14 ஏப்ரல் 2011

போரின் இறுதி மாதங்களில் 83,130 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர்!

சிறீலங்காவில் இடம்பெற்ற போரின் இறுதி மாதங்களில் 70,000 தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதுடன், சிறீலங்கா அரசின் தடை முகாம்களில் இருந்த 13,130 பேர் காணாமல்போயுள்ளதாக அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள சிராகோஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்துப்பட்டறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 12 ஆம் நாள் நடைபெற்ற இந்த கருத்துபட்டடறையில் அமெரிக்காவை தளமாகக் கொண்ட அமைதி முயற்சிக்கான தமிழர் அமைப்பின் பணிப்பாளர் கலாநிதி கருண்யன் அருள்நாதன் ஆற்றிய உரையிலோயே இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8,000 தமிழ் மக்களும், மே மாதம் 9 ஆம் நாளில் இருந்து 19 ஆம் நாள் வரையிலும் 25,000 தமிழ் மக்களுக்கு கொல்லப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக