01 ஆகஸ்ட் 2011

சிறிலங்கா வருமாறு சனல்4வை அழைக்கிறார் சவேந்திர.

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு செனல்4 ஊடகத்திற்கு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இலங்கையின் உண்மை நிலவரங்களை நேரில் கண்டறிந்து கொள்ளுமாறு செனல்4 ஊடகத்திற்கு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான பிரதி வதிவிடப் பிரதிநிதி சவேந்திரா சில்வா, செனல்4 ஊடகவியலாளர் ஜொனதன் மில்லருக்கு இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
லண்டனில் அமைந்துள்ள செனல்4 ஊடக நிறுவனத்தின் தலைமைக் காரியாலயத்திற்கும், ஊடகவியலாளர் ஜொனதன் மில்லருக்கும் இந்த அழைப்பினை விடுத்துள்ளதாக சவேந்திரா சில்வா குறிப்பிட்டுள்ளார்.
செனல்4 ஊடகவியலாளர் மில்லர் தம்மை சந்தித்ததனை தொடர்ந்து, பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவிடம் தாம் ஆலோசனை கோரியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்புச் செயலாளரின் ஆலோனைக்கு அமைய ஜொனதன் மில்லருக்கும் செனல்4 ஊடக நிறுவனத்திற்கும் தாம் அழைப்பு விடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.எனினும், தமது அழைப்பு தொடர்பில் இதுவரையில் செனல்4 ஊடகம் எவ்வித பதிலையும் அளிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக