இலங்கையின் போற்குற்றச்சாட்டுக்கள் யாவும் ஆதாரமற்றவை என மறுத்துரைக்கும் சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச, இலங்கையிலிருந்து மிகவும் கௌரவமாக தப்பிச் சென்றுள்ள தமிழ்வாணி என்பவர் சனல் 4 தொலைக்காட்சியில் சொல்லும் கதையை இவ்வுலகம் நம்புவது கேலிக்குரியதாகும் என தெரிவித்துள்ளார்.
இலங்கையின் மீது மேற்கொள்ளப்படும் போற்குற்றச்சாட்டுக்கள் யாவும் ஆதாரமற்றவை என மறுத்துள்ள கோத்தபாய ராஜபக்ச, சனல் 4 தொலைக் காட்சியில் தோன்றி இலங்கையில் தமிழ் பெண்கள் கற்பழிக்கப்பட்டதாக தெரிவிக்கும் கலைவாணி என்பவர் வன்னியில் புலிகளுடனிருந்து சிவிலியன்களுடன் வந்து எமது இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருந்தே இலண்டன் சென்றுள்ளார்.
ஆனால் அவர் சொல்கின்றார் இங்கு பெண்கள் கற்பழிக்கப்பட்டதாக. அவ்வாறாயின் அவர் கற்பழிக்கப்பட்டாரா என்ற கேள்வியை எழுப்பி, இவ்வாறானதோர் இக்கட்டான சூழ்நிலையில் இத்தனை அனர்த்தங்களுள்ளும் எவ்வித பாதிப்புக்களுமின்றி இலங்கையிலிருந்து மிகவும் கௌரவமாக தப்பிச் சென்றுள்ள இவர் சொல்லும் கதையை இவ்வுலகம் நம்புவது கேலிக்குரியதாகும் என தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் தொடர்பாக ஆராய்வதற்காக, சர்வதேச பொறிமுறை ஒன்ற அவசியம் என கூறுவது, முழு சர்வதேசமும் இல்லை எனவும் மேற்குலகின் சில நாடுகளே இவ்விடயத்தில் நாட்டம் கொண்டுள்ளது எனத் தெரிவித்துள்ள பாதுகாப்பு செயலாளர் பல ஆபிரிக்க நாடுகள், இந்நியா உட்பட ஆசிய நாடுகள் பெரும்பாலானவை, அரபு நாடுகள் பலவற்றுக்கும் போர்குற்ற விசாரணை விடயத்தில் எவ்வித நாட்டமும் இல்லையெனத் தெரிவித்துள்ளார்.
இறையாண்மை உள்ள ஒரு நாடு என்ற அடிப்படையில், பயங்கரவாதத்தை முறியடிப்பதற்கான மனிதாபிமான நடவடிக்கையில் எந்தவித பிழையும் இடம்பெறவில்லை எனவும் எந்த காலகட்டத்திலும் இலங்கையின் இறைமையை மீறி பிறிதொருநாடு இங்குவந்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் நாம் வெளியிடுகின்ற தகவல்களை எம்மீது சந்தேகம் கொள்ளாது ஏற்றுக்கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் இலங்கையில் நிலவும் யதார்த்தங்களை உணராமல் தமிழக சட்டசபையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் தமிழக முதல்வர் ஜெயலலிதா அரசியல் ஆதாயம் தேடப்பார்க்கிறார். உண்மையிலேயே இலங்கைத் தமிழர்கள் மீது ஜெயலலிதாவுக்கு அக்கறை இருக்குமானால் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி இலங்கைப் பகுதிக்கு வந்து மீன் பிடிப்பதைத் தடுக்க வேண்டும், அப்போதுதான் இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்படும் என்றும் பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக