடுத்து நிறுத்தி, வைராக்கியமான மனநிலையை உருவாக்கி, வீழ்ச்சியடைந்துள்ள புலிகளின் நிதி சேகரிப்பு வலையமைப்பை வலுப்படுத்துவதே சுவிஸர்லாந்தில் உள்ள புலி ஆதரவாளர்களின் தந்திரோபாயமாக உள்ளது.
சுவிஸர்லாந்தில் வாழும் பெரும்பாலான தமிழர்கள் புலிகளுக்கு நிதி வழங்குவதை நிராகரித்துள்ளதுடன் அவர்கள் இலங்கை திரும்ப தயாராகி வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.
அதேவேளை செனல் 4 தொலைக்காட்சியின் வீடியோ படத்தை ஐரோப்பாவில் விநியோகித்து, வைராக்கியத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி, எதிர்வரும் செப்டம்பர் மாதம் சுவிஸர்லாந்தில் நடைபெறும் சர்வதேச நாடாளுமன்ற சங்கத்தின் கூட்டத் தொடரில், இலங்கையி;ல் போர் குற்றங்கள் இடம்பெற்றது என கலந்துரையாடல் ஏற்படுத்துவதே, புலிகளின் ஆதரவாளர்களது நோக்கம் எனவும் திவயின தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக