03 ஏப்ரல் 2011

காணாமல் போன படைகள் தொடர்பில் தகவல் இல்லையாம்!

கடந்த செவ்வாய்க்கிழமை (29) முல்லைத்தீவு கடலில் காணாமல்போன சிறீலங்கா கடற்படைச் சிப்பாய்கள் தொடர்பான மர்மம் தொடர்வாதாகவும், அவர்கள் தொடர்பில் எந்த தகவல்களும் இல்லை எனவும் சிறீலங்கா கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சாலை பகுதியில் சுற்றுக்காவல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த சமயம் சிறீலங்கா கடற்படையினர் நால்வர் காணாமல்போயிருந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து சிறீலங்கா படையினர் வடமராட்சி கிழக்கு தொடக்கம் முல்லைத்தீவு கரையோரம் வரை பெருமெடுப்பிலான தேடுதல்களை மேற்கொண்டபோதும் அவர்களை கண்டறிய முடியவில்லை. உட்கரையோர சுற்றுக்காவல் படகில் சென்ற அவர்களின் படகும், ஆயுதங்களும் கரை ஒதுங்கியுள்ளன. ஆனால் படகில் இருந்த இயங்திரம் காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்கள் எவ்வாறு காணாமல்போனார்கள் என்பது தொடர்பில் எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை என சிறீலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கடற்படையினர் காணாமல்போன பகுதியில் வான்படை விமானங்கள் மற்றும் கடற்படை கப்பல்கள் மூலமும் தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், கடற்படை சிப்பாய்களின் குடும்பத்தினரிடமும் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பில் இந்திய கடற்படையினரிடமும் உதவி கோரப்பட்டுள்ளதாக சிறீலங்கா கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக