18 ஏப்ரல் 2011

வன்னியில் ஒரு இலட்சம் பேரை காணவில்லை!

கடந்த 2009 ஆம் ஆண்டு வன்னியில் நடைபெற்ற போரின் பின்னர் அங்கிருந்த தமிழ் மக்களில் 100,000 பேர் காணாமல்போயுள்ளதாக பிரித்தானியாவை தளமாகக் கொண்ட சனல்போர் செய்தி நிறுவனம் கடந்த சனிக்கிழமை (16) தெரிவித்துள்ளது. சிறீலங்கா அரசின் நிர்வாக அலுவலகங்களின் மக்கள் தொகை படிவங்களின் பிரகாரம் 2008 ஆம் ஆண்டு அங்கு 430,000 தமிழ் மக்கள் வாழந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. ஆனால் ஐக்கிய நாடுகள் சபையின் தகவல்களின் படி போர் நிறைவுபெற்ற பின்னர் அங்கிருந்த 290,000 மக்களே வவுனியாவுக்கு வந்துள்ளனர். 60 விகிதமான மக்கள் தமது இடத்திற்கு திரும்பியுள்ளனர். வன்னியில் இடம்பெற்ற போரில் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கை அதிர்ச்சி தரும்வண்ணம் மிகவும் உயர்வானது என ஐ.நாவின் கொழும்புக்கான முன்னாள் பிரதிநிதி கோடன் வைஸ் கூட தெரிவித்திருந்தார். 20,000 தொடக்கம் 40,000 மக்கள் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என நான் நம்புகிறேன். ஆனால் அது அதனை விட அதிகமாகவும் இருக்கலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக