ஆயுதங்கள் இன்றி இலங்கையின் மீது தாக்குதல் ஒன்றை நாம் தொடுப்போம். இந்தியர்கள் உறுதியாக ஈழத் தமிழர்களுக்கு ஆதரவளிக்கிறோம் என்பதை இந்த உலகுக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகின்றோம். என இந்திய நாடாளுமன்றம் முன்பாக நேற்று நடத்திய, ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவரான சின்ஹா தெரிவித்தார்.
இலங்கை மீது ஆயுதங்கள் இன்றி ஒரு தாக்குதல் தொடுப்போம் என்று இந்திய நாடாளுமன்றம் முன்பாக உறுமி இருக்கிறது பாரதீய ஜனதாக் கட்சி. அதன் முக்கிய தலைவரும், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அரசில் நிதி மற்றும் வெளிவிவகார அமைச்சராக இருந்தவருமான யஸ்வந்த் சின்ஹா நேற்று இதனைத் தெரிவித்தார்.
இந்தியர்கள் எல்லோரும் உறுதியாக ஈழத் தமிழர்களை ஆதரிக்கின்றோம் என்பதை உலகுக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன் என்றார் அவர்.
மறுமலர்ச்சித் திராவிட முன்னேற்றக் கழகம் புதுடில்லியில் இந்திய நாடாளுமன்றம் முன்பாக நேற்று நடத்திய, ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பாரதிய ஜனதாக் கட்சியின் ஈழத் தமிழர் ஆதரவை வெளிப்படுத்தினார் சின்ஹா.
சென்னையில் ஆர்ப்பாட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டால் அதிலும் தான் கலந்துகொள்வார் என்று அவர் தெரிவித்தார்.
வன்னியில் அரசு நடத்திய இறுதிப் போரின்போது நிகழ்ந்த போர்க் குற்றங்கள் தொடர்பில் நம்பகமான ஆதாரங்களை முன்வைத்துள்ள ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் இந்திய மத்திய அரசு தொடர்ந்து மௌனம் சாதிப்பதை எதிர்த்து மதிமுக தலைவர் வைகோ இந்த ஆர்ப்பாட்டப் பேரணியை ஏற்பாடு செய்திருந்தார்.
பல்லாயிரக்கணக்கானவர்கள் திரண்டு வந்து பங்கேற்ற ஆர்ப்பாட்டத்தில், பாரதீய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவருமான யஸ்வந் சின்ஹா, பீஹார் மாநிலத்தின் பலம் மிக்க கட்சியான லோக் ஜனஷக்திக் கட்சித் தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
நானும் உங்களுடன் சேர்ந்து கொள்கிறேன். வாருங்கள் எல்லோருமாகப் படகுகளில் புறப்பட்டுச் சென்று, இலங்கை விவகாரத்தில் நாங்களும் உங்களுடன் இருக்கிறோம் என்று உலக நாடுகளுக்குச் சொல்வோம்.
ஆயுதங்கள் இன்றி இலங்கையின் மீது தாக்குதல் ஒன்றை நாம் தொடுப்போம். இந்தியர்கள் உறுதியாக ஈழத் தமிழர் களுக்கு ஆதரவளிக்கிறோம் என்பதை இந்த உலகுக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகின் றோம் என்றார் சின்ஹா.
இலங்கையில் நடந்த இனப்படுகொலைகளுக்குக் காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்தும் வரைக்கும் இதனை நாம் விடப்போவதில்லை என்றும் சின்ஹா கூறினார்.
இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கை காரணமாகவே, இலங்கையில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்துச் செல்கிறது என்று அவர் கண்டித்தார்.
சீனாவின் செல்வாக்கு இலங்கையில் அதிகரித்துவிடும் என்ற காரணத்தாலேயே கொழும்புக்கு எதிராகப் பொருளாதாரத் தடைகளை விதிக்க முடியாது என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்திருப்பது வெட்கக்கேடானது என்றும் சின்ஹா குற்றஞ்சாட்டினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக