09 ஜூலை 2011

புதிய நாடாக தென்சூடான் உருவானது.

வட சூடானில் இருந்து பிரிந்துள்ள தென் சூடான் சுதந்திர நாடாக தோற்றம் பெற்றுள்ளதுடன், உலக நாடுகள் வரிசையில் புதிய நாடொன்றாகவும் இணைந்துள்ளது.நாட்டில் நிலவிய நீண்டகால உள்நாட்டு யுத்தம் 2005 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட சமாதான உடன்படிக்கையின் பிரகாரம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
இதனையடுத்து நடத்தப்பட்ட மக்கள் வாக்கெடுப்பில் வட சூடானில் இருந்து பிரிந்து செல்ல ஆதரவாக 99 வீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாக்களித்திருந்தனர்.தென் சூடானின் சுதந்திர தின நிகழ்வுகளில் வட சூடான் ஜனாதிபதி ஒமர் அல் பஷீர், ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளார் நாயகம் பான் கீ மூன் உட்பட சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளுடன் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
வட மற்றும் தென் சூடானுக்கு இடையில் நிலவிய நீண்ட கால யுத்தம் காரணமாக சுமார் ஒன்று தசம் ஐந்து மில்லியன் மக்கள் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.ஐக்கிய நாடுகள் சபையினால் அங்கீகரிக்கப்பட்ட 193 ஆவது நாடாகவும், அதன் அங்கத்துவம் பெற்ற 54 ஆவது ஆபிரிக்க நாடாகவும் தென் சூடான் பதிவாகியுள்ளது.
ஆயிரக்கணக்கான தென் சூடானியர்கள் வீதிகளில் கொடிகளை அசைத்து, மகிழ்ச்சி ஆரவாரம் செய்தவண்ணமுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை உத்தியோகபூர்வ சுதந்திர தினம் நிகழ்வு இன்று நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக