முள்ளிவாய்காலில். தமிழ் மக்களை பாதுகாக்க போர் தொடர்ந்து உள்ளேன் என்று உலகிற்கு சொல்லிக்கொண்டு இந்த நூற்றாண்டின் மனித நேயத்தையே குருடாக்கி 40 000 இற்கு மேற்பட்ட குழந்தைகள், சிறார்கள், வயது மூத்தோர், ஆண், பெண் என்று பாராமல் கொன்று குவித்த ஒரு அரசின் ஜனாதிபதி,
அந்த ஜனாதிபதி என்ற அந்தஸ்தை வைத்துக்கொண்டு இந்த உலக அரசியல் தலைவர்கள், மனிதாபிமான அமைப்புகளுக்குச் சவால் விடுவதை போல், போர்க் குற்றங்களை இழைத்த ராணுவ அதிகாரிகளுக்குப் பாதுகாப்பு தேடும் முகமாக ஐக்கிய நாடுகள் சபையில், தூதுகரங்களில் அரசியல் பாதுகாப்பு கிடைக்கக் கூடிய பதவிகளை அளித்து அவர்களின் பாதுகாப்பை ஊர்ஜிதப் படுத்திய பின், மற்றொரு ராணுவ தளபதியை சிறீpலங்காவில் சிறையில் அடைத்து விட்டு இன்று சிறீலங்காவில் பத்திரிகையாளர்களிடம் "நான் விரும்பிய நாட்டுக்கு செல்லும் உரிமை எனக்கு இருக்கிறது" என்று இந்த உலகத்திற்கும், உறவுகளை இழந்து தவிக்கும் புலம்பெயர் தமிழ் மக்களிற்;கு சவால் விட்டுவிட்டு, இன்று ஒக்போர்ட் பல்கலைகழக சங்கத்தின் அழைப்பை ஏற்று இங்கிலாந்து வந்து சேர்த்திருக்கிறார் சிறீ லங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே.
அன்பான தமிழ் உறவுகளே, இன்று நாம் எமது மக்களின் விடுதலைக்காக தமது வாழ்கையை, கனவுகளை தமது மக்களுக்காக தியாகம் செய்த எமது மாவீரர்களின் நினைவுகளை சுமந்து கொண்டு இருக்கும் வேளையில், ஒரு இனத்தை அழித்து போர்க்குற்றங்களை செய்த, இன்று ஒரு இனப்படுகொலையை செய்துகொண்டிருக்கும் ஜனாதிபதி எம் மக்களிற்கே சவால் விட்டு இங்கிலாந்து வருகை தந்துள்ளார்.
மகிந்த ராஜபச்சே ஆட்சிக்கு வந்தபின், உங்களின் உறவுகள் சிறீலங்காவில் கொலை செய்யப்பட்டு இருந்தால், காணாது போயிருந்தால் உடனடியாக மகிந்த ராஜபசவுக்கு எதிராக பல வழக்குகளை, லண்டன், ஒக்ஸ்பேர்ட் மற்றும் நீங்கள் வாழும் அனைத்து நகரங்களிலும் வழக்குகளை பதிவுசெய்யும் படி கேட்டு கொள்கிறோம்.
மகிந்த ராஜபச்சே விட்டிருக்கும் சவால், புலம் பெயர் தமிழர்களுக்கு விடப்பட்ட சவால், எமது மண்ணில் எமது மக்களை பேச முடியாதவர்களாக ஆகிவிட்டு இன்று அந்த மக்களின் குரலாக இருக்கும் எம்மை பேசமுடியாதவர்களாக எண்ணிக் கொண்டு, எம்மையும் அடக்கி விடலாம் என்று நினைக்கும் மகிந்தவின் பயங்கரவாத முகத்தை உலகிற்கு எடுத்து காட்டவேண்டியவர்கள் நாம் தான்.
எந்தவித சவால்களையும் எதிர்கொள்வோம் என்ற உறிதியுடன் நாம் செயல்படவேண்டும்.
சிறீலங்கா அரசை உலக மன்றதிலிருந்து புறக்கணிக்கப்பட்ட அரசாக மாற்றும் செயல்திட்டத்தில் நாம் எல்லோரும் ஒன்று பட்டு செயல்பட வேண்டும்.
அன்பான தமிழ் உறவுகளே, ஒக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தில் நடைபெறும் கூடத்தில் பங்குபற்றி நீங்கள் இந்த ஜனாதிபதியிடம் கேள்விகளை கேளுங்கள், இந்த நகரத்தில் சிறீலங்காவை புறக்கணிக்கும் ஆர்ப்பாட்ட்டங்களை செய்யுக்கள், புலம் பெயர் உறவுகளே நீங்கள் வாழும் நாடுகளில் உங்கள் பகுதி பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் உங்கள் முறையீடுகளை தெரியப்பபடுத்தலாம்.
இது எமக்கும், உலக நாடுகளுக்கும், மனித நேயதிற்;கும் விடப்பட்ட சவால். இந்தச் சவாலை இன்று நாம் எமது தன்மானத்திற்கு விடப்பட்ட சவாலாக எடுத்து அதை நாம் எல்லோரும் எதிர்கொள்வோம் வாருங்கள்.
ஒக்ஸ்பேர்ட் நகரத்தில் மகிந்தராஜபக்சவின் வருகையை எதிர்த்து டிசம்பர் 2ம் திகதி வியாழக்கிழமை நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள விரும்பும் பிரான்ஸ்வாழ் உறவுகள் தமிழ் மக்கள் பேரவையுடன் தொடர்பு கொள்ளவும்.
ஐரோப்பா வாழ் தமிழர்கள் அனைவரும் இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்து தமிழரின் ஒன்றுபட்ட எதிர்ப்பை வெளிக்கொண்டுவருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு.
30 நவம்பர் 2010
போர்க்குற்றவாளி மகிந்தவே திரும்பி போ"கீத்றூ விமான நிலையத்தில் மக்கள் கோஷம்!
போர்க்குற்றவாளியும், தமிழின அழிப்பின் சூத்திரதாரியுமான மஹிந்த ராஜபக்ஷவின் பிரித்தானிய வருகையை எதிர்த்து லண்டன் கீத்றூ விமானநிலையத்தில் நேற்று இரவு ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் கூடி எதிர்ப்பை தெரிவிக்கும் முகமாக ஆர்ப்பாட்டம் நடாத்தியுள்ளனர்.
நேற்று (29-11-2010) இரவு 8:00 மணிமுதல் லண்டன் கீத்றூ விமானநிலையத்துக்குள் வர ஆரம்பித்த தமிழ் மக்கள் 10:00 மணியளவில் உரத்த குரலில் தமது எதிர்ப்பை தெரிவித்து போராட்டம் நடாத்தினர். ஆயிரத்துக்கும் அதிகமாக அங்கு கூடிய தமிழ்மக்களில் பலர் "ஸ்ரொப் ஜெனசைட்" என குறிக்கப்பட்ட மேலங்கிகளை அணிந்தவாறும் படுகொலை செய்யப்பட்ட மக்களின் படங்களை கைகளில் ஏந்தியவாறும் உரத்த குரலில் தமது எதிர்ப்பை தெரிவித்தனர்.
தமிழர்களின் இந்த திடீர்போராட்டத்தால் அங்கு கூடிய அதிகளவான காவல்துறையினருக்கு மத்தியிலும் அதிகளவானோர் தமது கரங்களில் தமிழீழ தேசியக் கொடியினை ஏந்தியவாறு
"போர்க்குற்றவாளி மஹிந்தவே திரும்பிப் போ"
"சிறீலங்கா ஜனாதிபதி பயங்கரவாதி"
"இனப்படுகொலை செய்த அரக்கனே திரும்பிப் போ"
"சிறீலங்கா ஜனாதிபதி போர்க்குற்றவாளி"
போன்ற கோசங்களை உரத்த குரலில் எழுப்பி விமானநிலையமே அதிரும் வண்ணம் தமது எதிர்ப்பை தெரிவித்தனர்.
அனுமதியற்ற போராட்டமாக இருந்த போதும், அங்கு தேசியக்கொடிகள் பிடிக்கப்பட்டு உரத்தகுரலில் எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்றபோதும் அங்கு கூடிய பிரித்தானிய காவல்துறையினர் எந்தவித இடையூறும் கொடுக்காததும், அதேபோல் போராட்டம் முடிவடையும் போது தமிழர்கள் பலர் காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்துச் சென்றதோடு அங்கு எதுவித அசம்பாவிதங்களோ, அன்றி கைதுகளோ நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்பாடு செய்யப்படாத இந்த திடீர் போராட்டத்தில் தமிழ் இளையோர் அமைப்பு, பிரித்தானிய தமிழர் பேரவை உறுப்பினர்கள், நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதிநிதிகள், மற்றும் பொதுமக்கள் என அனைவரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழர்கள் அங்குகூடி போராட்டம் நடாத்தியதால் மகிந்த ராஜபக்ஷ மட்டுமன்றி அந்த விமானத்தில் வந்த அதிகளவான சிங்களவர்களையும் காவல்துறையினர் வேறு வழிகளினூடாக வெளியேற்றியிருந்தனர்.
அச்சமடைந்த மகிந்தவை விமானம் தரை இறங்கியதும் விமானத்திற்கு அருகில் சென்ற நான்கு காவல்துறையினரின் வாகனங்கள் பாதுகாப்பு கொடுக்க ஒரு வாகனம் அவரை ஏற்றிக்கொண்டு வேறுவழியால் சென்று ஹட்ரன் குறஸ் நிலக்கீழ் தொடரூந்து நிலைய வழியாக ஏ312 வீதியூடாக சென்றல் லண்டனை நோக்கி விரந்து சென்றுள்ளது. வேறுவழிகளால் செல்லும் வாய்ப்பே அதிகமாக இருக்கும் என எதிர்பார்த்து கண்காணிப்பில் பல இடங்களிலும் நின்ற தமிழர்களால் இச்செய்தி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இது மட்டுமன்றி எதிர்வரும் 2-ஆம் திகதி ஒக்ஸ்பேட் பல்கலைக் கழகத்திலும் மகிந்த உரையாற்றவுள்ளதால் இதை விட அதிகளவான தமிழர்கள் அங்கு கூடி தமது எதிர்ப்பை தெரிவிப்பார்கள் என எதிர்வுகூறப்பட்டுள்ளதும் இங்கு சுட்டிக்காட்டதக்கது.
உடனடியாக செய்யவேண்டிய வேலையாக கீழுள்ள லிங்கை அழுத்தி அதனூடாக உங்கள் முறைப்பாட்டை 300 சொற்களுக்கு அதிகமாக இல்லாமல் இலகுவாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சிற்கு அனுப்புங்கள்.
http://www.fco.gov.uk/en/feedback
பிரித்தானிய மகாராணியிடம் கெஞ்சிய மகிந்த!
தான் பிரிட்டனில் கைது செய்யப்படாமலிருப்பதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கெஞ்சும் வகையில் இங்கிலாந்தின் அரசி எலிசபெத் மகாராணியாருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரகசியக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளமை ஜனாதிபதி செயலக வட்டாரங்களிலிருந்து உறுதி செய்யப்படுகின்றது.
அக்கடிதம் ஜனாதிபதியின் இரண்டாம் பதவிப் பிரமாணத்துக்கு முன் மகாராணிக்கு அனுப்பப்பட்டுள்ளது. மிக உருக்கமான முறையில் கடிதம் தயாரிக்கப்பட்டிருப்பதாக விடயமறிந்த வட்டாரங்கள் சுட்டிக் காட்டுகின்றன.
பிரிட்டன் சுற்றுப் பிரயாணத்தின் போது தான் எதிர்கொள்ள நேரிடும் சவால்கள் மற்றும் தன்னை கைது செய்ய மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் என்பன குறித்து மகாராணிக்கு அதில் விளக்கமாகத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
"மாட்சிமை தாங்கிய மகாராணியின் தலைமையிலான பிரித்தானியாவினால் அறிமுகம் செய்யப்பட்ட பாராளுமன்ற முறைமையின் கீழ் நான் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற்றிருக்கின்றேன்.ஜனாதிபதித் தோ்தலின் போதும் நான் பெருமளவான இலங்கை மக்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்டுள்ளேன்.இன, மத, மொழி பேதமின்றி இலங்கையின் பெருவாரியான மக்கள் என்மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.உலகின் மோசமான பயங்கரவாத அமைப்பைத் தோற்கடிப்பதற்கு நான் தலைமைத்துவம் வழங்கியதன் காரணமாகவே என் தேசத்து மக்கள் என் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர்" என்றும் அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சரத் பொன்சேக்காவை சிறைப்படுத்தி வைப்பதற்கு நேரிட்ட விடயங்கள் அவரது குற்றங்கள் குறித்தும் ஜனாதிபதி தனது கடிதத்தில் விளக்கமளித்துள்ளார்.
அதற்கு மேலாக " நான் எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கான அதிகாரப் பரவலாக்கல் குறித்த விடயங்களை விரைவாக முன்னெடுக்க உள்ளேன். அவ்வாறான நிலையில் பிரித்தானியாவில் என் மீதான நடவடிக்கைகள் அதனைத் தாமதப்படுத்தச் செய்யும். எனவே நான் பிரித்தானியாவில் இருக்கும் காலப் பகுதிக்குள் எதுவித சட்டச் சிக்கல்களிலும் சிக்காதிருக்கும் வண்ணம் மாட்சிமை தாங்கிய மகாராணியின் கருணையை எதிர்பார்க்கின்றேன்" என்பதாக அவர் தன் கடிதத்தை நிறைவு செய்துள்ளார்.
கடிதத்தைப் பெற்றுக்கொண்ட மகாராணியின் தரப்பிலிருந்து வழங்கப்பட்ட ஏதோ ஒரு உறுதிமொழியின் பேரிலேயே ஜனாதிபதி மஹிந்த தைரியமாக பிரித்தானியாவுக்குள் காலடி எடுத்து வைத்துள்ளதாக நம்பகமான தகவல் வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.
இது ஒருபுறமிருக்க தான் கைது செய்யப்படாதிருக்க வேண்டி இந்தளவுக்கு ஒரு நாட்டுத் தலைவர் இறங்கிப் போய் கெஞ்ச நோ்ந்துள்ள சந்தர்ப்பம் உலக வரலாற்றில் இதுவே முதல் தடவை என்பதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

29 நவம்பர் 2010
போர்க்குற்றவாளி மகிந்தவை பிரித்தானியாவில் கைது செய்ய செய்யவேண்டியவை!
இலங்கையில் பல்லாயிரக் கணக்கில் தமிழ்மக்களை படுகொலை செய்தும், போர்க்கைதிகளை சர்வதேச விதிகளுக்கு முரணாக சித்திரவதை செய்து படுகொலை செய்தும்,
தமிழின வரலாற்றுச் சான்றுகளை அழித்து தமிழர்கள் நிலம் என்பதை அடையாளம் இன்றி அழிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதுமான சிங்கள பேரினவாத அரசாங்கத்தை தலைமையேற்று கொடுங்கோல் ஆட்சி நடாத்திவரும் இலங்கையின் ஜனாதிபதியான மகிந்த ராஜபக்ச அவர்கள் இன்று பிரித்தானியா வரவுள்ளதாலும், அவர் எதிர்வரும் 02-12-2010 அன்று ஒக்ஸ்பேட் பல்கலைக் கழகத்தில் உரையாற்ற உள்ளதுமானது தடுக்கப் படவேண்டிய விடையமாகவும், அதே சமயம் இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பிரித்தானிய சட்டங்களுக்கு அமைவாக அவரை கைது செய்யும் நடவடிக்கையையும் உலகெங்கும் வாழும் தமிழர்கள் முன்னெடுக்க வேண்டும்.
கடந்த ஆண்டு ஆரம்பத்தில் இருந்து இன்றுவரை இலங்கையின் தமிழர்தாயகப் பகுதிகளில் தொடர்ந்துவரும் இனப்படுகொலைகள், பாலியல் பலாத்காரங்கள், என்பவற்றால் பலாயிரக்கணக்கில் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதனை தடுக்கக் கோரியும், இலங்கை அரசை தண்டிக்க கோரியும் உலகெங்கும் தமிழ்மக்கள் வீதிகளிலும், அரச செயலகங்களின் முன்பாகவும் பல ஆர்ப்பாட்டங்களை லட்சக்கணக்கில் திரண்டு நடாத்தியிருந்தாலும் அவை எல்லாவற்றிற்கும் பலன் கிடைக்கக் கூடியதாக இச்சந்தர்ப்பம் அமைவதாலும், கடந்த இயரண்டுவாரங்களின் முன் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹேக் அவர்கள் வழக்கு தாக்கல் செய்யப்பட்டால் மகிந்த கைதுசெய்யப்படுவதை தம்மால் தடுக்கமுடியாது என்றும் தெரிவித்திருந்ததை நினைவில் கொண்டு உடனடியாக இந்த நடவடிக்கையில் உலகத் தமிழர்கள் இறங்க வேண்டும்.
எனவே உடனடியாக செய்யவேண்டிய வேலையாக கீழுள்ள லிங்கை அழுத்தி அதனூடாக உங்கள் முறைப்பாட்டை 300 சொற்களுக்கு அதிகமாக இல்லாமல் இலகுவாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சிற்கு அனுப்புங்கள்.
முறைப்பாட்டை அனுப்ப இங்கு அழுத்தவும்: http://www.fco.gov.uk/en/feedback
இன்று பிற்பகல் 9:00 மணியளவில் பிரித்தானியாவின் கீத்றூ விமானநிலையத்தில் மகிந்த ராஜபக்ச வந்திறங்கவுள்ளார் என்பதையும் அறியத் தருகிறோம்.
அத்தோடு இவை எல்லாவற்றையும் மீறி 2 ஆம் திகதி அவர் ஒக்ஸ்பேட் பல்கலைக்கழ்கத்தில் உரை நடாத்தும் பட்சத்தில் அதை எங்கும் பல்லாயிரக்கணக்கில் பிரித்தானிய தமிழர்கள் கூடவேண்டியதும் அவசியமாகிறது என்பதையும் கவனத்தில் கொள்ளல் வேண்டும்.
மின்னஞ்சல் அனுப்பமுடிந்தவர்கள் கீழ்காணும் மின்னஞ்சலூடாகவும் உங்கள் கோரிக்கைகளையும், உங்களிற்கு மகிந்த ஆட்சியால் ஏற்பட்ட பாதிப்புக்களையும் எழுதிஉஅனுப்புங்கள். Proctors.office@admin.oxac.ukஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்
பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் இணையத்தள முகவரி: http://www.fco.gov.uk/en/

அமெரிக்க சட்டங்களை உருத்திரகுமாரன் மீறவில்லை.
நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தின் பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ள உருத்திரகுமாரன் அமெரிக்க சட்டங்களை மீறிச் செயற்படவில்லை என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பெட்ரிக்கா புட்டீனாஸ் தெரிவித்துள்ளார்.
நாடு கடந்த தமிழீழ இராச்சியம் குறித்த ருத்ரகுமாரனின் நடவடிக்கைகள் தமது நாட்டு சட்டங்களை மீறும் வகையில் அமையப் பெறவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவில் வாழும் மக்கள் வேறும் நாட்டு அரசாங்கங்களையோ அல்லது அமெரிக்க அரசாங்கத்தையோ விமர்சனம் செய்வதனை தடுக்க முடியாது எனவும், கருத்து சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் வகையில் தமது நாட்டு அரசியல் சாசனம் அமையப் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடை உத்தரவில் மாற்றங்கள் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட ஓர் இயக்கமாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தேசியப் பாதுகாப்பு மற்றும் அரசியல் சாசன சட்டம் ஆகியன தொடர்பில் அமெரிக்க மிகவும் சமநிலையான கொள்கைகளை பின்பற்றி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
1997ம் ஆண்டு முதல் தமிழீழ விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையைப் போன்றே அமெரிக்காவிலும் தேசியப் பாதுகாப்பு காரணிகளுக்கும், அரசியல் சாசனத்திற்கும் சமநிலையான முன்னுரிமை அளிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட ஒர் அரசாங்கத்திற்கு எதிராக பயங்கரவாத அமைப்பொன்று மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு வெளிநாடுகள் ஒத்துழைப்பு வழங்கக் கூடாது என இலங்கை கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மகிந்தவிற்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கமுடியாதென பிரித்தானியா தெரிவிப்பு!
பிரித்தானியாவில் கைது செய்யப்படலாம் என முன்னர் தனது பயணத்தை ஒத்திவைத்த சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா இந்த வாரம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த பயணமும் நெருக்கடிகளை சந்தித்துள்ளது. தனிப்பட்ட பயணமாக பிரித்தானியாவுக்கு வரும் மகிந்தா ராஜபக்சாவின் பாதுகாப்புக்களை தம்மால் உறுதிப்படுத்த முடியாது என பிரித்தானியா அதிகாரிகள் பிரித்தானியாவில் உள்ள சிறீலங்கா தூதரகத்திடம் தெரிவித்துள்ளனர்.
பிரித்தானியாவின் அழைப்பில் அவர் பயணத்தை மேற்கொண்டால், தம்மால் அவரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும், ஆனால் தனிப்பட்ட பயணங்களின் போது அது முடியாது என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
இதனால் நாளை (30) பிரித்தானியாவுக்கு பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த மகிந்தா தனது பயணத்தை கைவிடலாம் என்ற கருத்துக்கள் எழுந்துள்ளன.
பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் தென்னிலங்கை மாணவர்களின் அழைப்பை தொடர்ந்தே மகிந்தா அங்கு செல்கிறார், ஆனால் பிரித்தானியாவில் தற்போது மாணவர்களின் போராட்டம் நடைபெறுவதால் அங்கு உறுதியற்ற தன்மை ஏற்பட்டுள்ளது.
அதேசமயம், மகிந்தா பிரித்தானியாவுக்குள் நுளைந்த பின்னர் கைது செய்யும் நீதிமன்ற உத்தரவுகளை பெற்று உடனடியாக அவரை கைது செய்வதற்கு புலம்பெயர் தமிழ் சமூகம் காத்திருப்பதாகவும், அதற்கான ஆணை 27 ஆம் நாள் நடைபெற்ற மாவீரர் தின விழாவில் கிடைத்துள்ளதாகவும் கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. மாவீரர் தினத்தில் பெருமளவான தமிழ் மக்கள் கலந்துகொண்டது, பிரித்தானியாவில் அவர்களுக்கு உள்ள ஆளுமையை காட்டுவதாக அது மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் பிரித்தானியாவில் வாழும் சிங்களவர்களும், பொன்சேகா மீதான நடவடிக்கை தொடர்பில் மகிந்தா மீதான புலம்பெயர் தமிழ் சமூகத்திற்கான ஆதரவுகளை வழங்கும் நிலையில் உள்ளனர்.
இதனிடையே, பிரித்தானியா பிரதமரை சந்திப்பதற்கு சிறீலங்கா அரச தலைவர் மேற்கொண்ட முயற்சிகளும் வெற்றிபெறவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

28 நவம்பர் 2010
மட்டக்களப்பில் பரவலாக நடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்வுகள்!
மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று பரவலாக இடம்பெற்ற மாவீரர் தின வைபவங்களில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றிருந்ததாக எமது தகவல் வட்டாரங்கள் ஊர்ஜிதம் செய்கின்றன.
புலிகளை ஒழித்துக் கட்டிவிட்டதாக பெருமெடுப்பிலான பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் இலங்கை அரசாங்கமானது மாவீரர் வாரத்தை முன்னிட்டு படைத்தரப்பை உச்சகட்ட உசார் நிலையில் வைத்திருந்தது.
அதனையும் மீறி நேற்று வடக்கு, கிழக்கின் பல பகுதிகளிலும் பரவலாக மாவீரர் தின வைபவங்கள் நடைபெற்றதுடன், ஏராளம் பொதுமக்களும் அதில் ஆர்வம் காட்டியிருந்தனர்.
கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் பரவலான முறையில் இராணுவக் கண்காணிப்பும் படைப்புலனாய்வாளர்களின் கடுமையான அவதானிப்புகளுக்கும் மத்தியில் நேற்று நடைபெற்ற மாவீரர் தின அனுஷ்டானங்கள் இரகசியமான முறையில் பரவலாக நடைபெற்றிருந்ததாக ஊர்ஜிதப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாவீரர் தின வைபவங்களின் முக்கிய அம்சமான ஈகைச்சுடர் ஏற்றும் நிகழ்வும் அதன் போது நடைபெற்றிருந்தது.
வடக்கிலிருந்து கிழக்கு பிரிந்து இருப்பதையே அங்குள்ள மக்கள் விரும்புவதாக ஒரு சில அரசியல் வாதிகள் கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கின்ற போதிலும் நேற்றைய நிகழ்வுகள் அதனைப் பொய்யாக்கியுள்ளன.
உணர்வு பூர்வமான இலட்சியப் பயணத்தில் பங்கேற்க கிழக்கு மாகாண மக்கள் இன்னும் தயாராக இருப்பதையே நேற்றைய நிகழ்வுகள் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன.
மிகவும் இறுக்கமான பாதுகாப்புக் கட்டுப்பாடுகளையும் மீறி மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டமையும், பெருமளவான பொதுமக்கள் அதில் ஆர்வம் காட்டியிருந்தமையும் அதனையே பறைசாற்றி நிற்கின்றதாக கூறப்படுகின்றது.
ஆயினும் பாதுகாப்புக் கருதி மாவீரர் தின வைபவங்கள் நடைபெற்ற இடங்களின் விபரம் தவிர்க்கப்பட்டிருக்கிறது.

எமது இலட்சியத்தை அடையும்வரை போராடுவோம்!துணை முதல்வர் ராமசாமி.
நேற்றைய மாவீரர் நாளுக்காக மலேசிய பினாங்கு துணைமுதல்வர் பேராசியர் டாக்டர் பி.இராமசாமி உரையாற்றியிருந்தார். அவர் ஆற்றிய உரையில் தெரிவிக்கப்பட்டதாவது,
இன்று (27.11.2010) மாவீரர் நாள். தமிழீழத் திருநாட்டின் மீட்பிற்காகத் தமது இன்னுயிரை ஈகம் செய்த மாவீரச் செல்வங்களை ஒளிவிளக்கேற்றிக் கௌரவிக்கும் தேசிய நாள்.
‘நான்’, ‘எனது’ என்று பாராமல் தமிழினத்தின் எழுச்சிக்காகவும், தமிழ் மண்ணின் விடிவிற்காகவும் தன்னலமற்று அறப்போர் புரிந்து வீரவரலாறாகிய உத்தமர்களை வாழ்த்தி வணங்கும் திருநாள். தமிழீழத் தாய்நாட்டைக் கட்டியமைக்கும் நோக்கோடு தாயக விடுதலைப் போரில் தம்மை ஆகுதியாக்கியவர்களை நினைவுகொள்ளும் எழுச்சிநாள். ஈழத்தமிழினத்தை அடிமைப்படுத்தும் அன்னிய சக்திகளின் சூழ்ச்சித் திட்டங்களை முறியடித்துத் தனிப்பெரும் சக்தியாகத் திகழும் வீரமறவர்களை மனதாரப் பூசிக்கும் புனிதநாள்.
புலம் பெயர்ந்து வாழும் தமிழீழ உறவுகளே, தமிழ் நாட்டு உடன் பிறப்புக்களே, உலகெலாம் பரந்து வாழும் தமிழ்மக்களே, மாவீரர்களின் இலட்சியக் கனவு நிறைவேறும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம். சிங்களத்துடன் இனிமேலும் சேர்ந்து வாழ முடியாது. சிங்களம் நீதி வழங்கும் என்று நினைப்பது பேதைமை. சிங்கள தேசத்தை நம்பி ஏமாறுவதற்கு உலகத் தமிழினம் தொடர்ந்தும் தயாராக இல்லை. தாயக விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை ஈகம் செய்த முப்பதினாயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்களின் தியாகங்களும் இப்போராட்ட காலத்தில் கொல்லப்பட்ட ஓர் இலட்சத்திற்கும் மேற்பட்ட எமது மக்களின் இழப்புக்களும் ஒவ்வொரு தமிழரின் மனதிலும் விடுதலைத்தீயை மூட்டியுள்ளது.
தமிழினம் தன்னிகரற்ற வலுவாற்றல் மிக்க தனித்துவமான இனம். பண்பாட்டு வாழ்வையும் நீண்ட வரலாற்றையும் கொண்ட இனம். உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் தமிழனின் இதயத் துடிப்பு தமிழீழப் போராட்டத்திற்காகவே இயங்கும். வரலாறு விட்ட வழியில் காலம் இட்ட கட்டளைக்கு அமைவாக எமது இலட்சியத்தை அடையும் வரை போராடுவோம். வரும் சவால்களுக்கு முகம் கொடுப்போம். இடையூறுகளைத் தாண்டிச் செல்வோம், எதிர்ப்புச் சக்திகளை முறியடிப்போம், தாயகத்தின் விடிவிற்காகப் போராடுவோம். விடுதலைப் போரை வலுப்படுத்த உதவும் அனைத்துச் செயற்பாடுகளையும் மேற்கொள்ள தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் வழிகாட்டலில் அணிதிரளுமாறு உலகத் தமிழர்களைக் கேட்டுக்கொள்கின்றேன்.

27 நவம்பர் 2010
மட்டக்களப்பில் ஒலித்தது மாவீரர்நாள் பாடல்!
தென்தமிழீழமான மட்டக்களப்பு நகரின் மத்தியில் அமைந்துள்ள மணிக்கூட்டு கோபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒலிபெருக்கியில் மாலை வேளையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் மாவீரர் தின பாடல்கள் ஒலித்ததால் மட்டு.நகரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மாலை மணி 6.15 அளவில் "கார்த்திகை 27" பாடலும் "சுட்டும் விரலால் சுட்டிக்காட்டு" எனும் பாடலும் சுமார் 10 நிமிடங்கள் வரை ஒலித்தாக மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள சரபவணபாவான் உணவகத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.
வழமையாக மட்டு.மாநகரசபை ஊழியர் ஒருவரே மாலை 6.30 மணி அளவில் வந்து வானொலி செய்திகளை ஒலிபரப்புவதாகவும் ஆனால் இன்று புலிகளின் பாடல் திடீரென ஒலித்ததை இட்டு தாம் அதிர்ச்சியடைந்தாகவும் அவர் கூறினார்.
மேலும், வழமையாக மாலை 6 மணிக்கு மணிக்கூட்டு கோபுரத்தில் வானொலியில் இடம்பெறும் பாடல்கள் ஒலிபரப்பாகுவதால் அருகில் இருந்த சோதனைச் சாவடியில் கடமையில் இருந்த போலீசார் அதனை பொருட்படுத்தவில்லையெனவும் அதன் பின் நகரில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த விசேட அதிரடிப்படையினரே மாவீரர் பாடல் ஒலிபரப்பாகுவதை புதினம் பார்க்க மக்கள் கூடுவதை பார்த்து சந்தேகம் கொண்டு விசாரித்த போதே ஒலிபரப்பாகுவது புலிகளின் பாடல் என தெரியவந்ததாகவும் அதன் பின் படையினரும் பொலிஸாரும் சென்று பாடலை நிறுத்தியதோடு கடுப்பில் அருகில் இருந்த கடை உரிமையாளர்களிடம் கடுமையான முறையில் விசாரணை மேற்கொண்டதாகவும் இச்சம்பவம் தொடர்பில் வெளியில் யாரிடமும் கூற வேண்டாம் என அதிரடிப்படையினர் அச்சுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக மர்மநபர்களினால் ஒலிப்பரப்பட்ட இந்த பாடல்களில் புலிகளின் தலைவர் "பிரபாகரன்" அவர்களின் பெயர் இடம்பெறாமையினால் அதை அருகில் இருந்த பொலிஸார் தமிழ் தெரிந்தும் இனங்காணமுடியாமல் போனதாக கூறப்படுகிறது.
மணிக்கூட்டுக்கோபுரத்தில் ஒலிபெருக்கி பராமாரிப்பாளரை பொலிஸார் விசாரணையின் பின் விடுவித்தாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நாம் அமைதியாக இருப்பது ஏன்?மாவீரர் தின உரையில் புலிகள்.
தமிழீழ தேசிய மாவீர தினத்திற்காக விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயலகம் விடுத்துள்ள மாவீரர் தின அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
மாவீரர்நாள் அறிக்கை!
26-11-2010
தமிழீழம்
எமது அன்புக்கும், மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே,
தேச விடுதலை என்ற அதியுயர் இலட்சியக் கனலை நெஞ்சில் சுமந்து, மரணத்தை வெற்றிகொண்டு, எமது இதயங்களில் நித்திய வாழ்வுபுரியும் மாவீரர்களை நினைவேந்தல் செய்யும் தேசிய மாவீரர் வாரம் இது.
சத்தியத்தை சாட்சியாக வரித்து சத்தியப் போர்புரிந்த எமது மாவீரர்களை நாமனைவரும் பூசிக்கும் தூயஏழல் இது. விடுதலையின் முதல் வித்தாக விழிமூடிய லெப்.சங்கர் என்ற அக்கினிக்குழந்தையின் வழித்தடம் நடந்து சத்திய வேள்வியில் தம்மை ஆகுதியாக்கிய ஆயிரமாயிரம் வீரப்புதல்வர்களையும், வீரப்புதல்விகளையும் தமிழினம் ஆராதிக்கும் இந்த நாட்களில் தனியரசுப் பாதையில் மாவீரர்களின் ஆன்மீக வல்லமை வேண்டி நாமனைவரும் உறுதிபூண்டு நிற்கின்றோம்.
மரணம் என்பது மாவீரர்களுக்கு உரித்தானதன்று. அக்கினிப் பிழம்பாக, தீமைகளைச் சுட்டெரிக்கும் எரிமலையாக தமிழீழ தேசம் முழுவதும் வியாபித்து நிற்கும் மாவீரர்களை சாவு தீண்டுவதில்லை. காற்றோடு காற்றாகவும், கடலோடு கடலாகவும், மண்ணுக்குள் விதையாகவும் நித்தியத் துயில் கொள்ளும் எங்கள் வீரமறவர்கள் சாவை வென்ற சரித்திரநாயகர்கள்.
எமது மாவீரர்களின் வாழ்வும், வரலாறும் வார்த்தைகளுக்கும், வர்ணனைகளுக்கும் அப்பாற்பட்டது. எமது மாவீரர்களின் அடியும், முடியும் எவராலும் அளவிட முடியாதது. எமது பெருந்தலைவனின் வழிகாட்டலில் களமாடி எமது மாவீரர்கள் புரிந்த சாதனைகள் எண்ணிலடங்காதது. அடங்கிக் கிடந்த தமிழினத்திற்கு முகவரியளித்த எமது தேசியத் தலைவரின் எண்ணங்களுக்கு செயல்வடிவம் கொடுத்து எமது மாவீரர்கள் புரிந்த ஈகங்களின் அர்த்தபரிமாணங்கள் மனிதகுல வரலாற்றில் என்றுமே நீடித்து நிலைத்துநிற்கும்.
காலநதியின் ஓட்டத்தில் உலக ஒழுங்கு கட்டவிழ்ந்து செல்கின்றது. புதுப்புது முடிச்சுக்களுடன் கட்டவிழும் உலக ஒழுங்கில் ஓயாத பயணமாக எமது விடுதலைப் போராட்டமும் முடிவின்றித் தொடர்கின்றது. எமது தேசியத் தலைவரின் வழிகாட்டலில் இருபது ஆண்டுகள் இயங்கிய தமிழீழ நடைமுறை அரசு எதிரியால் சிதைக்கப்பட்டு, இருண்ட பூமியாக இன்று எமது மண் மாற்றப்பட்டுள்ளது. அடங்காப்பற்றாக வணங்காது தலைநிமிர்ந்து நின்ற வன்னிமண் இன்று அந்நிய ஆக்கிரமிப்பின் உறை விடமாக அழிவுற்றுக் கிடக்கின்றது. ஈழத்தமிழினத்தின் வரலாற்றுப் பெருமைகூறும் யாழ்ப்பாணமும், திருகோணமலையும், மட்டக்களப்பும், அம்பாறையும் இன்று தமது வரலாற்றுப் பெருமைகளை இடிபாடுகளுக்குள் தொலைத்து நிற்கின்றன.
தமிழினத்தின் வரலாற்று வழிபாட்டுத் தலங்கள் இடிக்கப்பட்டு அங்கெல்லாம் பௌத்த விகாரைகளும், சிங்களப் பண்பாட்டுச் சின்னங்களும் முளைவிடுகின்றன. தமிழ் நிலங்களை புத்தர் சிலைகளும், அந்நிய ஆக்கிரமிப்புச் சின்னங்களும் ஆட்சிசெய்கின்றன. எமது மக்களின் பொருண்மிய வாழ்வும், வளங்களும் அந்நியர்களிடம் விலைபேசப்படுகின்றன. பேச்சுரிமை இழந்து, உயிர்வாழும் உரிமையும் மறுதலிக்கப்பட்டு அழிக்கப்பட வேண்டிய இனம் என்ற வரையறைக்குள் ஈழத்தமிழினத்தை சிங்களம் பகுத்துள்ளது.
யுத்த வெற்றிக் களிப்பில் திளைத்து நிற்கும் சிங்களம், ஆணவத்தின் உச்சத்தில் ஏறிநின்று தமிழீழ மண்ணையும், தமிழீழ மக்களையும், தமிழ் மொழியையும் துடைத்தழிக்கும் வெறிகொண்டு இனவழிப்பை அரங்கேற்றுகின்றது. தென்னிலங்கையில் ராஜபக்ச குடும்பத்தின் காட்டாட்சி நர்த்தனமாட, தமிழீழ தாயகத்தில் சிங்களத்தின் பேயாட்சி தலைவிரித்தாடுகின்றது.
அதியுச்ச படைவலிமையுடனும், ஈவிரக்கமற்ற படைக்கலப் பிரயோகத்துடனும் எமது மக்களைக் கொன்றுகுவித்து எமது தாய்மண்ணை ஆக்கிரமித்த சிங்களம், எமது மாவீரர்கள் நித்தியத் துயில் கொள்ளும் கல்லறைகளையும் விட்டுவைக்கவில்லை. மாவீரர் நினைவாலயங்களை இடித்து வீழ்த்திய சிங்களம், மாவீரர் துயிலும் இல்லங்களை உழுதெறிந்து மாவீரர்களின் உறைவிடங்கள் மீது படைத்தளங்களையும், விமான ஓடுபாதைகளையும் நிறுவிக் குரூரத் திருப்தியடைந்துள்ளது.
துட்டகாமினியின் மறுபிறப்பாக தன்னை முன்னிறுத்தி மகாவம்ச மனவுலகில் முடிசூடியிருக்கும் சிங்கள அதிபர் ராஜபக்ச, தனது மூதாதையரை விஞ்சிய இனவெறியராகத் தன்னை அடையாளப்படுத்துவதில் பெருமிதம் கொள்கின்றார். அன்று எல்லாளனை சூழ்ச்சியால் வெற்றிகொண்ட துட்டகாமினிகூட எல்லாளனுக்கு சமாதியமைத்து தமிழ் மன்னனின் வீரத்திற்கு மதிப்பளித்து நற்பெயர் தேடினான். ஆனால் துட்டகாமினியின் இரத்தவாரிசாகத் தன்னை அடையாளப்படுத்தும் ராஜபக்சவோ மாவீரர்களின் உறைவிடங்களை உழுதெறிந்து பௌத்தத்தின் காவலனாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.
இனவெறிகொண்டு மாவீரர்களின் உறைவிடங்களை சிங்களம் உழுதெறிந்தாலும்கூட, எமது மண்ணுக்குள்ளேயே அந்த வீரமறவர்கள் நித்தியத்துயில் கொள்வதை சிங்களத்தால் தடுக்க முடியவில்லை. எமது தேசத்தை ஆகர்சித்து நிற்கும் மாவீரர்களின் ஆன்மீக வல்லமையை முடக்கவும் இயலவில்லை. கல்லறைகளில் கண்ணீர் சொரிந்து, வாசமலர்களைப் பொழிந்து, மாவீரர்களுக்கு ஈகைச்சுடரேற்றும் எமது மக்களின் உரிமையை ஆயுதவலிமையால் இன்று சிங்களம் தடுத்து நிறுத்தினாலும், தமது இதயங்களில் மாவீரர்களுக்கு எமது மக்கள் அகச்சுடரேற்றுவதை சிங்களத்தால் தடுத்து நிறுத்த முடியவில்லை. உலகெங்கும் ஒரேநேரத்தில் தமிழினம் அணிதிரண்டு அக்கினிப்பிழம்பாக மாவீரர்களைத் தரிசிப்பதையும் சிங்களத்தால் முடக்க இயலவில்லை.
எமது அன்பார்ந்த மக்களே,
வரலாறு காணாத மிகப் பெரும் சோதனையை இன்று ஈழத்தமிழினம் சந்தித்து நிற்கின்றது. போரை வெற்றிகொண்டு அமைதியை நிலைநாட்டியிருப்பதாக உலகிற்குப் பிரகடனம் செய்திருக்கும் சிங்களம், கடந்த ஒன்றரை ஆண்டுகாலப் பகுதியில் எமது மண் மீதும், மக்கள் மீதும் புதிய வடிவில் போர்தொடுத்துள்ளது.
படைக்கல வலிமையில் கடந்த ஆறு தசாப்தங்களாக வெளிப்படையாக சிங்களம் அரங்கேற்றிய தமிழின அழிப்பு என்பது இன்று சத்தம்சந்தடியின்றி நிகழ்ந்தேறுகின்றது. அபிவிருத்தியின் பெயரால் எமது வளங்கள் அந்நியர்களிடம் தாரைவார்க்கப்படுகின்றன. மீள்குடியேற்றத்தின் பெயரால் எமது மண் கபளீகரம் செய்யப்படுகின்றது. அதியுயர் பாதுகாப்பு வலயங்களின் பெயரால் எமது குடிநிலங்கள் வல்வளைப்புச் செய்யப்படுகின்றன. இன நல்லிணக்கத்தின் பெயரால் கடுகதியில் எமது மண்ணில் சிங்களக் குடியேற்றங்கள் வேரூன்றுகின்றன. பௌத்த தர்மத்தின் பெயரால் எமது மக்களின் பண்பாட்டு வாழ்வு சிதைக்கப்படுகின்றது. தன்னாட்சியுரிமைக்கும், அதனடிப்படையிலான தனியரசுக்கும் உரித்தான எமது இனம், சிறுபான்மையினமாக சிறுமைப்படுத்தப்பட்டு எமது மக்களின் பொருண்மிய வாழ்வும், உரி மைகளும் பறிக்கப்படுகின்றன.
மறுபுறத்தில் தனது ஆயுதப் படைகளின் ஆட்பலத்தைப் பெருக்குவதிலும், படைக்கல வலிமையை தக்கவைப்பதிலும் கவனம்செலுத்தித் தனது யுத்தப்பாதீட்டிற்குப் பெரும்தொகையில் நிதியை ஒதுக்கீடு செய்திருக்கும் சிங்களம், தமிழீழ தாயகப் பகுதிகளை முழுஅளவில் படைவலயங்களாகக் கட்டமைத்து வருகின்றது.
இருந்த பொழுதும் தமிழினத்தின் இதயங்களில் தணியாத தாகமாக, அணையாத தீயாகக் கொழுந்துவிட்டெரியும் தமிழீழ தனியரசுக்கான இலட்சியக் கனலை சிங்களத்தால் அணைத்துவிட முடியவில்லை.
எமது பாசத்துக்குரிய மக்களே,
சிங்களம் எக்காளமிடுவது போன்று நாம் அழிந்துவிடவில்லை. எமது இலட்சியப் பயணம் ஓய்வுக்கு வந்துவிடவுமில்லை. காலநதியின் ஓட்டத்திற்கேற்ப, வரலாற்றின் வழிகாட்டலுக்கு இணங்க எமது போராட்ட வடிவம் புதுமெருகூட்டப்பட்டுப் பரிணமித்துள்ளதே தவிர எமது இலட்சியம் மாறிவிட வில்லை.
நாம் போர் வெறியர்கள் அல்ல. நாம் அமைதியை விரும்பும் ஒரு தேசிய இனம். எமது சொந்த மண்ணில், எமது சொந்த மொழியையும், பண்பாட்டையும், பொருண்மிய வாழ்வையும் பேணி உலகின் ஏனைய இனங்களுடன் நல்லுறவைப் பேணி சகவாழ்வு புரிவதற்கே நாம் விரும்புகின்றோம். காலனித்துவ ஏகாதிபத்தியத்திடம் பறிபோய், இன்று சிங்களம் ஆக்கிரமித்திருக்கும் எமது இறையாண்மையை நிலைநாட்டி, எமது சொந்தமண்ணில் தனியரசு அமைத்து எம்மை நாமே ஆட்சிசெய்வதற்கே நாம் விரும்புகின்றோம்.
ஆயுதத்தின் மீது அலாதிப்பிரியம் கொண்டு எமது இனம் ஆயுதப் போர்புரியவில்லை. தந்தை செல்வாவின் வழிகாட்டலில் அறவழி தழுவி அன்று எமது மக்கள் போராடினார்கள். அன்று சமவுரிமை கோரிய எமது மக்கள் மீது குண்டர்களின் அடக்குமுறையை ஏவிச் சிங்களம் கலகம்புரிந்தது. பின்னர் சுயாட்சி கோரி அறப்போரை தீவிரப்படுத்திய எமது மக்கள் மீது ஆயுத அடக்குமுறையை ஏவி அரச பயங்கரவாதத்தை சிங்களம் கட்டவிழ்த்து விட்டது. அறவழியில் எமது உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையிலேயே அன்றைய எமது இளைய தலைமுறை ஆயுதமேந்துவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டது. ஆயுதப் போராட்டத்திற்கான புறச்சூழலை நாம் தோற்றுவிக்கவில்லை. எமது மக்கள் மீது திணிக்கப்பட்ட சிங்கள ஆயுத அடக்குமுறையே எமது இளைய தலைமுறையை தற்காப்புப் பாதையில் ஆயுத மேந்துவதற்கு நிர்ப்பந்தித்தது. எமது தேசத்தின் மீது சிங்களம் ஏவிய வன்முறைப் புயலே எமது விடுதலை இயக்கத்தின் தோற்றத்திற்கும், எழுச்சிக்கும் காலாக அமைந்தது.
இருந்த பொழுதும் அமைதிவழியில் எமது உரிமைகளையும், தேசிய விடுதலையையும் வென்றெடுப்பதற்கு கிடைத்த ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும், ஒவ்வொரு இடைவழியையும் நாம் தவறவிட வில்லை. திம்புவில் இருந்து ஜெனீவா வரை நிகழ்ந்தேறிய ஒவ்வொரு அமைதி முயற்சிகளிலும் நாம் பங்குபற்றினோம். போருக்கு ஓய்வு கொடுத்து அமைதிவழியில் தீர்வு காண்பதற்கு முன்னர் இந்தியப் பேரரசும், பின்னர் நோர்வேயும், இணைத்தலைமை நாடுகளும் அளித்த ஒவ்வொரு வாய்ப்புக்களையும் இதயசுத்தியுடன் நாம் அணுகினோம். இறுதியாக நோர்வேயின் அனுசரணையுடன் இடம்பெற்ற சமாதானப் பேச்சுவார்த்தைகளில் பல விட்டுக்கொடுப்புக்களை எமது மக்களும், நாமும் புரிந்தோம். எமது இலட்சியத்தில் உறுதியாக நாம் நின்ற பொழுதும், உலகின் வேண்டுகைக்கு செவிசாய்த்தும், மதிப்பளித்தும் நெகிழ்வுப் போக்குடன் நாம் நடந்து கொண்டோம்.
எனினும் எமது மக்களின் வாழ்வியல் பிரச்சினைகளைப் புறந்தள்ளிவிட்டு அரசியல் தீர்வு என்ற மாயைக்குள் எமது போராட்டத்தை மழுங்கடிப்பதிலேயே சிங்களம் குறியாக நின்றது. போர்நிறுத்தத்தின் விதிகளை அப்பட்டமாக மீறி எம்மை சீண்டியிழுப்பதற்கு சிங்களம் முற்பட்டது. அரசியலமைப்பு என்ற சட்டகத்திற்குள் நின்றவாறு கடும்போக்கைக் கடைப்பிடித்து பேச்சுவார்த்தைகளுக்கான புறச்சூழலை படிப்படியாக சிங்களம் இல்லாதொழித்த பொழுதுகூட நாம் பேச்சுவார்த்தைகளை முறித்துக் கொள்ளவில்லை. எந்தவொரு விடுதலை இயக்கமும் புரிந்திராத புதுமையாக நாமேயொரு இடைக்கால நிர்வாக வரைபைத் தயாரித்து உலகிற்கும், சிங்கள தேசத்திற்கும் முன்வைத்தோம்.
எமது நெகிழ்வுப் போக்கை தவறாகப் புரிந்து கொண்ட சிங்களம் எம்மால் சமர்பிக்கப்பட்ட இடைக்கால வரைபு பற்றிப் பேச மறுத்தது. ஒட்டுக்குழுக்களைக் கட்டமைத்து எமக்கு எதிராக நிழல் யுத்தத்தை தொடுத்தது. இருந்த பொழுதும் போர்நிறுத்த உடன்படிக்கையை நாம் முறித்துக் கொள்ளவில்லை. சமாதானத்தின் மீது கொண்ட எமது பற்றுறுதியை வெளிப்படுத்தும் நிமித்தம் உலகின் அழைப்பிற்கு மதிப்பளித்து ஜெனீவா பேச்சுவார்த்தைகளில் நாம் பங்குபற்றினோம்.
எனினும் பேச்சுவார்த்தைகளில் காணப்பட்ட இணக்கப்பாட்டிற்கு முரணாக எமது தேசத்தின் மீது அறி விக்கப்படாத யுத்தத்தை சிங்களம் தொடுத்தது. பேசித்தீர்க்க வேண்டிய மாவிலாறு நீர்ப் பிரச்சினையைப் பூதாகரப்படுத்தி எமது மண் மீது நில ஆக்கிரமிப்புப் போரை சிங்களம் ஏவிவிட்டது. ஈற்றில் போர்நிறுத்த ஒப்பந்தத்தையும் சிங்களம் கிழித்தெறிந்தது.
ஆயுதப் போராட்டமும், போரும் நாம் விரும்பியேற்ற தெரிவுகளல்ல. இவையிரண்டும் எம்மீது திணிக்கப்பட்டவை. வன்னிப் போர் உக்கிரமடைந்த பொழுதுகூட போர்நிறுத்தம் செய்வதற்கான பற்றுறுதியை மீண்டும் மீண்டும் நாம் வெளிப்படுத்தினோம். எமது மக்களுக்காகத் தமது உயிரை வேலியாக்கிக் களமாடிய எமது வீரர்கள், மக்களுக்காக எந்தவொரு அதியுச்ச ஈகத்தையும் புரிவதற்குத் தயாராகவே இருந்தார்கள். அந்நிய ஆக்கிரமிப்பால் எமது நிலப்பரப்பு சுருங்கிய பொழுதுகூட மக்களைக் காத்து, மக்களின் துயர்துடைப்பதற்காகவே எமது வீரர்கள் அரும்பணி புரிந்தார்கள். எமது மக்களுக்காக உயிரையே ஈகம்செய்யத் துணியும் எமது விடுதலை இயக்கம், எமது மக்களின் பாதுகாப்பை உலகம் பொறுப்பெடுக்கும் என்ற நம்பிக்கையில் முள்ளிவாய்க்காலில் அதியுயர் ஈகங்களைப் புரிந்தார்கள்.
எமது அன்பார்ந்த மக்களே,
போராட்ட இலட்சியத்தைக் கைவிட்டு சிங்களத்திடம் நாம் மண்டியிடவில்லை. எமது மக்களின் உரிமைகளைக் காற்றில் பறக்கவிட்டு சலுகைகளுக்காக சிங்களத்தை நாம் யாசிக்கவுமில்லை. மென்வழி தழுவி எமது மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கும், எமது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் உலக சமூகம் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு வாய்ப்பளித்தே கடந்த ஒன்றரை ஆண்டாக ஒருதலைப்பட்சமான முறையில் நாம் அமைதியைப் பேணி வருகின்றோம்.
நாம் எடுத்திருக்கும் இந்தத் தெரிவு மிகவும் கடினமானது. நோர்வே அரசின் அனுசரணையுடன் இடம்பெற்ற சமாதானப் பேச்சுவார்த்தைகளில் நாம் புரிந்த விட்டுக்கொடுப்புக்களை விட இது உன்னதமானது. அக்காலப் பகுதியில் நாம் சந்தித்த இழப்புக்களை விட இது அதிக அளவிலானது.
முள்ளிவாய்க்கால் போரில் எமது மக்களைப் பாதுகாப்பதற்காக நிராயுதபாணிகளாகப் பேசச் சென்ற எமது அரசியல் போராளிகளை நயவஞ்சகமான முறையில் சிங்களம் படுகொலை செய்தது. களத்தில் விழுப்புண்ணெய்தி குற்றுயிராகத் துடித்த எமது போராளிகளை சிங்களம் சிறைப்பிடித்தது. உலகை நம்பி முள்ளிவாய்க்கால் கடலோரத்தில் காத்துநின்ற எமது மக்களை வகைதொகையின்றி சிங்களம் நரபலிவேட்டையாடியது. எஞ்சிய மக்களை விலங்குகளை விடக் கேவலமான முறையில் வதைமுகாம்களில் அடைத்துக் கொடும்வதை புரிந்தது. எமது பெண்கள் மீது பாலியல் வன்கொடுமை ஏவிவிடப்பட்டது. முள்வேலி முகாம்களுக்குள் எமது மக்கள் சந்தித்த துயரங்கள் வார்த்தைகளில் விபரிக்க முடியாதவை. அவலங்கள் அளவிட முடியாதவை. உலகின் மனச்சாட்சி மீது நம்பிக்கை கொண்டு, மென்வழி தழுவி நின்ற எமது மக்களுக்கு சன்மானமாக சாவையே சிங்களம் பரிசளித்தது.
இருந்த பொழுதும் உலகின் மனச்சாட்சி மீதும், தர்மத்தின் மீது நாம் நம்பிக்கை இழந்து விடவில்லை. எமது மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கும், எமது சொந்த மண்ணில் தமிழீழத் தனியரசை அமைத்து நாம் வாழ்வதற்கும் உலகம் வழிசமைக்கும் என்று நாம் நம்புகின்றோம். பொறுமையின் எல்லைக்கு இன்று எமது தேசத்தை சிங்களம் இட்டுச்சென்றாலும்கூட உலகின் நீதியான அணுகுமுறை மீதான எமது நம்பிக்கை தளர்ந்துவிடவில்லை.
எமது தேசத்தின் தனியரசு உரிமையை உலக சமூகம் பகிரங்கமாக ஏற்க மறுத்தாலும்கூட, எமது மக்களின் அரசியல் உரிமைகளுக்காக அடிக்கடி உலகத் தலைவர்கள் குரல்கொடுப்பது எமக்கு ஆறுதலை அளிக்கின்றது. எமது தேசத்தின் மீது இனவழிப்பை சிங்களம் கட்டவிழ்த்து விட்டிருப்பதை ஒப்புக்கொள்வதற்கு உலக சமூகம் பின்னடித்தாலும்கூட, போர்க்குற்றங்கள் பற்றி உலகத் தலைவர்கள் பேசுவது எமக்குத் தென்பூட்டுகின்றது. இந்த வகையில் ஈழத்தீவில் தமிழினத்தை வேரோடு துடைத்தழிக்கும் இனவழித்தொழிப்பு நிகழ்ச்சித் திட்டத்தை கடந்த ஆறு தசாப்தங்களாக நடைமுறைப்படுத்தி வரும் சிங்களத்திடமிருந்து இனியும் எந்தவொரு அரசியல் தீர்வையும் தமிழினம் எதிர்பார்ப்பது அபத்தமானது என்பதைப் புரிந்து கொண்டு, நீதியின்பால் நின்று எமது தேசத்தின் அரசியல் சுதந்திரத்திற்கு உலகத் தலைவர்கள் வழிவகை செய்வார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.
சிங்கள தேசத்திற்கு உரித்தான மண்ணைப் பிரித்தெடுத்து அரசமைப்பதற்கு நாம் முற்படவில்லை. அன்றி பயங்கரவாத வெறிகொண்டு நாம் பிரிவினைவாதம் பேசவுமில்லை. நாம் பயங்கரவாதிகளோ அன்றி இனச்சுத்திகரிப்பை சித்தாந்தமாகக் கொண்ட பிரிவினைவாதிகளோ அல்லர். நாம் எமது மக்களின் அரசியல் உரிமைகளுக்காக, அரசியல் சுதந்திரத்திற்காக, ஐக்கிய நாடுகள் சபையும், உலகின் வளர்ச்சியடைந்த தாராண்மைத்துவ நாடுகளும் போற்றிப்பேணும் தேசிய தன்னாட்சியுரிமையின் அடிப்படையில் எமது தேசத்தின் இறைமையை நிலைநாட்டுவதற்காகப் போராடும் ஒரு தேசிய விடுதலை இயக்கம்.
இந்த மெய்யுண்மையைப் புரிந்து கொண்டு எமது தேசத்தின் தன்னாட்சியுரிமையை அங்கீகரித்து, தமிழீழத் தனியரசுக்கான புறநிலைகளை தோற்றுவித்து எமது மக்களின் விடிவிற்கு வழிவகை செய்யுமாறு உலக சமூகத்திற்கு நாம் அறைகூவல் விடுக்கின்றோம். இதேநேரத்தில் எமது மக்கள் மீது இனவழிப்புப் போரைத் திணித்த சிங்கள ஆட்சியாளர்களை போர்க்குற்றவாளிகளாக்கித் தண்டிக்குமாறும் உலக சமூகத்தை நாம் வலியுறுத்துகின்றோம்.
முள்ளிவாய்க்கால் போரில் நயவஞ்சகமான முறையில் சிறைப்பிடிக்கப்பட்ட எமது போராளிகளையும், எமது விடுதலை இயக்கத்திற்கு உறுதுணை நின்ற மக்களையும் கண்காணாத இடங்களில் சிங்களம் சிறைவைத்துள்ளது. இதேபோன்று பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழும், அவசரகால நடைமுறை யின் கீழும் வகைதொகையின்றி கைதுசெய்யப்பட்ட எமது மக்களை நீதிவிசாரணைகள் இன்றி சிங்களம் சிறைவைத்துள்ளது. நீதிக்குப் புறம்பான முறையில் சிங்களம் சிறைவைத்துள்ள போர்க்கைதிகளையும், அரசியல்கைதிகளையும் நிபந்தனையின்றி விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உலக சமூகத்தை நாம் வேண்டி நிற்கின்றோம்.
உலக சமூகத்தின் நீதியான அணுகுமுறை மீது நம்பிக்கை கொண்டு நிற்கும் எமது மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு காலம் தாழ்த்தாது எமது தேசத்தின் அரசியல், சமூக, மனித உரிமைகளை உறுதிசெய்வதற்கான காத்திரமான நடவடிக்கைகளை உலகத் தலைவர்கள் எடுப்பார்கள் என்பதில் எமக்கு அசையாத நம்பிக்கையுண்டு.
இத்தருணத்தில் எமது தேசிய விடுதலைப் போராட்டத்தின் பெரும்தூணாக விளங்கும் புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களை தமது தேசியப் பணியைத் தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு உரிமையுடன் நாம் கோருகின்றோம்.
தாய்மண்ணை விட்டுத் தொலைதூரம் புலம்பெயர்ந்தாலும், தமிழீழ தாயகத்திலேயே ஒவ்வொரு புலம்பெயர்வாழ் தமிழர்களின் வேரும் ஆழப்பதிந்து நிற்கின்றது. தாயக மண்ணைவிட்டுப் பிரிந்த வலியை நன்கு உணர்ந்தவர்கள் என்ற வகையில், தமிழீழ தேச விடுதலைக்காக ஓயாது குரலெழுப்பி உலக சமூகத்தின் மனச்சாட்சியை தட்டியெழுப்பித் தேச விடுதலையை வென்றெடுக்கும் பொறுப்பு இன்று ஒவ்வொரு புலம்பெயர்வாழ் தமிழரையும் சார்ந்துள்ளது.
இதுவரை காலமும் எமது விடுதலைப் போராட்டத்தையும், மக்களையும் தாங்கிநின்ற புலம்பெயர்வாழ் உறவுகள், தொடர்ந்தும் எமது தாயக உறவுகளுக்கான மனிதநேய உதவிகளை வழங்கி, அவர்களின் அவலங்களைத் துடைத்து, இயல்புவாழ்வை தோற்றுவிப்பதற்கான பணிகளை தொடருமாறு வேண்டுகின்றோம்.
சோதனைகள் மிகுந்த இன்றைய காலகட்டத்தில் புகலிட உறவுகளைப் போன்று எமது மக்களின் விடிவிற்காக அயராது குரலெழுப்பும் தமிழகத் தலைவர்களுக்கும், எமது தொப்புள்கொடி உறவுகளாகிய தமிழக உறவுகளுக்கும் எமது நன்றிகளை உரித்தாக்குகின்றோம். காலத்தின் தேவையறிந்து காலம்காலமாக எமது தொப்புள்கொடி உறவுகள் புரியும் தார்மீக உதவி தமிழீழ தேசத்தின் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதியப்பட வேண்டியது. எமது போராட்டத்திற்கான இந்தியப் பேரரசின் தார்மீக ஆதரவைப் பெற்றுத்தரும் பணியை தமிழக உறவுகள் தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும் என்று நாம் உரிமையுடன் கோருகின்றோம்.
சத்திய இலட்சியத்தை உயிர்மூச்சாக வரித்துக் கொண்ட எமது மாவீரர்களின் ஆன்மீக வல்லமை மகத்தானது. அந்த சரித்திரநாயகர்களை நினைவுகூரும் மாவீரர் வாரத்தின் இறுதி நாளாக முகிழ்க்கும் தமிழீழ தேசிய மாவீரர் நாளாகிய நவம்பர் 27ஆம் நாளன்று உலகத் தமிழினத்தை அணிதிரண்டு மாவீரர்களுக்கு ஈகைச்சுடரேற்றுமாறு உரிமையுடன் அழைப்பு விடுக்கின்றோம். அன்றைய நாளில் அந்நிய ஆக்கிரமிப்பில் சுடரேற்றும் வாய்ப்புக்கள் மறுதலிக்கப்பட்ட எமது உறவுகளை தமது இதயங்களில் அகச்சுடரேற்றி மாவீரர்களை நினைவுகூருமாறு அழைப்பு விடுக்கின்றோம்.
எத்தனை தடைகளை எதிர்கொண்டாலும், எத்தனை இடர்களுக்கு ஆளானாலும் எம்தலைவனின் வழிகாட்டலில், மாவீரர்களின் இலட்சியப் பாதையில் பயணித்து தமிழீழத் தனியரசை நிறுவுவோம் என உறுதிபூணுவோமாக.
நன்றி.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
அனைத்துலகத் தொடர்பகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.

வடக்கில் சிங்களவர் குடியேறுவதில் தவறில்லை என்கிறார் மகிந்த!
கொழும்பில் தமிழ், முஸ்லிம் மக்கள் ஆதிக்கம் செலுத்த முடியுமானால் வடக்கில் சிங்கள மக்கள் குடியேறுவதை தவறு என எப்படிக் கூறமுடியும் என தமிழ்க் கட்சிகளின் அரங்கத்திடம் மகிந்த ராஜபக்ச கேள்வி எழுப்பி உள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை நண்பகல் தமிழ்க்கட்சிகளின் அரங்கம் ஜனாதிபதியைச் சந்தித்தபோதே ஜனாதிபதி இவ்வாறு கேள்வி எழுப்பியதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் சார்பில் பங்குபற்றிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் கலாநிதி என்.குமரகுருபரன் தெரிவித்தார். இச் சந்திப்புத் தொடர்பாக மேலும் கூறுகையில்,
வடக்கில் இராணுவக் குடியிருப்புக்கள் அமைக்கப்படுவது குறித்து தமிழ்த் தேசிய விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் எம்.கே. சிவாஜிலிங்கம் சுட்டிக்காட்டினார். அதற்கு பதிலளித்த ஜனாதிபதி, கொழும்பில் தமிழ் முஸ்லிம் மக்கள் ஆதிக்கம் செலுத்த முடியும் என்றால் வடக்கில் சிங்கள மக்கள் குடியேறுவதை எப்படித் தவறு எனக் கூறமுடியும் என ஆக்ரோஷமாக கேள்வி எழுப்பினார்.அத்துடன் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வடக்கிலுள்ள இராணுவ முகாம்களை அகற்ற முடியாது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
ஆனால் சிறு குற்றங்களுக்காக சிறைச்சாலைகளிலுள்ள தமிழ்க் கைதிகள் தொடர்பான வழக்குகளை துரிதப்படுத்தி அவர்களின் விரைவான விடுதலைக்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சட்டமா அதிபருக்கு தான் உத்தரவிடுவதாக தமிழ்க் கட்சிகளின் அரங்கத்திற்கு ஜனாதிபதி வாக்குறுதி அளித்தார் என்றார்.

தலைவர் பிறந்தநாள் மதுரையில் கேக் வெட்டி கொண்டாட்டம்!
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் பிறந்த நாளை கொண்டாடக் கூடாது என்று பொலிஸார் தடுத்ததால் அவர்களுக்கும் மதுரை வக்கீல்களுக்கும் இடையே கடும்வாதம் நடந்தது.
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு நேற்று 56 வது பிறந்த நாளாகும். இதையடுத்து மதுரை மாவட்ட கோர்ட் வளாகத்திற்குள் வக்கீல்கள், மனோகரன் தலைமையில் கேக் வெட்டி இனிப்புகளை வழங்கினர்.
மேலும் நீதிமன்ற வளாகத்திற்குள் கொடிகள், தோரணங்களையும் கட்டினர். இதையடுத்து உள்ளே புகுந்த பொலிஸார், இதெல்லாம் செய்யக் கூடாது என்று எச்சரிக்கை விடுத்தனர்.
ஆனால் அதற்கு வக்கீல்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது கோர்ட், எங்களது இடம், இங்கு எதை செய்ய வேண்டும், கூடாது என்பதை பொலிஸார் சொல்லக் கூடாது என்று வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து மோதல் மூளும் சூழல் ஏற்பட்டது.
இதுகுறித்து பொலிஸ் தரப்பில் கூறுகையில், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் கடந்து ஆண்டு பிரபாகரன் பிறந்தநாளை வக்கீல்கள் கொண்டாடினர். அவர்களைப் பொலிஸார் கைது செய்தனர். அதேபோல இங்கு பிறந்த நாள் கொண்டாடிய வக்கீல்களும் கைது செய்யப்படுவர் என்றனர்.
அதேவேளை, தேசியத்தலைவர் பிறந்த நாளையொட்டி திருச்சிராப்பள்ளி மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் நீதிமன்ற வளாகத்தில் இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.

26 நவம்பர் 2010
வரலாறு தந்த வல்லமைக்கு வயது ஐம்பத்தாறு!
வானமே,வையகமே,தமிழீழத் தாயகமே,இன்று நீ மடிசுமந்து பெற்ற உன் தவப் புதல்வனின் பிறந்தநாள். பெற்றதாய் குழந்தையைப் பேணுவதுபோல் உனைப் பேணிக்காத்த வேங்கைகள் தலைவனின் பிறந்தநாள்.
ஆண்டாண்டு காலமாக அடிமைகளாக்கப்பட்டு, அடக்கியொடுக்கப்பட்ட இனத்தின் தீராத தலைவிதியை மாற்றியமைக்க முதலடிவைத்து முன்நின்ற எங்கள் தேசியத் தலைவனே நீ வாழ்க.
கத்தியின் முனையாலும்,புத்தியின் துணையாலும்,மண்ணின் பாரத்தை மனதில் சுமந்து,முன்நின்று முகம்காட்டிய மூதறிஞனே நீ வாழ்க.
பால் புளித்தாலும்,ஞாயிறு இருண்டாலும்,மறைநெறி திரிவுற்றாலும்,உலகமே நிலை பிறழ்ந்தாலும்,தன் சொல் பிறழாது,கடமையினின்று சற்றும் தவறாத வீரத் தமிழனே நீ வாழ்க.
உன்நெஞ்சில் வஞ்சமில்லை,உன் நேசத்தில் பஞ்சமில்லை,நீ செய்திட்ட பணியெல்லாம் செந்தமிழர் வாழ்வதற்கே. உனை ஊர் கூடித்தேரிழுக்கும்,உலக தெய்வங்கள் உன் வாசல் தேடிவந்து வாழ்த்துரைக்கும்.
எங்கள் துன்பக்கடலை கடக்கவல்ல தோணியே,இனவெறிகொண்ட சிங்களத்தை எதிர்த்து நின்ற பேராயுதமே,தாயின் மணிவயிற்றில் கருவாக இருக்கும்போது,எல்லாளன் கதையைக்கேட்டு,அவன்போல் தமிழ் வீரனாகியவன் நீ. பசியெனத்தோன்றுவோர் பகைவர்களாயினும் புசியெனச்சொன்ன ஈழத்தாயின் இணையற்ற வீரனே,ஓர் கண்ணியமான இனத்தின் காவலனே நீ வாழ்க.
புத்தனின் அமைதியும்,போதிமரத்தின் புனிதமும் ஈழத்தமிழனின் குருதியில் சிதறியபோது,தமிழர்கள் அடங்கியொடுங்கும் ஆட்டுமந்தைகள் அல்ல,ஆண்ட பரம்பரையின் அக்கினிக் குஞ்சுகள் என்றுகாட்ட,தமிழீழ மீட்புப்பணியெனும் இலட்சியத் தீக்குள் நின்று சமராடிய வீரப்புதல்வனே நீ வாழ்க.
என்குடும்பம்,என்சாதி,என்சுற்றம்,என்மதம் என்ற வட்டத்திலிருந்து வெளிவந்து, இரத்த உறவைவிட இலட்சிய உறவே உயர்ந்தது என்று அனைவர்க்கும் பாடம் புகட்டிய எங்கள் தலைவனே, நெருப்பும் உன் நேர்மையைப் புகழும். நீ ஏந்திய விளக்கில் எண்ணையாய் எரிபவனே, நீ மனிதம் சிதைக்கப்பட்ட ஈழத்தமிழ் மக்களின் உரிமைக்காக உனை அர்ப்பணித்த சமூகமாற்றச் சக்தி.
உலகிலுள்ள எந்தப் பலமான அரசும் தோற்கடிக்கப்படலாம்,அல்லது அழிக்கப்படலாம். இது அந்தநாட்டை,எத்தனைநாடுகள்,எவ்வளவு காலமாக, என்னென்ன வழிகளில் சுற்றிவளைக்கின்றன என்பதைப்பொறுத்ததே.
காலில் ஈரம் படாமல் கடலைக்கடக்கலாம், ஆனால் கண்ணில் ஈரம்படாமல் சுதந்திரம் அடையமுடியாது. நதிகள் ஒன்றாகச்சேர்ந்து பேராறாகும்போது வலிமைபெறுகின்றுது, அது இயற்கை தந்த பாடம். அடம்பன் கொடியும் திரண்டால் முடுக்கு, இது மூதாதையரின் வாக்கு.
கார்மேகம் கதிரவனை மறைப்பதுபோல் இன்று நீ மறைந்து நின்றாலும், நாளை நீ தோன்றுகையில் ஈழத்தின் இருள்நீங்கி விடியல்பிறக்கும். எங்கள் சுதந்திரம் பூமியில் சுடர்விடும். விடிவெள்ளி பூக்கும், வீதியிருள் நீங்கும். தமிழர் வாழ்விலே புதுப்புனலாக, பொன்னருவியாக, தேன்தென்றலாக, தெம்மாங்கு பாடலாக தமிழீழம் எமைத் தாலாட்டும். அந்தநாள் வெகு தொலைவிலில்லை.
எங்கள் தலைவனே என்றும் நீ வாழ்க, சுதந்திரத் தமிழீழம் பெற்று வாழ்க.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

புலிகளின்குரல் மாவீரர் நாள் சிறப்பு ஒலிபரப்பு.
தமிழீழத்தின் தேசியக்குரலாக ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கும் 'புலிகளின் குரல்' வானொலியின் மாவீரர் நாள் சிறப்பு ஒலிபரப்புக்கள் கார்த்திகை 26-27ம் நாட்களில் உலகம் முழுவதும் ஒலிக்கும் வண்ணம் எமது நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
மதிப்புக்குரிய தமிழீழ மக்களே!, தமிழக மக்களே!, தமிழ்பேசும் எம்முறவுகளே!
தமிழீழத்தின் தேசியக்குரலாக ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கும் புலிகளின் குரல் வானொலியின் மாவீரர் நாள் சிறப்பு ஒலிபரப்புக்கள் கார்த்திகை 26-27ம் நாட்களில் உலகம் முழுவதும் ஒலிக்கும் வண்ணம் எமது நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
அந்த வகையில் எமது அதிகாரபூர்வ இணையத்தளமான www.pulikalinkural.com ஊடாகவும், ஐரோப்பா, ஆசியா, மத்திய கிழக்கு நாடுகளில் செய்கோள் ஊடாகவும் 24மணி நேரமும் நீங்கள் எமது ஒலிபரப்புகளைக் கேட்கலாம்,
செய்கோள் விபரம்:
Name : Tamilarkural
Satellite : Hotbird 13
Frequency : 10815
Polarization : Horizontal
Symbol Rate : 27500
Fec : 5/6
Broadcast : Digital Free-Air
அதே போன்று, தமிழீழம், இலங்கை, இந்தியா, மற்றும் அனைத்து ஆசியா நாடுகளிலும் சிற்றலையூடாக எமது ஒலிபரப்புக்கள் ஒலிக்கவுள்ளன.
வெள்ளி 26 மற்றும் சனி 27 நாட்களில் தாயக நேரம் பிற்பகல் 3.30மணி தொடக்கம் 7.30 மணி வரையும், 17880kHz என்ற சிற்றலை அலைவரிசையில் ஆரம்பித்து, இரவு 7.30 மணி தொடக்கம் 8.30 மணிவரையும் 6230kHz என்ற அலைவரிசையில் தொடர்ந்து ஒலித்து, பின்னர் இரவு 8.30 மணி தொடக்கம் 9.30 வரை 13860kHz என்ற அலைவரிசையில் ஒலித்து மாவீரர் நாள் சிறப்பு ஒலிபரப்புக்கள் சிற்றலையில் நிறைவடையும்.
எமது தேசிய மாவீரர் நாள் ஒலிபரப்புகளை மேற்குறிப்பிட்ட வழிமுறைகள் ஊடாக நீங்கள் கேட்கலாம்.
இவ்வண்ணம்
புலிகளின்குரல் நிறுவனம்
அனைத்துலக ஒலிபரப்பு
25.11.2010

25 நவம்பர் 2010
மாவீரர் நாள் செய்திகளை பிரசுரிக்க கூடாதென எச்சரிக்கை!
யாழ் குடாநாட்டில் விடுதலைப் புலிகளது மாவீரர் தினம் தொடர்பான செய்திகளைப் பிரசுரிக்கக் கூடாதென உள்ளுர் ஊடகங்கள் அனைத்தும் அச்சுறுத்தப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. உள்ளுர் ஊடகங்களுக்கு இன்றிரவு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்ற கடிதம் ஒன்றிலேயே இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
மாவீரர் தினம் தொடர்பான செய்திகளைப் பிரசுரித்தால் நாளிதழ்களின் அலுவலகங்கள் தீக்கிரையாக்கப்படும் எனவும் அச்சுறுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் பின்னணியில் உள்ளவர்கள் பற்றிய தகவல்கள் எவையும் வெளியாகவில்லை. கடந்த காலங்களிலும் இதேபோன்று மாவீரர்தினம் தொடர்பான செய்திகளை பிரசுரிக்கக் கூடாதென அச்சுறுத்தப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

வடக்கில் சிங்களம் திணிக்கப்படுவதால் தமிழ் கலாச்சாரத்திற்கு ஆபத்து!
வடக்கில் சிங்களம் பலவந்தமாகத் திணிக்கப்படு வதால் தமிழ் மக்களின் கலாசாரத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தமிழ் மக்களின் வரலாற்றுச் சின்னங்கள் அழிக்கப்படுவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இது ஓர் இனவாத வரவு செலவுத்திட்டம் என குறிப்பிட்டுள்ளார். கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக காலத்துக்குக் காலம் நடத்தப்பட்ட தமிழினத்துக்கு எதிரான தாக்குதல்கள் மூலமான உயிரிழப்புகள், சொத்தழிப்புகள், சொத்துக்களைச் சூறையாடல், தமிழ் மக்களின் நிலங்கள் ஆக்கிரமிப்பு, ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களின் வரைமுறையற்ற கைதுகள், கொலைகள், உயர் கல்வி வாய்ப்பு பறிப்பு, உத்தியோக பறிப்பு என உடல் ரீதியாகவும், உளரீதியாகவும், கலாசார ரீதியாகவும் பல முனைகளில் தமிழ் இன ஒழிப்பை நிகழ்த்தி வந்த சிங்கள ஆட்சியாளர்கள், தமிழ் வேகப்படுத்தும் வேலைத்திட்டத்தை பயங்கரவாதத்துக் கெதிரான யுத்தம் என்ற போர்வையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக செயற்படுத்தி வருகின்றனர்.
இன்று வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தலைமையை உதாசீனம் செய்து, நிர்வாக அதிகாரிகளின் சுதந்திர மானதும் சட்டபூர்வமானதுமான செயற்பாடுகளைத் தடுத்து, இனவெறியூட்டப்பட்ட இராணுவத்தின் துணையுடன் தமிழ் இனஅழிப்பு நடவடிக்கையை அதிவேகப்படுத்தும் செயற்திட்டத்தை அபிவிருத்தி என்ற பெயரால் இந்த அரசு செயற்படுத்தி வருகிறது. இங்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் வரவு செலவுத் திட்டமானது தமிழ் இன அழிப்பு செயற்றிட்டத்தை நாசூக்காகவும் தாக்கமாகவும் நடை முறைப்படுத்துவதற்கேற்ற வகையில் தயாரிக்கப்பட்டுள்ளமை துலாம்பரமாக வெளிப் படுத்துகிறது எனவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.

மாவீரர் நாள் நிகழ்வுகள் கட்டாரிலும் நடைபெறுகிறது!
மத்திய கிழக்கில் முதன்முறையாக மாவீரர் நாள் அனுஷ்டானங்கள் இம்முறை கொண்டாடப்படவுள்ளதாக தெரிய வருகின்றது.
இலங்கையிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான கட்டார் சென்றுள்ள தமிழ் பேசும் வாலிபர்கள் சிலர் மத அடையாளங்களுக்கு அப்பால் ஒன்றிணைந்து அதனை ஏற்பாடு செய்துள்ளதாக கட்டாரிலிருந்து எமது விசேட செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
முற்றுமுழுதான அரபு நாடான கட்டாரில் இம்முறை பகிரங்க இடங்களில் மாவீரர் வாரத்தை அனுஷ்டிப்பதற்கு அழைப்பு விடுக்கும் தமிழ் மொழியிலான சுவரொட்டிகள் மற்றும் ஏனைய வழிகளிலான அறிவித்தல்கள் என்பன காட்சிப்படுத்தப்படுவதாக எமது விசேட செய்தியாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
கட்டாரின் பிரபல முஸ்லிம் முக்கியஸ்தர்கள் மற்றும் அல்ஜசீரா தொலைக்காட்சி ஊழியர்கள் உள்ளிட்ட இன்னும் பல ஊடகவியலாளர்களும் அதற்கான ஆதரவை வழங்கியுள்ளனர்.
அல்ஜசீரா தொலைக்காட்சியின் ஊடாக அதன் செய்தியாளர் நாதியா பேகம் வழங்கிய நடுநிலையான செய்திகளின் காரணமாக தற்போதைய நிலையில் கட்டார் மக்களில் பெரும்பாலானவர்கள் இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள் குறித்து நன்கறிந்தவர்களாக உள்ளனர்.
அதன் காரணமாக எதிர்வரும் காலங்களில் இலங்கைத் தமிழ்- முஸ்லிம் மக்களின் அரசியல் போராட்டங்களுக்கு ஆதரவு வழங்கவும் கட்டார் ஊடகவியலாளர்கள் சிலர் முன்வந்துள்ளனர். அத்துடன் தற்போதைக்கு அரபு மொழி ஊடகங்களில் அது தொடர்பான கட்டுரைகளும் வெளியாகத் தொடங்கியுள்ளன.

24 நவம்பர் 2010
ஐரோப்பா மாவீரர் நாள் விபரங்கள்.
ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் மாவீரர் நாள் நிகழ்வுகளின் விபரங்களில் எமக்கு கிடைத்தவற்றை இங்கு தருகிறோம்.
எமது மாவீரர்களின் கல்லறைகளை சிதைக்கலாம், அவர்களின் துயிலுமில்லங்களை தரைமட்டமாக்கலாம் ஆனால் அவர்களின் ஆத்மாவில் இருந்து எழும்பிய அந்த விடுதலை வெறி ஒவ்வொரு தமிழனின் ரத்தத்தில் உறைந்துள்ளது என்பதை உலகிற்கு உணர்த்துவோம்.
சத்திய இலட்சியத்திற்காக மரணித்த எமது மாவீர செல்வங்களை நவம்பர் 27 இல் நினைவு கொள்வதோடு மட்டும் நின்று விடாமல் அந்த வீரவேங்கைகளின் கனவை நிறைவாக்க இறுதி வரை நாம் தொடர்ந்து போராடுவோம் என உறுதி எடுத்துக் கொள்ளுவோம்.
இம்முறை மாவீரர் நாள் சிங்கள அரசிற்கு மட்டுமன்றி தமிழ் மக்களை ஏமாற்றும் அனைவருக்கும் ஒரு பாடமாக அமையட்டும். எமக்குள் என்ன கருத்து வேறுபாடு இருப்பினும் மாவீரர்கள் எனும் ஒரு சொல்லில் ஒன்றுசேருவோம்.
பணமோ! பொருளோ தேவையில்லை. மலர் கொண்டு மட்டும் மாவீரர்களை வணங்கினால் போதும். மாவீரர்களுக்காகவும் அவர்கள் செய்த தியாகத்திற்காகவும் ஏதேனும் செய்ய நினைத்தால் அதை தாயகத்தில் நேரடியாகவே ஊரில் உள்ள உங்கள் உறவுகள் மூலம் அங்குள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்யுங்கள். அதுவே மாவீரர்களுக்கு நீங்கள் செய்யும் உண்மையான காணிக்கையாகும். இவ்வாறு செய்வதால் உங்கள் உதவிகள் இடைத் தரகர்களிடம் தங்கிடாது முழுமையாக அவர்களை சென்றடைவதோடு உங்களுக்கும் திருப்தி உண்டாகும்.
பணங்களை தேவையில்லாது செலவளிக்காது அதை அவதியுறும் எம் உறவுகளுக்காக பயன்படுத்துவோம். மாவீரர் நாளில் ஒன்றிணையும் நாம் அனைவரும் தமிழீழம் மீட்கும் வரையாவது ஒற்றுமையாக இணைந்திருந்து அதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்போம்.

இலங்கையின் அணுகுமுறைகளுக்கு பான் கீ மூன் எதிர்ப்பு!
மனிதாபிமான நடவடிக்கைகள் குறித்து இலங்கை அரசாங்கம் பின்பற்றி வரும் கொள்கைகளுக்கு ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
மனிதாபிமான நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் கடைபிடிக்கும் சில கொள்கைகள் திருப்தி அடையக் கூடிய வகையில் அமையப் பெறவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆயுதப் போராட்டங்களின் போது பொதுமக்களை பாதுகாப்பது தொடர்பில் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவை வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயங்களை அவர் தெரிவித்துள்ளார்.
மனிதாபிமான அடிப்படையில் தொண்டுகளை மேற்கொண்டு வரும் நிறுவனங்களும், தன்னார்வ தொண்டர்களும் இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளினால் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மனிதாபிமான தொண்டுகளை மேற்கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் கூடுதலான ஆதரவினை வழங்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
2010ம் ஆண்டின் முதல் அரையாண்டுப் பகுதியில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மனிதாபிமான தொண்டுகளை மேற்கொள்வது தொடர்பான கட்டுப்பாடுகளை அரசாங்கம் ஓரளவு தளர்த்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இடம்பெயர் முகாம்களில் பணியர்றுவதற்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பாதுகாப்பு அமைச்சிடம் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டுமென்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிபந்தனைகளின் மூலம் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சிக்கல்களை எதிர்நோக்கி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சில வகையான தொண்டுகளை மேற்கொள்வதற்கு மிகவும் வரையறுக்கப்பட்ட காலப்பகுதியே வழங்கப்படுவதாகவும் இது போதுமானதல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஓநாய் சைவம் பேசுகிறது!
தமிழினத்தையே பூண்டோடு அழித்து விட்டு
நடந்தது நடந்ததாக இருக்கட்டும் என்கிறான்,
நாட்டு மக்களைக் கொன்று குவித்து விட்டு
நாட்டை வளமாக்குவோம் என்கிறான்,
தடை செய்யப் பட்ட விசக் குண்டுகளால்
தமிழினத்தை கரு அறுத்து விட்டு யோக்கியன் என்கிறான்,
பன்னாட்டுப் படைகளுடன் தன்நாட்டு மக்களை
தரை மட்டம் ஆக்கிவிட்டு சைவம் என்கிறான்,
பெண்கள் குழந்தைகள் முதியவர்கள் என்றும்
பாராமல் கொன்றுவிட்டு உத்தமன் என்கிறான்,
எதிரி நாடுகள் கூட போர் விதி கடைப் பிடிப்பர் தன் நாட்டு
மக்களையே
போர் விதி மீறிக் கொன்றவன் நல்லவன் என்கிறான்,
பஞ்சமாப் பாதகங்கள் அனைத்தும் புரிந்து விட்டு
பாவம் நான் என்று நடித்து ஏமாற்றுகிறான்,
இரண்டாம் ஹிட்லரான இவன் இன்று
உலக அரங்கில் உத்தமப் புத்திரன் நான் என்கிறான்,
சிரித்தே கழுத்தை அறுக்கும் நயவஞ்சகன்
சீனாவோடும் கூட்டு வைத்து வெகுளி நான் என்கிறான்,
ஆலயம் பள்ளி மருத்துவமனை என்றும் பாராமல்
அனைத்தின் மீதும் குண்டு போட்டவன்அப்பாவி என்கிறான்,
அடப் பாவி நீயாடா அப்பாவி?
அகில உலகக் கொடூரன் நீயடா!
மாற்றம் ஒன்றுதான் உலகில் மாறாதது
மாற்றம் உனக்கும் உண்டு பொறுத்திரு.

அன்புடன்
இரா.இரவி.
23 நவம்பர் 2010
புலிகள் மீதான தடைக்கெதிராக மேல் நீதிமன்றில் வழக்கு!
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான மத்திய அரசின் தடை நீடிப்பு சரியானது என்று பிரகடனப்படுத்தி டில்லி மேல்நீதிமன்ற நீதிபதி விக்ரம ஜித் சென் தலைமையிலான விசேட நீதிமன்றத்தால் வழங்கப்பட்டிருக்கும் தீர்ப்பு செல்லுபடி அற்றது என அறிவிக்க வேண்டும் என்று கோரி சென்னை மேல் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
சிறைக் கைதிகளின் உரிமைகளுக்கான பேரவை என்கிற அமைப்பு சட்டத்தரணி பி.புகழேந்தியின் நெறிப்படுத்தலில் இவ்வழக்கைத் தாக்கல் செய்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை நீடிப்பை கடந்த மே 14 ஆம் திகதி மத்திய அரசு அறிவித்து இருந்தது. இத்தடை நீடிப்பு சட்ட ரீதியானதா? இல்லையா? என்று விசாரித்து-ஆராய்ந்து -தீர்ப்பு வழங்கவே விசேட ஆயம் நியமிக்கப்பட்டது.
ஆனால் விசேட ஆயம் புலிகள் இயக்கம் மீதான மத்திய அரசின் தடை நீடிப்பு சட்ட ரீதியானது-சரியானது-செல்லுபடியானது என்கிற முடிவுக்கு வந்ததற்கு பிரதான காரணமாக நாடு கடந்த தமிழீழ அரசின் உருவாக்கத்தை குறிப்பிட்டுக் காட்டி இருந்தது.
ஆனால் நாடு கடந்த அரசு கடந்த மே மாதம் 17 ஆம் திகதிதான் அமைக்கப்பட்டு இருக்கின்றது. ஆனால் விசேட ஆயம் இவ்விடயத்தை கருத்தில் கொள்ளாமல் தவறான தீர்ப்பு வழங்கி விட்டது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர்க்குற்றவாளி ஐ.நாவில் இருக்கிறார்,-இன்னர் சிற்றி பிரஷ்.
தற்போது ஐ.நாவிலேயே போர்க்குற்றவாளி இருக்கிறார், மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா தான் இறுதிக்கட்டப் போரில் இடம்பெற்ற பல படுகொலைகளுக்கு பொறுப்பானவர் என கருதப்படுபவர், சிறீலங்காவை பிரதிநிதித்துவப்படுத்துபவரும் அவர் தான். அவரை நேர்ணால் மேற்கொள்ள ஐக்கிய நாடுகள் சபை முயற்சி செய்ததா? என ஐக்கிய நாடுகள் சபையின் ஊடக அமைப்பான இன்னசிற்றி பிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது
ஐக்கிய நாடுகள் சபைக்கான சிறீலங்காவின் பிரதி பிரதிநிதியாக நியமனம் பெற்று வந்துள்ள மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா கடந்த வருடம் இடம்பெற்ற போரில் மேற்கொள்ளப்பட்ட பல போர்க்குற்றங்களுக்கு பொறுப்பானவர்.
ஐக்கிய நாடுகள் சபையின் பிரதம அதிகாரிகளில் ஒருவரான இந்தியாவை சேர்ந்த நம்பியார் என்பவருடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுக்களின் பின்னர் வெள்ளைக்கொடிகளுடன் சரணடைந்தவர்களை சிறீலங்கா அரசு படுகொலை செய்ததில் சில்வாவுக்கு அதிக பங்கு உண்டு என தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது எமது கேள்வி என்னவெனில் சிறீலங்காவில் இடம்பெற்ற சம்பவங்கள் உண்மையானவை எனில் அதில் தொடர்புள்ளவர்களை ஐ.நா செயலாளர் நாயகம் ஏற்றுக்கொள்ளப்போகிறாரா? இது அவர்களுக்கு சுயமாக வழங்கப்படும் அங்கீகாரம் போன்றது.
அவ்வாறானால், சூடான் நாடு அதன் பிரதிநிதியாக அஹமட் ஹரோன் என்பவரை ஐ.நாவுக்கு அனுப்பினால், அதனை ஐ.நா ஏற்றுக்கொள்ளுமா?
ஆதராங்களை எதிர்வரும் 15 ஆம் நாளுக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு ஐ.நாவின் ஆலோசனைக்குழு கோரிக்கை விடுத்துள்ளபோதும், அது சிறீலங்கா செல்வது குறித்து எந்த முடிவுகளும் மேற்கொள்ளப்படவில்லை.
எனினும் ஐ.நா அமைத்துள்ள ஆலோசனைக்குழுவின் தலைவர் கடந்த வாரம் முழுவதும் தென்கொரியாவில் இருந்துள்ளார். இந்த நிலையில் அவரால் சிறீலங்கா விடயங்களில் அதிக காலத்தை செலவிட முடியுமான என நாம் கேள்வி எழுப்பியபோது, அவர்கள் அதற்கான காலத்தை செலவிடுவார்கள் என ஐ.நாவின் பேச்சாளர் ஹக் தெரிவித்துள்ளார்.
நாளுக்கு நாள் மக்களால் சமர்ப்பிக்கப்படும் ஆதாரங்கள் கருத்தில் கொள்ளப்படுமான என்ற கேள்விக்கு, அது தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
அறிக்கை பொதுமக்களுக்கு வெளியிடப்படுமா என்பது தொடர்பில் முன்வைக்கப்பட்ட கேள்விக்கு, அது தொடர்பில் பான் கீ மூன் முடிவுகளை மேற்கொள்வார் என ஹக் மேலும் தெரிவித்துள்ளார்.
தற்போது ஐ.நாவிலேயே போர்க்குற்றவாளி இருக்கிறார், அவர் தான் இறுதிக்கட்டப் போரில் இடம்பெற்ற பல படுகொலைகளுக்கு பொறுப்பானவர் என கருதப்படுபவர், சிறீலங்காவை பிரதிநிதித்துவப்படுத்துபவரும் அவர் தான். அவரை நேர்ணால் மேற்கொள்ள ஐக்கிய நாடுகள் சபை முயற்சி செய்ததா? என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

22 நவம்பர் 2010
சிறிலங்காவில் புதிய அமைச்சரவை பதவி ஏற்பு!
அமைச்சரவையின் புதிய அமைச்சர்களாக 59 பேர் இன்று மகிந்த முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் பதவியேற்றுக் கொண்டுள்ளனர். இவற்றுள் ரவூப் ஹக்கீம், சரத் அமுனுகம, மஹிந்தானந்த அளுத்கம, டிலான் பெரேரா, மேர்வின் சில்வா, லக்ஷ்மன் செனவிரத்ன, மஹிந்த அமரவீர மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் அமைச்சர்கள் இம்முறை புதிதாக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்
தெரிவு செய்யப்பட்ட அமைச்சர்கள்:
தி.மு.ஜயரத்ன - பிரதமர்
நிமல் சிறிபால டி சில்வா - பெருந்தெருக்கள், நீர்ப்பாசன முகாமைத்துவம்
மைத்திரிபால சிறிசேன - சுகாதாரம்
சுசில் பிரேமஜயந்த - பெற்றோலியம்
ஆறுமுகம் தொண்டமான் - கால்நடை கிராமிய அபிவிருத்தி
தினேஷ் குணவர்தன - நீர் வழங்கல், வடிகாலமைப்பு
டக்ளஸ் தேவானந்தா - பாரம்பரிய கைத்தொழில் சிறு கைத்தொழில் அபிவிருத்தி
ஏ.எல்.எம்.அதாவுல்லா - உள்ளூராட்சி, மாகாண சபைகள்
ரிசாட் பதியுதீன் - கைத்தொழில், வர்த்தகம்
சம்பிக ரணவக்க - மின்சக்தி, எரிசக்தி
விமல் வீரவன்ச - நிர்மாணத்துறை, பொறியியல் சேவை, வீடமைப்பு வசதிகள்
ரவூப் ஹக்கீம் - நீதி
பசில் ராஜபக்ஷ - பொருளாதார அபிவிருத்தி
வாசுதேவ நாணயக்கார - தேசிய மொழிகள், சமூக ஒருங்கிணைப்பு
எஸ்.பி.திஸாநாயக்க - உயர்கல்வி
ஜி.எல்.பீரிஸ் - வெளியுறவு
டபிள்யூ.டி.ஜே.செனவிரத்ன - பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள்
சுமேதா ஜி ஜயசேன - பாராளுமன்ற அலுவல்கள்
ஜீவன் குமாரதுங்க - தபால் சேவைகள்
பவித்ரா வன்னியாரச்சி - தொழில்நுட்பம்
அநுர பிரியதர்ஷன யாப்பா - சுற்றாடல்
திஸ்ஸ கரலியத்த - சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகாரம்
காமினி லொக்குகே - விவசாயம்
பந்துல குணவர்தன - கல்வி
மகிந்த சமரசிங்க - பெருந்தோட்டக் கைத்தொழில்
ராஜித சேனாரத்ன - கடற்றொழில் நீரியல்வள அபிவிருத்தி
ஜனக பண்டார - காணி, காணி அபிவிருத்தி
பீலிக்ஸ் பெரேரா - சமூக சேவைகள்
சி.பி.ரத்னாயக்க - தனியார் பிரயாண சேவைகள்
மகிந்தயாப்பா அபேவர்தன - கைத்தொழில்
கெஹெலிய ரம்புக்வெல்ல - ஊடகம்
குமார வெல்கம - போக்குவரத்து
டலஸ் அழகப்பெரும - இளைஞர் விவகாரம்
ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ - கூட்டுறவு உள்நாட்டு வர்த்தகம்
சந்திரசிறி கஜதீர - சிறைச்சாலை புனர்வாழ்வு
சாலிந்த திஸாநாயக்க - தேசிய வைத்தியம்
ரெஜினோல்ட் குரே - சிறு ஏற்றுமதி
டிலான் பெரேரா - வெளிநாட்டு வேலைவாய்ப்பு
ஜகத் புஷ்பகுமார - தென்னை அபிவிருத்தி
டி.பி.ஏக்கநாயக்க - கலாசாரம்
மகிந்த அமரவீர - இடர் முகாமைத்துவம்
எஸ்.எம்.சந்திரசேன - கமநல சேவைகள்
குணரத்ன வீரக்கோன் - மீள்குடியேற்றம்
மேர்வின் சில்வா - மக்கள் தொடர்பு
மகிந்தானந்த அலுத்கமகே - விளையாட்டு
தயாசிறீத திசேறா - அரச வளங்கள்
ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய - தொலைத் தொடர்பாடல், தகவல் தொழில்நுட்பம்
ஜகத் பாலசூரிய - தேசிய உரிமைகள்
லக்ஷ்மன் செனவிரத்ன - உற்பத்தித் திறன்
நவீன் திஸாநாயக்க - அரச முகாமைத்துவம்
சிரேஷ்ட அமைச்சர்கள்:
பிரதமர் தி.மு.ஜயரத்ன - பௌத்த சாசனம், மத விவகாரம்
ரத்னசிறி விக்ரமநாயக்க - ஆட்சி பரிபாலனம், உட்கட்டமைப்பு வசதிகள்
டீ.ஈ.டபிள்யூ. குணசேகர - மனித வளங்கள்
அதாவுத செனவிரத்ன - கிராமிய விவகாரம்
பி.தயாரத்ன - உணவு, போசணை
ஏ.எச்.எம்.பௌசி - நகர அபிவிருத்தி
எஸ்.பி.நாவின்ன - நுகர்வோர் நலன்
பியசேன கமகே - பொது வளங்கள்
திஸ்ஸ விதாரண - விஞ்ஞானம்
சரத் அமுனுகம - சர்வதேச முதலீட்டு ஊக்குவிப்பு.

கைதான ஊடகவியலாளர் கே.பியுடன்?
கொழும்பில் கைதுசெய்யப்பட்ட ஊடகவியலாளர் திரு.கார்த்திகேசு திருலோகச்சந்தர் விடுவிக்கப்பட்டு கே.பியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இச்செய்தி குறித்து மேலும் தெரியவருவதாவது;
கடுமையாக சுகவீனமுற்றிருந்த தனது தாயாரை பார்வையிடுவதற்கு சென்ற பிரித்தானியா குடியுரிமை பெற்ற தமிழ் ஊடகவியலாளர் திரு கார்த்திகேசு திருலோகச்சந்தர் (37) கொழும்பில் வைத்து சிறீலங்கா புலனாய்வுப்பிரிவினரால் கடந்த புதன்கிழமை 17.11.2010 அன்று கைது செய்யப்பட்ட செய்தி ஊடகங்களில் வெளிவந்தது யாவரும் அறிந்ததே.
ஆனால் இவர் தற்போது கே.பியின் அறிவுறுத்தலுக்கமைய விடுவிக்கப்பட்டு அண்மையில் மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கே.பியுடன் பங்குபற்றியிருந்ததாக அறியப்படுகிறது. பிரித்தானியாவை தளமாகக் கொண்ட தீபம், ஜி.ரி.வி மற்றும் ஐ.பி.சி ஆகிய ஊடகங்களில் பணியாற்றிய இவருக்கு இலங்கை அரசால் கே.பியிற்கு வழங்கப்பட்டிருக்கும் புதிய வேலைத்திட்டம் ஒன்று திணிக்கப்பட்டு அதை ஏற்றுக்கொண்டாலே விடுதலை என்ற நிர்ப்பந்தத்தின் அடிப்படையிலேயே விடுவிக்கப்பட்டிருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது.
அண்மை நாட்களாக தமிழீழ விடுதலையில் ஆழமான பற்றுறுதிகொண்டவர்களை தங்கள் வலையில் விழ வைத்து சிறிலங்காவிற்கு எதிராக சர்வதேச ரீதியில் பலமாக விளங்கும் தமிழர் கட்டமைப்புக்களை சிதைக்கும் முயற்சியில் சிறிலங்காவின் நிகழ்ச்சி நிரலிற்கு உயிர் கொடுப்பவர்கள் முழுவேகத்துடன் செயற்பட்டு வருவது அனேகமான இடங்களில் கண்டறியப்பட்டுள்ளது.
குறிப்பாக புலம்பெயர் தமிழ் ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் கையகப்படுத்தும் முயற்சியில் கேபி தீவிரமாக ஈடுபட்டு வருவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் கடந்தகாலங்களில் மக்களுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய சில தமிழ்த்தேசியத்திற்காகவென உருவாக்கப்பட்ட ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் வலை வீசப்பட்டுவிட்டதாக அறியப்படுகிறது. இந்த வலைக்குள் சிக்காத ஊடகங்களை சிதைத்து செயலிழக்க வைக்க பல படிமுறைச் செயற்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டன.
ஊடகங்களுக்கு கேபியால் அச்சுறுத்தல் விடப்பட்டதென்ற விபரமும். எந்தெந்த ஊடகங்கள் வலையில் சிக்கித்தடுமாறுகின்றன என்ற விபரமும் மக்கள் முன் ஆதாரத்துடன் வெளிவரும் என அறியப்படுகிறது.
எனவே பொறுப்புள்ள ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் எத்தகைய சவால்கள் வரினும் எதிரியின் நரித்தனமான நகர்வினை புரிந்து கொண்டு தமிழீழ விடியல் என்ற உண்ணத இலட்சியத்துக்காக உண்மையுடனும் உறுதியுடனும் உழைக்க மாவீரத் தெய்வங்களை வணங்கும் இப்புனிதமான காலத்தில் திடசங்கற்பம் ஏற்க வேண்டும்.

21 நவம்பர் 2010
நீதிமன்ற உத்தரவில் மகிந்த கைதானால் நாம் ஒன்றும் செய்யமுடியாது!
நீதிமன்ற உத்தரவுக்கு அமைய போர்க் குற்ற அடிப்படையில் இலங்கை மகிந்த ராஜபக்சவை கைது செய்தால், அந்த விவகாரத்தில் தலையீடு செய்ய முடியாதென பிரிட்டன் வெளியுறவுச் செயலாளர் வில்லியம் ஹேக் தெரிவித்துள்ளார்.எதிர்வரும் டிசம்பர் மாதம் மகிந்த ராஜபக்ச பிரிட்டனுக்கு விஜயம் செய்ய உள்ள நிலையில் அவர் இதனைக் கூறியுள்ளார். பி.பி.சி. தொலைக்காட்சி சேவைக்கு அளித்த நேர்காணல் ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது.
பிரிட்டனின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் சிங்கள சங்கத்தின் அழைப்பின் பேரில் மகிந்த பிரிட்டனுக்கு விஜயம் செய்யவுள் ளார்.ஜனாதிபதியின் பிரிட்டன் விஜயத்தின் போது அவரை சிரமத்தில் ஆழ்த்தும் வகையில் சில தமிழ் புலம்பெயர் செயற்பாட்டாளர்களும் சில சிங்களவர்களும் முயற்சி மேற்கொண்டு வருவதாக பத்திரிகை சுட் டிக்காட்டியுள்ளது.
இன ஒடுக்குமுறை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்து புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளதாகவும் இதில் ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலாளர், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் ஆகியோரின் படங்கள் உள்ள டக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தற்போதைய இராணுவத் தளபதி ஜகத் ஜெயசூரியா, மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா உள்ளிட்ட இரா ணுவத்தைச் சேர்ந்த 182 உயர் அதிகாரிகளின் படங்களும் இந்த நூலில் இடம் பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இந்த நிலையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கைது செய்யப்பட்டால் அவரை விடுவிக்க பிரிட்டன் அரசால் ஒன்றும் செய்ய முடியாது என அவர் கூறினார்.

20 நவம்பர் 2010
புலிகளின் தலைவர்கள் எவரும் சரணடையவில்லையாம்!
விடுதலைப்புலிகளின் இராணுவ தலைவர்கள், இலங்கை இராணுவத்திடம் சரணடைந்ததாக அவர்களின் மனைவிமார் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் வெளியிட்டுள்ள தகவல்களை முற்றாக நிராகரிப்பதாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். பிரபாகரனின் மகன் சார்ள்ஸ் அன்டனி, யாழ்ப்பாணத்திற்கான புலிகளின் கட்டளைத் தளபதி தீபன் உள்ளிட்ட தலைவர்கள் சிவில் உடையில் இருந்தவாறே போரிட்டதாகவும் தீபனின் சடலத்தை தாம் தனிப்பட்ட ரீதியில் அடையாளம் கண்டதாகவும் இவர் சாதாரண உடையில் காணப்பட்டதாகவும் சவேந்திர சில்வா கூறியுள்ளார்.
இந்த நிலையில், புலிகளின் தலைவர்கள் எவரும் சரணடையவில்லை எனவும் சவேந்திர சில்வா தெரிவித்திருந்தார் எவ்வாறாயினும் புலிகளின் தலைவர்களான புலித் தேவன், நடேசன், ரமேஷ், எழிலன், யோகி, பாலகுமார். இளம்பருதி, கவிஞர் புதுவை இரத்தினதுரை உட்பட பலர் இராணுவத்திடம் சரணடைந்தாகவும் இவர்களை இராணுவத்தினர் தனியான வாகனங்களில் அழைத்துச் சென்றதாக சாட்சியங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும் நோர்வே தரப்பின் ஊடாக வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் புலித்தேவன், நடேசன், ரமேஷ் ஆகியோர் வெள்ளை கொடிகளுடன் சரணடைந்தாகவும் எனினும் இவர்கள் இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த நிலையில், உண்மைகள் வெளியாகும் பட்சத்தில் போர் குற்றம் ஊர்ஜிதமாகும் என்பதால், இலங்கை அரச தரப்பு இராணுவ இவ்வாறான கருத்துக்களை முன்வைத்து வருவதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம்சுமத்தியுள்ளன.

யாழ், வவுனியா சர்வதேச செஞ்சிலுவை சங்க அலுவலகங்களுக்கு மூடுவிழா!
யாழ்ப்பானம் மற்றும் வவுனியா சர்வதேச செஞ்சிலுவைச்சங்க கிளைகளை மூடுவதற்கு சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் தீர்மானித்துள்ளதாக கொழும்பு அலுவகலம் கூறியுள்ளது. அந்த பிராந்தியத்தில் தமக்கு பணிகள் இல்லையெனவும் கூறியுள்ளது சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம். ஏற்கனவே மன்னார் அலுவலகம் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. தற்போது வடபகுதிகளில் முற்றாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தமது சேவைகளை இடைனிறுத்தும் நிலைமையே தோன்றியுள்ளது. சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திற்கு அரசியல் ரீதியான அழுத்தமா அல்லது அவர்களின் இயலாத்தன்மையா என எதுவும் உறுதியாக கூற முடியவில்லை. இலங்கை அரசாங்கமானது சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினை ஓர் பொருட்டாக மதிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
புலிகளின் வலையமைப்பை தகர்க்க சிங்களம் மேற்கொள்ளும் புதிய வலையமைப்பு.
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஈழ வலையமைப்பை தகர்த்தெறிவதற்காக இலங்கையில் விசேட வலையமைப்பொன்று உருவாக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
புலிகளின் சர்வதேச வலையமைப்பின் நடவடிக்கைகளை முடக்கும் வகையில் இந்த புதிய வலையமைப்பு செயற்படும் என திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
வெளிநாடுகளில் உள்ள உயர் இராணுவ அதிகாரிகள் மற்றும் சிவில் மக்களை இணைத்து இந்த வலையமைப்பு உருவாக்கப்படவுள்ளது.
குறிப்பாக புலிகளின் பிரச்சார வலையமைப்பை தகர்த்தெறிவதனை இலக்காக வைத்து இந்த புதிய வலையமைப்பை இலங்கை அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ளது.
அதேவேளை, அரசாங்கப் படையினருக்கு எதிராக சுமத்தப்படும் காழ்ப்புணர்ச்சி மிக்க குற்றச்சாட்டுக்களுக்கு அவ்வப்போது உரிய பதிலளிக்கப்பட வேண்டுமென பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

19 நவம்பர் 2010
அசின் நடிப்பில் வெளிவரும் காவலன் படத்தை புறக்கணிப்போம் தமிழர்களே!
அன்பார்ந்த உலகத் தமிழ் மக்களே...
வெகு விரைவில் வெளிவர இருக்கும் விஜய் அசின் நடித்த காவலன் படத்தை உலகமெங்கும் புறக்கணிக்குமாறு உரிமையோடு வேண்டும் அதே நேரம் அதற்கான வலுவான காரணங்களையும் முன்வைக்க விரும்புகின்றோம்.
முதலில் படப்பிடிப்புக்கு மட்டுமே இலங்கை சென்றேன் என்றார் அசின், பின்பு போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யவே சென்றேன் என பல்டியடித்தார்.
எல்லாவற்றையும் விட கொடுமையான விடயம் எதுவெனில் ஒருவருக்கு கண் சிகிச்சை முடிந்த பின் நீங்கள் முதலில் யாரை பார்க்க விரும்புகின்றீர்கள் என கேட்ட கேள்விக்கு நான் அசினை மட்டுமே பார்க்க விரும்புகின்றேன் என அவர் கூறியதாக அசின் பேட்டிகளில் கூறினார்.
இதில் இருந்து சிங்களம் செய்ய நினைக்கும் பரப்புரை என்னவென்று உங்களுக்கு புரிந்திருக்க வேண்டும்.
ஆம் தமிழினத்தை அனைத்து விதமான போதைக்குள்ளும் வைத்திருக்க விரும்பும் சிங்களம் தன் முதற் பார்வையே நடிகைமேல்தான் இருக்க வேண்டும் எனும் அளவுக்கு தமிழர்கள் சினிமா பைத்தியங்கள் எனவும் அதை விடுதலைப்புலிகள் தடுத்ததாகவும் பிரச்சாரங்கள் செய்கின்றார்கள்.
இது ஒரு நடிகைக்கு எதிரான பிரச்சாரம் அல்ல பேரினவதாத்தின் தந்திரத்திற்கு எதிரான பிரச்சாரம்.
சற்று யோசித்துப் பாருங்கள் பல பல கோடிகள் திட்டங்களோடும் உதவிகளோடும் சென்ற இந்திய குழுவோடு கூட [ திருமாவளவன், கனிமொழி, பாலு போன்றோர் சென்ற போது ] ஜனாதிபதியோ அல்லது பிரதமரே ஏன் முதலமைச்சர்கூட அவர்களோடு செல்லவில்லை.
ஆனால் இந்திய அளவில் கூட புகழ் பெறாத ஒரு நடிகையோடு அவர் சென்ற இடம் முளுவதும் அந்த நாட்டின் முதற் பெண் அதாவது ஜனாதிபதியின் மனைவி உடன் சென்று வந்ததன் மர்மம் என்ன?.
அசினோடு சென்ற சல்மான் கானுக்கோ அல்லது உண்மையில் உதவிகள் செய்த விவேக் ஓபராய்க்கோ கூட இந்த கவுரவங்கள் வழங்கப்படவில்லை.
அதோடு அசினால் சிகிச்சை அளிக்கப்பட்டவர்கள் என கூறப்படுவோர்க்கு 10க்கும் மேற்பட்டவர்களுக்கு முளுமையாக கண் பார்வை பறிக்கப்பட்டுள்ளது சிகிச்சை எனும் பெயரால். சிறு வலி என்றாலும் கால்களை அகற்றியும் கைகளை அகற்றியும் தமிழர்களை முடவர்களாக்கியுள்ளது சிங்கள அரசு.
இவைகள் அனைத்தும் சிங்கள அரசால் திட்டமிட்டு நடத்தப்படும் இன அழிப்பு நடவடிக்கையே தவிர வேறில்லை. அதற்கு துணைபோகும் அனைவரையும் புறக்கணிப்போம்.
இப்பட புறக்கணிப்பு ஒரு பாடமாக அனைவருக்கும் அமைய வேண்டும். ஏற்கனவே பல கடிதங்ளை தமிழ் நாட்டின் பல திரைப்பட சங்கங்களுக்கு அனுப்பியிருந்தோம் அசின் மன்னிப்பு கோருவார் என அவர்களால் சொல்லப்பட்டாலும் இதுவரை அப்படி எதுவும் நிகழவில்லை மாறாக மேலும் திமிராகவே காணப்பட்டார் அசின் உதவி செய்யவே சென்றேன் என்றவர் இயக்குனர் படப்பிடிப்பு இலங்கையில் வைத்ததற்கு நான் மன்னிப்பு கோர மாட்டேன் என்றார்.
படப்பிடிப்புக்கு செல்பவர்களுக்கு ஜனாதிபதியின் மனைவியே உதவி செய்வரா? ஆச்சரியமான நாடுதான் இலங்கை. இலங்கை அரசின் ஊதுகுழல்கள் அனைவரையும் துடைத்தெறிவோம்.

எழுச்சியுடன் மாவீரர் நாளை முன்னெடுங்கள்!
உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் வழமைபோன்று இந்த ஆண்டும் மாவீரர் நாளை மிகவும் எழுச்சியுடன் முன்னெடுக்க வேண்டும் என, உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் ஐயா அழைப்பு விடுத்துள்ளார்.
உலகத் தமிழர் பேரமைப்பின் சார்பில் தலைவர் நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை.
இலங்கையில் தமிழர் மண்ணை மீட்கவும் தமிழ் மக்களின் உரிமைகளை நிலைநாட்டவும் நடைபெற்ற போரில் உயிர்த்தியாகம் செய்த மானமறவர்களை நினைத்து வணங்குவதற்காக மாவீரர் நாள் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு மாவீரர் நாள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
வரலாறு காணாத வகையில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் ஈவுஇரக்கமில்லாமல் சிங்கள இராணுவ வெறியர்களால் பதைக்கப்பதைக்கப் படுகொலை செய்யப்பட்டார்கள்.
முள்வேலி முகாம்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இன்னமும் அடைக்கப்பட்டு போதுமான உணவோ மருந்தோ இல்லாமல் சிறிதுசிறிதாகச் செத்துக்கொண்டிருக்கிறார்கள். தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்கள் வேகமாக நடைபெறுகின்றன. தமிழர்கள் தாங்கள் வாழையடி வாழையாக வாழ்ந்த மண்ணிலிருந்து விரட்டப்படுகிறார்கள்.
இந்த அநீதிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்ற உணர்வை உலகத் தமிழர்கள் பெறுவதற்காகவும், அப்பட்டமான போர்க்குற்றங்களைச் செய்துள்ள இராசபக்சே கும்பலை போர்க்குற்றவாளிகளாக சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்துவதற்கு உறுதிபூணவும் இந்த நாளில் தமிழர்கள் சூளுரைக்க வேண்டும்.
உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் மாவீரர் நாளை இந்த உறுதியோடு கொண்டாட வேண்டுமென்று உலகத் தமிழர் பேரமைப்பின் சார்பில் வேண்டிக்கொள்கிறேன்.
அன்புள்ள
(பழ. நெடுமாறன்)
தலைவர்.

இன்று தமிழீழக் காவல்துறை ஆரம்பிக்க பட்ட நாள்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முக்கிய மைற்கல்லாக அமைந்தது “தமிழீழக் காவல்துறை” உருவாக்கம். தனிநாட்டுக்கான அலகுகள் பலவற்றை ஏற்கனவே ஏற்படுத்திச் செயற்பட்டு வருகிறது தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு. காவற்றுறை, சட்டத்துறை, நீதித்துறை, நிதித்துறை, சிவில் நிர்வாக சேவை, ஆயப்பகுதி போன்ற பல கட்டமைப்புக்கள் சிறிலங்கா அரசாங்கத்தின் கீழின்றி தனித்துச் செயற்படுகின்றன.
பன்னாட்டுச் செய்திநிறுவனங்களினதும் அரசியலாளர்களினதும் பார்வையில் ஏறத்தாழ தனியரசுக் கட்டுமானமொன்று இலங்கையின் வடக்கு – கிழக்கில் இருப்பதை ஒத்துக்கொள்வதற்கு இக்கட்டமைப்புக்களும் அவற்றின் செயற்பாடுகளுமே காரணம். அவ்வகையில் மிக முதன்மையான கட்டமைப்பாக நோக்கப்படுவது தமிழீழக் காவற்றுறையாகும்.
1991 ஆம் ஆண்டு இதேநாள் யாழ்ப்பாணத்தில் தமிழீழக் காவல்துறையின் முதலாவது அணி பயிற்சி முடித்து தம் கடமைக்குச் சென்றது.
மிகக்குறைந்த வளங்களோடும் மட்டுப்படுத்தப்பட்ட ஆட்பலத்தோடும் யாழ்ப்பாணத்தில் திறம்பட இயங்கத் தொடங்கிய காவல்துறையின் சேவை படிப்படியாக மற்ற இடங்களுக்கும் விரிவாக்கப்பட்டது. வன்னியில் போர் கடுமையாக நடைபெற்ற காலப்பகுதியில் மிதிவண்டிகள் மட்டுமே காவற்றுறையின் போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்பட்டன. பலபத்து மைல்கள் போய் குற்றவாளியொருவரைக் கைதுசெய்து மிதிவண்டியிலேயே அழைத்துவருவார்கள். தாயக எல்லைகளைப் பாதுகாக்கும் பணியிலும் அவ்வப்போது காவற்றுயினர் செயற்பட்டார்கள்.
1993 ஆம் ஆண்டு நடைபெற்ற ‘யாழ்தேவி’ முறியடிப்புச் சமர் உட்பட பல சமர்களில் அவர்கள் துணைப்படையணியாகவும் செயற்பட்டார்கள். சிலர் களத்தில் வீரச்சாவடைந்திருக்கிறார்கள். ஊழல், இலஞ்சம் துளியளவுமற்ற கறைபடியாத துறை தமிழீழக் காவற்றுறை. போர்ச்சூழலில் சமூகக் கட்டமைப்புக் குலையாது பாதுகாத்த பெருமை தமிழீழக் காவல்துறையைச் சாரும்.
18 நவம்பர் 2010
உயிரை விட்டாலும் தீர்வின்றி உண்ணாநோன்பை விடேன்!-தேவதாசன்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இரண்டாவது தடவை பதவி ஏற்பு நாளில் நான் உயிரை விடுவேனே தவிர தான் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதத்தை கைவிடப்போவதில்லை என புதிய மகஸின் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதி தேவதாசன் தெரிவித்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய மகசின் சிறைச்சாலையில் தனது விடுதலையை வலியுறுத்தி தொடர்ந்து நான்காவது நாளாக உண்ணாவிரதமிருந்து வரும் கனகசபை தேவதாசனை சிறைச்சாலை நலன்புரிச் சங்கச் செயலாளர் வை எம் குணவர்த்தன அவர்கள் சந்தித்து நாளை இரண்டாவது தடவையாக ஜனாதிபதி அவர்கள் பதவிப் பிரமாணம் செய்யவிருப்பதால் தனது உண்ணாவிரதத்தை கைவிடுமாறும் விரைவில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்தபோதே தேவதாசன் அவர்கள் மேற்கண்டவாறு கூறினார்.
நான் தற்போது எந்த உறுதிமொழியையும் ஏற்கத்தயாராக இல்லை பலமுறை எனக்கு அளிக்கப்பட்ட உறுதிமொழிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. எனவே ஜனாதிபதி அவர்கள் பதவிப் பிரமாணம் செய்யவிருப்பதற்காக நான் எனது உண்ணாவிரதத்தை கைவிடப்போவதில்லை மாறாக இதே தினத்தில் நான் எனது உயிரையும் விடுவதற்கு தயாராக இருக்கின்றேன் என மிகவும் உறுதியாகத் தெரிவித்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் திரு தேவதாசனின் உடல்நிலை மோசமடைந்து செல்வதாகவும் இவருக்கு தற்போது சரியாக பேசுவதற்கு கூட முடியாமல் இருப்பதாகவும் சக கைதிகள் தெரிவிக்கின்றனர்.

நான் சாகலாம், நாங்கள் சாகக்கூடாது!
ஈழ மண் ஆக்கிரமிப்பாளர்களால் விழுங்கிக் கொண்டிருந்த சமயம் எதிரிக்கு ஆப்பு வைக்குமாற் போல் பேரதிர்ச்சி மிக்க தாக்குதல் ஒன்றை செய்வதற்காக எமது தலைமைப்பீடம் தயாராகிக்கொண்டிருந்தது. போர்மேகம் கவிந்து வன்னிப்பெருநிலப்பரப்பின் பெரும்பகுதி சிங்களத்தின் ஆக்கிரமிப்புப் படைகளால் விழுங்கப்பட்டுக்கொண்டிருந்தது.
தமிழர்களின் ஆட்சிப் பரப்பெல்லை சுருங்கிக்கொண்டிருந்தது. தொடர் இரசாயன குண்டுவீச்சுக்கள், பல்குழல் எறிகணைத்தாக்குதல்கள், துப்பாக்கிச் சன்னங்கள் என்று வன்னி அதிர்ந்துகொண்டிருந்தது. புதுக்குடியிருப்புப் பிரதேச எல்லையைக் கடக்க சிங்களம் தொடர் தாக்குதலை மேற்கொண்ட வண்ணம் முன்னேற முயற்சித்துக் கொண்டிருந்தது.
சிறிய பகுதிக்குள் மக்கள் அனைவரும் குவிந்திருந்தமையால் இழப்புக்களும் அதிகமாகிக் கொண்டேயிருந்தது. உணவு, குடிநீர், மருத்துவம் கிடைப்பதே பெரும் சிரமமாக இருந்தது. சிங்களத்தின் படைகளின் எண்ணிக்கையும், உலக நாடுகளின் பலத்த ஆதரவும், எதிரியின் புதுத் தொழில்நுட்பமும் எமக்குப் பாதகமாக அமைந்து, கடுமையான இழப்புக்களை எமது தரப்பு சந்தித்த போதும் போராளிகளின் மனஉறுதியும், வீரமும் எதிரியை எதிர்த்து போரிட வைத்ததோடு, அவனை முன்னே நகரவிடாது தடுத்தும் வைத்திருந்தது.
இந்நிலை தொடருமானால் நாம் இன்னும் பலத்த இழப்புக்களைச் சந்திப்பது தவிர்க்க முடியாதவொன்றாகிவிடும் என்பதை உணர்ந்த தலைமை களத்திற்கேற்ப முடிவெடுத்துச் செயற்பட முனைந்தது.
முன்னேறி வரும் எதிரியை சற்றே பின்தள்ள வேண்டிய தேவை தலைமைக்கு ஏற்பட்டது. இதற்காக களமுனையின் நிலையை உடனடியாக மாற்ற வேண்டிய அவசியத்தை உணர்ந்த தலைமை குறைந்த ஆளணியுடன் எதிரிக்கு பலத்த இழப்பை ஏற்படுத்தக் கூடியவாறான தாக்குதல் ஒன்றை நடாத்தி, வன்னியின் களமுனையின் போக்கையும் தமிழரின் விதியையும் மாற்றியமைக்கத் திட்டமிடப்பட்டு, அனைத்துத் திட்டங்களும் தயாரானது.
மீண்டும் சிங்களத்தையும் அதற்கு உதவி புரியும் உலக வல்லரசுகளையும் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்குவதற்காக தாக்குதல் திட்டம் இரண்டாக வகுக்கப்பட்டது.
1. முன்னேறி வரும் எதிரிக்கு ஊடறுப்புத்தாக்குதல் மூலம் பெரும் இழப்பைக் கொடுத்து, படையணிகள் பல கோணங்களில் முன்னேறுதல்.
2. சிங்களத்தின் குகைக்குள் சென்று கரும்புலிகளின் சிறப்புப் பிரிவு பெரும் அழித்தொழிப்பு நடவடிக்கையைச் செய்ய வேண்டும்.
ஊடறுப்புப் தாக்குதலுக்கான பொறுப்பை எமது மூத்த தளபதிகளில் ஒருவரான 55 இடம் ஒப்படைக்கப்பட்டது. அழித்தொழிப்பு நடவடிக்கைக்கான பொறுப்பை விசேட தாக்குதல் தளபதி ஒருவர் பொறுப்பெடுத்தார்.
அதற்காக கொமாண்டோ கரும்புலிகள் அணியிலிருந்து 26 பேர் கொண்ட குழுவொன்று தெரிவு செய்யப்பட்டு, அணித்தலைமையாக பெண்போராளி ஒருவர் நியமிக்கப்பட்டார்.
முதலாவதாக ஊடறுப்பு அணி தாக்குதலைத் தொடங்க வேண்டும். சண்டை குறித்த இலக்கினை அடைந்ததும் அழித்தொழிப்பு நடவடிக்கைக்கான அணியை தாக்குதல் இலக்கு நோக்கி நகர்த்துதல். இதுதான் திட்டம்.
ஊடறுப்பு தாக்குதலுக்கான நடவடிக்கையினை 55 உடன் தளபதி லோரன்ஸ் அவர்களும் களத்தில் இறக்கப்பட்டார். இவர்களுடன் இணைந்து தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பல களமுனைத் தளபதிகள் ஒன்றுகூடி அவசர சந்திப்பு ஒன்றை மேற்கொண்டனர். தமிழ் இனத்தின் எதிர்காலத்தினை தீர்மானிப்பதாக அமையப்போகும் இந்த முதல் கட்டத் தாக்குதலுக்காக சுமார் ஆயிரம் பேர் கொண்ட தாக்குதல் அணி தயார் செய்யப்பட்டது. தாக்குதலுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவதற்கென அணிகள், தமது நகர்விற்காகக் காத்திருந்தனர்;.
மார்ச் மாதத்தின் மாலைப் பொழுதொன்றில் தொடர் விமானத் தாக்குதலுக்கும், எதிரியின் சற்றலைட் கண்காணிப்புக்கும் மண்ணைத் தூவிவிட்டு புலிகளின் தாக்குதல்அணிகளும், முதன்மைத் தளபதிகளும் சாலைப்பகுதியிலிருந்த சிறப்புப் பாசறையில் ஒன்றுகூடினர். தாக்குதலுக்கு பொறுப்பாகவிருந்த தளபதி 55 தாக்குதல் திட்டத்தை விளங்கப்படுத்தத் தொடங்கினார்;.
“இந்தச் சண்டைதான் எங்கட தலைவிதியை மாற்றி எதிரிக்கு தலையிடி கொடுக்கிறதாய் இருக்கும்;. எனவே அதற்கான திட்டமும் கடுமையான பயிற்சியும் உங்களுக்கு தரப்பட்டிருக்கு. ஒவ்வொருத்தரும் உறுதியோட உங்களுக்கு தரப்பட்டிருக்கிற இலக்கைத் தாக்கியழிக்கிறதில உறுதியோட செயற்படவேணும். மற்றது நாங்கள் இப்ப செய்யப் போற ஊடறுப்புத் தாக்குதல் தான் சிறப்புக் கொமோண்டோக்காரரை அவையின்ர இலக்கை நோக்கிச் செல்ல பாதையெடுத்துக் கொடுக்கப் போகுது. எனவே எல்லாருடைய முழுப்பங்களிப்பும்தான் எமது வெற்றியைத் தீர்மானிக்கப்போகுது. இரவு குறித்த நேரத்தில நகர்வை மேற்கொள்ளக் கூடியவாறு ஆயத்தமாகுங்கோ. அதற்கான ஒழுங்கை தளபதி லோறன்ஸ் மேற்கொள்வார். இனி நீங்கள் உங்களுக்குரிய இடங்களுக்குப் போங்கோ.”
என்றவாறு ஏனைய தளபதிகளுடன் அவர் பின்கள வேலைகளை நகர்தச் சென்ற பின், போராளிகள் ஒவ்வொருவரும் தமது சக தோழர்களுடன் கதைத்தபடி இரவு நகர்வதற்கு தேவையான ஆயத்தங்களைச் செய்யத் தொடங்கினர்;.
இருள் என்ற கறுப்புப் போர்வை மூடத் தொடங்கிய போது தாக்குதல் அணிகளின் நகர்வும் ஆரம்பித்தது. ஊடறுப்புத் தாக்குதல்களுக்கான அணிகள் கடற்கரைப் பகுதியிலிருந்து சிறு சிறு பிளாற்றூன்களாகப் பிரிந்து தாக்குதல் இலக்கை நோக்கி நகர்ந்தன. இதே வேளையில் சிறப்புக் கொமோண்டோ அணியும் நகரத் தொடங்கியது. ஊடறுப்பு அணிகளில் ஒரு பகுதி சிறப்பு அணிக்கான பாதையைத் திறப்பதிலும், அவர்களிற்கான காப்பை வழங்குவதிலும் ஈடுபட்டன. சிறப்பணிகள் எல்லையைக் கடக்க, ஊடறுப்பு அணிகள் விசுவமடுப் பகுதியில் அமைந்திருந்த படைத்தளத்தின் மீது உக்கிர தாக்குதலை மேற்கொண்டன.
இத் தாக்குதலின் போது எதிரிக்கு பெருமளவு படைச் சேதத்தை ஏற்படுத்தியதுடன் அங்கிருந்த ஆட்லறிகளைக் கைப்பற்றி, எதிரியின் ஆனையிறவுப் படைத்தளத்தை நோக்கி எம்மவர்கள் எறிகணைத்தாக்குதல்களையும் மேற்கொண்டனர். தாக்குதலின் தீவிரத்தால் எதிரி நிலைகுலைந்த நேரத்தைப் பயன்படுத்தி சிறப்பணிகள் தமது இலக்கை நோக்கி விரையத்தொடங்கினர்.
ஊடறுப்பு அணிகளின் தாக்குதலை முகம் கொடுக்க புதிய படையினர் வருவிக்கப்பட்டு, எமது ஊடறுப்பு அணி பெட்டி வடிவத்தில் முற்றுகையிடப்படுகின்றது. இந்தச் சமயத்தில் தாக்குதலை வழிநடத்திய முன்னணித் தளபதிகள் விழுப்புண் அடைகின்றனர்.
எது நடந்த போதும் பின்வாங்க சிறிதளவும் விருப்பம் இன்றிப் போராளிகள் ஓர்மத்துடன் சண்டையிட்டவண்ணம் இருந்தனர். உக்கிரமான சண்டையால் இழப்புகள் அதிகமாகிக் கொண்டிருந்தது. ‘இனி அங்கே நின்று அதிகளவான போராளிகளை இழக்க வேண்டாம் முற்றுகையை உடைத்து பின்வாருங்கள்’ என்ற தலைமையின் உத்தரவிற்கமைய ஊடறுப்பு அணி தளம் திரும்புகின்றது.
உள்நுழைந்த அழித்தெழிப்பிற்கான சிறப்பு அணிகள் கட்டளைப்பீடத்துடன் தொடர்பினை மேற்கொண்டபடி நகர்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். பத்து நாட்களின் பின்னர் அவர்களுக்கும் கட்டளைப்பீடத்திற்குமான தொடர்பு எதிர்பாராத விதமாகத் துண்டிக்கப்பட்டது. நகர்வின் போது இவர்கள் வைத்திருந்த செய்மதித் தொலைபேசி தண்ணீருக்குள் விழுந்தமையால் அதுவும் செயற்படாமல் போய்விட்டது. எனவே இவர்களுடனான தொடர்பு முழுமையாகத் துண்டிக்கப்பட்டது.
சிறப்பு அணியின் தொடர்பு துண்டிக்கப்பட்டவுடன் தொடர்பை ஏற்படுத்துவதற்காக கட்டளைப்பீடத்தால் மூன்று முதன்மைப் போராளிகள், அவ்வணி நகர்ந்து சென்ற பாதையூடாக எதிரியின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் அனுப்பிவைக்கப்பட்டனர். அவர்கள் சிறப்பணியின் தொடர்பை எடுப்பதற்கு தேடியலைந்து முடியாது போக, குறிப்பிட்ட நாட்களின் பின்பு பின்தளத்தினை நோக்கி நகர்ந்து வந்து தகவல்களைக் கொடுக்கும்போது ஏற்பட்ட சம்பவமொன்றில் மூவரும் வீரச்சாவைத் தழுவிக்கொள்ள நேரிட்டது.
சிறப்பு அணியின் தாக்குதல் திட்டமே எமது தலைவிதியை மாற்றியமைக்க வல்லமை மிக்கதாக இருந்தமையால் அதனது தொடர்பை எடுக்கக் கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனவே நாட்டுக்கு வெளியேயுள்ள பல வளங்களைப் பயன்படுத்தி அணியுடனான தொடர்பை ஏற்படுத்த பல முயற்;சிகள் மேற்கொள்ளப்பட்டன.
சில தினங்களின் பின்னர் மாற்று ஆதரவு ஆற்றல்களைப் பயன்படுத்தி ‘வோக்கி’ மூலம் தொடர்பு ஏற்படுத்தப்பட்டது. இது சிறப்பு அணியினரை உற்சாகத்துடனும், வேகத்துடனும் நகர உதவியது. நகர்ந்து கொண்டிருந்த சிறப்பணிகள் தொடர்பு துண்டிக்கப்பட்டிருந்த காலப்பகுதியில்; தங்களுக்கு நடந்த அனைத்துச் சம்பவங்களையும் கட்டளைப்பீடத்திற்கு தெரிவித்திருந்தனர்.
இலக்கை நோக்கிச் சென்று கொண்டிருப்பதால் வோக்கியல் இனி தொடர்பு கொள்வது கஸ்ரமாக இருக்கும் நாங்கள் தரப்பட்ட வேலையை முடிப்போம் என்று கூறியபடி அணி நகரத் தொடங்கியது. இதன் பின்னர் அணிக்கும் கட்டளைப்பீடத்திற்குமான தொடர்பு இருக்கவில்லை
தமக்குத் தரப்பட்ட இலக்கை அழிக்கவேண்டும் என்று தாக்குதல் அணி ஒருபக்கமும்,
இனி எப்படித் தொடர்பினை மேற்கொள்ளலாம்? எனவும் அதற்கான மாற்று ஒழுங்குகளைச் செய்தபடி கட்டளைப்பீடமும்.
26 பேர் கொண்ட சிறப்பு அணியில் ஒரேயொரு பெண்போராளி மட்டுமே மே மாதம் 2ம் நாள் தன்தளத்திற்கு வந்து தனது போராளித் தோழர்களைச் சந்திக்கிறார்..............
அப்படி என்றால் ஏனைய 25 பேரும் எங்கே? அவர்களுக்கு என்ன நடந்தது?
முற்று முழுதாக உண்மைச்சம்பவங்களுடன் களத்திற்கு திரும்பிய போராளியின் சாட்சியங்களுடன் நடந்த சம்பவங்களை ஒவ்வொரு தமிழனும் படிக்கவேண்டும்.
எத்தனையோ தியாகங்கள்!
எத்தனையோ அர்ப்பணிப்புகள்!
இறுதி வரை எமது வாழ்விற்காக இரத்தம் சிந்தியவர்கள்!
தம்மை ஆகுதியாக்கியவர்கள்!
இவர்களின் வரலாறுகள் என்றைக்கும் வீணாகப் போகக் கூடாது என்பதற்காகவே இந்த வரலாற்றுப்பதிவை மக்களாகிய உங்களுக்குத் தருகின்றோம்.

17 நவம்பர் 2010
போர்க்குற்ற சாட்சியங்களை வழங்குமாறு தமிழர் பேரவை வேண்டுகோள்!
சமீபத்தில் ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனால், இலங்கை நிலை குறித்து ஆராய 3 பேர் அடங்கிய நிபுணர்கள் குழு ஒன்று நிறுவப்பட்டது. இவர்கள் இலங்கை செல்ல இலங்கை அரசாங்கம் அனுமதியளிக்கவில்லை. இதனால் அவர்கள் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களிடம் சாட்சிகளை வேண்டி நிற்கின்றனர்.
இலங்கையில் காணாமல் போனோரின் உறவினர்கள், கடத்தப்பட்டு விடுதலையானவர்களின் உறவினர்கள், போருக்கு முன்னரும் பின்னரும் இறந்தவர்களின் உறவினர்கள் என அனைவரும் உடனடியாக முன் வந்து தமது சாட்சிகளை வழங்குமாறு பிரித்தானிய தமிழர் பேரவை வேண்டுகோள் விடுக்கிறது.
டிசம்பர் மாதம் 15ம் திகதியோடு ஐ.நாவால் வழங்கப்பட்ட கால எல்லை முடிவடைவதால் உடனடியாக உங்கள் சாட்சியங்களைக் கொடுத்து உதவுமாறு அது வேண்டி நிற்கிறது. உங்கள் பெயர்கள் உட்பட அனைத்து விடையங்களும் இரகசியமாகக் கையாளப்படும் என பிரித்தானிய தமிழர் பேரவை உறுதி தருகின்றது: 0044 207 183 4009 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு நீங்கள் அழைப்பதன் மூலம் எங்கள் பிரதிநிதிகளை நீங்கள் தொடர்புகொள்ளலாம்.
ஜ.நா ஏற்படுத்தித் தந்திருக்கும் இச் சந்தர்ப்பத்தை நாம் பயன்படுத்தவில்லை என்றால், வரலாற்றுத் தவறை இழைத்த தமிழர்கள் ஆகிவிடுவோம். எனவே விரைந்து செயல்படுங்கள் என பிரித்தானிய தமிழர் பேரவை வேண்டி நிற்கிறது.
இலங்கை அரசை யுத்தக்குற்ற கூண்டில் ஏற்றவும், இன அழிப்பை உலகிற்கு எடுத்து உரைக்கவும் உங்கள் சாட்சியங்கள் பேருதவியாக இருக்கும். மாண்ட தமிழர்களுக்கு ஒரு நீதி கிடைக்கும்.

தளபதி விநாயகம் உயிருடன் இருக்கின்றார் என்கிறார் றொகான் குணரட்ன.
தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதப்பிரிவு ஐரோப்பாவில் மீள இயங்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக பயங்கரவாத தடுப்பு தொடர்பான நிபுணர் பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார். புலிகளின் ஆயுத மற்றும் புலனாய்வுப் பிரிவினர் இயங்குவதற்கு முனைப்புக் காட்டிவருவதாக குறிப்பிட்டுள்ள அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஐரோப்பாவின் பல பகுதிகளில் இருந்தும் ஆயுதப்போராட்டத்தை நடத்துவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவராகக் கருதப்படும் விநாயகம் என்பவர் முயற்சித்து வருகின்றார்.விநாயகம் மிகவும் ஆபத்தான நபர். கடந்தகாலங்களில் தெற்கில் தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதல்கள், படுகொலைகள் போன்றவற்றை விநாயகம் என்பவரே வழி நடத்தியுள்ளார்.
குறித்த விநாயகத்தின் நோக்கங்கள் மற்றும் இலக்குகள் குறித்து இலங்கை அரசாங்கம் விழிப்புடன் செயற்பட வேண்டும். விநாயகம் ஐரோப்பாவில் சுதந்திரமாக சுற்றித் திரிவதாகவும் அவரைக் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
2009ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் விநாயகம் கொல்லப்பட்டதாக இராணுவம் நம்பிக்கை வெளியிட்டபோதிலும் உண்மையில் விநாயகம் உயிரிழக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)