05 ஆகஸ்ட் 2011

சிங்கள மக்கள் அச்சப்படுகின்றனராம்!கவலை கொள்கிறார் கே.பி.

எல்லாவற்றுக்கும் இந்தியாவிடம் ஓடுவதனை நிறுத்த வேண்டுமென தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளரும் தற்சமயம் சிறிலங்கா அரசின் பிடியிலிருப்பவருமான கே.பி என்ற குமரன் பத்மநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.இரு இனங்களுக்கு இடையிலான பிரச்சினைக்கு உள்ளக தீர்வு காணப்பட வேண்டும்.
எல்லாத் தேவைகளுக்கும் இந்தியாவிடம் செல்லக் கூடாது இது தவறாகும்.
இந்திய தலையீடு குறித்து பெரும்பான்மையான இலங்கை மக்கள் அச்சுத்துடன் காணப்படுகின்றனர்.
பத்து மில்லியன் சிங்கள மக்கள் மீது, அறுபது மில்லியன் தமிழக மக்கள் அழுத்தங்களை பிரயோகிக்கப்படும் என அஞ்சப்படுகின்றது.
இந்த அச்சத்திற்கு நாம் எண்ணெய் ஊற்றக் கூடாது, சிறு விடயங்கள் தொடர்பில் இந்தியாவிடம் முறைப்பாடு செய்வதனை தவிர்க்க வேண்டும்.
தமிழகத்தின் வை.கோ, சீமான் போன்றவர்களின் ஆக்ரோசமான உரைகள் மக்களை திசைதிருப்பக் கூடும்.
இந்தியா தன்னால் ஆன உச்சளவு உதவிகளை இலங்கைக்கு வழங்கி வருகின்றது.
இந்த விடயத்தை பொறுப்பு வாய்ந்த நபர்கள் புரிந்து கொள்ள வேண்டுமென குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக