
முன்னாள் போராளிகளைத் துருவித்துருவி விசாரணை செய்யும் புலனாய்வுப் பிரிவினர், அவர்களது குடும்பத்தினருக்கும் அசௌகரியங்களை ஏற்படுத்தி வருகின்றனர். அத்துடன் இரவு வேளைகளில் வீட்டிற்கு வந்து இடைஞ்சல் தருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனால் பல குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர், யுவதிகள் அச்சமடைந்துள்ளனர்.
மர்ம மனிதனின் பிரச்சினையால் அந்தப் பகுதியில் இடம் பெற்ற சம்பவங்களோடு முன்னாள் போராளிகளை தொடர்புபடுத்தி திசை திருப்பும் முயற்சியில் படையினர் ஈடுபட்டிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக