நடேசன் கொல்லப்பட்ட காணொளி இதுவாக இருக்கலாம் என சந்தேகம்!
இறுதிப் போரில் இலங்கை இராணுவத்திடம் சுமார் 300 காயப்பட்ட போராளிகள் மற்றும் பெண்களோடு சென்று சரணடைந்தார் ப.நடேசன் அவர்கள். அவரையும் சமாதானச் செயலாளர் புலித்தேவனையும் இலங்கை இராணுவம் சுட்டுக்கொண்றது. அவர்களது புகைப்படங்களை ஏற்கனவே வெளிவந்திருந்தது . இருப்பினும் தற்போது பெருமளவான போராளிகள் கொல்லப்பட்ட நிலையில் உள்ள காணொளி ஒன்றும் வெளியாகியுள்ளது. இக் காணொளியில், இருக்கும் உடலங்களின் தலையில் மிகவும் அருகில் இருந்து சுடப்பட்ட காட்சிகள் பதிவாகியுள்ளது. சரணடைந்த அல்லது உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த போராளிகளை இலங்கை இராணுவம் தலையில் சுட்டுக் கொலைசெய்துள்ளது இங்கே தெள்ளத் தெளிவாக உள்ளது. அதுமட்டுமல்லாது இங்கே காணப்படும் 1 உடலம் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் ப.நடேசன் அவர்களின் உடலை ஒத்தாக இருப்பதாக ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். அருகில் இருக்கும் போராளிகளின் உடலங்கள் அவருடன் சரணடையச் சென்றவர்களாக இருக்கலாம் எனவும் சந்தேகங்கள் வெளியிடப்பட்டுள்ளது. எது எவ்வாறு இருப்பினும் இக் காணொளி எங்கு அல்லது எந்த நாளில் எடுக்கப்பட்டது என்பது போன்ற சரியான விபரங்களைப் பெற்றுகொள்ள முடியவில்லை . ப.நடேசன் அவர்களின் உடலை ஒத்த உடலம் ஒன்று இங்கே காணப்படுவதனால் இக் கொலைகள் எபோது நிகழ்ந்திருக்கலாம் என ஊகிக்கமுடியுமே தவிர இதனை உறுதிப்படுத்த முடியவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக