13 ஏப்ரல் 2011

இன அழிப்புக்கு உலக வங்கியும் உதவுகிறது!

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் சிறீலங்கா அரசு மேற்கொண்டுவரும் இன அழிப்புக்கு உலகவங்கியும் உதவிகளை வழங்கிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கிழக்கு மாகாணத்தை மேற்கு பகுதியுடன் இணைக்கும் வீதிகளின் அபிவிருத்தி மூலம் சிறீலங்கா அரசு மேற்கொண்டுவரும் இனஅழிப்பு நடவடிக்கைகள் மேலும் தீவிரமாகலாம் என தமிழ் மக்கள் அச்சமடைந்துள்ள நிலையில் உலக வங்கி அதற்கான உதவிகளை வழங்கியுள்ளது. கிழக்கு மாகாணத்தை மேற்கு பகுதியுடன் இணைக்கும் வீதிகளின் அபிவிருத்திக்கு உலக வங்கி 100 மில்லியன் டொலர்களை நேற்று (12) வழங்கியுள்ளது. கிழக்கு பகுதி மக்களை மேற்கு பகுதி மக்களுடன் இணைப்பது சிறீலங்கா அரசின் அபிவிருத்தித்திட்டத்திற்கு அனுகூலமானது என உலக வங்கியின் கொழும்புக்கான பிரதிநிதி டயறிரோ கயே தெரிவித்துள்ளார். அபிவிருத்தி என்றபோர்வையில் சிறீலங்கா அரசு மேற்கொண்டுவரும் இனஅழிப்புக்கான உதவிகளை உலக வங்கி மேற்கொண்டுவருவதற்கு எதிராக உலகவங்கியில் அங்கம் வகிக்கும் நாடுகளுக்கு எதிரான போராட்டங்களை தமிழ் மக்கள் முன்னெடுக்கவேண்டும் என மட்டக்களப்பு மக்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக