11 ஆகஸ்ட் 2011

மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது உண்மையே என்கிறது செஞ்சிலுவை சங்கம்.

சிறிலங்கா அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையில் வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது அங்கு காணப்பட்ட வைத்தியசாலைகள் மீது ஷெல் தாக்குதலகள் மேற்கொள்ளப்பட்டதனை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மீண்டும் இன்று உறுதிபடத் தெரிவித்துள்ளது.
ஜெனீவாவில் அது இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தை மேற்கோள் காட்டி ராய்டர் செய்திச் சேவை இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
யுத்த நிலைகளின் போது வைத்தியசாலைகள் மீதும் அதன் பணியாளர்கள் மீதும் தாக்குதல்களை மேற்கொண்ட மிக மோசமான நாடுகளில் ஒன்றாக சிறிலங்காவும் இடம்பெற்றுள்ளது. ஆப்கான், ஈராக், சேமாலியா போன்ற நாடுகளும் இந்தப் பட்டியலில் அடங்கும்.
இதேவேளை,யுத்த காலத்தில் இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெற்ற நாடுகளில் பிரதானமாகக் கருதப்படும் 16 நாடுகள் தொடர்பான ஆதாரங்களை அறிக்கையுடன் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் சமர்ப்பித்துள்ளது என்றும் ரொய்டர் அந்தச் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக