11 ஏப்ரல் 2011

ஸ்ரீலங்கா படைகள் ஒழுக்க சீலர்களாம்!சொல்கிறார் படைப்பேச்சாளர்.

இலங்கையில் மனித உரிமைகள் தொடர்ந்து மீறப்படுவதாக அமெரிக்க அரசாங்கத்தின் அறிக்கையொன்று கூறியுள்ளதை ஸ்ரீலங்கா இராணுவம் மறுத்துள்ளது. இவை அர்த்தமில்லாத குற்றச்சாட்டுக்களென ஸ்ரீலங்காவின் இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவெல டெய்லி மிரருக்கு தெரிவித்தார். பாரதூரமான மனித உரிமை தொடர்பான பிரச்சினைகளுக்கு அரசாங்கமும் அதன் முகவர்களும் தொடர்ந்து பொறுப்பாகவுள்ளனர். சட்டத்திற்கு புறம்பான கொலைகளை இராணுவம் செய்திருப்பினும் இவை இப்போது குறைவடைந்துள்ளன. காணாமல் போவது தொடர்ந்தது. ஆயினும் இப்போது குறைவடைந்துவிட்டதென அந்த அறிக்கை கூறுகின்றது. மனிதாபிமான நடவடிக்கை யுத்த சட்டத்தின்படி நடத்தப்பட்டது. ஆயுதப்படைகள் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடவில்லையென உபய மெதவல கூறினார். பல சுயாதீனமாக அவதானிகள் சிறுபான்மையினர் பயத்துடன் வாழ்வதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. பொதுமக்கள் – இராணுவ ஒத்துழைப்பு உச்சத்திலுள்ளது. நாம் மக்களோடு சேர்ந்து வேலை செய்கின்றோம். மக்கள் பயப்பட காரணம் எதுவுமில்லை. சுயவேலை வாய்ப்பு திட்டங்களிலும் விவசாய முயற்சிகளிலும் மக்களின் ஒட்டுமொத்தமான பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களிலும் நாம் மக்களோடு சேர்ந்து வேலை செய்கின்றோமென உபய மெதவல தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக