12 ஆகஸ்ட் 2011

கோத்தபாயவை தமிழக சட்டமன்றில் நிறுத்தி தண்டிக்க முடியுமென வீரமணி தெரிவிப்பு.

அதிமுக ஆட்சி பதவியேற்றதும் இலங்கை தொடர்பாக இரண்டு தீர்மானங்களை தமிழக முதல்வர் ஜெயலலிதாவே கொண்டு வந்தார். இதை கோத்தாபய ராஜபஷே கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கு நேற்று சட்டமன்றத்தில் இந்திய அரசு தமிழக அரசின் சட்டமன்ற தீர்மானத்தை ஏற்று செயல்பட்டிருந்தால் கோத்தபாய என்னை விமர்சித்திருக்க மாட்டார் என்றும் இறுதிவரை ஈழ மக்கள் சமத்துவம் பெறும் வரை போராடுவேன் என்றும் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் கோத்தபாயவின் விமர்சனம் சட்டமன்ற மரபுகளுக்கு எதிரானது என்ற வாதத்தில் அடிப்படையில் அவரை தமிழக சட்டமன்றத்திலேயே நிறுத்தி தண்டிக்க முடியும் என்று கூறியிருக்கிறார் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட முக்கிய அரசியல் தீர்மானம் குறித்து வெளிநாட்டவர் இவ்வாறு முதல்வரையும், அதன்மூலம் தமிழக சட்டப்பேரவையையும் கொச்சைப்படுத்திப் பேசியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.இதுபோன்றவர்களை சட்டமன்றத்துக்குள் கொண்டுவந்து விசாரணை நடத்தி தண்டனைகூட கொடுக்க முடியும் என வீரமணி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக