02 செப்டம்பர் 2011

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள ஸ்ரீலங்கா முன் வரவேண்டும்.

இறுதி யுத்தத்தில் கைது செய்யப்பட்ட 11 ஆயிரத்துக்கு மேற்பட்ட முன்னாள் போராளிகளில் மறுவாழ்வளிக்கப்பட்டு இன்னமும் விடுதலை செய்யப்படாது உள்ளவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அமெரிக்கா இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் மார்க் டோனர் தெரிவித்துள்ளார்.
வொஷிங்டன் ஊடகவியளார்களுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வின் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்ட தீர்மானத்துக்கும் வரவேற்பளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டமையானது இலங்கை வாழ் மக்களுக்கு சாதாரண வாழ்க்கையை சிறப்புற உணர்ந்து கொள்ள உதவும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றசாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள இலங்கை முன்வரவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக