05 ஏப்ரல் 2011

இன்றைய சனியினால் விபரீதம் நிகழுமா?

இன்று இரவு பூமிக்கு ஒரு திசையில் சூரியனும்,அதற்கு நேர் எதிர் திசையில் சனி கிரகமும் இருக்கும். இதனால் பூமியில் இருந்து பார்க்கும் போது வானில் சனி கிரகம் மிகவும் நன்றாகத் தெரியும். இன்று மாலை சூரியன் மறைந்த பிறகு கிழக்கு அடி வானத்தில் சனி கிரகத்தை வெறும் கண்ணால் தெளிவாக பார்க்க முடியும். சனி கிரகத்தின் இந்த அற்புத காட்சியை இன்று இரவு முழுவதும் காணலாம். சனி கிரகம், பூமி, சூரியன் ஆகியவை நேர்கோட்டில் நிற்கும்போது, பூகம்பம், கடல் சீற்றம் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன என்பது அறிவியியல் வாதம். இம்மூன்றும் நேர்கோட்டில் வரும் நாளுக்கு மூன்று நாட்கள் முன்னும் பின்னுமாக இயற்க்கை சீற்றங்கள் நிகழும் என்பது அவர்கள் வாதம். நேஷனல் ஜியாக்ரபி தொலைக்காட்சியில் இதைப்பற்றிய செய்தி ஒளிபரப்பாகி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக