05 ஆகஸ்ட் 2011

ஆபத்தான பகுதிகளை துப்பரவு செய்ய போராளிகளை பயன்படுத்துகிறது சிங்களப்படை.

இறுதிக் கட்ட யுத்தத்தில் சிறிலங்கா படையினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகளுக்குப் புனர்வாழ்வு அளித்து தொழிற் பயிற்சி மற்றும் தொழில்களை வழங்குவதாகக் கூறி வரும் சிறிலங்கா அரசானது இப்போது அந்த முன்னாள் போராளிகளைக் கொண்டு குளங்களையும் குட்டைகளையும் துப்புரவு செய்யும் பணிகளைச் செய்து வருகிறது.
இதன் ஓரு கட்டமாக கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரிப் பிரதேசத்திலுள்ள பள்ளிக்குடாவில் தூர்ந்து போய்க் காணப்பட்ட பெரியகுளத்தைத் துப்புரவு செய்யும் பணியில் முன்னாள் போராளிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்தக் குளத்தில் வெடிபொருட்கள் மற்றும் ஆபத்தான பொருட்கள் புதையுண்டு கிடக்கலாம் என்ற அச்சத்தின் காரணமாகப் படையினரையோ அல்லது ஏனையோரையோ துப்புரவுப் பணிகளில் ஈடுபடுத்தாமல் முன்னாள் பேராளிகளே ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்தத் துப்புரவு செய்யும் பணிகளில் தற்போது புனர்வாழ்வளிக்கப்பட்டு வரும் முன்னாள் போராளிகள் மட்டுமின்றி புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டவர்களும் அழைத்து வரப்பட்டு ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வுத்துறை அமைச்சர் சந்திரசிறி கஜதீரவின் ஆலோசனைக்கு அமையவே இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக