இலங்கை இராணுவம் போர் குற்றங்களில் ஈடுபட்டது என குற்றம் சுமத்துவதற்காக செனல் 4 தொலைக்காட்சி, சர்வதேச மன்னிப்புச் சபை ஆகியவற்றுடன் இணைந்து செயற்படும் 22 பேர் கொண்ட குழு தொடர்பான தகவல்களை சில நாடுகளில் உள்ள இராணுவ புலனாய்வாளர்கள் கண்டறிந்துள்ளதாக திவயின தெரிவித்துள்ளது.
இந்த குழுவுடன் முரண்பட்டுள்ள பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் வசிக்கும் ஒருவர், மேற்படி நபர்களுடன் தொடர்புகளை கொண்டுள்ளவர்கள், அவர்களின் பின்னணி, அவர்களுக்கு நிதி கிடைக்கும் விதம் என்பன குறித்த தகவல்களை சிரேஷ்ட இராணுவ புலனாய்வாளரிடம் வெளியிட்டுள்ளார். இதனடிப்படையில் இந்த நபர்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த குழுவின் உறுப்பினர் ஒருவர் புலிகளின் பணத்தில் அச்சகம் ஒன்றை நடத்தி வந்ததாக தெரியவந்ததை அடுத்து, மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது, அவர் நாட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது என திவயின கூறியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக