01 ஆகஸ்ட் 2011

சுவிஸ் நாடாளுமன்றில் இலங்கை அரசுக்கு எதிராக பிரேரணை.

இலங்கை அரசுக்கும் அரசாங்கத் தலைவர்களுக்கும் எதிராகப் போர்க்குற்றம் சாட்டியும் போர்க்குற்றங்களுக்காக சம்பந்தப்பட்ட அரச தலைவர்களும் பாதுகாப்புப் படைத் தலைவர்களும் சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட வேண்டுமென கோரும் பிரேரணை ஒன்றை சுவிற்சர்லாந்து பாராளுமன்றத்தில் முன் வைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவிற்சர்லாந்தில் வாழும் புலிகள் இயக்கத் தலைவர்களும் ஆதரவாளர்களாகிய அரசியல் பிரமுகர்களும் இவ்வாறு சுவிற்சர்லாந்து பாராளுமன்றத்தில் இலங்கைக்கெதிராக போர்க்குற்றச்சாட்டுகளைச் சுமத்தும் பிரேரணையைக் கொண்டு வருவதற்காக சுவிற்சர்லாந்து ஆளும் அரசியல் கட்சி முதலாக ஏனைய கட்சித் தலைவர்கள்,கட்சிப் பிரமுகர்களுடன் தீவிர தொடர்புகளை மேற்கொண்டுள்ளதாகவும் விரைவில் இவ்வாறு இலங்கை அரசுக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுப் பிரேரணையை சுவிற்சர்லாந்து கிறீன் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் புலிகள் இயக்கத்தின் பிரபல ஆதரவாளருமான லீ ஸ்கொட் எனப்படும் சுவிற்சர்லாந்து அரசியலில் பெரும் செல்வாக்குள்ள பாராளுமன்ற உறுப்பினர் மூலமாகவே இவ்வாறு இலங்கைக்கு எதிரான போர்க்குற்றப் பிரேரணை சுவிற்சர்லாந்து பாராளுமன்றத்தில் கொண்டு வரப்படும் எனவும் மேலும் குறித்த தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கிறீன் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் மூலம் இலங்கைக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டுப் பிரேரணை கொண்டு வருவதற்கான ஊடகத்தரப்பு,தகவல் வழங்கல் மற்றும் உதவிகளை செய்வதற்காக இலங்கையைச் சேர்ந்த முன்னாள் ஊடக அமைப்பின் தலைவர் ஒருவர் சுவிற்சர்லாந்து சென்றடைந்திருப்பதாக மேலும் குறித்த தகவல்கள் தெரிவித்துள்ளன. இவ்வாறு அண்மையில் சுவிற்சர்லாந்து விமான நிலையத்தில் இந்த குறித்த இலங்கை ஊடக அமைப்பின் முன்னாள் தலைவர் அரைக்காற்சட்டை மற்றும் பயண உடைகளுடனேயே வந்திறங்கியதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சுவிற்சர்லாந்து பாராளுமன்றத்தில் இலங்கைக்கு எதிராக கிறீன் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் மூலம் போர்க்குற்றப் பிரேரணையை கொண்டு வர ஏற்பாடுகளைச் செய்து வரும் புலிகள் இயக்கத் தலைவர்கள் மற்றும் ஆதரவுப் பிரமுகர்கள் மேற்படி குறித்த முன்னாள் ஊடக அமைப்புத் தலைவருக்கு பெரும் தொகைப் பணம் வழங்கி இந்த ஏற்பாட்டுக்கான உதவியைப் பெற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதைத் தொடர்ந்து குறித்த இலங்கை ஊடக அமைப்பின் முன்னாள் தலைவர் கிறின் கட்சித் தலைவர் லீ.ஸ்கொட் மற்றும் அவருடன் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகளைச் சந்தித்து குறித்த போர்க்குற்ற பிரேரணைக்கு வேண்டிய ஊடகத் தகவல்களை வழங்கி வருவதாகத் தெரிய வருகின்றது.
இதற்கான முக்கிய ஏற்பாடுகளை சுவிற்சர்லாந்து பேர்ண் நகரத்தில் வாழும் புலிகள் இயக்கப் பிரமுகர் ஒருவர் பொறுப்பாகச் செய்து வருவதாக மேலும் தெரிய வந்துள்ளது. இவ்வாறு போர்க்குற்ற பிரேரணையை சுவிற்சர்லாந்து பாராளுமன்றத்தில் கிறீன் கட்சி உறுப்பினர் லீ ஸ்கொட் தலைமையில் சமர்ப்பிக்கவிருப்பது பற்றிய மற்றுமொரு தகவலில் குறித்த இலங்கை ஊடக அமைப்பின் முன்னாள் தலைவர் இலங்கையில் சுதந்திர ஊடக அமைப்பு ஒன்றின் தலைவராக இருந்த காலகட்டத்தில் பாதுகாப்பு புலனாய்வுத்துறையால் விசாரணைக்குட்படுத்தப்படவிருந்தார் எனவும் ஆயினும் பின்னர் நாட்டிலிருந்து வேறொரு நாட்டிற்குத் தப்பியோடினார் எனவும் மேலும் தெரிய வந்துள்ளது.
எவ்வாறாயினும் அண்மையில் இவர் சுவிற்சர்லாந்துக்கு கட்டார் விமான நிலையத்திலிருந்தே வந்து சேர்ந்துள்ளதாக மேலும் சுவிற்சர்லாந்து விமான நிலையத் தரப்பிலிருந்து தெரிய வந்துள்ளது.
இதுபற்றி தெரிவிக்கப்படும் பாதுகாப்பு விமர்சனங்களில் இவ்வாறு இலங்கை அரசை போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்தவும் இலங்கை அரச தலைவர்கள் மற்றும் படைத்தலைவர்கள் சர்வதேச நீதிமன்றத்திலும் ஏற்றுவதற்காக சர்வதேசப் புலிகளின் ஆதரவாளர்கள் கோடிக்கணக்காகப் பணம் கொடுத்து கனடா, பிரிட்டன், பிரான்ஸ், சுவிற்சர்லாந்து, ஐக்கிய அமெரிக்கா மற்றும் நாடுகளில் பிரபல அரசியல்வாதிகளையும் ஊடகத் தரப்பினரையும் தூண்டி வருவதாகவும் இந்நிலையில் இலங்கை அரசு புலிகள் இயக்கத்தினரும் ஆதரவாளர்களும் தீவிரமாக இயங்கி வரும் மேற்படி நாடுகளிலுள்ள தூதரகங்கள் மூலம் அந்நாடுகளின் அரசு தரப்புகள் மற்றும் அரசியல்வாதிகளிடையே இலங்கை அரசின் நிலைப்பாட்டை நியாயப்படுத்தும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் இல்லாவிடில் இலங்கை அரசை போர்க்குற்ற விசாரணைக் கூண்டில் ஏற்றும் சர்வதேச புலிகள் முயற்சிகளுக்கு இந்நிலை சாதகமாக அமைந்து விடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது என திவயின தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக