நாட்டின் பிரச்சினைகளை நாம் தீர்த்துக் கொள்வோம். இந்தியாவோ ஐரோப்பிய நாடுகளோ எமக்கு உத்தரவிடமுடியாதென இனிமேலாவது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்மென்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் டாக்டர் குணதாச அமரசேகர தெரிவித்தார்.
அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகள் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் நிபந்தனை விதித்துள்ளமை தொடர்பில் தெளிவுபடுத்துகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நிபந்தனை விதித்ததன் பின்னணியில் இந்தியாவும் ஐரோப்பிய நாடுகளுமே உள்ளன. அவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கமையவே கூட்டமைப்பு செயல்படுகின்றது.
பிரபாகரனின் புலிப் பயங்கரவாதத்திற்கு அஞ்சாது அவர்களை அழித்தொழித்தோம். எனவே �புலிகளின் வாலான� கூட்டமைப்பின் சலசலப்புக்கெல்லாம் அஞ்சவேண்டிய அவசியம் இல்லை.அரசியலமைப்பிலிருந்து 12வது திருத்தம் நீக்கப்பட வேண்டும் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.
அதை விடுத்து கூட்டமைப்பின் தமிழ் பிரிவினைவாத அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு இடமளிக்க முடியாது.இலங்கையில் பிரச்சினையை எமது நாட்டுக்கு உகந்த விதத்தில் நாம் தீர்த்துக் கொள்வோம்.
இது தொடர்பில் மூக்கை நுழைத்து அப்படிச் செய்ய வேண்டும், இப்படித் தீர்மானம் எடுக்க வேண்டும் என இந்தியாவோ � ஐரொப்பிய நாடுகளோ எமக்கு உத்தரவிட வேண்டிய அவசியமில்லையென ஜனாதிபதி பகிரங்கமாக அறிவிக்க வேண்டம்எமது நாட்டின் மீது பொருளாதாரத்தடையை இந்தியா விதித்தால் எமக்கு பின்னடைவு இல்லை நஷ்டமும் இல்லை.
ஆனால் அதிகமான வர்த்தக உடன்படிக்கைகளை இலங்கையுடன் இந்தியா கைச்சாத்திட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவுக்கே அதிக பொருளாதார நன்மைகள் கிடைக்கின்றன. அவர்களது வருமானமும் அதிகரித்தது.
இவ்வாறானதோர் சூழ்நிலையில் எமது நாட்டுக்கு எதிராக பொருளாதார தடை விதிக்கப்படுமானால் நஷ்டமடையப் போவது இந்தியாவே ஆகும் எனக்குறிப்பிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக