13 ஏப்ரல் 2011

நடந்த கொடூரங்களுக்கு என்ன செய்யப்போகிறோம்?

முள்ளிவாய்க்கால் யுத்தத்தின்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர், ப.நடேசன் மற்றும் சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் உட்பட தமிழீழ விடுதலைப புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் இராணுவத்திடம் சரணடைவதாக ஐ.நா அதிகாரிகள் மூலம் இலங்கை அரசுக்கு அறிவிக்கப்பட்டது. இவர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கவனிப்பதாகவும் இவர்கள் சரணடையலாம் எனவும், சரணடைவதற்கு ஏதுவான சூழ் நிலையை தாம் தோற்றுவித்ததாகவும், ஏற்பாட்டாளராக இருந்த இந்திய, நோர்வே மற்றும் ஐ.நா அதிகாரி விஜய் நம்பியார் ஆகியோர் தெரிவித்ததை அடுத்தே அரசியல்துறைப் பொறுப்பாளர் ப.நடேசன் உட்பட தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் சரணடைந்தனர்.
சரணடந்தவர்களுக்கு நடந்ததோ வேறு அனைவரும் கைது செய்யப்பட்டார்கள் சிலர் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டார்கள். ப.நடேசன் அவர்களின் மனைவி கொலை செய்யப்பட்டதாகவும், பின்னர் ப.நடேசன் புலித்தேவன் உட்பட இன்னும் சில போராளிகளையும் கட்டிவைத்து மனித குலத்திற்கே விரோதமான முறையில் கற்பனை செய்து பார்க்கவே முடியாத அளவிற்கு இராணுவத்தினர் கூட்டுச் சித்திரவதைகளை மேற்கொண்டனர் கடும் சித்திரவதைகளின் போது அவர்களின் அடிவயிற்றிலும் உடலின் முக்கிய பகுதிகளிலும் நெருப்பால் அல்லது சுடு கருவிகளால் சுடப்பட்டுள்ளதையும் அவர்களின் உடல் முழுவதும் காணக்கூடியதாக உள்ளது. சித்திரவதைகளின் வேதனைகளைத் தாங்கமுடியாமல் சித்திரவதையின் போதே இவர்கள் இறந்திருக்க வேண்டும் அல்லது பின்னரே கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்திய அரசின் துணையுடனே இந்தப் படுகொலைகள் நடந்துள்ளதாகவும் ஊகங்கள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அது போக இவை அனைத்தையும் பார்த்துவிட்டு நாம் என்ன செய்யப்போகிறோம்.????

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக