09 ஆகஸ்ட் 2011

சர்வதேச விசாரணைக்கு ஆதரவளிக்கப்படுமென அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இலங்கையில் இடம்பெற்றதாக குற்றம் சுமத்தப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்துவதற்கு ஆதரவளிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மீறப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் நடைபெற்ற இறுதி யுத்தததின் போது பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக மனித உரிமை அமைப்புக்கள் குற்றம் சுமத்தியுள்ளன.
இரண்டு தரப்பினருமே யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
யுத்தக் குற்றச் செயல் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பில் இலங்கை அரசாங்கம் உள்ளக ரீதியான விசாரணைகளை நடத்தி வருவதாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் மார்க் டோனர் தெரிவித்துள்ளார்.
எனினும், அனைத்து தரப்பினரினதும் நலனையும் வெளிப்படைத் தன்மையையும் உறுதிப்படுத்துவதற்காக பக்கச்சார்பற்ற சுயாதீனமான சர்வதேச விசாரணைப் பொறிமுறையொன்று உருவாக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இந்தக் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் சர்வதேச விசாரணைகளுக்கு இடமில்லை எனவும் பாதுகாப்புச் செயலளா க்ஷ தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக