03 ஜூலை 2011

வெள்ளைக் கொடி விவகாரம் சிக்கப்போகும் இந்தியா!

தமிழீழ விடுதலை புலிகளை முள்ளி வாய்க்கால் பகுதியில் வைத்து இறுதி முற்றுகைக்குள் சிக்கவைத்து அவர்களை முற்றாக அழிக்கும் நிலையில் நின்ற போது புலித்தேவன்,நடசேன், ரமேஸ் போன்றவர்கள் வெள்ளை கொடி தாங்கியபடி எழுநூறுக்கு மேற்பட்ட போராளிகளுடன் இலங்கை இராணுவத்தினரிடம் சரண் அடைந்தனர் .
அப்போது ஐநா,இந்தியா,இலங்கை என மூன்று வட்டராங்கள் வாயிலாக வழங்கபட்ட உறுதி மொழியின் அடிப்படையிலேயே புலிகளின் இந்த தளபதிகள் சரண் அடைந்தனர் .
ஆனால் அவர்களினால் வழங்கப்பட்ட உறுதி மொழிகள் மீறப்பட்டு நயவஞ்சமாக கோர சித்திரவதை செய்யபட்டு கொலை செய்யபட்டனர். .அன்று நடந்த இந்த தமிழர் வரலாற்றில் மறக்க முடியாத துயர் தோய்ந்த நிகழ்வுகள்
தமிழர்கள் மனதில் பெரும் வலியினை உருவாக்கியுள்ள நிலையில், தற்போது இவை தொடர்பான முக்கிய சான்றுகள் ,ஆவணங்களும் சிக்கியுள்ளன .இவை ஐநாவில் பெரும் சர்ச்சையினை உருவாக்குவதுடன் இலங்கை சர்வதேச விசாரணைக்கு வரவேண்டிய நிர்பந்தம் உருவாகும் நிலை ஏற்படுவதுடன், இந்தியா பாரிய சங்கடத்தில் சிக்க வேண்டிய சூழல் ஏற்படுவதுடன், தாமும் ஸ்ரீலங்காவுடன் இணைந்து இன அழிப்பு பணியில் பங்கேற்றோம் என்பதனை ஏற்று கொள்ளும் நிலைக்கு தள்ளப்படும். ஐநாவும் தாம் விட்ட தவறிற்காக மன்னிப்பு கோரவேண்டிய நிலை உருவாகலாம் என எதிர்பார்க்கபடுகின்றது .
முக்கிய நிறுவனம் ஒன்றில் இந்த ஆவணங்கள் கைமாறபட்டுள்ளன .எதிர் வரும் காலம்களில் இவை பெரும் பரபரப்பினை உருவாக்கும் என எதிர்பார்க்க படுகின்றது ..!
இதில் இரண்டு விதமான சான்றுகள் பரிமாற பட்டுள்ளன .
இறந்தகாலம் .நிகழ்காலம் இதற்குள் அடக்க பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது ..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக