05 ஆகஸ்ட் 2011

கொடிய நோயினால் சோனியா அவதி!அமெரிக்காவில் அவசர சிகிச்சை.

சோனியாகாந்தியின் உடல் நலம் குறித்து பல் வேறு செய்திகளும் கசிந்துள்ளதால் இந்திய அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ஆம் தேதியே சோனியாகாந்தியின் உடல் நிலை பாதிக்கப்பட்டதாகவும். அவரால் இயல்பாக இருக்க முடியாத அளவுக்கு அவதிப்பட்ட நிலையில் சோனியாவை பரிசீலித்த டில்லி மருத்துவர்கள். மிகவும் கவலையடைந்துள்ளனர்.
உடனடியாக அவரை மேல் சிகிச்சைக்காக வெளிநாடு கொண்டு செல்லும் முடிவும் அங்கு எடுக்கப்பட்ட அதே நேரத்தில் சோனியாகாந்தியின் நெருங்கிய குடும்ப நண்பர்களுக்குக் கூட இந்த தகவல் மறைக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் அடுத்த சில நாட்களுக்குள்ளாகவே சோனியாவை தனி விமானத்தில் வைத்து அமெரிக்காவின் புகழ் பெற்ற நியூயார்க் ஸ்லோவான் கேட்டரிங் புற்று நோய் மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள்.
உலகிலேயே புகழ்பெற்ற புற்று நோய் மருத்துவமனைக்கு சோனியா கொண்டு செல்லப்பட்ட போது இந்தியாவிலிருந்தும் ஒரு மருத்துவக்குழு அவருடன் பயணித்திருக்கிறது.
ராகுல்காந்தி, ப்ரியங்கா, மருமகன் ராபர்ட் வதேரரா ஆகியோர் அவருடன் உள்ள நிலையில் தத்தாத்ரேய் நோரி என்ற உலகப்புகழ் பெற்ற மருத்துவர் சோனியாவின் அடிவயிற்றில் அறுவை சிகிச்சை செய்ததாக செய்திகள் கசிந்துள்ளன.
சோனியா ஏற்கனவே ஒரு முறை மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு சென்று வந்த நிலையில் இந்த முறை செய்திகளை மறைக்க இயலவில்லை. மிகவும் கவலைக்கிடமான சூழல் நிலையிலெயே அவரை அமெரிக்கா கொண்டு சென்று அவசர அவசரமாக அறுவை சிகிச்சையையும் முடித்துள்ளனர். இதனால் இந்தியா முழுக்க அரசியல் வட்டாரங்களின் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக