04 ஆகஸ்ட் 2011

இலங்கையை அவதானித்து வருவதாக ஐ.நா.தெரிவிப்பு.

இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அவதானிக்கப்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவித்துள்ளது. குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்கும் வகையில் அரசாங்கம் எடுத்து வரும் ஒவ்வொரு நடவடிக்கை குறித்தும் சர்வதேச சமூகம் கவனம் செலுத்தி வருவதாக ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளரின் பேச்சாளர் மார்டின் நெசர்கீ தெரிவித்துள்ளார்.
மனிதாபிமான மீட்பு நடவடிக்கைகள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை இன்னமும் உத்தியோகபூர்வமாக தமக்கு கிடைக்கப்பெறவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே இந்த அறிக்கை தொடர்பில் தற்போதைக்கு எவ்வித கருத்துக்களையும் வெளியிடப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
தேசிய ரீதியில் குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்குவது தொடர்பில் அரசாங்கத்தின் ஒவ்வொரு நகர்வினையும் சர்வதேச சமூகம் மிக உன்னிப்பாக கண்காணித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சின் அறிக்கை உத்தியோகபூர்வமாக சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் அது தொடர்பிலான கருத்துக்களை வெளியிட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக